இறுதித்தூதர்
இறைத்தூதர்களில் இறுதியானவர் நபி முஹம்மது (ஸல்) ஆவார்கள். இறுதி நாள் வரை தோன்றுகின்ற மனித சமுதாயம் முழுமைக்கும் இவர்கள்தான் கடைசி நபியாவார்கள். இவர்களுக்குப் பின்னர் எந்த இறைத்தூதரும் வரமாட்டார்கள். தூதுத்துவம் இவர்களோடு நிறைவு பெற்றுவிட்டது.
முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார்.
(அல்குர்ஆன் 33:40)
(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம்.
(அல்குர்ஆன் 34:28)
(முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.
(அல்குர்ஆன் 21:107)
அவர்களில் மற்றவர்களுக்காகவும் (அவரை அனுப்பினான்) அவர்களுடன் இவர்கள் இன்னும் சேரவில்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் 62:3)
இந்தக் குர்ஆன் மூலம் உங்களையும், இதை அடைவோரையும் நான் எச்சரிக்கை செய்வதற்காக இது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறுவீராக!
(அல்குர்ஆன் 6:19)