Mar 20, 2011

யார் இந்த மதகுருமார்கள்?


யார் இந்த மதகுருமார்கள்? - அபூ அப்தில்லாஹ்


மதகுருமார்களின் ஆதிக்கம்:
ஆதி மனிதன் ஆதத்திலிருந்து இன்று வரை எத்தனை மதங்கள் தோன்றியுள்ளனவோ அந்த அத்தனை மதங்களிலும், இஸ்லாமிய மதம் உட்பட மதகுருமார்களின்-மதபோதகர்களின் ஆதிக்கமே நிறைந்து காணப்படுகிறது. அனைத்து மதங்களையும் பின்பற்றும் அனைத்து மக்களும் இந்த மதகுருமார்களை கடவுளுக்கு மிகமிக நெருக்கமானவர்கள்; அவர்களின் ஆதரவு இல்லாமல் கடவுளின் பொருத்தமோ, மோட்சம் என்ற சுவர்க்கமோ அடைய முடியாது என்று உறுதியாக நம்புகிறார்கள்.
இந்த மதகுருமார்களை கடவுளின் அவதாரமாகவே நம்புகின்றனர். அவர்களை சந்நிதானம், காட் ஃபாதர், காட் மதர், அதே கருத்தைத் தரும் ஹழரத்-ஹஜ்ரத்-ஹஸ்ரத், மவ்லவி (அல்லாஹ்வைச் சேர்ந்தவர்-(பார்க்க 3:150, 8:40, 22:78, 66:2) மவ்லானா (2:286, 9:51ல் இறைவனைக் குறிப்பிடும் பதம்) போன்ற அடைமொழிகளால் அழைப்பதே எமது இந்தக் கருத்தை உறுதிப்படுத்தப் போது மானவையாக இருக்கின்றன.
ஆம்! இந்த மதகுருமார்கள் அல்லாஹ்வை விட தங்களைச் சிறந்த பாதுகாவலர்களாகச் சொல்லி மக்களை நம்பவைத்து ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள்.
“”உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது; கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்; மந்திரம் பாப்பானுக்குக் கட்டுப்பட்டது; எனவே உலகு பாப்பானுக்குக் கட்டுப்பட்டதுஎன்ற இந்து மதகுருமார்களின் கற்பனை இதை உண்மைப்படுத்தும்.

மதகுருமார்கள் வணங்கப்படுகிறார்கள்:
இறைவனை வணங்குவது போல் அவர்களது காலடியில் விழுந்து வணங்குவது, கால்களைத் தொட்டு வணங்குவது, அவர்கள் காலால் இட்ட பணிகளைத் தலையால் சுமந்து நிறைவேற்றுவது, அவர்கள் எச்சில் படுத்திக் கொடுத்த பொருள் களை பிரசாதமாக எண்ணிச் சாப்பிடுவது இவையும் எமது இந்தக் கருத்தை நிலைநாட்டப் போது மானதாகும்.
இறைவனிடம் நேரடியாகத் தனது குற்றங்களை முறையிட்டு அவனிடமே பாவமன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக கிறித்தவ மத குருமார்களிடமே தனது குற்றங்கள் பாவங்களை எடுத்துச் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிட்டால்  (Confession) இறைவன் மன்னித்து விடுவான் என்ற மூட நம்பிக்கை கிறித்தவர்களிடம் காணப்படுகிறது.
அதற்கும் மேலாக நம் இந்திய நாட்டில் அம்மணச் சாமியார்களை தெய்வமாகவே கொண்டு அவர்களின் மூத்திரத்தைக் குடிப்பதாக சிம்போலிக்காக நினைத்து அவர்களின் இன உறுப்பில் நீரை ஊற்றி அதிலிருந்து வடிவதைக் குடிக்கும் பக்தர்களும் இருப்பதாக அறிகிறோம். அதற்கும் மேலாக தான் மணமுடிக்கும் பெண்ணை தனது மதகுரு முதலில் அனுபவித்த பின்னரே தான் அனுபவிக்க வேண்டும் என மூட நம்பிக்கை உடையவர்களும் இருப்பதாக அறிகிறோம். இப்படி மதகுருமார்களை தெய்வ நிலைக்கு உயர்த்தி, அவர்கள் உதிர்க்கும் பகுத்தறிவுக்கே ஒவ்வாத மூடநம்பிக்கைகளை, அனாச்சாரங்களை, அவலங்களை அப்படியே கண்மூடி ஏற்றுச் செயல்படும் மக்களே மனித குலத்தில் மிகமிக அதிகம். (பார்க்க 6:116)

முஸ்லிம் மதகுருமார்கள்:
முஸ்லிம் மதகுருமார்களிடம் மேலே சொல்லப்பட்ட இழிகுணங்களில் சில காணப்படா விட்டாலும், அவர்கள் கூறும் கோணல் வழிகளையே நேர்வழியாகக் கொண்டு பொது மக்கள் அதன்படி நடக்க வேண்டும் என்ற இறு மாப்பு அதிகமாகவே காணப்படுகிறது.
இந்த மதகுருமார்கள் எப்படிப்பட்ட இழி வான கேவலமான ஆறறிவு மனிதன் செய்யக் கூடாத செயல்களைச் செய்தாலும், அதைக் குறையாகவோ, இழிவாகவோ அவர்களின் பக்தர்கள் நினைப்பதாக இல்லை. இதற்கு ஜயேந்திரர், நித்யானந்தா போன்ற ஹிந்து மத குருமார்களும், பல கிறித்தவ மத குருமார்களும், முஸ்லிம் மதகுருமார்களும் செய்யும் இழி செயல்களை அவர்களின் பக்தர்கள் குறையாக எண்ணுவதே இல்லை என்பதே போதிய ஆதாரமாகும்.

செம்மறி ஆட்டு மந்தை:
மவ்லவி என்ற ஒரு முஸ்லிம் மத குரு அல்குர்ஆன் 7:81 வரம்பு மீறிய செயல் என கண்டித்துக் கூறும் ஓரினப் புணர்வில் பள்ளியிலேயே ஈடுபட்டபோது கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டார். பிடிபட்டவுடன் வருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவதற்குப் பதிலாக தனது தவறான செயலை நியாயப்படுத்தி என்ன கூறினார் தெரியுமா? என்ன அப்படி நான் தவறு செய்து விட்டேன்? அவுலியாக்கள் (இறை நேசர்கள்) செய்யும் செயலைத் தான் நானும் செய்துள்ளேன் என்று கூறினாரே பார்க்கலாம். ஆம்! மதகுருமார்கள் என்றால் தவறான செயல்களை, கோணல் வழிகளை நியாயப்படுத்துவதுதான் அவர்களின் எதார்த்த நிலை என்பதை மக்களில் மிகமிகச் சிலரே உணர்கிறார்கள். பெருங்கொண்ட மக்கள் இந்த மதகுருமார்களின் பின்னால் கசாப்புக் கடைக்காரர் பின்னால் தங்களை அறுக்கும் இடத்தை நோக்கி வேகமாகச் செல்லும் செம்மறி ஆட்டு மந்தைபோல், கண்மூடிச் சென்று நரகில் விழுகிற வர்களாகவே இருக்கிறார்கள்.
மதகுருமார்களின் வரலாறு:
இப்போது இந்த மதகுருமார்களின் வர லாற்றை அல்குர்ஆன் கூறும் ஆதாரங்களைக் கொண்டே பார்ப்போம். ஆதம்(அலை) அவர்கள் படைக்கப்பட்ட பின்னர், இடம் பெற்ற சம்பவங்கள், இப்லீஸ் இறைக் கட்டளையை நிராகரித்து ஷைத்தானாகியது, ஆதத்தின் சந்ததிகளில் மிகப் பெரும்பான்மையினரைக் கொண்டு நரகத்தை நிரப்ப சபதம் செய்தது, இறைவன் ஷைத்தானுக்கு இறுதி நாள் வரை மிக நீண்ட ஆயுளுடன் வாழ அனுமதித்தது இவை அனைத்தும் தெரிந்த விஷயமே!
தெரியாதவர்கள் அல்குர்ஆன் 2:36, 3:175, 4:118-121, 5:91, 7:11-22,27, 8:48, 14:22, 16:63,100, 17:61-65, 19:83, 20:120,121-128, 22:3,4,53, 26:221-223, 35:6,7, 36:60, 41:36, 58:19 இந்த இறைவாக்குகளை நேரடியாகப் படித்து அறிந்து கொள்ளவும்.
ஷைத்தான் ஆதத்தின் சந்ததிகளில் மிகப் பெரும்பாலோரைக் கொண்டு நரகத்தை நிரப்புவதாக சபதம் ஏற்றுள்ளானல்லவா? இறைவனும் அதற்கு அனுமதி கொடுத்து விட்டானல்லவா? அந்த சபதத்தை நிறைவேற்றத் தன்னுடைய நேரடி ஏஜண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் இந்த அனைத்து மதங்களின் மதகுருமார்கள். கோபம் கொப்பளிக்கிறதல்லவா? இரத்தம் கொதிக்கிறதல்லவா? கோபப்படாதீர்கள், நிதான மிழக்காதீர்கள், அமைதி கொள்ளுங்கள்! அதற்குரிய ஆதாரங்களை குர்ஆனிலிருந்தே தருகிறோம். நடுநிலையோடு கவனமாக அவதானியுங்கள். இதுதான் உண்மை என்பதை உங்களாலும் உணர முடியும்.

பல்லாயிரம் இறைத் தூதர்கள்:
அல்குர்ஆனில் 25 இறைத் தூதர்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது. வரலாறு கூறப்படாத பல்லாயிரம் இறைத் தூதர்கள் உண்டு. அந்த இறைத் தூதர்கள் தங்கள் சமூகத்தாரிடம் “”நாங்கள் அனைத்தையும் படைத்த சர்வ வல்லமை மிக்க தன்னந் தனியான இணை துணை இல்லாத ஏகன் இறைவனால் அனுப்பப்பட்டத் தூதர்கள். அவனது அடிமைகள்; அந்த இறைவனுக்கு மட்டுமே அடிபணிந்து நடக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுரை கூறுவதோடு நாங்களும் அவ்வாறே நடக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டுள்ளோம் என்றே போதித்தார்கள். எந்த இறைத் தூதரும் தன்னை இறைவனின் மகன் என்றோ, அவதார மென்றோ, இறைத் தன்மையுடையவர் என்றோ கூறவில்லை. மாறாக தங்களை இறைவனின் அடிமை என்றே பிகரடனப்படுத்தினார்கள். (பார்க்க 19:30, 38:30,44, 43:59)
மேலும் நாங்கள் செய்ய ஏவப்பட்டிருக்கும் இந்த இறைப் பணிக்கு மக்களாகிய உங்களிடம் கூலி-சம்பளம்-ஊதியம் கேட்கவில்லை. அது எங்கள் இறைவனிடமே இருக்கிறது என்று பகிரங்கமாகப் பிரகடனப்படுத்த இறைவன் கட்டளையிட்டிருக்கிறான். (பார்க்க:6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109, 127,145,164,180, 34:47, 38:86, 42:83)
இறைக் கட்டளைகளை நிராகரிக்கும் மதகுருமார்கள்:
இப்படி இறைத் தூதர்கள் இறைப் பணியை இறைவனுக்காகச் செய்ய வேண்டும்; பணத்திற்காகச் செய்யக்கூடாது என்று அறிவுரை கூறியபோது, அந்தக் காலக் கட்டங்களில் இறைப்பணியை மதமாக்கி மக்களைக் குருடர்களாக்கிப் பணம் பண்ணிக் கொண்டிருந்த இந்த மதகுருமார்கள், ஓரிறைவனுக்கு மட்டுமே அடிபணிய வேண்டும், அல்லாஹ் அல்லாத எவருக்கும், எவற்றிற்கும் அடிபணியக் கூடாது என்ற இறைத் தூதர்களின் போதனையை மறுத்து, நம் முன்னோர்களை விடவா நீ மார்க்கத்தை தெரிந்து கொண்டாய்? நம் முன்னோர்களிடம் கேள்விப்படாத ஒன்றையே இப்போது நீ புதிதாகக் கூறுகிறாய் எனக் கூறி இறைத் தூதர்களை நிராகரிக்கும்படி மக்களைத் தூண் டினார்கள். இந்த உண்மையை அல்குர்ஆன் 2:170, 5:104, 7:28, 70, 71, 85,86, 10:78, 11:62,87, 109, 12:40, 14:10, 21:53,54, 26:74,76, 31:21, 34:43, 37:17.69, 43:22,23, 53:23 போன்ற எண்ணற்ற இறைவாக்குகளை மதகுருமார்களை நம்பாமல் 7:3 இறைக் கட்டளைப்படி நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் அறிய முடியும்.
எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய் வங்களை விட்டு விட்டு, அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்?….” (7:70)
ஆக இறைவனால் அனுப்பப்பட்ட ஒவ்வொரு இறைத் தூதரையும் கடுமையாக எதிர்த்துப் பொய்ப்பித்தவர்கள் அந்தந்தக் காலத்து மத குருமார்களும், அவர்களை நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் சென்ற மக்களுமேயாவர்.

இறைத் தூதர்களை அவதாரமாக்கும் மதகுருமார்கள்:
இந்த மத குருமார்களின் இன்னொரு பெரும் மோசடி என்னவென்றால், ஓர் இறைத் தூதர் இறை அறிவிப்பைப் பெற்று நேர்வழியை மக்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவரைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்த இவர்கள், அந்த இறைத் தூதரின் மறைவுக்குப் பிறகு அவரை வானளாவப் புகழ்ந்து, அவருக்குத் தெய்வாம்சம் கற்பித்து மக்களை அவரையே வணங்க வைத்து விடுவார்கள். இப்படித்தான் இறைத் தூதர்கள் அவதாரங்கள் ஆக்கப்பட்டார்கள். இதை அல்குர்ஆன் 6:112 “”ஒவ்வொரு இறைத் தூதருக்கும் மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்கள் எதிரிகளாக இருந்தனர்என்ற கருத்தைத் தரும் இறைவாக்கும் 40:34 “”இறைத் தூதர்கள் உயிரோடிருக்கும் போது அவர்களை எதிர்த்துவிட்டு, அவர்களின் மறைவுக்குப் பிறகு வரம்பு மீறி அவர்களைப் புகழ்வதுஎன்ற இறைவாக்கும் உறுதிப்படுத்துகின்றன.
இறைவனுக்குப் படைப்புகளைக் கொண்டு இணை வைக்கத் தூண்டும் மனித ஷைத்தான்களே இந்த மதகுருமார்கள்.
இறைத் தூதர்கள் சத்தியத்தை-நேர்வழியை மக்களுக்குப் போதிக்கும்போது அத்தூதர்களை கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது, அத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு அத்தூதர்களையே வரம்பு மீறி வானளாவப் புகழ்ந்து அவர்களை அவதாரங்களாக, இறை மகன்களாக, தெய்வங்களாக ஆக்கி, சிலைகளாக வடித்து இறைவனுக்கு இணை வைக்கும் நிலையில் அவர்களையே வணங்கச் செய்வது, அதன் மூலம் ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்பட்டு உலக ஆதாயம் அடைவது இவைதான் மதகுருமார்களின் செயல்பாடுகள்.
இறுதித் தூதருக்கு முன்னால் சுமார் 600 வருடங்களுக்கு முன்பு இறைத்தூதராக அனுப் பப்பட்ட ஈசா(அலை) அவர்களது சமுதாயத்தின் நிலை இதற்கு நல்லதொரு உதாரணமாக இருக்கிறது. அவருக்கு முன்னர் வந்த இறைத் தூதர்கள் அனைவரும் மக்களுக்குப் போதித்த படி “”நான் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதனும் அவனது அடிமையுமாகும். அவனுக்கு எதையும், யாரையும் இணையாக்கக் கூடாது. அந்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனது கட்டளைகளுக்கு மட்டுமே அடிபணிய வேண்டும். அவனிடம் மட்டுமே உங்கள் தேவைகளைக் கேட்க வேண்டும். அவனையே முழுமையாக நம்ப வேண்டும்என்றே போதித்தார்.
அவரது பிரசார காலத்தில் அவரைக் கடுமையாக எதிர்த்து வந்த சவுல் என்ற மதகுரு, ஈசா (அலை) அவர்களை யூத மதகுருமார்கள் சிலுவையில் அறைந்து கொல்ல முற்பட்ட போது 4:157,158 சொல்வது போல் இறைவன் அளவில் உயர்த்தப்பட்ட பின், இந்த சவுல் தனது பெயரை பவுல் என்று மாற்றிக் கொண்டு ஈசா (அலை) காட்சி தந்ததாகவும், அவர் அருளியதாகவும் பிதா, மகன், பரிசுத்த ஆவி என முக்கடவுள் கொள்கையை அன்றைய மக்களுக்குப் போதித்து, அவர்களை வழிகேட் டிலாக்கி நரகம் புகச் செய்து ஷைத்தானின் ஏஜண்டாகச் செயல்பட்டான்.

ஈசா(அலை) இறைத்தூதரே அன்றி இறைக் குமாரர் அல்லர்!
இதை அல்குர்ஆன் 5:17,72,73,75,110,116, 117, 9:30,31,34, 61:6 போன்ற இறைவாக்குகள் அம்பலப்படுத்துகின்றன. இன்று மதகுருவான இந்த பவுல்தான் மாபெரும் சீர்திருத்தச் செம்மல், மோட்சத்திற்கு வழிகாட்டுபவர் என்பது கிறித்தவர்களின் அசைக்க முடியாத முழுமையான மூட நம்பிக்கை. ஆனால் இந்த பவுலும் அவரைப் பின்பற்றும் கிறித்தவ மதகுருமார்களும் கிறித்தவர்களை நரகத்திற்கு இட்டுச் செல்கிறார்கள்.
இந்த மதகுருமார்கள் ஷைத்தானின் நேரடி ஏஜண்டாக இருந்து ஆதத்தின் சந்ததிகளை கோணல் வழிகளிலாக்கி இறைவனுக்கு இணை வைக்கச் செய்து நரகை நிரப்புவதில் எந்த அளவு துரிதமாகவும், தீவிரமாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களது வாழ்க்கையில் இடம் பெற்ற நிகழ்வு ஆதாரமாக இருக்கிறது.
மூஸா(அலை) தனது குடும்பத்தாரையும், சமூகத்தாரையும் தமது சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களின் பாதுகாப்பில் தூர்சினாய் மலை அடி வாரத்தில் விட்டுவிட்டு இறைவனின் கட்டளைப்படி வெறும் 40 நாட்கள் (இரவுகள் அல்ல) மட்டுமே மலை உச்சிக்குச் சென்றிருந்த அந்த குறுகிய நாட்களிலேயே சாமிரி என்ற மதகுரு தங்கத்தால் ஒரு காளைக் கன்றை வடித்து அதிலிருந்து சப்தம் எழச் செய்து மூஸா(அலை) அவர்களின் சமூகத்தின் பெருங்கொண்ட மக்களை அதை வணங்கச் செய்து இறைவனுக்கு இணை வைக்கச் செய்து விட்டான். (பார்க்க 20:85-89)இது மூஸா (அலை) அவர்களின் சகோதரரும் ஓர் இறைத் தூதருமான ஹாரூன்(அலை) அவர்களின் கண்ணெதிரில் நடைபெற்ற இறைவனுக்கு இணை வைக்கும் ஒரு கொடிய செயல். இதிலிருந்தே இந்த மத குருமார்களுக்கு ஷைத்தானின் துணையுடன் மக்களிடமிருக்கும் அபரிமிதமான ஆதரவு புரிகிறதா? இல்லையா?
மக்களை வழிகெடுப்பதில் மதகுருமார்களுக்கிருக்கும் வேகமும் விவேகமும்!
இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆதத்தின் சந்ததிகளை வழிகெடுத்து இறைவனுக்கு இணை வைக்கச் செய்து நரகில் தள்ள எந்த அளவு முழு மூச்சாகவும் துரிதமாகவும் செயல்படுகிறார்கள். ஷைத்தானும் இந்த மதகுருமார்களுக்குத் துணையாக இருக்கிறான் என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்கவில்லையா? இந்த உண்மை நிலையை அல்குர்ஆன் 2:51-61, 5:20-26,7:138-140, 142-155, 20:83-98 போன்ற எண்ணற்ற இறைவாக்கு கள் உறுதிப்படுத்துகின்றன என்பதை அவற்றை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்களே அறிவார்கள்.
இறைத் தூதர்கள் இறைவனின் அடிமைகளே!
இப்படி இறைவனால் அனுப்பப்பட்ட ஒவ்வொரு இறைத் தூதரும், நான் இறைவனின் அடிமை, நானும் நீங்களும் அந்த இறைவனை மட்டுமே வணங்கவேண்டும். அவனது கட்டளைகள்படி தான் நடக்க வேண்டும். படைக்கப்பட்ட எதனையும், எவரையும் அவனுக்கு இணையாக்கக் கூடாது எனத் திட்டமாகத் தெளிவாகப் போதித்திருக்கும் நிலையில், அவரின் மறைவுக்கு மிக குறுகிய காலத்திலேயே அந்த இறைத் தூதரை மிகக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்த இந்த மதகுருமார்கள் அந்த இறைத்தூதரையே அளவுக்கு மீறிப் புகழ்ந்து அவதாரமாக்கி அவரையும், வேறு பல படைப்புகளையும் இறைவனுக்கு இணையாளர்களாக்கி வணங்கச் செய்து விடுகிறார்கள்.  (பார்க்க 19:30, 4:172, 17:3, 96:10)
அந்த இறைத் தூதருக்குப் பின்னால் வரும் அடுத்த இறைத் தூதர் முன்னைய தூதர் போதித்த அதாவது இணை துணை இல்லாத ஏகன் இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். அந்த இறைவனுக்கு எப்பொருளையும், யாரையும் இணையாக ஆக்கக் கூடாது என்றே போதிக்கிறார். ஆனால் முன்னைய இறைத் தூதரின் பெயரால் இந்த மதகுருமார்கள் பல தெய்வ வழிபாட்டை போதித்து, அதையே மக்களும் முன்னைய இறைத் தூதரின் போதனை என தவறாக விளங்கி, அடுத்து வந்த இறைத்தூதரை நிராகரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள்.

மதகுருமார்களின் போட்டி பொறாமையே ஒரே சமுதாயம் சிதறக் காரணம்!
இது அல்லாமல், இந்த மதகுருமார்கள் தங்களுக்குள் ஏற்படும் போட்டி பொறாமை காரணமாகவும் (2:90, 213, 3:19, 10:90, 42:14, 45:17) உலகியல் ஆசை மனோ இச்சை (4:135, 38:26, 53:3, 7:176, 18:28, 20:16, 25:43, 28:50, 45:23) மற்றும் ஆதிக்கம் காரணமாகவும் 21:92, 23:52 இறை கட்டளைகளை நிராகரித்து ஒன்று பட்ட ஒரே சமுதாயத்தைப் பல பிரிவுகளாகக் கூறுபோடுகிறார்கள். இப்படித்தான் பல மதங்களும் அந்த மதங்களிலும் பல உட்பிரிவுகளும் ஏற்பட்டு அவை சமுதாயத்தைச் சிதறடிக்கின்றன.
பல மதங்கள் காலங்காலமாக நிலைத்திருக்கக் காரணம் அம்மதங்களைப் போதிக்கும் மத குருமார்கள் சத்தியத்தை நேர்வழியைத் திட்டமாக, தெளிவாக அறிந்தாலும் தங்கள் வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு நேர் வழியை மறுக்கிறார்கள் என்பதை 2:146, 6:20 இறைவாக்குகள் உண்மைப்படுத்துகின்றன.

மதகுருமார்களின் வக்கிர புத்தி!
இறைத்தூதர்கள் இறைச் செய்தி என்ற வஹி மூலம் இறைவனுடன் நேரடித் தொடர்பிலும், இறைவனது கண்காணிப்பிலும் (52:48) மேலும் எந்த மனிதனாலும் செய்து காட்ட முடியாத சில அற்புத நிகழ்வுகளை (முஃஜிசாத்) இறைக் கட்டளைப்படி செய்து காட்டினார்கள். அப்படி இருந்தும் இறைத்தூதர்களின் நேர்வழி போதனைகளை இந்த மதகுருமார்கள் ஏற்காமல் நிராகரித்தார்கள் என்றால் அவர்களின் கல் நெஞ்சத்தையும், வக்கிர புத்தியையும் எளிதாக விளங்க முடியும். இதையும் இறைவன் அல்குர் ஆன் 2:74, 5:13 இறைவாக்குகளில் உறுதிப் படுத்துகின்றான்.
மக்களின் முக்கிய கவனத்திற்கு!
இப்போது முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, இறைவனுடன் நேரடித் தொடர்புடன் இருந்த இறைத் தூதர்களையே நிராகரித்து, தங்களின் அற்ப உலக ஆதாயங்களைக் குறியாகக் கொண்டு, மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு (7:176. 18:28, 20:16, 25:43, 28:50, 45:23) பல பிரிவுகளை அதாவது மதங்களைக் கற்பனை செய்தது இந்த மத குருமார்கள். நிறைவு பெற்ற (5:3) இறுதி வழிகாட்டல் நெறிநூல் அல்குர்ஆன் பதிந்துப் பாதுகாக்கப்பட்டு விட்டதால், இறுதி இறைத் தூதருக்குப் பின்னர் புதிய இறைத்தூதரோ, புதிய நெறி நூலோ இல்லவே இல்லை. எனவே முன்னர் நபிமார்கள் செய்த பிரச்சார பணி இறுதித் தூதரின் சமூகத்தினர் மீது சுமத்தப்பட்டது. (பார்க்க: 3:110, 9:71, 103:1-3) பிரசார பணி ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் மீது சுமத்தப்பட்ட தலையாய பணியே அல்லாமல் மதகுருமார்கள் மீது சுமத் தப்பட்ட பணி அல்ல; அதுவும் கூலிக்காக மார டிக்கும் மதகுருமார்கள் பிரசார பணியை செய்ய முற்றிலும் தகுதியற்றவர்கள்.

மதகுருமார்கள் திருந்தமாட்டார்கள்!
இன்னொரு உண்மையையும் முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். வஹீ மூலம் நேரடித் தொடர்புடன் இருந்த இறைத் தூதர்களையே கடுமையாக எதிர்த்த இந்த மதகுருமார்கள், அவர்களது வாயிலிருந்து நேரடியாக வெளிவந்த இறை வாக்குகளையே நிராகரித்த இந்த மதகுருமார்கள், இன்று ஏடுகளில் பதிவாகியுள்ள அல்குர்ஆன் இறை வாக்குகளை சாதாரண முஸ்லிம்கள் படித்துக் காட்டுவதையா ஏற்கப் போகிறார்கள்? அப்படி ஏற்றதாக வரலாறே இல்லை! 2:41,42,44,75, 76, 78,79,109,170,171,174, 176,213, 3:78,187,188, 4:44,46, 5:41,63, 6:21, 25, 26, 9:9,10,34, 11:18,19, 31:6 இந்த இறைவாக்குகளை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் இந்த மதகுருமார்களின் தில்லு முல்லுகளையும், பித்தலாட்டங்களையும், ஏமாற் றுத் தந்திரங்களையும் அறிய முடியும்.
முஸ்லிம் மதகுருமார்களின் தந்திரம் :
இந்த இறைவாக்குகள் அனைத்தும் யூத, கிறித்தவ, குறைஷ் மத குருமார்களைப் பற்றியவை. எங்களைக் கட்டுப்படுத்தா என்று முஸ்லிம் மதகுருமார்கள் முஸ்லிம்களை ஏமாற்ற முற்படுகிறார்கள். ஆனால் இறைவன் எவற்றைக் குற்றமாகக் கண்டித்திருக்கிறானோ அவற்றை யார் செய்தாலும் குற்றந்தான் என்பதை முஸ்லிம் மதகுருமார்கள் ஏற்கமாட்டார்கள். யூதன் திருடினால் அது திருட்டு, நாங்கள் திருடினால் திருட்டு அல்ல. யூதன் ஓரினப் புணர்வில் ஈடுபட்டால் அது குற்றம்; நாங்கள் ஓரினப் புணர்வில் ஈடுபட்டால் அது குற்றம் அல்ல. அவுலியாவின் நற்செயல்(?); யூதன் விபச்சாரம் செய்தால் அது விபச்சாரம்; நாங்கள் விபச்சாரம் செய்தால் அது விபச்சாரம் அல்ல; யூதன் இறைவன் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றினால் அது பெருங்குற்றம்; ஆனால் நாங்கள் இறைவன் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றினால் அது குற்றமே இல்லை என்பதுதான் முஸ்லிம் மத குருமார்களின் வாதம்.
உண்மை நிலை என்ன?
உண்மை என்ன? அல்குர்ஆன் என்ன கூறுகிறது? தவறு, பாவம், குற்றச் செயல், பித்அத், குஃப்ர், ஷிர்க் என எந்த இறைத் தூதருக்குப் பின்னர் அந்த சமுதாயத்தில் திருட்டுத்தனமாக, சட்ட விரோதமாக புகுந்து கொண்ட மத குருமார்களும், அவர்களைக் கண்மூடி (தக்லீது) பின் பற்றிய மக்களும் செய்து அவை அல்குர் ஆனில் கண்டிக்கப்பட்டிருந்தாலும், முஸ்லிம் மதகுருமார்களும், அவர்களை தக்லீது செய்யும் மக்களும் செய்தாலும் அது குற்றச் செயல்தான், பாவம் தான். தண்டனைக்குரியதுதான். இதையும் தெளிவாக இறுதி இறைத்தூதர் மக்களுக்கு விளக்கி இருக்கிறார்கள்.
உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழி முறை களை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், “”அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “”வேறெவரை?” என்று பதில் அளித்தார்கள்”. (அபூ சயீத் அல்குத்ரீ(ரழி) புகாரீ 3456)
முஸ்லிம் மதகுருமார்களை பின்பற்ற ஆதாரமுண்டா?
இந்த முஸ்லிம் மதகுருமார்களுக்கு வழிப் படவேண்டும், அவர்களது வழிகாட்டல் படியே நடக்க வேண்டும் என ஒரேயயாரு குர்ஆன் வசனத்தையோ, ஒரேயயாரு ஆதாரபூர்வ மான ஹதீஸையோ இந்த மதகுருமார்களால் காட்ட முடியுமா? நிச்சயம் முடியாது. அல்லாஹ்வுக்கு வழிபட வேண்டும்; அவனது கட்டளைப்படி நடக்க வேண்டும் என்றும் அதேபோல் இறைத்தூதருக்கு வழிப்பட வேண்டும் அவரது வழிகாட்டல்படி நடக்க வேண்டும் என்றும் கூறும் குர்ஆன் வசனங்கள் சுமார் 19, இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டு என்னைப் பின்பற்றுங்கள் என்று இறைத் தூதர்கள் கூறியது 11 இடங்களிலும் அல்குர்ஆனில் இடம் பெற் றுள்ளன. சமுதாய ஒற்றுமையை குறிக்கோளாகக் கொண்டு குர்ஆன், ஹதீஸுக்கு உட்பட்டு அமீருக்கு வழிப்பட வேண்டும் என்று 4:59 ஒரே யயாரு இடத்தில் இடம் பெற்றுள்ளது.
மற்றபடி மதகுருமார்களான இந்த ஆலிம் களின் வழிகாட்டலின் படி நடக்க வேண்டும் என்ற ஆணை அல்குர்ஆனிலோ, ஆதாரபூர்வ மான ஹதீஸிலோ இல்லவே இல்லை. இன்னும் பகிரங்கமாகச் சொல்வதாக இருந்தால் அல்குர் ஆன் 5:95ல் இஹ்ராமுடைய நிலையில் வேட்டையாடி ஒரு பிராணியைக் கொன்றால் அதற்குப் பரிகாரமாக அதே போன்றதொரு பிராணியை ஈடாக மக்காவில் குர்பானி கொடுக்க வேண்டும். அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறானே அல்லாமல், இங்கும் மதகுருமார்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனக் கட்டளையிடவில்லை.

தோட்டிக்கும் அரசாணை!
இந்த நிலையில் தெருக் கூட்டும் தோட்டி கூட அரசிடமிருந்து முறையான பணி ஆணையைப் பெறாத நிலையில் அப்பணியில் ஈடுபட முடியாது என்று இருக்கும்போது, பணி ஆணையே இல்லாமல் இந்த மதகுருமார்கள் எந்த முகத்தோடு நாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள் மக்களுக்கு மார்க்கம் சொல்ல உரிமை பெற்றவர்கள் என மார் தட்டுகிறார்கள்? பிதற்றுகிறார்கள்?

மதகுருமார்களின் திருட்டுத்தனம்!
இந்த மதகுருமார்கள் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக, கொல்லைப்புற இடுக்கு வழியாக முஸ்லிம் சமுதாயத்தில் நுழைந்து கொள்ள 16:43, 21:7 என இரண்டு குர்ஆன் வசனங்களில் இடம் பெறும் “”ஃபஸ்அலூ அஹ்லஃத்திக்ரீஎன்ற அரபி பதத்திற்கு “”நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்என தங்கள் மனோ இச்சை யின்படி பேசி வருகிறார்கள்; எழுதி வருகிறார்கள்.
அவர்கள் சொல்வது போல், அறிந்தவர்களிடம் கேட்டு அறிவதாக இருந்தால், “”அஹ்லல் இல்மிஎன்று இருக்க வேண்டும்; அவர்கள் கூறுவதைக் கண்மூடிப் பின்பற்றுவதாக இருந்தால் “”கல்லிதூ அஹ்லல் இல்மிஎன்றே இருக்க வேண்டும். அப்படி இல்லை; மாறாக “”அஹ்ல ஃத்திக்ரிஎன்றே இருக்கிறது. “”ஃதிக்ர்என்று இந்த இடத்தில் குறிப்பிடுவது 3:58ல் கூறும் இறையறிவிப்புக்களையே குறிக்கும். 16:43, 21:7 குறிப்பிடும் “”உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அனுப்பிய தூதர்கள் அனைவரும் ஆண்களேஎன்ற செய்தி எந்த அறிஞனின் அறிவிலும் தெரிவதல்ல; இறைவன் அறிவித்துக் கொடுப்பதைக் கொண்டு மட்டுமே அறிய முடியும். இதிலிருந்து என்ன தெரிகிறது? மார்க்கம் பற்றி எவருக்கும் சந்தேகம் வந்து கேட்டால், எவரிடம் கேட்கப்படுகிறதோ அவர் உடனடியாக அல்குர்ஆனை எடுத்து, அதில் குறிப்பிட்ட விடயம் பற்றிக் கூறும் வசனத்தைக் காட்ட வேண்டும். அல்லது அது பற்றிய ஆதாரபூர்வமான ஹதீசைக் காட்ட வேண்டும்.

நரகில் தள்ளும் மதகுருமார்கள்!
அதற்கு மாறாக இந்த மதகுருமார்கள் என்ன செய்கிறார்கள்? தங்களின் மனோ இச்சைப்படி யுள்ள சுய விளக்கங்களையும், கற்பனைகளையும் கூறி மக்களை வழிகெடுக்கிறார்கள். குர் ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரண்பட்ட கருத்துக்களைக் கூறி மக்களை நரகில் தள்ளுகிறார்கள்.
அடுத்து இவர்கள் எந்த அடிப்படையில், எந்த ஆதாரத்தை வைத்துத் தங்களை மவ்லவிகள், ஆலிம்கள், மதகுருமார்கள் என்று கூறுகிறார்கள் என்பதை நோட்டமிட்டுப் பாருங்கள். ஏதாவதொரு அரபி மதரசாவில் ஓசியில் தங்கி ஓசிச் சோறு சாப்பிட்டு சில ஆண்டுகள் கழித்து விட்டால் அவர்கள் ஆலிம்கள். இது தான் மத குருமார்களின் அளவுகோல். நபி (ஸல்) அவர்கள் இப்படியொரு மார்க்கக் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்திக் காட்டி இருக்கிறார்களா? அப்படியொரு ஆதாரம் இவர்களிடம் இருக்கிறதா? இல்லையே?
மதரசா விஞ்ஞானக் கண்டுபிடிப்பா?
பின் எப்படி பித்அத்தான இந்த நடைமுறை முஸ்லிம் சமுதாயத்திலும் நுழைந்தது? நபி(ஸல்) அவர்களது காலத்தில் இல்லாதிருந்து இப்போது விஞ்ஞான வளர்ச்சி காரணமாகக் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்பா? அதுவும் இல்லையே! நபி(ஸல்) அவர்களுக்கு முன்னர்தான் எண்ணற்ற நபிமார்கள் வந்தார்கள். நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னர் நபி இல்லை. நபி(ஸல்) அவர்களுக்கு முன்னர் வந்த நபிமார்களின் மறைவுக்குப் பிறகு அந்த சமுதாயங்களில் திருட்டுத் தனமாக நுழைந்து கொண்ட மார்க்கத்தை தொழிலாகக் கொண்ட மதகுருமார்களின் கற்பனையில் உருவானதே இந்தப் புரோகித கல்வி முறை.
இந்து மதகுருமார்கள் நடத்தும் குருகுல மடம், கிறித்தவ மதகுருமார்கள் நடத்தும் குருத்துவக் கல்லூரி இப்படி அனைத்து மதங்களிலுமுள்ள மதகுருமார்கள், மதத்தை வைத்து வயிறு வளர்க்கும் மதகுருமார்களை உற்பத்தி செய்யும் குருத்துவ கல்வி முறையை நடைமுறைப் படுத்தத்தான் செய்கிறார்கள். 1450 வருடங்களுக்கு முன்னர் நபி (ஸல்) அவர்களது காலத்தில் இந்த அனைத்து மதங்களிலும் குருகுலக் கல்வியை போதிக்கும் மடங்கள் இருக்கத்தான் செய்தன. ஏன்? நபி (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்த அரபு நாட்டிலேயே தாருந்நத்வாஎன்ற குருகுல மடம் இருக்கத்தான் செய்தது. அன்று நபி(ஸல்) அவர்களை மிகக் கடுமையாக, கொடூரமாக எதிர்த்தவர்கள் இந்த குருகுல மடத்தின் மதகுருமார்களே! அவர்களின் பக்தர்களே! குறிப்பாக அதன் தலைவனும் அபுல் ஹிக்கம் என்று குறைஷ்களால் மதித்துப் போற்றப்பட்டவனுமான அபூஜஹீலே!

நடுநிலையுடன் சிந்தியுங்கள்!
இப்போது நிதானமாக நடுநிலையுடன் சிந்தியுங்கள். ஆதம்(அலை) அவர்களிலிருந்து இறுதித் தூதர் வரை, நபிமார்களின் மறைவிற்குப் பின்னர் ஒவ்வொரு சமுதாயத்திலும் திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்ட இந்த மத குருமார்கள் நடை முறைப்படுத்திய குருகுல கல்வி முறை இறைவனின் அங்கீகாரம் பெற்ற நேர்வழியாக இருந்தால், நபி(ஸல்) என்ன செய்திருப்பார்கள்? 360 சிலைகளாலும் பல கபுருகளாலும் (சமாதி) நிறைந்திருந்த, அசுத்தப்பட்டிருந்த ஆதி ஆலயம் கஃபதுல்லாஹ்வை அச்சிலைகளை உடைத்தெறிந்து, கபுருகளைத் தரைமட்டமாக்கி ஒழுங்குபடுத்தி சுத்தப்படுத்தியது போல், தமது முப்பாட்டனாரின் முப்பாட்டனார் குசை கி.பி.440ல் நிறு விய தாருந்நத்வா குருகுல மடத்தையும் மூட நம்பிக்கைகளை விட்டும் தூய்மைப்படுத்தி முறையாகச் செயல்பட வைத்திருப்பார்கள் அல்லவா?
அப்படிச் செய்யாமல் அக்குருகுல மடத்தை (தாருந் நத்வா) வேரோடு வேரடி மண்ணோடு ஏன் ஒழித்துக் கட்டினார்கள்? இன்று இந்த மத குருமார்களை முஸ்லிம்கள் மதிப்பது போல், அன்று குறைஷ்களால் மாபெரும் மேதைகளாக-அறிஞர்களாக மதித்துப் போற்றப்பட்டவர்களை ஜாஹில்கள்-மூடர்கள் என்றும் அபுல் ஹிக்கம்என குறைஷ்களால் வானளாவப் புகழ்ந்துரைக்கப்பட்டவனை-அக்குருகுல மடத்தின் தலைவனை அபூ ஜஹீல்- மட மையின் தந்தை என்றும் ஏன் தமது சமுதாயத் தினருக்கு அடையாளம் காட்டினார்கள்? சிந்தித்துணர வேண்டாமா?
இஸ்லாத்தில் இடைத்தரகர்களுக்கு அனுமதியே இல்லை!
அப்படிச் சிந்தித்துணர்ந்தால், இறைவனின் 7:3, 3:36,66,67,68, 59:7 போன்ற நேரடிக் கட்டளைகளை நிராகரித்து-குஃப்ரிலாகி, இன்னும் 2:186, 50:16, 56:85 இறைவாக்குகளில் மனிதனுக்கு மிகமிக நெருக்கமாக பிடரி நரம்பை விட நெருக்கமாக ஏகன் இறைவனே இருப்பதைத் தெளிவாகத் திட்டமாக அந்த இறைவனே அறிவித்த நிலையில், அந்த இறைவனுக்கும் அவனது அடியானான மனிதனுக்கும் இடையில் இடைத் தரகர்களாக-புரோகிதர்களாக-மதகுருமார்களாக இவர்கள் எப்படிப் புக முடியும்? அப்படியானால் அந்த ஏகன் இறைவனை விட மார்க்கத்தை மக்களுக்கு விளக்கும் ஆற்றல் மிக்கவர்களா இம் மதகுருமார்கள்? என்று சிந்தித்தால் உண்மை விளங்கும்.

இறைவனை விஞ்சிய மதகுருமார்கள்!
மார்க்கத்தை மனித குலத்திற்கே தெள்ளத் தெளிவாக நேரடியாக, எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி மனிதனைப் படைத்த இறைவனே விளக்கி விட்டதை அல்குர்ஆன் 2:99,159, 185, 209, 213, 253, 3:86,97,105,184, 4:153, 5:32 இவை போல் சுமார் 52 இடங்களில் கூறி இருக்க அல்லாஹ்வே தெளிவாக விளக்கியும் குர்ஆன் உங்களுக்கு விளங்காது, நாங்கள்தான் விளக்க வேண்டும் என்று ஆணவத்துடன் கூறும் இம் மதகுருமார்கள் அல்லாஹ்வை விட ஆற்றல் மிக்கவர்களாக தங்களைத் தாங்களே கர்வத்துடன் பீற்றிக் கொள்வது அவர்களின் கொடூர முகத்தை அடையாளம் காட்ட வில்லையா?
மார்க்கத்தை மார்க்கம் அல்லாததாகவும், மார்க்கம் அல்லாததை மார்க்கமாகவும் ஆக்கும் மதகுருமார்கள்!
இந்த மத குருமார்களைத்தான் மார்க்கமல்லாததை மார்க்கமாக்கி இறைவனுக்கு இணையாளர்கள் ஆகிறார்கள் என 42:21ல் இறைவன் கடிந்து கூறுகிறான். தீர்ப்பை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்காவிட்டால், இவ்வுலகிலேயே இந்த மத குருமார்களுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கும் என்றும் இறைவன் கூறுகிறான். இந்த மதகுருமார்கள் ஏகன் இறைவனுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க முற்படும் தற்குறிகள் என்று 49:16ல் இறைவன் கண்டித்துக் கூறுகிறான். வானத்தின் கீழ் வாழும் படைப்புகளிலேயே மிகமிக கேடுகெட்ட ஜன்மம் இந்த மத குருமார்கள்தான் என்ற உண்மையை 7:175 முதல் 179 வரை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயமாக அறிவார்கள்.

மதகுருமார்களின் இலக்கணம் பாரீர்!
ஆக அல்குர்ஆனில் பொய்யன்கள் என 3:61, 16:39, 51:56 மூன்று இடங்களிலும், 3:90, 15:56, 56:51, 1:7, 23:105-108, 37:69 ஆகிய இறை வாக்குகளில் வழிகெட்டவர்கள் என்றும், 2:90, 5:87, 6:119, 7:55, 10:74 ஆகிய இறைவாக்குகளில் வரம்பு மீறுகிறவர்கள் என்றும், 6:55, 147, 7:40,84,133, 9:66, 10:13, 75, 11:52, 116, 12:110, 14:49, 15:12, 58, 18:49,57, 19:86, 20:102, 25:22, 31, 26:200, 27:69, 28:17, 32:22, 34:32, 37:34, 43:74, 44:37, 45:31, 46:25, 51:52, 54:47, 68:35, 74:41, 77:18 ஆகிய 34 இறைவாக்குகளில் குற்றவாளிகள் என்றும், 2:12,60, 3:63, 5:64, 7:74, 86, 103,142, 10:40,81,91, 11:85, 26:183, 27:14, 28:4, 77, 29:30, 36, 38:28 ஆகிய இடங்களில் குழப்பம் செய்கிறவர்கள் என்றும், சுமார் 135 இடங்களில் நிராகரிப்பாளர்கள் என்றும் கூறும் அனைத்து இறைவாக்குகளும் மதகுருமார்களையும், அவர்களை கண்மூடிப் பின்பற்றியவர்களையுமே குறிக்கும் என்பதை யாரால் மறுக்க முடியும்.
முஸ்லிம் யார்? காஃபிர் யார்?
இந்த மதகுருமார்கள் மக்களிடையே முஸ்லிம்களுக்கும், காஃபிர்களுக்கும் தவறான பொருளைக் கற்பித்து அதை மக்கள் உள்ளங்களில் புரையோடச் செய்துள்ளனர். முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெற்றோருக்குப் பிறந்து, முஸ்லிம் பெயரிட்டு, சுன்னத்துச் செய்யப்பட்டு, முஸ்லிம் சமுதாயத்தில் வாழ்ந்தால் அவன் முஸ்லிம்; அவனுக்கு முஸ்லிமாக இருப்பதற்கு அடிப்படையான கலிமாவே தெரியாமல், மார்க்க சம்பந்தப்பட்ட அடிப்படைகள் எதையும் தெரியாமல் இருந்தாலும் அவன் முஸ்லிம்; இறுதி வழிகாட்டல் நெறிநூல் அல்குர்ஆன் கடுமையாக கண்டித்துக் கூறும் எண்ணற்ற இறைவாக்குகளை நிராகரித்து (காஃபிர்) வாழ்ந்தாலும் அவன் முஸ்லிம். அன்று நபி(ஸல்) அவர்களின் வருகை யின்போது கஃபத்துல்லாஹ்வை சுற்றி வாழ்ந்து கொண்டிருந்த இப்றாஹீம்(அலை), இஸ்மாயீல் (அலை) அவர்களின் நேரடி சந்ததிகளான குறைஷ்களும் இப்படித் தங்களை முஸ்லிம்கள் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் இறுதி நபிக்கு இறைவனால் அருளப்பட்ட அல்குர்ஆன் வசனங்களை, அன்று அவர்களை ஆட்டிப் படைத்த தாருந் நத்வா மதப் புரோகிதர்களை கண்மூடி நம்பி நிராகரித்தனர். அவர்களின் கோணல் வழி உபதேசங்களை வேதவாக்காகக் கொண்டு நபி(ஸல்) அவர்களையும், அவர்களது தோழர்களையும் மிகக் கடுமையாக எதிர்த்தனர். அதனாலேயே அவர்கள் காஃபிர்கள்-இறை நிராகரிப்பாளர்கள் ஆனார்கள். (பார்க்க 109:1-6)

இன்றைய முஸ்லிம்களின் நிலை!
அதே போல் இன்றைய முஸ்லிம்களும் இந்த மவ்லவிகளான மதகுருமார்களை கண்மூடி நம்பி நேரடி அல்குர்ஆன் வசனங்களை நிராகரிக்கின்றனர். அவர்களின் கோணல் வழி உபதேசங்களை வேதவாக்காகக் கொண்டு, சுய கருத்தைச் சொல்லாமல் அல்குர்ஆனிலுள்ள இறைவாக்குகளை மட்டுமே எடுத்துக் கூறுகிறவர்களை மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அப்படியானால் இம் மத குருமார்களின் பின்னால் கண்மூடிச் செல்லும் (தக்லீது) முஸ்லிம்களின் நிலை என்ன? நிதானமாக நடுநிலையோடு சிந்தியுங்கள்.
நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத குருகுல மதரசா நடைமுறை மார்க்கத்திற்கு உட்பட்டதா? நபி(ஸல்) அவர்களுக்கு முன்னரே அனைத்து மதங்களிலும் இக்குருகுல கல்வி முறை இருந்தும், அரபு நாட்டிலேயே கஃபாவிற்கு மிகச் சமீபமாக அதன் வட பகுதியில் தாருந்நத்வாஎன்ற குருகுல கல்வி மடம் இருந்தும் நபி(ஸல்) அதைத் தரைமட்டமாக்கி ஒழித்துக் கட்டினார்கள். அந்த மதகுருமார்களை இழிவு படுத்தினார்கள் என்ற வரலாறு குன்றிலிட்ட தீபமாக, தெள்ளத் தெளிவாக இருக்க, மீண்டும் இக்குருகுலக் கல்வி முறை அதாவது அரபி மதரஸாக்கள் எப்படி முஸ்லிம் சமுதாயத்தினுள் நுழைந்தன? சிந்திக்க வேண்டாமா?
குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் காட்டுவார்களா?
சுன்னத் ஜமாஅத்என்ற பிரிவினராவது பித் அத் ஹஸனா”-”அழகிய புதுமைஎன இம் மதரஸாக்களை நியாயப்படுத்துகின்றனர். குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாயளவில் பிதற்றும் அஹ்ல ஹதீஸ், முஜாஹித், ஜாக், ததஜ, இதஜ, ஸலஃபி போன்றோர் எந்த முகத்துடன் இந்த மத குருமார்களை உற்பத்தி செய்யும் குருகுல மடங்களான மதரஸாக்களை புதிதாகக் கற்பனை செய்து நடத்தி வருகின்றனர்? பதில் தருவார்களா?
மார்க்கத்தை ஓசி-தண்டச் சோறு போட்டுக் கற்றுக் கொடுப்பது எந்த அளவு தவறானது -பெருங்குற்றமானது என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் நடைமுறையே நமக்குப் போதுமான ஆதாரமாகும். தாருந்நத்வா குருகுல மடத்தை இடித்துத் தரைமட்டமாக்கிய நபி(ஸல்) அது போன்றதொரு குருகுல மடம் முஸ்லிம்களிடையே மீண்டும் வந்து நுழைந்து விடக்கூடாது என்பதில் மிகமிக எச்சரிக்கையாக இருந்தார்கள். மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளும் மிகத் தூய்மையான நோக்கத்துடன் சில நபி தோழர்கள் மஸ்ஜித் நபவிக்குப் பக்கத்திலிருந்த திண்ணையில் அடுகிடை படுகிடை எனக் கிடந்தனர்.
நபி(ஸல்) ஏன் ஏற்பாடு செய்யவில்லை?
இத்தனைக்கும் அத்திண்ணைத் தோழர்கள் அத்திண்ணையில் அடுகிடை படுகிடையாகக் கிடந்த நோக்கம் மார்க்கத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கமே அல்லாமல் வேறு நோக்கம் எதுவும் இல்லை. தங்களால் ஹலாலான முறையில் உழைத்துச் சாப்பிட வழி தெரியாமல் அத்திண்ணையில் போய் தஞ்சம் அடையவில்லை. இந்த நிலையில் நபி(ஸல்), அவர்களின் வயிற்றுப் பசிக்கு எந்தவித முன் ஏற்பாட்டையும் செய்து கொடுக்கவில்லை. வரக்கூடியவர்கள் அவர்களின் பரிதாப நிலையைக் கண்டு இரக்கப்பட்டு அவர்களுக்கு ஏதும் உணவு கொடுத்தால் சாப்பிடுவார்கள். இல்லை என்றால் கொலைப் பட்டினிதான். பசி தாளாமல் சிலர் மயங்கி விழுந்து விடுவார்கள் என்று வரலாறு கூறுகிறது.
இப்படிப்பட்ட நிலையைக் கண்டும் நபி (ஸல்), அவர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய ஏன் ஏற்பாடு செய்யவில்லை. அந்த அளவு இரக்கமற்றவர்களா நபி(ஸல்) அவர்கள்? வெளியூரிலிருந்து விருந்தாளிகள் வந்தால் அவர்களை விழுந்து விழுந்து உபசரிக்கும் நபி(ஸல்) அவர்கள், தன்னிடம் ஒன்று மில்லாவிட்டாலும் கூட, நபி தோழர்களிடம் கேட்டு அந்த விருந்தாளிகளை அழைத்துச் சென்று உணவு கொடுத்து உபசரிக்கும்படி கட்டளையிடும் நபி(ஸல்) அவர்கள் தொடர்ந்து பட்டினி கிடக்கும் இந்த திண்ணைத் தோழர்கள் பற்றி எந்த ஏற்பாடும் செய்யாமலிருந்தது ஏன்?
ஒவ்வொரு திண்ணைத் தோழரையும், ஒவ்வொரு நபிதோழரிடம் ஒப்படைத்து, அவர்களின் உணவுத் தேவையை நிறைவேற்றும்படி ஏன் கட்டளையிடவில்லை? சிந்தித்து உணர வேண்டாமா?

முஹாஜிர்களுக்கு செய்த ஏற்பாடு, மார்க்கம் கற்பவர்களுக்கு ஏன் இல்லை?
இத்தனைக்கும் மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து (ஹிஜ்ரத்) மதீனா வந்த முஹாஜிர்களை ஒவ்வொரு மதீனாவாசிகளிடம் (அன்சார்கள்) ஒப்படைத்து அவர்களின் இவ்வுலக தேவைகளை நிறைவு செய்து கொடுக்கும்படி கட்டளையிட்ட முன் மாதிரியும் இருந்ததே! அந்த ஏற்பாட்டை மார்க்கத்தைத் தூய நிலையில் கற்க அத்திண்ணையில் அடுகிடை படு கிடை எனக் கிடந்த திண்ணைத் தோழருக்காக ஏன் செய்யவில்லை?
வழிகேட்டில் இட்டுச் செல்லும் குருகுலக் கல்வி!
தனக்கு முன்னால் வந்து சென்ற நபிமார்களின் சமூகங்களில் திருட்டுத்தனமாக நுழைந்து அச் சமூகங்களைப் பல கோணல் வழிகளில் இட்டுச் சென்று நரகில் விழச் செய்யும் அக்கொடூர குருகுலக் கல்வி முறை தப்பித் தவறியும் தமது சமூகத்தில் நுழைந்து விடக் கூடாது. அதனால் முஸ்லிம் சமூகம் நரகம் நோக்கி நடைபோடக் கூடாது என்பதில் மிகமிக எச்சரிக்கையாக இருந்தார்கள் நபி(ஸல்) அவர்கள். மார்க்கக் கல்வி கற்கும் காலத்தில் ஓசியில் தங்கி, ஓசிச் சாப்பாடு சாப்பிட்டு சோம்பேறிகளாகி, மார்க்கத்தை மதமாக்கி அது கொண்டு வயிறு வளர்க்கும் மதகுருமார்கள் ஒரு போதும் தமது சமூகத்தில் திருட்டுத் தனமாக நுழைந்து விடக்கூடாது என்பதில் மிக மிக எச்சரிக்கையாக இருந்தார்கள் நபி(ஸல்) அவர்கள்.
நபி(ஸல்), திண்ணைத் தோழர்களின் உணவுத் தேவைக்கு எவ்வித முன் ஏற்பாடும் செய்யவில்லை. அதே சமயம் பள்ளிக்குத் தொழவரும் நபி தோழர்கள் அவர்களின் பரிதாப நிலையைப் பார்த்து தாங்களாக முன்வந்து அவ்வப்பொழுது அவர்களுக்கு உதவி செய்ததை நபி(ஸல்) தடுக்கவில்லை. அல்குர்ஆன் 2:273 இறைவாக்கும் இதை உறுதிப்படுத்துகிறது. ஆனால் இப்படிப்பட்ட இந்த உதவி அவ்வப்பொழுது அவர்களின் நிலை அறிந்து உதவி செய்வதைக் குறிக்குமே அல்லாமல், மார்க்கத்திற்காக தங்களை அர்ப்பணிப்பவர்களுக்கு நிரந்தரமாக மாதாமாதம் சம்பளம் கொடுத்து அவர்களை மதகுருமார்களாக்குவதை ஒருபோதும் அனுமதிக்காது.
அப்படிப்பட்ட ஒரு மூடத்தனமான சுய விளக்கத்தை ததஜ மத்ஹப் தலைமை மதகுரு தன்னுடைய குர்ஆன் விரிவுரை என்ற பெயரால் வெளியிட்டுள்ள இதுகாலம் வரை வெளிவந்த தஃப்ஸீர்களை (குர்ஆன் விரிவுரை) எல்லாம் வழி கேட்டில் மிஞ்சும் வகையில் எழுதிய அபத்தக் களஞ்சியத்தில் இந்த 2:273 இறைவாக்குக்கு விரிவுரையாக எழுதி அவரது ஆதரவாளர்களை மூளைச் சலவை செய்து நரகிற்கு இட்டுச் செல்கிறார். நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொள்ளும், மத குருமார்களை உற்பத்தி செய்யும் குருகுல கல்வி அதாவது மதரஸா கல்வி எந்த நிலையிலும் தமது சமுதாயத்தில் தப்பித் தவறியும் நுழைந்து விடக் கூடாது என்ற கவலை காரணமாகவே, அக்கறை காரணமாகவே தாம் பெரிதும், அன்பும், இரக்கமும் காட்டிய திண்ணைத் தோழர்களின் உணவுத் தேவையை நிறைவு செய்து கொடுக்கும் எவ்வித நிரந்தர முன் ஏற்பாட்டையும் செய்து கொடுக்கவில்லை என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறது.
குருகுல கல்வி முறை எப்போது இஸ்லாத்தில் நுழைந்தது?
மதகுருமார்களை உருவாக்கும் குருகுல கல்வி முறையை இந்த அளவு கடுமையாக நபி (ஸல்) அவர்கள் தடுத்து நிறுத்தியும், எப்படி இந்த மதகுருமார்கள் திருட்டுத்தனமாக முஸ்லிம் சமுதாயத்தில் நுழைந்தார்கள்? எப்போது இந்த குருகுல கல்விமுறை அதாவது மதரஸா கல்வி முறை நடைமுறைக்கு வந்தது என்று ஆய்வு செய்து பார்த்தால், யூதக் கைக் கூலிகள் முஸ்லிம்களாக நடித்து, இமாம்களின் பெயரைச் சொல்லி கண் மூடி(தக்லீது) பின்பற்றும் மத்ஹபுகள் முஸ்லிம்களிடையே புகுத்தப்பட்ட பின்னரே இம்மதரஸாக்கள்-குருகுல மடங்கள் இஸ்லாமிய சமூகத்திலும் புத்துயிர் பெற்றன.
அந்த வரலாறுகளையும், முஸ்லிம்களில் வெறும் 5% மட்டுமே மார்க்கத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் புரோகித குருகுல கல்வி கற்கும் முறைக்கு மாற்றமாக முஸ்லிம் சமுதாயத்திலுள்ள 100% ஆண்களும், பெண்களும் முழுமையாக தூய மார்க்கக் கல்வியை கற்றுக் கொள்ளும் மிக எளிய, சிரமமற்ற நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டி தமது சமூகம் அவசியம் அதையே பின்பற்றி நடக்க வேண்டும் என்று கட்டளையிட்டுச் சென்ற கல்வி முறையையும், அத்திட்டத்தை முறியடிக்க  இம்மதகுருமார்கள் செய்து வரும் தகிடு தத்தங்களையும் இன்ஷா அடுத்த இதழில் பார்ப்போம்.
தொடர்: 2

மார்க்கப்பணி சம்பளத்திற்குச் செய்யப்படுவதல்ல!
மனித குலத்தைச் செம்மைப்படுத்த, நேர்வழிப்படுத்த உலகிற்கு அனுப்பப்பட்ட பல்லாயிரக்கணக்கான இறைத் தூதர்கள் மார்க்கப் பணியை மக்களிடம் சம்பளம் எதிர்பாராமல், கேட்காமல், அல்லாஹ்வின் பொருத்தம் நாடியே செய்தார்கள்; அதன் முக்கியத்துவம் கருதி அதைப் பகிரங்கமாக மக்களுக்கு அல்லாஹ் அறிவிக்கச் செய்தான் என்பதை எல்லாம் சென்ற இதழில் பார்த்தோம். மார்க்கப் பணிக்குச் சம்பளம் வாங்காமல் அல்லாஹ்வுக்காக அப்பணியைச் செய்பவர்களே நேர்வழியில் இருக்கிறார்கள் என்று யாஸீன் 36:21 இறைவாக்கு கட்டியம் கூறுகிறது. ஆனால் அதே யாஸீன் அத்தியாயத்தை வீடு வீடாகச் சென்று அதன் பொருள் அறியாமல் ஓதிவிட்டு அதற்கே கூலி வாங்கும் கேவல நிலையிலேயே இம் மதகுருமார்கள் இருக்கிறார்கள்.
நாசத்தை விளைவிக்கும் குருகுல மடம்!
மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொள்வதற்கென்றே, நபி(ஸல்) அவர்களால் தரைமட்டமாக்கப்பட்ட குரு குலக் கல்வி முறையை மதரஸா என்ற பெயரில் முஸ்லிம் சமுதாயத்திலும் நுழைத்து விட்டார்கள் இந்த மதகுருமார்கள். நோக்கம் அவர்களின் வயிற்றுப் பிழைப்பே.

நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை!
இப்போது புகாரீயில் காணப்படும் முதல் ஹதீஸே என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள் என உமர் பின் கத்தாப்(ரழி) அறிவிக்கிறார்கள்.
“”
செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகிறானோ, அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிடைக்கும்.
ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காக, இருந்தால் அந்த ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகச் செய்யப்பட்டதாகும். ஒருவரின் ஹிஜ்ரத் ஏதாவது உலகாயத நன்மையைப் பெறுவதற்காகவோ, ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகவோ அமையுமாயின் இவற்றில் எதற்காக வேண்டி அவன் ஹிஜ்ரத் செய்தானோ, அதற்காகவே அவனது ஹிஜ்ரத் கணிக்கப்படும்”. (புகாரீ, முஸ்லிம்)
அடிப்படைச் சீர்திருத்தங்களும், நல்லொழுக்கப் பயிற்சிகளுக்கும் மிகமிக முக்கியத் தேவையான, அதிமுக்கியமான நபிமொழியாகும் இது. நாம் நற்செயல்களாகக் கருதிச் செய்யும் அனைத்துச் செயல்களின் விளைவுகள் நமது எண்ணங்களை அடிப்படையாகவே அமையும். நமது எண்ணம் மறுமையைக் குறிக்கோளாகக் கொண்டு இருக்குமாயின் மறுமையில் அதற்குரிய கூலி நிச்சயம் கிடைக்கும். அதற்கு மாறாக இவ்வுலகைக் குறிக்கோளாகக் கொண்டதாக எண்ணம் இருக்குமாயின் இவ்வுலகு கிடைக்கும். மறுமை கிடைக்காது.

இஃக்லாசற்ற மிகமிக உன்னத செயலும் வீணே!
ஒருவனது செயலை எவ்வளவு உயர்வானதாக மக்கள் கருதினாலும், அவன் அச்செயலை உலக ஆதாயம் கருதிச் செய்தால், மறு உலகில் அல்லாஹ்விடம் அச்செயல் கால் காசும் பெறாது. ஹிஜ்ரத் ஒரு சாதாரண செயல் அல்ல; சொத்து, உறவு, சுகம் அனைத்தையும் துறந்து வேறிடம் செல்வதே ஹிஜ்ரத். அந்த உன்னத செயலையே ஒருவன் பெண்ணையோ, பொருளையோ, பேர் புகழையோ நோக்கமாகக் கொண்டால் அவையே கிடைக்கும். மறுமையில் அச்செயலே அவனை நரகில் கொண்டு சேர்க்கும்.
அபூஹுரைரா(ரழி) அறிவித்து முஸ்லிமில் இடம் பெறும் மிக ஆதாரபூர்வமான நபி மொழியில், நாளை மறுமையில் அனைவருக்கும் முன்னதாகச் சிறப்புக்குரிய மூவர் விசாரிக்கப்பட்டு, முகம் குப்புற நரகில் எறியப்படுவார்கள். அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு ­ஹீதானவர்; இரண்டாமவர் மார்க்கத்தைக் கற்று அதை மக்களுக்குப் போதித்தவர், மூன்றாமவர் அல்லாஹ்வுடைய பாதையில் வாரி, வாரி வழங்கியவர்.
இம்மூவரும் மார்க்கம் ஏற்றிப் போற்றும் மிகமிக உன்னத செயல்களைத்தானே செய்துள்ளனர். பின் ஏன் முகம் குப்புற நரகில் எறியப்படுகிறார்கள்? காரணம் என்ன? ஆம்! அவர்கள் நற்செயல்கள்தான் செய்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி அந்த நற்செயல்களைச் செய்யவில்லை; உலகில் மக்களிடம் பேர், புகழைப் பெறுவதற்காகவே அந்த நற் செயல்களைச் செய்துள்ளனர். அதனால் அந்த நற்செயல்கள் மறுமையில் எந்தப் பலனையும் அளிக்கவில்லை. மாறாக நரகையே பரிசாகப் பெற்றுத் தந்துள்ளன. மிகமிக உன்னதமான நற்செயல்களையே பேர், புகழுக்காகச் செய்தவர்களின் கதியே, மறுமை முடிவே இப்படி இருக்கிறதென்றால், நபிமார்களைப் போல், மார்க்கப் பணியை அல்லாஹ்வின் பொருத்தம் நாடிச் செய்வதற்குப் பதிலாக, எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து விட்டு மார்க்கப் பணியை கூலி-சம்பளத்திற்காகச் செய்யும், அதற்காகவே நாங்கள் தான் ஆலிம்கள் என பெருமை பேசும் இந்த மதகுரு மார்களின் நாளைய நிலை எப்படி அமையும்? நரகே என்பதில் சந்தேகமுண்டா?

சம்பளம் மட்டுமல்ல; பேர், புகழையும் எதிர் பார்க்கிறார்கள்!
இந்த மதகுருமார்கள் இவ்வுலகில் கூலி, சம்பளத்தை மட்டும் எதிர்பார்க்கவில்லை; பேர் புகழையும் சேர்த்தே எதிர்பார்க்கின்றனர். அப்படியானால் நாளை மறுமையில் பொது விசாரணை ஆரம்பிக்கும் முன்னரே இந்த மதகுருமார்கள் விசாரிக்கப்பட்டு, அவர்கள் நற்செயல்களைப் பாழாக்கிய விதம் விவரிக்கப்பட்டு முகம் குப்புற இழுபட்டு நரகில் வீசப்படுவார்கள் என்பதில் ஐயமுண்டா?
இப்படிப்பட்ட பரிதாப, பெருங்கேட்டை விளைவிக்கும் நிரந்தர நட்டத்தை ஏற்படுத்தும் நிலை எதனால் ஏற்படுகிறது? நபி(ஸல்) அவர்களது காலத்தில் அரபு நாட்டிலேயே, கஃபத்துல்லாஹ்வுக்கு மிக அருகிலேயே இருந்த குருகுல கல்வி போதிக்கும் தாருந்நத்வாவை வேரோடு, வேரடி மண்ணோடு இடித்துத் தரைமட்டமாக்கி அழகிய நடைமுறையை நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்குக் காட்டித் தந்திருந்தும், அவர்களின் இந்த நற்போதனையைப் புறக்கணித்து மீண்டும் இந்த குருகுல மதரஸா முறையை முஸ்லிம்கள் ஏற்றிப் போற்றி வளர்த்து வருவதுதான் இன்றைய முஸ்லிம்களின் அழிவிற்கும் இழிவிற்கும் காரணமாக இருக்கிறது.

நிய்யத்-எண்ணம் என்ன?
இப்போது நிதானமாக நடுநிலையோடு சிந்தியுங்கள். இப்போது முஸ்லிம் மதகுருமார்களால் நடத்தப்படும் குருகுல மதரஸாக்களுக்கு, அவை தர்கா, தரீக்கா, மத்ஹபு, முஜாஹித், அஹ்ல ஹதீஸ், ஜாக், ததஜ, இதஜ, ஸலஃபி, காதியானி, இத்தியாதி, இந்தியாதி பிரிவுகளைச் சார்ந்த மத குருமார்களால் உலகளாவிய அள வில் நடத்தப்படும் எப்படிப்பட்ட குருகுல மதரஸாவாக இருந்தாலும், அங்கு போய் பயிலும் மாணவர்கள் என்ன நோக்கத்தோடு (நிய்யத்) போய் பயிலுகிறார்கள்? மறுமையை நோக்கமாகக் கொண்டு, அல்லாஹ்வின் பொருத்தம் நாடி பயிலுகிறார்களா? அல்லது அக்கல்வியைக் கற்று அதன் மூலம் உலக வாழ்க்கையை முடிந்த மட்டும் வளமாக ஆக்கிக் கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு அங்கு சென்று பயிலுகிறார்களா? தூய நோக்கத்துடன் செல்லும் ஒரேயொரு மாணவனையாவது காட்ட முடியுமா?
நடுநிலையோடு அல்லாஹ்வின் அச்சத்துடன் சொல்லக்கூடிய பதில் என்ன? அவர்களில் ஒரு மாணவனுக்குக் கூட மறுமை சிந்தனையோ, அல்லாஹ்வின் பொருத்தம் பெறவேண்டும் என்ற தூய நோக்கமோ இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. நவீன உலக அறிவியல் துறைகளில் படித்துப் பட்டம் பெற்று கைநிறையப் பொருள் ஈட்ட வசதி வாய்ப்பு உள்ளவர்கள் இந்த குரு குல மதரஸாக்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.

யார் மதரஸா நோக்கி வருகிறார்கள்?
பரம ஏழையாக இருந்தாலும் திறமை மிக்கவனாக இருந்தால், நாலு பேரிடம் முறையிட்டு உதவி பெற்று அத்துறைகளில் படித்து முன்னேறப் பார்ப்பானே அல்லாமல், குருகுல மதரஸா பற்றிய எண்ணமே அப்படிப்பட்ட வர்களுக்கு வராது. இறுதியில் எப்படிப் பட்டவர்கள் இந்த குருகுல மதரஸா நோக்கிப் படை எடுக்கிறார்கள்? மக்குப் பிள்ளைகள், வீட்டுக்கு அடங்காத முரட்டுப் பிள்ளைகள், படிப்பதில் நாட்டமே அற்ற ஏழைப் பிள்ளைகள், இப்படிப்பட்ட உதவாக்கறைப் பிள்ளைகளே இந்த குருகுல மதரஸா நோக்கி வருகிறார்கள்.
உலகியல் கல்வித் துறைகளில் கிடைக்காத இலவசமாக தங்கும் வசதி, இலவச உணவு, உடை என அனைத்தும் இங்கு ஓசியில் கிடைப்பதே இதற்குக் காரணம். மதகுருமார்களும் புரோகித கல்வி முறையை வளர்ப்பதற்கென்றே இந்த கையேந்தும் முறையை ஊக்கப்படுத்துகிறார்கள். ஆக உதவாக்கறை பிள்ளைகளே குருகுல கல்வி போதிக்கும் இந்த மதர ஸாக்களில் போய் ஒதுங்குகிறார்கள்.

ஏன் கைத்தொழில் கற்றுக் கொடுப்பதில்லை?
1966
அல்லது 1967ல் நடந்த சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. தப்லீஃக் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலம். 1963ல் நிறுவப்பட்ட மதரஸாவின் நிறுவனருடன் நெருங்கிய தொடர்பிருந்தது. அப்பொழுதே இம்மதர ஸாக்களில் பட்டம் பெற்று மவ்லவிகளாக வெளிவருபவர்கள், பிழைப்புக்கு வேறு வழியின்றி வெறுங்கையுடன் வெளிவருவது மனதிற்கு உறுத்தலாகவே இருந்தது. எனவே அந்த நிறுவனரிடம் மாணவர்களுக்குத் தொழிற் கல்வியும் போதிக்கலாமே. எனக்குப் பல கைத் தொழில்கள் தெரியும்; நானே அந்தப் பொறுப்பை ஏற்றுச் செய்கிறேன் என்று கூறினேன். அதற்கு அந்த நிறுவனர் கூறிய பதில் என்ன தெரியுமா? “”ஷாகுல் ஹமீது சாஹிப் நீங்கள் கூறுவது மிக அருமையான திட்டம். ஆனால் இவர்களுக்குக் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொடுத்து விட்டால், மதரஸாவிலிருந்து வெளியேறி அதிலேயே மூழ்கி விடுவார்கள். மார்க்கப் பணியைக் கைவிட்டு விடுவார்கள். அதனால் தான் அதை ஆதரிக்க முடியவில்லை என்றார். அப்போது நாமும் அதைச் சரிகாணும் நிலையிலேயே இருந்தோம் என ஒப்புக் கொள்வதில் வெட்கப்படவில்லை. ஆனால் இப்போது இந்த குருகுல கல்வி முறையை தெளிவாக அறிந்து கொண்ட பின்னரே கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொடுக்க அவர்கள் முன் வராததற்குக் காரணம் புரிகிறது. ஆம்! வயிற்றுப் பிழைப்பிற்கு வேறு வழியிருந்தால் அவர்கள் மதகுரு எனக் கூறிக் கொண்டு புரோகிதத் தொழில் செய்வதைக் கைவிட்டு விடுவார்கள்.
இம்மதரஸாக்களில் போதிக்கப்படும் கல்வியும் தூய குர்ஆன், ஹதீஸ் கல்வி அல்ல. அவர்களின் மத்ஹபுகளுக்கு, பிரிவுகளுக்குத் தோதான மனிதக் கற்பனைகள் நிறைந்த கல்வியே போதிக்கப்படுகிறது. 1000 வருடங்களாக நடை முறையிலிருக்கும் நான்கு மத்ஹபினர், 4 இமாம்களின் பெயரால் கற்பனை செய்யப் பட்ட பிக்ஹு நூல்களை நெறிநூல்களாகச் சொல்லி கற்பிக்கின்றனர்.
  
இவர்கள் முகல்லிதுகள்.
சுமார் 400 வருடங்களாக நடைமுறையிலிருக்கும் கைர முகல்லிதுகள் என்று சொல்லிக் கொள்ளும் அஹ்ல ஹதீஸ், முஜாஹித், இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற மஸ்லக் என்று கூறிக் கொள்ளும் மத்ஹபுகள் அவரவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மதகுருமார்களின் மனிதக் கற்பனைகளை மார்க்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர். தங்களை ஸலஃபிகள் எனக் கூறிக் கொள்வோர் பின்னால் வந்தவர்களின் (கலஃபிகள்) மனிதக் கற்பனைகளை ஏற்கக் கூடாது; முன் சென்றவர்களின் (ஸலஃபிகள்) மனிதக் கற்பனைகளை ஏற்கலாம் என்று கூறி அதையே கற்பிக்கின்றனர்.
மிகச் சமீபத்தில் தமிழகத்தில் தோன்றிய ததஜ மத்ஹபினர் ஸலஃபிகளின் மனிதக் கற்பனைகளையும் ஏற்கக் கூடாது; கலஃபிக ளின் மனிதக் கற்பனைகளையும் ஏற்கக் கூடாது. ததஜ மத்ஹபை கற்பனை செய்துள்ள நவீன இமாமின்(?) மனிதக் கற்பனைகளையே ஏற்று நடக்க வேண்டும். அது மட்டுமே ஒரே நேர்வழி, நம்பர்1 தவ்ஹீத் என்கின்றனர். இப்படி குருகுலக் கல்வித் திட்டப்படி நடக்கும் மதரஸாக்கள் அனைத்தும் தூய மார்க்கத்தில் மனிதக் கருத்துக்களைப் புகுத்தி, ஒரே நேர் வழி மார்க்கத்தைப் பல கோணல் வழி மதங்களாக ஆக்கி, மதகுருமார்களை உருவாக்கி வயிறு வளர்த்து வருகின்றனர். பேர் புகழை நோக்கமாகக் கொண்டு உலகியல் ஆதாயங்களை முறை தவறி அடைகின்றனர்.
குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதிப்பதில்லை!
மதகுருமார்களால் நடத்தப்படும் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த குருகுல மதரஸாக்களில் தூய மார்க்கத்தை மிக எளிதாகவும், தெளிவாகவும் சொல்லும் குர்ஆன், ஹதீஸ் மட்டும் போதிக்கப்படுவதில்லை. அந்தந்த மத்ஹபுகளின், இயக்கங்களின் கொள்கைகளுக்கு ஏற்ப மனிதக் கற்பனைகள் நிறைந்தவையே போதிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

ஹராம்களை அடுக்கும் மதகுருமார்கள்!
குர்ஆன், ஹதீஸ் மட்டும் தூய நிலையில் போதிக்கப்பட்டால், மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொள்வது அனைத்து வகை ஹராம்களிலும் மிகமிகக் கொடிய ஹராம் என்பதை எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து விளங்கலாம். ஆனால், வட்டி வாங்குபவனின் வீட்டு நிழலில் நின்றால் ஹராம், வட்டி வாங்குவது தாயுடன் 70 முறை விபச்சாரம் செய்வதை விட கொடிய ஹராம், வட்டி வாங்குகிறவன் அன்பளிப்பாகக் கொடுப்பதை வாங்குவது ஹராம், கோவில், சர்ச் திருவிழா கூட்டங்களில் போய் வியாபாரம் செய்வது ஹராம், கோவில் முன்னால் கடை வைத்து தேங்காய் விற்பது ஹராம், சாராயம் காய்ச்சுபவனுக்கு சக்கரை விற்பது ஹராம், கைக்கூலி வாங்கி நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்வது ஹராம், திருமணத்தில் பெண் வீட்டார் கொடுக்கும் விருந்தைச் சாப்பிடுவது ஹராம், மாற்றார் கொள்கைகளை அச்சடித்துக் கொடுப்பது ஹராம் இப்படி குர்ஆன், ஹதீஸில் சொல்லப்படாத எண்ணற்ற ஹராம்களை அடுக்கும் இந்த மதகுருமார்கள் குர்ஆனில் எண்ணற்ற இறைவாக்குகள் மூலமும், பல ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மூலமாகவும் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்வது, குர்ஆனிலும், ஹதீஸிலும் ஹராம் எனத் தடுக்கப்பட்டுள்ள ஹராம்கள் அனைத்தையும் விட மிக மிகக் கொடிய ஹராம் என்பதை எப்படி அறியாமல் இருக்கிறார்கள்?
மதகுருமார்களின் இந்த அறியாமையே இந்த குருகுல மதரஸாக்களில் குர்ஆன், ஹதீஸ் போதிக்கப்படுவதில்லை; அவர்கள் சார்ந்திருக்கும் மத்ஹபு, அல்லது இயக்கம் போன்ற வழி கெட்டப் பிரிவுகளை நியாயப்படுத்தும், நேர் வழியாகக் காட்டும் குருகுலக் கல்வியே மார்க்கக் கல்வியாகப் போதிக்கப்படுகிறது என்பதைக் குன்றிலிட்டத் தீபமாக விளக்குகின்றது.
புகாரீ, முஸ்லிமில் காணப்படும் “”செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றனஎன்ற மிக முக்கிய மான ஹதீஸ்படி, வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு குருகுல மதரஸா சென்று மத குருமார்களுக்குரிய குருகுல கல்வி கற்ற இந்த மவ்லவிகளின் நிலை என்ன? சிந்திக்க வேண்டாமா?

ஷஹீத், ஆலிம், வள்ளல் நிலை என்ன?
வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொள்ளாமல் பேர் புகழை மட்டும் நோக்கமாகக் கொண்டு ஷஹீதானவரின் நிலை என்ன? வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொள்ளாமல் தூய மார்க்கத்தைக் கற்றவரே அந்த தூய மார்க்கத்தை அல்லாஹ்வின் பொருத்தம் நாடாமல் பேர் புகழை மட்டும் நாடிப் பிரச்சாரம் செய்ததால் அவருக்கு ஏற்பட்ட நிலை என்ன? வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொள்ளாமல் ஹலாலாகப் பொருளீட்டிய வள்ளல், பேர் புகழை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாரி வாரி வழங்கியதால் அவருக்கு ஏற்பட்ட நிலை என்ன?
ஆக மிகமிக உன்னத செயல்களைச் செய்த இம் மூவரும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடாமல் பேர் புகழை மட்டுமே நாடி அந்த உன்னத செயல்களைச் செய்ததால் முகம் குப்புற இழுபட்டு நரகில் எறியப்படுகிறார்கள் என்றால், வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு, ஆலிம்-அறிஞன் என்ற அகந்தையுடன், பேர் புகழை நோக்கமாகக் கொண்டு மார்க்கப் பணி புரியும் இந்த மத குருமார்களின் இறுதி முடிவு என்னவாகும்? அனைவரின் மறுமை விசாரணைக்கு முன்னரே இந்த மத குருமார்கள் முகம் குப்புற இழுக்கப்பட்டு நரகில் எறியப்படுவார்கள் என்பதில் சந்தேகமுண்டா?
இவ்வுலகை நோக்கமாகக் கொண்டு குருகுலக் கல்வி கற்ற மவ்லவிகள் அவர்களது நோக்கப்படி இவ்வுலகில் ஆதாயம் அடைவார்களே அல்லாமல் மறுமையில் எதையும் எதிர்பார்க்க முடியாது என 2:200, 3:145, 4:134 மற்றும் பல இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
ஆலிம்கள் அனைவரையும் விமர்சிப்பதற்குக் காரணம் என்ன?
நீங்கள் மவ்லவிகளாகிய ஆலிம்கள்-அறிஞர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகச் சாடுகிறீர்கள். மிகக் கடுமையாக விமர்சிக்கிறீர்கள். அவர்களிலும் நல்லவர்கள், மனித நேயமிக்கவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களையும் சேர்த்து நீங்கள் கடுமையாக விமர்சிக்கிறீர்கள் எனக் குற்றப்படுத்துகிறார்கள் பலர்.
அப்படி நல்லவர்கள், மனித நேயமிக்கவர்கள் என்று பார்த்தால் இன்று உலகிலுள்ள அனைத்து மதங்களிலுமுள்ள மதகுருமார்களில் சிலரையும் சொல்ல முடியும். இன்னும் உண்மையை மறைக்காமல் சொல்வதாக இருந்தால் முஸ்லிம் மதகுருமார்களை விட மனித குலத்தின் இவ்வுலகம் சம்பந்தப்பட்ட கல்வி, மருத்துவம், மற்றும் பல துறைகளில் கிறித்தவ மதகுருமார்கள் முதலிடத்திலும், இந்து மதகுருமார்கள் அதற்கடுத்த இடத்திலும் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?
ஒரு அன்னை தெரசாவைப் போல் ஒரு முஸ்லிம் மதகுருவை காட்ட முடியுமா? கிறித்தவ மதகுருமார்கள் வெறும் புரோகிதக் கல்வியை மட்டும் கற்றுக் கொண்டு செயல்படவில்லை. உலகில் பல அறிவியல் துறைகளிலும் படித்துப் பட்டம் பெற்று மக்கள் தொண்டாற்றி வருகிறார்கள் என்பதை யாரால் மறுக்க முடியும்?

சொந்த அனுபவம்!
என்னுடைய சொந்த அனுபவத்திலேயே ஒரு கிறித்தவ மதகுருவின் மக்கள் சேவையைப் பார்த்து நினைத்து, நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்திருக்கிறேன். 1954ல் இலங்கை அம்பிட்டியாவில் சென்ட் மேரீஸ் கல்லூரியில் புதிதாக 5ம் வகுப்பில் சேர்ந்திருக்கிறேன். கெங்காலையிலிருந்து கண்டியைச் சுற்றி வருவதற்குப் பதிலாக தென்னக்கும்புர என்ற இடத்தில் இறங்கி மலை ஏறி அம்பிட்டியா வருவது வழக்கம்.
அப்படி மலை ஏறி வரும்போது தவறி கீழே விழுந்ததால் முட்டங்களில் காயம் ஏற்பட்டு விட்டது. அக்கல்லூரியை நிறுவிய ஃபாதர் பெரவெட் என்ற ஜெர்மன் மதகுருவே நேரில் வந்து ஒவ்வொரு வகுப்பறையையும் திறந்து விட்டு மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறுவது அவரது வழக்கம். எனது வகுப்பறையைத் திறக்க வந்தவர் என் காலில் ரத்தம் வடிவதைப் பார்த்தவுடன் துடி துடித்துவிட்டார். உடனே என்னைக் கையோடு அழைத்துச் சென்று அவரது அலுவலகத்திற்குப் பக்கத்தில் இருந்த நோயாளி அறையில் படுக்க வைத்து காயத்தைச் சுத்தப்படுத்தி அதற்கு மருந்திட்டுப் படுக்கையில் படுக்க வைத்தார். இதைப் பெரிதாகச் சொல்ல முடியாது.
ஆயினும் அந்த அறையின் மூலையிலேயே 1க்கு 2க்குப் போக ஏற்பாடு செய்து எனது கழிவுகளை அவரே எடுத்துச் சென்று அப்புறப்படுத்தினார். 75லிருந்து 80 வயதிருக்கும் ஒரு வயதான கிறித்தவ மதகுரு ஒரு 12 வயது பொடியனின் கழிவுகளை தானே எடுத்துச் சென்று அப்புறப்படுத்தினார் என்றால் அது ஒரு சாதாரண விஷயமா?
இப்படிச் சேவை செய்யும் ஒரு முஸ்லிம் மத குருவைக் காட்ட முடியுமா? மதரஸாவிலுள்ள மாணவர்கள் எங்கள் ஜட்டிகள் முதல் கொண்டு துவைத்துத் தருவார்கள் என்று 1987ல் இப்போதைய ததஜ மத்ஹபு இமாம்(?) எம்மிடம் பெருமையுடனும், ஆணவத்துடனும், திமிறாகப் பேசியதைத்தான் கேட்டிருக்கிறோம்.

உலகில் தொண்டாற்றுவதில் கிறித்தவ மதகுருக்களை முஸ்லிம் மதகுருக்கள் மிஞ்ச முடியாது!
ஆக இவ்வுலகில் மனித குலத்திற்குத் தொண்டாற்றுவதில் கிறித்தவ மதகுருமார்களை முஸ்லிம் மதகுருமார்கள் ஒருபோதும் முறியடிக்க முடியாது; ஏன் இந்து மதகுருமார்களையும் முறியடிக்க முடியாது. அவர்கள் நடத்தும் உலகியல் பல்வேறு துறைக் கல்லூரிகளையும், குறிப்பாக மருத்துவ, பொறியியல் கல்லூரிகளையும் முஸ்லிம் மதகுருமார்கள் நடத்துகிறார்களா? இல்லையே! பொதுமக்கள் அப்படி மருத்துவக் கல்லூரி நடத்த முயற்சித்தால் அது நிறைவேறாமல் தடுக்க எப்படிப்பட்ட முயற்சிகள் செய்ய வேண்டுமோ, பொய்ப்பிரச்சாரம் செய்ய வேண்டுமோ அதை மும்முரமாகச் செய்யவே இந்த முஸ்லிம் மதகுருமார்கள் முற்படுவார்கள்.
பேர், புகழுக்காக மக்கள் சேவை!
அப்படியே சாதாரண இரத்த தானம், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் போன்ற நற்செயல்களில் ஈடுபட்டால் அதைப் பெரிதாக தங்களின் வார, மாத இதழ்களில் புகைப்படங்களாகப் போட்டு மக்களிடையேயும், அரசிடமும் பேர் புகழையும், உலகியல் அரசியல் ஆதாயங்களையும் தேடவே முற்படுவார்கள். அந்த நற்செயல் மூலம் அல்லாஹ்வின் பொருத்தம் பெறுவதற்கு மாறாக மக்களிடம் பேர், புகழ் பெறவே முற்படுவார்கள்.
பேர் புகழை மட்டும் நாடிய ஷஹீத், ஆலிம், வள்ளல் போன்றோரே முகம் குப்புற இழுபட்டு நரகை அடையும்போது, வயிற்றுப் பிழைப்பையும், அதனால் பேர் புகழையும் நோக்கமாகக் கொண்ட மதகுருமார்களின் முடிவு என்ன என்பதை அறிய முடியாதா?
அல்லாஹ்விடம் கால் காசு பெறாது!
மக்களிடையே சிறந்த செயலாக, பெரும் தொண்டாக கணக்கிடுபவை அல்லாஹ்விடம் கால் காசு பெறாது. அல்லாஹ்வுக்கென்றே மிகத் தூய்மையான எண்ணத்துடன் செய்யப்படும் செயல்களே அல்லாஹ்விடம் ஏற்கப்படும் என்பதைப் பல குர்ஆன் வசனங்கள் உறுதிப் படுத்துகின்றன. அல்குர்ஆன் அந்நிசா. 4:48, 116 இறைவாக்குகள் “”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை ஒரு போதும் மன்னிக்கவே மாட்டான்என்று உறுதியாகக் கூறுகின்றன.
ஒரு மதகுருவும் ஷிர்க்கிலிருந்து விடுபட வில்லை!
அதற்கு மாறாக இந்த மதகுருமார்களில் ஒரு நபர் கூட மன்னிக்கப்படாத இந்த இணை வைப்பிலிருந்து (ஷிர்க்) விடுபட்டவர்களாக இல்லை. ஆனால் ஷிர்க் வைக்கும் விதம் தான் அவர்களிடையே மாறுபடும். பல தெய்வ வணக்கத்தை இந்து மதங்களிடையே புகுத்தியுள்ள இந்து மதகுருமார்கள் அது இணை வைப்பு இல்லை என வாதிடுவார்கள். முக்கடவுள் கொள்கையை கிறித்தவர்களிடம் புகுந்தியுள்ள கிறித்தவ மதகுருமார்கள் அது இணை வைப்பு இல்லை என வாதிடுவார்கள். (கபுரு) சமாதி வணக்கத்தை முஸ்லிம்களிடம் புகுத்தியுள்ள கபுரு மதகுருமார்கள் சமாதி வணக்கம் இணை வைப்பு இல்லை என வாதிடுவார்கள். இறந்தவர்களை வஸீலாவாக ஆக்கும் தரீக்கா, சுன்னத் ஜமாஅத் மதகுரு மார்கள் அவுலியாக்களை இடைத்தரகர்கள் ஆக்குவது இணைவைப்பு இல்லை என வாதிடுவார்கள்.
இறந்தவர்களைத்தான் இடைத்தரகர்கள் ஆக்கக் கூடாது. ஆனால் அவர்கள் குர்ஆன், ஹதீஸை விளங்கியபடிதான் நாமும் விளங்க வேண்டும் அது இணை வைப்பு இல்லை என மத்ஹபு மதகுருமார்கள் வாதிடுவர். கலஃபி களான பின்னோர்களைப் பின்பற்றுவதுதான் இணை வைப்பு; ஸலஃபிகளான முன்னோர்களைப் பின்பற்றுவது இணை வைப்பு இல்லை என ஸலஃபி மதகுருமார்கள் வாதிடுகின்றனர். முன்னோர்கள், பின்னோர்கள் யாரைப் பின்பற்றினாலும் அது இணை வைப்பு; ஆனால் என்னைப் பின்பற்றுவது; நான் சொல்லும் சுய கருத்துக்களை அதாவது குர்ஆன் வசனங்களுக்கு நான் கொடுக்கும் விளக்கத்தை ஏற்று நடப்பது இணை வைப்பு இல்லை என புதிய ததஜ மத்ஹபு இமாமான(?) மதகுரு வாதிடுகிறார். சுருக்கமாகச் சொன்னால் மதகுருமார்களில் எல்லாப் பிரிவினரும் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் இடைத்தரகர்களாகச் சட்டவிரோதமாகப் புகுந்து கொண்டு அற்ப உலக ஆதாயம் அடையவே முற்படுகின்றனர்.
அல்குர்ஆன் என்ன சொல்கிறது?
இப்போது அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் இடைத்தரகராகப் புக இந்த மத குருமார்களுக்கு அனுமதி இருக்கிறதா என்பதை குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் பார்ப்போம்.
அல்குர்ஆன் அல்அஃராஃப்: 7:3 இறைவாக்கில் இறைவன் புறத்திலிருந்து இறக்கப்பட்டதை மட்டுமே பின்பற்ற வேண்டும்; மதகுருமார்கள் போன்ற மற்றவர்களைப் பாதுகாவலர்களாக, நேசர்களாக, வழிகாட்டிகளாக எற்றுப் பின்பற்றக் கூடாது என நெத்தியடியாக அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வால் இறக்கப்பட்டது குர்ஆன் மட்டும்தான் என அஹ்லகுர் ஆன் மதகுருமார்கள் பிதற்றுவார்கள்; அவர்களின் பக்தர்களும் அதைக் கண்மூடி ஏற்பார்கள்; ஆனால் அல்குர்ஆன் அந்நஜ்ம்: 53:2-5 இறைவாக்குகள் நபியின் ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட வைதான் என உறுதி அளிக்கின்றன. இது அல்லாமல் “”அத்தீவுல்லாஹ வ அத்திவுர்ரசூல் என சுமார் 19 இடங்களிலும், அல்லாஹ்வுக்குப் பயபக்தியுடன் நடந்துகொண்டு என்னைப் பின்பற்றுங்கள் என எல்லா நபிமார்களும் கூறியது சுமார் 11 இடங்களிலும் அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதால் இறுதி நபியின் வழிகாட்டல்படி நடப்பதும் கடமையாகும்.
அதல்லாமல் 33:36, 66-68 இறைவாக்குகள் அல்லாஹ், அவனது முழுக் கண்காணிப்பில் இருந்து திருத்தப்பட்ட(52:48) நபியின் நடை முறை அல்லாது மூன்றாவதாக யாரையும் பின்பற்றக் கூடாது எனத் திட்டமாக அறிவிக்கின்றன. மீறி நபியைத் தவிர்த்து வேறு யாரையும் அதாவது மதகுருமார்களை நம்பி அவர்களைப் பின்பற்றினால் நாளை நரகில் கிடந்து வெந்து வேதனைப்பட்டுக் கொண்டு இந்த மதகுருமார்களைச் சபிப்பதை 33:66-68 இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இவ்வுலக வாழ்க்கை பரீட்சை வாழ்க்கை!
மேலும் 5:48, 6:165, 11:7, 16:92, 18:7, 21:35, 67:2 ஆகிய இறைவாக்குகளில் இவ்வுலகில் மனிதர்களை சோதனைக்காக, பரீட்ச்சைகாகப் படைத்திருப்பதாக அல்லாஹ் அறிவிக்கிறான். பரீட்சை என்றால் பரீட்சை எழுதுபவன் சுயமாகப் படித்து விளங்கி அதன்படி எழுதவேண்டும். பக்கத்திலுள்ளவனைக் காப்பி அடிப்பது பெருங்குற்றம் என்பதை அறிய முடியாதவன் பெரும் மூடனாக மட்டுமே இருக்க முடியும். சுயமாக விளங்கி எழுதினால் 100க்கு 35 புள்ளிகள் வாங்கினாலும் தேறிவிடுவான். காப்பி அடித்து 100க்கு 100கிடைக்கும் அளவில் எழுதினாலும் வெளியேற்றப்படுவான்; பெருந் தோல்வி அடைவான் என்பதைப் புரியாதவனும் பெரும் மடையனாகவே இருப்பான். ஆனால் முன்னரே தெரிந்தவர்களிடம் கேட்டு விளங்கி அதன்படி பரீட்சையில் சுயமாக எழுதுவது அனுமதிக்கப்பட்டதே என்பதையும் புத்திசாலி நன்கு அறிவான்.
மார்க்க அறிஞர் யார்? மூடன் யார்?
அதேபோல் மார்க்கப் பரீட்சையிலும் ஒரு சந்தேகம் எழுந்தால், தங்களை மார்க்க அறிஞர்கள், ஆலிம்கள், அல்லாமாக்கள் என்று மார்தட்டிக் கொள்வோரிடம் அதுபற்றி குர்ஆன் என்ன கூறுகிறது? ஆதாரபூர்வமான நபிமொழி என்ன கூறுகிறது? சம்பந்தப்பட்ட ஆயத்தை, ஹதீஸை எடுத்துத் தாருங்கள் என்றே கேட்க வேண்டும். உங்கள் கருத்து என்ன? உங்கள் அபிப்பிராயம் என்ன? என்று ஒருபோதும் கேட்கக் கூடாது.

மதகுருமார்களின் கொட்டம் எப்போது அடங்கும்?
அவர் உண்மையிலேயே அறிஞராக இருந்தால் சம்பந்தப்பட்ட ஆயத், ஹதீஸை எடுத்துக் கொடுப்பார், போலி மதகுருவாக இருந்தால், நீ என் ஆலிமா? உனக்கு அரபி தெரியுமா? பெரிதாகத் தெரிந்தது போல் குர்ஆன், ஹதீஸ் பற்றிக் கேட்கிறாயே! என அளந்து விடுவார். இப்படி அவர் அளக்கும்போது பயந்து வாய் மூடி வந்துவிடக்கூடாது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், நீர் ஆலிம் என்று நினைத்து நான் வந்து கேட்டேன். நீர் ஆலிம் இல்லை; வடிகட்டிய ஜாஹில், ஃபிர் அவ்ன், அபூ ஜஹீல் போன்றோரின் வாரிசு என்பதை இப்போது தான் அறிந்து கொண்டேன் என முகத்தில் அடித்தது போல் நறுக் கென்று கூறிவிட்டு அகன்று விட வேண்டும். இப்படி பலர் சொல்ல முற்பட்டால்தான் இந்த மதகுருமார்களின் கொட்டம் அடங்கும். சிந்திக்க ஆரம்பிப்பார்கள். தங்களுக்கு தூய இஸ்லாமிய மார்க்கத்தில் அணுவளவும் அனுமதி இல்லை என்பதை உணர ஆரம்பிப்பார்கள்.
மார்க்கப் பிரசாரம் செய்யும் தகுதி யாருக்கு?
மவ்லவிகள், ஆலிம்கள் என அகந்தை பேசும் இந்த மதகுருமார்களுக்கு மார்க்கத்தில் அணுவளவும் அனுமதி இல்லை என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறது. இப்போது மார்க்கப் பிரசாரம் செய்யத் தகுதி உள்ளவர்கள் யார் என்று குர்ஆன் கூறுகிறது என்று பார்த்தால், முஸ்லிமான ஒவ்வொரு ஆணும், பெண்ணும் மார்க்கப் பணிக்குத் தகுதி உடையவர்கள். அவர்கள் மார்க்கப் பணியைச் செய்தே ஆகவேண்டும்; மார்க்கப்பணி செய்பவர்கள் மட்டுமே வெற்றியாளர்கள். அல்லாஹ்வுக்காக அந்த மார்க்கப் பணியை மறுமை வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் சகல துன்பங்களையும், சிரமங்களையும் சகித்துக் கொண்டு மற்றவர்களுக்கும் அதையே போதிக்க வேண்டும். அவர்கள் மட்டுமே வெற்றியாளர்கள், எஞ்சிய அனைவரும் தோல்வி அடைபவர்கள்; பெரும் நட்டவாளிகள் என்று அல்குர்ஆன் அல்அஸ்ர்:103:1-3 இறைவாக்குகள் நெத்தியடியாகக் கூறுகின்றன.
இந்த உம்மத்திலுள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் நபிமார்கள் செய்த இந்த பிரசார பணியை செய்ய வேண்டும். அது கொண்டே ஆதம்(அலை) முதல் இறுதித் தூதர் வரை வந்து சென்ற அனைத்து சமுதாயங்களை விடச் சிறந்த சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் என்று அல்குர்ஆன் ஆலஇம்ரான் : 3:110 இறைவாக்கு அறுதியிட்டு உறுதி கூறுகிறது. மேலும் 3:104 இறை வாக்கில் உங்களில் ஒரு கூட்டம் நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும், தீயவை விட்டு விலக்குபவர்களாகவும் இருக்க வேண்டும்; அவர்களே வெற்றியாளர்கள் எனக் கூறுகிறது. இந்த இறைவாக்கிலும் கூலி-சம்பளம் வாங்காமல் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி மார்க்கப் பணி செய்கிறவர்கள் வெற்றியாளர்கள் என்று கூறப்பட்டுள்ளதே அல்லாமல் மதகுருமார்களுக்கு அனுமதி இல்லை என உறுதிப்படுத்துகிறது.
அல்குர்ஆன் அத்தவ்பா: 9:71 இறைவாக்கில் “”முஃமினான ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உற்றத் துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்யத் தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள் தொழுகையை நிலை நாட்டுகிறார்கள்; ஜகாத்தைக் கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிப்படுகிறார்கள்என்று அனைத்து முஸ்லிம்கள் மீதும் மார்க்கப் பணி கடமையாக்கப்படுகிறது.
மார்க்கப்பணி இந்த மதகுருமார்கள் மீது சுமத்தப்பட்டதாக ஒரேயொரு ஹதீசும் இல்லாத நிலையில் சம்பந்தமில்லாத ஆயத் ஹதீஸ்களைக் காட்டி தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக இந்த மதகுருமார்கள் பிதற்றுவார்கள். அவற்றையும் அடுத்துப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

Thanks: http://www.annajaath.com