Mar 11, 2011

தவ்ஹீத் கொள்கை-இணை வைத்தலால் நல்லறங்கள் அழிந்து விடும்



لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ


நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்;

(அல்குர்ஆன் 39:65)


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமை, அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை வணங்குவதாகும். அல்லாஹ் அடியார்களுக்குச் செய்யும் கடமை தனக்கு எதையும் இணை கற்பிக்காதவரை வேதனை செய்யாமல் இருப்பதாகும்.

அறிவிப்பவர் : முஆத்(ர­லி)
நூல்: புகாரீ (2856)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார்.

நூல் : ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி­)
நூல் : புகாரீ (1238)