Mar 16, 2011

கேள்வி பதில்கள்-வியாபாரம்


கேள்வி : -
வளைகுடா நாடுகளில் தவ்ஹீது கொள்கை சகோதரர்கள் MLM என்ற (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) கம்பெனியின் விற்பனை செய்யும் பொருளுக்கு லாபம் ஈட்டிய பின், சங்கிலி தொடர் போல் மற்றவர் விற்கும் லாபத்தில் இருந்து கம்பெனி கமிஷனாக மாதம், மாதம் பணம் வருகிறது. இப்பணம் குர்ஆன், ஹதீஸ்படி ஹலாலா? ஹராமா? விளக்கம் தரவும்.

பதில் : - 
இதுபற்றி உணர்வில் மிக விரிவாக ஆய்வுக் கட்டுரையும் மார்க்க அடிப்படையில் இது அனுமதிக்கப்படாத மோசடி வியாபாரம் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளோம். நீங்கள் அந்தக் கம்பெனியில் உங்களை இணைத்துக் கொண்டு அதன் பொருளை விற்று லாபம் சம்பாதிப்பது குற்றமில்லை. ஆனால் நீங்கள் ஒருவரை சேர்த்து விடுகிறீர்கள்.

அந்த நபர் பல பொருட்களை விற்கிறார். அவர் என்ன விற்கிறார் என்பது கூட உங்களுக்குத் தெரியாது. ஆனாலும் அவர் விற்பனை செய்வதில் உங்களுக்கு லாபம் தருவது எப்படி ஹலாலாகும்? அது போல் நீங்கள் அறிமுகப்படுத்திய நபர் இன்னொருவரை அறிமுகப்படுத்துகிறார். இப்படியே சங்கிலித் தொடராக பத்துப் பேர் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் என்றால் அந்தப் பத்து பேர் யார் என்றும் உங்களுக்குத் தெரியாது.

அவர்கள் எவ்வளவு பொருட்களை விற்பனை செய்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியது. அவர்கள் விற்பனை செய்வதில் உங்கள் உழைப்போ, ஆலோசனையோ, வேறு பங்களிப்போ இல்லை. ஆனாலும், அவர்கள் விற்பனை செய்த பொருட்களின் லாபத்தில் நீங்கள் பங்கு கேட்பது எந்த வகையில் நியாயம்? அதைச் சிந்தித் தாலே இதன் மோசடியை அறிந்து கொள்ளலாம்.

Thanks: http://aleemqna.blogspot.com