Mar 13, 2011

கேள்வி பதில்கள்-பாங்கு


கேள்வி : -
பாங்கு என்பது தொழகைக்கான அழைப்பு என்பதால் பிறந்த குழந்தையின் காதில் பாங்கு கூறக் கூடாது என்று கூறி வருகிறீர்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பஜ்ருக்கு ஒரு பாங்குஇ சஹருக்கு ஒரு பாங்கு கூறப்பட்டது என்றும் கூறுகிறீர்கள். அப்படி யானால் சஹருக்குச் சொல்லப்பட்ட பாங்குக்கு தொழுகை எங்கே?

பதில் : - 
! மார்க்கத்தில் எந்த ஒன்றையும் கூடும் என்றோ கூடாது என்றோ கூறுவதாக இருந்தால் தர்க்கரீதியான வாதங்களின் அடிப்படையில் முடிவு செய்யக் கூடாது. அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒன்றைச் செய்யுமாறு நமக்கு வழிகாட்டினால் அதைக் கூடும் என்று கூற வேண்டும். அவ்வாறு வழி காட்டாவிட்டால் அதைக் கூடாது என்று கூற வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் சஹர் செய்வதற்காக மக்களை எழுப்புவதற்கு ஒரு பாங்கும், பஜ்ரு தொழுகைக்கு ஒரு பாங்கும் சொல்லப்பட்டன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. (பார்க்க : புகாரி 5299, 7247, 621)

சஹர் செய்வதற்காக மக்களை எழுப்பி விடுவதற்கு ஒரு பாங்கு சொல்ல வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) ஏற்பாடு செய்துள்ளதால் அதற்கான தொழுகை எங்கே என்று கேள்வி கேட்க முடியாது.
 
பிறந்த குழந்தையின் காதில் பாங்கு சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இல்லை. திர்மிதி உள்ளிட்ட நூல்களில் இது பற்றி இடம் பெற்ற ஹதீஸ்கள் பலவீனமானவை. எனவே இது கூடாது என்கிறோம்.

தொழுகைக்கான அழைப்புதான் பாங்கு எனும் போது பிறந்த குழந்தையின் காதில் அதைக் கூறுவதாக இருந்தால் சஹர் பாங்குக்கு இருப்பது போல் அதற்குத் தெளிவான ஆதாரம் இருக்க வேண்டும்