கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர்.
இஸ்லாத்தைப் பொருத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை
ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது.
கால்நடைகள், விளைபொருட்கள், புதையல், பணம், நகை மற்றும்
இதர சொத்துக்களில் குறிப்பிட்ட அளவுக்கு வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட
சதவிகிதத்தை குறிப்பிட்ட பணிகளுக்காக வழங்குவது ஸகாத் எனப்படும்.
அதுபோல் விளைபொருட்களில் நீர் பாய்ச்சி, விளைபவற்றில் ஐந்து சதவிகிதத்தை அறுவடை தினத்தில் வழங்கிவிட வேண்டும். நீர் பாய்ச்சாமல் மானாவாரியாக விளைபவற்றில் பத்து சதவிகிதம் அறுவடை தினத்தில் வழங்கிவிட வேண்டும். அழுகும் பொருட்கள் மட்டும் விதிவிலக்குப் பெறும்.
நாற்பது ஆடுகள், முப்பது மாடுகள், ஐந்து ஒட்டகங்களுக்கு மேல் வைத்திருப்போர் அதற்கென நிர்ணயிக்கப்பட்டதைக் கொடுக்க வேண்டும். (உதாரணமாக நாற்பது ஆடுகளுக்கு ஒரு ஆடு)
இஸ்லாமிய அரசாக இருந்தால் கட்டாயமாக வசூலிக்கப்படும். (திருக்குர்ஆன் 9:103)
ஸகாத்தை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் உள்ளன.
ஸகாத் குறித்த ஏனைய சட்டங்கள் நபிமொழிகளில் தான் காணக் கிடைக்கிறது.
ஸகாத் என்பது கட்டாயக் கடமையான தர்மம். இது தவிர உபரியாக நாமாக செலவிடும் தர்மம் ஸதகா எனப்படும். அதையும் திருக்குர்ஆன் பல இடங்களில் ஆர்வமூட்டுகிறது.
ஸகாத் குறித்த கேள்வி பதில்கள்