தொழுகை
ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
(அல் குர்ஆன் 2:148)
உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.
(அல் குர்ஆன் 3:133)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருள் நிறைந்த இரவின் ஒரு பகுதியைப் போன்று (வரும்) குழப்பத்திற்கு (முன்னால்) நற்செயல்களில் போட்டியிடுங்கள். (அந்தக் குழப்பம் ஏற்பட்டால்) ஒரு மனிதன் முஃமினாக காலைப் பொழுதை அடைந்து மாலையில் காஃபிராகி விடுவான். அல்லது மாலையில் முஃமினாக இருப்பவன் காலையில் காஃபிராகி விடுவான். உலகத்தின் செல்வங்களுக்காக தனது மார்க்கத்தை விற்று விடுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 186
----------------------------------------------------------------------------------------
தொழுகை சட்டங்கள் - M.I.முஹம்மத் சுலைமான்