நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமிய பாடல்கள்
தற்காலத்தில் வாழ்ந்து மறைந்த நாகூர் ஹனிஃபா அவர்களின் பாடல்கள் மக்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது வெண்கலக் குரலுக்கு மயங்காதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவருடைய உள்ளத்திலும் அவரது பாடல்கள் இடம்பிடித்தது.
எந்த ஒரு நிகழ்ச்சியைத் துவக்குவதாக இருந்தாலும் ஹனிஃபாவின் பாடல்களை ஒலிபரப்பித் தான் ஆரம்பிக்கின்றார்கள்.
இன்னும் சொல்லப் போனால், பல ஊர்களில் பள்ளிவாசல்களில் கூட நோன்பு, பெருநாள் நாட்களில் ஒலிபரப்பி வருகின்றனர்.
இன்றளவும் வெள்ளிக்கிழமை களில் வீடுகள் மற்றும் கடைகளில் நாகூர் ஹனிபாவின் பாடல்களை ஒலிபரப்பாவதைப் பார்க்க முடியும். இதை ஒரு புனிதக் காரியம் என்று நினைத்தே பாமர மக்கள் பலர் செய்து வருகின்றனர்.
இதற்குக் காரணம் அதில் இஸ்லாமிய கருத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்று நினைப்பதுதான்.
அவரது பாடல்களில் ஒரு சிலவற்றில் இஸ்லாமிய சிந்தனை இருந்தாலும் அதிகமானவைகளில் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் விஷமக் கருத்துக்கள் தான் நிறைந்துள்ளன.
அப்படியிருந்தும் இந்தப் பாடல்களை இஸ்லாத்தின் வேத வரிகள் போல நம்புகின்றவர்கள் இன்றளவும் ஏராளம்.
இந்த நிலையைச் சீர் செய்ய வேண்டும் என்பதற்காக ஏகத்துவம் இதழ் ஹனிஃபாவின் ஒரு சில பாடல்கள் எவ்வாறு இஸ்லாத்திற்கு எதிராக அமைகின்றது என்று இதற்கு முன்னால் தெளிவுபடுத்தியிருந்தாலும் இத்தொடர் கட்டுரையின் வாயிலாக ஒவ்வொரு பாடலையும் தெளிவு படுத்தவிருக்கின்றோம்.
நபி மீது பொய் கூறும் நாகூர் ஹனீபா