PART – 1
ஜின்களும் ஷைத்தான்களும்
பொருள் அட்டவணை
ஜின்களைப் பற்றிய விபரங்கள்
1. முன்னுரை
2. ஜின் என்ற வார்ததையின் பொருள்
3. ஜின்கள் இருப்பது உண்மை
4. மனிதர்களுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட படைப்பு
5. நெருப்பால் படைக்கப்பட்டவர்கள்
6. பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள்
7. ஜின்களும் பேய்களும் ஒன்றா?
8. ஜின்களின் வகைகள்
9. பாம்பு வடிவில் ஜின்கள்
10. மதீனாவிற்கு மட்டும் உரிய சட்டம்
11. உருமாற்றம் செய்யப்பட்ட ஜின்கள்
12. பாம்புகளை கொல்ல வேண்டும்
13. பாம்புகள் பலிவாங்குமா?
14. ஜின்களில் ஆண்களும் பெண்களும் உண்டு
15. ஜின்களின் இனப்பெருக்கம்
16. ஜின்களுக்கிடையே அன்பு
17. ஜின்களின் உணவு
18. ஜின்களின் இருப்பிடம்
19. ஜின்களை காண முடியாது
20. விலங்குகளால் பார்க்க முடியும்
21. நபியவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்பு
22. நபி (ஸல்) அவர்கள் ஜின்களை பார்த்தார்களா?
23. ஜின்களின் ஆற்றல்
24. ஜின்களின் விண்ணுலகப் பயனம்
25. ஒட்டுக்கேட்ட ஜின்கள்
26. ஜின்களும் குறிகாரர்களும்
27. ஜின்களை வசப்படுத்த முடியுமா?
28. சுமைலமான் நபிக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்பு
29. முஹம்மது (ஸல்) அவர்களால் கூட வசப்படுத்த முடியாது
30. அல் ஜின்னு சூராவை ஓதினால் வசப்படுத்த முடியுமா?
31. ஜின்களுக்கு மறைவான ஞானம் கிடையாது
32. இஸ்லாத்தை ஜின்களும் கடைபிடிக்க வேண்டும்
33. ஜின்களுக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்
34. முஹம்மத் நபியை பின்பற்றுவது ஜின்களின் மீது கடமையாகும்
35. ஜின்கள் குர்ஆனை செவியுற்றன
36. ஜின்களுக்கும் வணக்க வழிபாடுகள் உண்டு
37. மனிதர்களைப் போலவே ஜின்களுக்கும் கட்டளைகள் உள்ளன
38. நல்ல ஜின்களும் கெட்ட ஜின்களும்
39. ஜின்களில் இறைமறுப்பாளர்கள் உண்டு
40. இறைத்தூதர்களுக்கு எதிரிகள்
41. ஜின்களுக்கும் விசாரணை உண்டு
42. கெட்ட ஜின்களுக்கு நரகம் உண்டு
43. நல்ல ஜின்களுக்கு சொர்க்கம் உண்டு
44. ஜின்கள் மனிதர்களுக்கு நன்மை செய்யுமா?
45. ஜின்கள் சுலைமான் நபிக்கு உதவியாக இருந்தன
46. ஜின்களிடம் உதவி தேடலாமா?
47. மனிதர்களுக்கு ஜின்களால் ஏற்படும் தீமை
48. ஜின்கள் உடலில் புகுவார்களா?
49. ஜின்களுக்கு அஞ்சுவது அறியாமையாகும்
ஷைத்தான்களைப் பற்றிய விபரங்கள்
1. ஜின் இனத்தைச் சார்ந்தவன்
2. ஷைத்தானின் உருவ அமைப்பு
3. ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டவன்
4. ஷைத்தானின் உணவு
5. ஷைத்தான் அருந்தும் பானம்
6. ஷைத்தானின் இருப்பிடம்
7. இறைக் கட்டளையை மறுத்தான்
8. பெருமையின் காரணத்தால் வழிகெட்டான்
9. வானவர்களின் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்
10. அவகாசம் அளிக்கப்பட்டான்
11. ஷைத்தானின் சபதம்
12. முதன் முதலில் ஷைத்தான் வலையில் விழுந்தவர்கள்
13. மனிதர்களின் விரோதி
14. நபிமார்களுக்கு விரோதி
15. கெட்ட தோழன்
16. ஷைத்தானின் நண்பர்கள்
17. ஒவ்வொருவருடனும் இருக்கிறான்
18. உடலில் இரண்டரக் கலந்துள்ளான்
19. ஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்
20. அனைவரிடமிருந்தும் ஷைத்தானை விரட்டுவார்களா?
21. ஷைத்தானால் ஏற்படும் தீங்கு
22. வேறெதுவும் செய்ய முடியாது?
23. ஷைத்தானுடன் தொடர்பு படுத்திக் கூறும் வழக்கம்
24. ஷைத்தான் பைத்தியத்தை ஏற்படுத்துவானா?
25. ஷைத்தான் நோயை ஏற்படுத்துவானா?
26. தீங்கை ஏற்படுத்துவது இறைவனின் அதிகாரம்
27. ஜின்களும் ஷைத்தான்களும் ஒன்றா?
28. கெட்ட ஜின்களும் ஷைத்தான்களும் ஒன்றா?
29. ஷைத்தான் உருமாறுவானா?
30. மனிதனாக உருமாறுவானா?
31. மனித ஷைத்தான்கள்.
32. நாய் வடிவில் வருவானா?
33. பாம்பு வடிவில் வருவானா?
34. பூனை வடிவில் வருவானா?
ஷைத்தானின் சூழ்ச்சிகள்
1. தீயவற்றை அலங்கரித்துக்காட்டுவான்
2. தீய காரியங்களை செய்யுமாறு ஏவுவான்
3. தீய எண்ணங்களைத் தோற்றுவிப்பான்
4. இறைமறுப்பாளர்களாக்க முயற்சிப்பான்
5. இறைநினைவை மறக்கடிக்க முயலுவான்
6. உறுதியாக இருந்தால் அஞ்சுவான்
7. தன்னை பின்பற்றியவர்களை ஏமாற்றுவான்
8. இறுதியில் நரகம் செல்வான்
காத்துக்கொள்ளும் வழிமுறைகள்
1. சிறந்த பாதுகாவலன்
2. இறைவனிடம் கையேந்துங்கள்
3. குர்ஆனை ஓதும் போது....
4. கழிவறைக்குள் நுழையும் போது...
5. உடலுறவு கொள்ளும் போது...
6. காலையிலும் மாலையிலும்
7. ஃபஜர் தொழுத பிறகு....
8. உறங்கச் செல்லும் முன்....
9. கெட்ட கனவுகள் ஏற்படும் போது....
10. ஓரிடத்தில் தங்கும் போது...
11. பள்ளிக்குள் நுழையும் போது
12. பள்ளியிலிருந்து வெளியேறும் போது....
13. தொழுகையில் குழப்பம் ஏற்பட்டால்....
14. கோபம் ஏற்பட்டால்....
15. கழுதையின் சப்தத்தை கேட்டால்..
16. குழந்தைக்காகப் பாதுகாப்புத் தேட வேண்டும்
17. தகடு தாயத்துகளைத் தொங்கவிடுவது இணைவைப்பாகும்
18. மார்க்கம் காட்டித்தராத முறையில் ஓதிப்பார்க்கக் கூடாது
19. சூரத்துல் பாத்திஹாவை வைத்து ஓதிப் பார்க்கலாம்.
20. 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை ஓதி ஊதலாம்
21. நபியவர்கள் கற்றுக்கொடுத்த பிரார்த்தனைகளை வைத்து...
22. குழந்தைகளை வெளியில் விடக்கூடாத நேரம்
23. இறைவனை அதிகம் நினைக்க வேண்டும்
24. இறைத்தூதர் கற்றுத்தந்தவாறு நினைக்க வேண்டும்
25. நற்குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்
26. ஃபஜர் தொழுக வேண்டும்
27. குர்ஆன் ஓத வேண்டும்
28. சஜ்தாவை அதிகப்படுத்த வேண்டும்
29. தொழும் போது வேறு காரியங்களில் ஈடுபடக்கூடாது
30. தொழும் போது யாரையும் குறுக்கே செல்லவிடக் கூடாது
31. ஸஃப்பை நெருக்கமாக்கிக்கொள்ள வேண்டும்
முன்னுரை
இன்றைய உலகில் இஸ்லாமும் இன்னபிற மதங்களும் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இஸ்லாத்தைத் தவிர்த்து எந்த ஒரு மதத்தின் கொள்கையும் கோட்பாடுகளும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்கக்கூடியதாக இல்லை.
மனிதர்களால் சுயமாக கண்டுபிடிக்க இயலாத விஷயங்களில் சுய சிந்தனைகளையும் கற்பனைகளையும் ஒருவர் புகுத்தினால் இம்மதங்களை கடைபிடிப்பவர்கள் யாரும் இதை எதிர்ப்பதில்லை. குறிப்பாக இக்கற்பனைகள் தங்களது மதத்தின் மீது பக்தியையும் பற்றையும் ஏற்படுத்துவதற்கு உதவினால் கண்மூடிக்கொண்டு ஆதரவளிக்க இவர்கள் முன்வருகிறார்கள்.
ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரை அதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் குறிப்பிட்ட எல்லைக்குள் வறையறுக்கப்பட்டுவிட்டது. மனிதர்களின் கற்பனைகளும் சுய சிந்தனைகளும் இதில் நுழைந்து விடாமல் இருக்க வலுமையான தடுப்பை திருக்குர்ஆன் ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய சட்டதிட்டங்களாக இருந்தாலும் கொள்கை கோட்பாடுகளாக இருந்தாலும் இவற்றை வகுத்துக் கூறும் அதிகாரத்தை இறைவன் தன்வசம் மட்டுமே வைத்துள்ளான். இந்த அதிகாரத்தை கையில் எடுக்க யாருக்கும் எள்ளளவு கூட அனுமதியில்லை.
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.
அல்குர்ஆன் (39 : 3)
இந்த அடிப்பைடையை முஸ்லிம்களில் பலர் புரிந்துகொள்ளாத காரணத்தால் இஸ்லாத்தில் சொல்லப்படாத இஸ்லாத்திற்கு மாற்றமான பல விஷயங்கள் மாற்றார்களிடமிருந்து இவர்களுக்கு தொற்றிக்கொண்டுவிட்டது. உதாரணமாக ஜின்கள் மற்றும் ஷைத்தான்கள் விஷயத்தில் பல விதமான தவறான நம்பிக்கைகள் நம் மக்கள் மத்தியில் பரவியுள்ளது.
ஜின்களும் ஷைத்தான்களும் மனிதக் கண்களுக்குப் புலப்படாத மறைமுகமான படைப்பாகும். இவர்களைப் பற்றி நம்முடைய சுய அறிவைக் கொண்டு ஆராய்ந்து கூற இயலாது. அப்படிக்கூறினால் நிச்சயமாக அது வழிகேட்டில் தான் கொண்டு போய்விடும்.
மனித அறிவிற்குப் புலப்படாத விஷயங்களை அறிந்துகொள்வதாக இருந்தால் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மூலமே அறிந்துகொள்ள முடியும். இவ்விரண்டையும் தவிர்த்து வேறு எதன் மூலமும் யார் மூலமும் இது தொடர்பான விஷயங்களை அறிந்துகொள்ள இயலாது.
ஜின்களையும் ஷைத்தான்களையும் பற்றி குர்ஆனும் ஹதீஸ்களும் தெளிவாக விளக்குகிறது. இந்த விளக்கங்களை அறிந்து கொண்டால் தவறான நம்பிக்கைகளில் நம் சமூகம் நிச்சயம் விழாது. உலக மக்களின் எதிரியான ஷைத்தானைப் பற்றி விபரமாக அறிந்து அவனது சதி வலையில் விழாமல் நம்மை நாம் காத்துக்கொண்டால் இறைவனுடைய கோபம் நம்மீது ஏற்படாது.
மக்கள் இவைகளை அறிந்து நல்வழியில் செல்வதற்காக குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் அடிப்படையாகக் கொண்டு ஜின்களையும் ஷைத்தான்களையும் பற்றி விவரிக்கும் இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் தவறுகள் ஏதும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறோம்.
இப்படிக்கு
அப்பாஸ் அலீ
ஜின் என்ற வார்ததையின் பொருள்
அல்ஜின்னு என்ற அரபு வார்த்தை குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜின்கள் என்பது மனிதர்களைப் போன்று பகுத்தறிவு வழங்கப்பட்டு இறைக்கோட்பாடுகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்ட உயிரினமாகும்.
மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது போல் சில வேற்றுமைகளும் உள்ளது. மனிதர்களை நம் கண்களால் காண முடியும். ஆனால் ஜின்களை மனிதக் கண்களால் காண முடியாது. மாறாக ஜின்களால் மனிதர்களை காணமுடியும்.
ஜன்ன என்ற வினைச் சொல்லிலிருந்து ஜின் என்ற வார்த்தை பிரிந்து வந்துள்ளது. மறைத்தல் மறைதல் என்பது இதன் நேரடிப் பொருளாகும். திருமறைக் குர்ஆனில் ஜன்ன என்ற வார்த்தை மூடுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இரவு அவரை மூடிக் கொண்ட போது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இதுவே என் இறைவன்'' எனக் கூறினார். அது மறைந்த போது "மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்'' என்றார்.
அல்குர்ஆன் (6 : 76)
எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து தன்னை மறைத்துக் கொள்வதற்கு கேடயம் உதவுவதால் கேடயத்திற்கு ஜுன்னத் என்று சொல்லப்படுகிறது. தாயின் வயிற்றில் உள்ளக் குழந்தை மறைவாக இருப்பதால் அதற்கு ஜனீன் என்று கூறப்படுகிறது.
பாம்புகள் மனிதக் கண்களை விட்டு விரைவில் மறைந்துவிடுவதால் பாம்புகளுக்கு ஜான் என்று கூறப்படுகிறது. ஜின்கள் மனிதக்கண்களுக்கு புலப்படாமல் மறைந்து இருப்பதால் இதற்கு ஜின் என்று கூறப்படுகிறது.
நூல் : லிஸானுல் அரப் பாகம் : 13 பக்கம் : 92
ஜின்கள் இருப்பது உண்மை
ஜின் என்ற ஒரு படைப்பு உலகத்தில் இருப்பதாக திருக்குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவாக கூறுகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் நம்பிக்கைக்கொள்ள வேண்டிய மறைவான விஷயங்களிலும் இதுவும் ஒன்றாகும்.
வானவர்கள் சொர்க்கம் நரகம் இவற்றை நாம் யாரும் கண்களால் பார்த்துவிட்டு நம்பவில்லை. மாறாக குர்ஆனும் ஹதீஸ்களும் இவற்றை நம்புமாறு கூறுவதால் நம்புகிறோம். இது போன்று ஜின்களை நம் கண்களால் காணாவிட்டாலும் மறைவான நம்பிக்கை என்ற அடிப்படையில் ஜின்கள் இருப்பதாக நம்புபவரே உண்மையான இறைநம்பிக்கையாளராக இருக்க முடியும்.
இதுவரை மனிதனுடைய அறிவுக்குப் புலப்படாமல் உள்ள பல விஷயங்களில் இதுவும் ஒன்று என்று கருதுவதே ஈமானிற்கு உகந்தது. சில வழிகெட்ட கூட்டங்கள் ஜின்கள் என்று ஒரு படைப்பே இல்லை என்று கூறி மக்களை வழிகெடுத்துக்கொண்டிருக்கிறது. ஜின்கள் தொடர்பாக இந்நூலில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு ஆதாரமும் இவர்களின் தவறான நம்பிக்கையை தகர்க்கக்கூடியதாக இருக்கிறது.
மனிதர்களுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட படைப்பு
மனித குலம் அனைத்திற்கும் தந்தையும் முதல் மனிதருமான ஆதம் (அலை) அவர்களை படைப்பதற்கு முன்பே ஜின்களை அல்லாஹ் படைத்துவிட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு மனிதனைப் படைத்தோம். கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.
அல்குர்ஆன்(15 : 27)
நெருப்பால் படைக்கப்பட்டவர்கள்
மனிதர்கள் மண்ணிலிருந்து படைக்கப்பட்டிருப்பது போல் ஜின்கள் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டதால் அவர்களின் உடலில் நெருப்பு பற்றிக்கொண்டிருக்கும் என்று விளங்கக்கூடாது.
மனிதன் மண்ணால் படைக்கப்பட்டாலும் தற்போது மனிதர்கள் மண் வடிவத்தில் இல்லை. மனிதனின் தோற்றமும் தன்மைகளும் மண்ணுடைய தோற்றத்திற்கும் தன்மைகளுக்கும் முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. இது போன்றே நெருப்பிற்கும் ஜின்களுக்கும் மத்தியில் தோற்றத்திலும் தன்மையிலும் வித்தியாசம் இருக்கலாம்.
கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.
அல்குர்ஆன் (15 : 27)
தீப்பிழம்பிலிருந்து ஜின்னைப் படைத்தான்.
அல்குர்ஆன் (55 : 15)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். "ஜின்'கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப்பட்டார்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலிலி)
நூல் : முஸ்லிம் (5722)
பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள்
ஜின்கள் என்பவர்கள் ஆடுமாடுகளைப் போன்று பகுத்தறிவற்ற உயிரினமில்லை. மாறாக மனிதர்களைப் போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள். மனிதர்களைப் போலவே சொர்க்கம் நரகத்தை அடையக்கூடியவர்கள். சிந்தித்து நல்வழியை தேர்வு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டவர்கள்.
ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.
அல்குர்ஆன் (7 : 179)
ஜின்களும் பேய்களும் ஒன்றா?
பேய்களுக்கும் கெட்ட ஆவிகளுக்கும் ஜின்கள் என்று சொல்லப்படுவதாக சிலர் தவறான கருத்தை கூறி வருகிறார்கள். இக்கருத்து இஸ்லாத்திற்கு முற்றிலும் புறம்பானதாகும்.
ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருக்கும் இறந்து போனவர்களின் ஆவிகள் தான் பேய்கள் என்று பேய்நம்பிக்கை உள்ளவர்கள் கருதுகிறார்கள். இந்த நம்பிக்கையை குர்ஆனும் ஹதீஸ்களும் பொய்யென நிராகரிக்கிறது.
இறந்தவர் நல்லவராக இருந்தாலும் தீயவராக இருந்தாலும் அவரின் உயிர் அல்லாஹ்வின் பிடியில் இருக்கிறது. அவனது கடுமையான பிடியிலிருந்து ஆவிகள் தப்பித்து வரவே முடியாது என்று திருக்குர்ஆன் கூறும் போது ஆவிகள் பூமியில் சுற்றித்திரிகிறது என நம்புவது குர்ஆனிற்கு எதிரானதும் மூடநம்பிக்கையுமாகும். எனவே பேய்கள் இருப்பதாக நம்பக்கூடாது.
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் (39 : 42)
பேய் நம்பிக்கை பொய்யானது என்பதை விரிவாக விளக்கும் வகையில் பேய் பிசாசு என்ற தலைப்பில் தனி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரம் அறிய அதை வாங்கி படித்துக்கொள்ளுங்கள்.
பேய்கள் என்று எதுவும் பூமியில் இல்லை. பேய் நம்பிக்கை என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக நம்புவதாகும். ஆனால் ஜின்களை நம்புவது பேய்களை நம்புவது போன்றதல்ல.
ஜின்கள் என்று ஒரு கூட்டம் தற்போதும் பூமியில் வாழ்ந்து வருவதாக குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகிறது. ஜின்களை மறுத்தால் குர்ஆனையும் ஹதீஸ்களை மறுத்ததாகிவிடும். எனவே ஒவ்வொருவரும் ஜின்கள் இருப்பதாக அவசியம் நம்பியாக வேண்டும்.
பேய் நம்பிக்கைக்கும் ஜின் நம்பிக்கைக்கும் உள்ள இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் இரண்டும் ஒன்று என்று சாதாரண அறிவு படைத்தவர் கூட கூறமாட்டார்.
ஜின்களின் வகைகள்
ஜின்களின் உடல் உறுப்புக்கள் மற்றும் தோற்றம் குறித்து விரிவான தகவல் ஹதீஸ்களில் கிடைக்கப்பெறவில்லை. காற்றில் பறந்து செல்பவர்கள் பூமியில் தங்கி வாழ்பவர்கள் நாய் மற்றும் பாம்பு வடிவில் திரிபவர்கள் இவ்வாறு மூன்று வகையினர் இருப்பதாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஜின்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு வகையினருக்கு இறக்கைகள் உண்டு. இவர்கள் காற்றில் பறந்து செல்வார்கள். நாய்களும் பாம்புகளும் இன்னொரு வகையினராகும். இன்னொரு வகையினர் (ஆங்காங்கே) தங்கிக்கொண்டும் (வேறு இடங்களுக்கு) பயனித்துக்கொண்டும் இருப்பார்கள்.
அறிவிப்பவர் : அபூ சஃலபா (ரலி)
நூல் : முஷ்கிலுல் ஆஸார் (2473)
பாம்வு வடிவிலும் நாய் வடிவிலும் சில ஜின்கள் இருக்கிறார்கள் என்று மேலுள்ள ஹதீஸ் கூறுகிறது. இன்றைக்கு உள்ள எல்லா நாய்களும் பாம்புகளும் ஜின்கள் தான் என்று புரிந்து விடக்கூடாது. இவ்வாறு புரிவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
பாம்புகளிலும் நாய்களிலும் ஜின்களாக இருப்பவையும் உண்டு. ஜின்களாக இல்லாதவையும் உண்டு என்று கூறுவதே ஏற்புடையதாகும். பாம்புகளில் இவ்வாறு இரு வகை இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.
பாம்பு வடிவில் ஜின்கள்
நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்த போது அபூ லுபாபா (ர-) அவர்கள் என்னைக் கூப்பிட்டு, "அதைக் கொல்லாதீர்கள்'' என்று சொன்னார்கள். நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகüல் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்'' என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர-)
நூல் : புகாரி (3298)
வீட்டில் வசிக்கும் பாம்புகளை மட்டுமே நபி (ஸல்) அவர்கள் ஜின்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதிலிருந்து வீட்டிற்கு வெளியே சுற்றித்திரியும் பாம்புகள் ஜின்கள் இல்லை என்பதும் அவற்றை கொல்ல வேண்டும் என்பதும் தெளிவாகிறது.
வீடுகளில் தென்படுகின்ற பாம்புகள் அனைத்தும் ஜின்கள் தான் என்று விளங்கவிடக்கூடாது. பாம்புகளை வீட்டில் காணும் போது அவை வெளியேறுவதற்காக மூன்று நாட்கள் பொறுத்திருக்க வேண்டும். வெளியேறாவிட்டால் அவற்றை கொல்ல வேண்டும் என்று ஹதீஸில் உள்ளது.
ஹிஷாம் பின் ஸுஹ்ரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலிலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அப்போது அவர்கள் தொழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். ஆகவே, அவர்கள் தொழுகையை முடிக்கும்வரை அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அப்போது வீட்டின் மூலையிலிலிருந்த பேரீச்சமர காய்ந்த குச்சிகளுக்கு இடையிருந்து ஏதோ அசையும் சப்தத்தை நான் கேட்டேன். உடனே நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒரு பாம்பு இருந்தது. அதைக் கொல்வதற்காக நான் துள்ளிக் குதித்து எழுந்தேன்.
உடனே அபூசயீத் (ரலிலி) அவர்கள் அமருமாறு எனக்குச் சைகை செய்தார்கள். ஆகவே, நான் அமர்ந்துகொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபின் அவ்வீட்டிலிலிருந்த ஓர் அறையை எனக்குச் சுட்டிக்காட்டி, "இந்த அறையை நீர் காண்கிறீரா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்' என்றேன். அப்போது அபூசயீத் (ரலிலி) அவர்கள் கூறினார்கள்:
இந்த அறையில் புதிதாகத் திருமணமான எங்கள் இளைஞர் ஒருவர் இருந்தார். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அகழ்ப்போருக்குப் புறப்பட்டுச் சென்றபோது, அந்த இளைஞர் நண்பகல் நேரங்களில் தம் வீட்டாரிடம் திரும்பிச் செல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருந்தார்.
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். (அவர் திரும்பிச் செல்லப்போனபோது) அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது ஆயுதத்தை உம்முடனேயே வைத்துக்கொள். ஏனெனில், பனூ குறைழா யூதர்களை உம்முடைய விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்'' என்று சொன்னார்கள். அவ்வாறே அந்த மனிதர் (தம்முடன்) ஆயுதத்தை எடுத்துக்கொண்டார்.
பிறகு அவர் திரும்பி வந்தபோது அவரது (புது) மனைவி வீட்டு வாசலில் இரு நிலைக் கால்களுக்கிடையே நின்றுகொண்டிருந்தாள். உடனே அவர் அவள்மீது எறிவதற்காக ஈட்டியை நோக்கித் தமது கையைக் கொண்டு சென்றார். உடனே அவருடைய மனைவிக்கு ரோஷம் ஏற்பட்டு, "ஈட்டி எறிவதை நிறுத்துங்கள். (முதலிலில்) வீட்டுக்குள் நுழைந்து, நான் வெளியே வந்து நின்றதற்கு என்ன காரணம் என்பதைப் பாருங்கள்'' என்று கூறினாள். அவ்வாறே அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்த போது, அங்கு மிகப் பெரிய பாம்பு ஒன்று படுக்கை விரிப்பின் மீது சுருண்டு கிடந்தது.
உடனே அவர் அதன் அருகில் ஈட்டியைக் கொண்டுசென்று அதன் உடலுக்குள் ஈட்டியைச் செருகினார். பிறகு அறையிலிலிருந்து வெளியே வந்து வீட்டி(ன் வளாகத்தி)ல் அந்த ஈட்டியை நட்டு வைத்தார். அந்த ஈட்டியில் கிடந்து பாம்பு துடித்தது. பிறகு அவ்விருவரில் யார் முதலிலில் இறந்தார்கள். அந்த பாம்பா? அல்லது அந்த இளைஞரா என்பது தெரியவில்லை. (பாம்பும் இளைஞரும் இருவருமே இறந்துவிட்டனர்.)
உடனே நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தகவல் தெரிவித்தோம்; "அவரை (மீண்டும்) உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் நண்பருக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்'' என்று சொன்னார்கள்.
பிறகு "மதீனாவில் ஜின்கள் சில இஸ்லாத்தைத் தழுவியுள்ளன. அவற்றில் எதையேனும் நீங்கள் (பாம்பு வடிவத்தில்) கண்டால், அதற்கு நீங்கள் (வெளியேறுமாறு) மூன்று நாட்கள் அறிவிப்புச் செய்யுங்கள். அதற்குப் பின்னரும் அது உங்களுக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான்தான்'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : முஸ்லிம் (4502)
மூன்று நாட்களுக்குள் வெளியேறிவிடுகின்ற பாம்புகளில் ஜின்களும் இருக்கலாம். ஜின்களாக இல்லாதவையும் இருக்கலாம். அறிவிப்புச் செய்து மூன்று நாட்கள் கடந்த பிறகும் வீட்டில் பாம்புகள் தென்பட்டால் நிச்சயமாக அவை ஜின்களாக இருக்க முடியாது. அவை மனிதனிற்கு கேடு விளைவிக்கும் சாதாரண பாம்பு என்பதால் அதைக் கொல்லுமாறு நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
நாய் மற்றும் பாம்புகளின் தோற்றத்தை மட்டுமே நம்மால் காணமுடியும். ஜின்களின் உண்மையான தோற்றத்தை காண இயலாது. ஒரு குறிப்பிட்ட நாயையோ அல்லது பாம்பையோ ஜின் என்று நம்மால் முடிவு செய்யவும் இயலாது.
நாய் மற்றும் பாம்பு வடிவில் உள்ள ஜின்களால் சாதாரண நாய்களாலும் பாம்புகளாலும் என்ன செய்ய முடியுமோ அதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது. பொதுவாக ஜின்களுக்கு வழங்கப்பட்டுள்ள அளப்பறிய ஆற்றல்கள் இந்த வகை ஜின்களுக்கு வழங்கப்படவில்லை.
மதீனாவிற்கு மட்டும் உரிய சட்டம்
பாம்புகளைக் கண்டால் எடுத்தஎடுப்பில் கொன்றுவிடாமல் வெளியேறுமாறு மூன்று நாட்கள் வரை அறிவிப்புச் செய்ய வேண்டும் என்ற இந்த சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு மட்டும் பிரத்யேகமானதாக கூறியுள்ளார்கள்.
மதீனாவில் ஜின்கள் சில இஸ்லாத்தைத் தழுவியுள்ளன என்று நபியவர்கள் கூறியதிலிருந்து இச்சட்டம் மதீனாவிற்கு மட்டும் உரியது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மதீனாவில் இஸ்லாத்தைத் தழுவிய ஜின்கள் சில உள்ளன. உங்களில் ஒருவர், அவற்றில் எதையேனும் இந்தக் குடியிருப்புகளில் (பாம்பின் உருவில்) கண்டால் மூன்று நாட்கள் அவற்றுக்கு அவர் அறிவிப்புச் செய்யட்டும். அதற்குப் பின்னரும் அது அவருக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடட்டும்! ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : முஸ்லிம் (4504)
உருமாற்றம் செய்யப்பட்ட ஜின்கள்
சில ஜின்கள் பாம்புகளாக உருமாற்றம் செய்யப்பட்டன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இஸ்ரவேலர்களில் (சிலர்) பன்றிகளாகவும் குரங்குகளாகவும் உருமாற்றம் செய்யப்பட்டதைப் போல் (சில) ஜின்கள் பாம்புகளாக உருமாற்றப்பட்டுள்ளன.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அஹ்மத் (3085) தப்பரானீ (4364)
உருமாற்றப்பட்ட உயிரினங்களுக்கு சந்ததிகளை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. இந்த வகை உயிரினங்களுக்கு வழிதோன்றல்கள் இல்லாததால் அவை ஒரு குறிப்பிட்ட காலத்துடன் அழிந்து போயிருக்கும். எனவே தற்காலத்தில் பாம்பு வடிவில் உருமாற்றப்பட்ட ஜின்கள் இருப்பதற்கு சாத்தியமில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ் ஊருமாற்றிய எந்தச் சமுதாயத்தாருக்கும் சந்ததிகளையோ வழித்தோன்றல்களையோ அவன் ஏற்படுத்தியதில்லை.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : முஸ்லிம் (5176)
பாம்புகளை கொல்ல வேண்டும்
பாம்புகள் மனித உயிரை பறிக்கின்ற விஷப்பிராணி என்பதால் அவற்றை கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே பாம்புகளைக் கண்டால் கொல்லாமல் விட்டுவிடக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, "பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட ("துத் துஃப்யத்தைன்' என்னும்) பாம்பையும் குட்டையான- அல்லது- சிதைந்த வால் கொண்ட ("அப்தர்' எனும்) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையை அவித்து விடும்; கருவைக் கலைத்து விடும்'' என்று சொல்ல நான் கேட்டேன்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (3297)
நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள) ஒரு குகையில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்களுக்கு, "வல் முர்சலாத்தி'' (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!) எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்கொண்டிருந்தார்கள். நான் அதை அவர்கüன் வாயி-ருந்து புத்தம் புதிதாகச் செவியேற்றுக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பாம்பு (புற்றிலிருந்து) எங்களை நோக்கித் துள்ü வந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "அதைக் கொல்லுங்கள்!'' என்றார்கள். அதை நோக்கி போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது (தனது புற்றுக்குள் ஓடிப்) போய் (நுழைந்து)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் அதன் தீங்கி-ருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கி-ருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர-)
நூல் : புகாரி (4934)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை பாம்பு காகம், பருந்து, எலிலி, வெறிநாய் ஆகியனவாகும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : நஸயீ (2780)
பாம்புகள் பலிவாங்குமா?
பாம்புகளை கொன்றால் அவை இறந்த பிறகு மீண்டும் உயிர் பெற்று தன்னைக் கொன்றவரை பலிவாங்கும் என்ற தவறான நம்பிக்கை சில மக்களிடம் உள்ளது. அடிபட்ட பாம்பு தப்பிவிட்டால் அடித்தவரை அது பாலிவாங்காமல் விடாது என்று கருதி பாம்பைக் கண்டால் பயந்து நடுங்குபவர்களும் உண்டு.
இது போன்ற தவறான நம்பிக்கையின் காரணமாக பாம்புகளை கொல்லாமல் விடுவது பாவம் என்கின்ற அளவிற்கு நபி (ஸல்) கண்டித்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பாம்புகள் பலிவாங்கிவிடும் என்று பயந்து யார் அவைகளை கொல்லாமல் விட்டுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. பாம்புகளுடன் நாம் சண்டையிடத்தொடங்கியது முதல் என்றுமே அவைகளுடன் நாம் இணக்கமானதில்லை.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அபூதாவுத் (4570)
ஜின்களில் ஆண்களும் பெண்களும் உண்டு
ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண் பெண் என்ற இரு இனம் இருப்பது போல் ஜின்களிலும் ஆண் பெண் இனங்கள் உண்டு. மனிதர்களில் ஆண் இனம் இருப்பது போல் ஜின்களிலும் ஆண் இனம் உள்ளது என்று திருமறைக் குர்ஆன் கூறுகிறது.
மனிதர்களில் உள்ள ஆண்களில் சிலர் ஜின்களில் உள்ள சில ஆண்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தனர். எனவே இவர்களுக்கு கர்வத்தை அவர்கள் அதிகமாக்கி விட்டனர்.
அல்குர்ஆன் (72 : 6)
ஷைத்தான்கள் ஜின் இனத்தைச் சார்ந்தவர்களாவர். ஷைத்தான்களில் ஆண் பெண் இனம் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஜின்களில் இவ்விரு இனம் இருப்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, "இறைவா! (அருவருக்கத்தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (142)
ஜின்களின் இனப்பெருக்கம்
ஜின்களில் ஆண் பெண் ஜோடிகள் இருப்பதால் அவர்களுக்கிடையே இணைபெருக்கம் நடைபெறும் என்பதை அறியலாம். ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தானிற்கு வழிதோன்றல்கள் இருப்பதாக அல்லாஹ் கூறுவதிலிருந்தும் இதை அறியாம்.
என்னையன்றி ஷைத்தானையும், அவனது சந்ததிகளையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்கிறீர்களா? அவர்கள் உங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் பகரமாக்கியது மிகவும் கெட்டது.
அல்குர்ஆன் (18 : 50)
இணைப்பெருக்கத்திற்குத் தேவையான காம உணர்வை மனிதர்களுக்கு ஏற்படுத்தி இருப்பது போல் ஜின்களுக்கும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.
அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும் ஜின்னும் தீண்டியதில்லை.
அல்குர்ஆன் (55 : 56)
தனது துணையை தீண்டும் பண்பு மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் உண்டு என்ற கருத்து மேற்கண்ட வசனத்தில் உள்ளடங்கியுள்ளது.
மனிதன் விரும்புகின்ற விஷயங்களில் இல்லற இன்பம் முக்கியமானது. இதை மனிதன் மட்டுமல்லாமல் ஜின்களும் பெரும் பாக்கியமாக நினைக்கிறார்கள் என்பதால் மனித ஜின் கூட்டத்தினரை அழைத்து இந்த பாக்கியம் சொர்க்கத்திலும் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அங்கேயும் சிறந்த அழகிகள் இருப்பார்கள். உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட ஹூர் எனும் கன்னியராவர். உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
இவர்களுக்கு முன் அவர்களை எந்த மனிதனும் ஜின்னும் தீண்டியதில்லை. உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
பச்சை நிறத்து இரத்தினக் கம்பளத்தின் மீதும், அழகிய சாய்மானத்தின் மீதும் சாய்ந்து கொண்டிருப்பார்கள்.
அல்குர்ஆன் (55 : 70)
ஜின்களுக்கிடையே அன்பு
நேசிப்பது இரக்கப்படுவது போன்ற குணங்கள் ஜின்களுக்கும் உண்டு.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகிய வற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் அவை ஒன்றன்மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி)
நூல் : முஸ்லிம் (5312)
ஜின்களின் உணவு
மனிதர்கள் உண்டுவிட்டு எரியும் எலும்புகளும் கால்நடைகளின் சாணங்களும் கரிக்கட்டைகளும் ஜின்களின் உணவாகும். சாப்பிடுவதற்கு இவற்றில் ஒன்றுமில்லையே என்று நமக்குத் தோன்றினாலும் ஜின்களுக்கு அதில் அல்லாஹ் நிறைவான உணவை வைத்துள்ளான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னிடம் "நஸீபீன்' என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்கüன் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், "அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்'' என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்.''என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)
நூல் : புகாரி (3860)
ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட) உணவு குறித்துக் கேள்வி கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் பெயர் சொல்லிலி அறுக்கப்பட்ட ஒவ்வொரு பிராணியின் எலும்பும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அது உங்கள் கரங்களில் இறைச்சியைவிட நிறைவானதாக இருக்கும். ஒவ்வொரு கெட்டிச் சாணமும் உங்களுடைய கால்நடைகளுக்குத் தீவணமாகும்'' என்று கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), "எனவே, நீங்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின்பு எலும்பு, கெட்டிச் சாணம் ஆகிய) அவ்விரண்டின் மூலம் துப்புரவு (இஸ்தின்ஜா) செய்யாதீர்கள்; அவ்விரண்டும் உங்களுடைய சகோதரர்க(ளான ஜின்க)ளின் உணவாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : முஸ்லிம் (767)
ஜின்கள் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து முஹம்மதே எழும்பு கெட்டிச் சாணம் கறிக்கட்டை ஆகியவற்றால் துப்புரவு செய்வதை விட்டும் உங்கள் சமுதாயத்தினரை தடுங்கள். ஏனென்றால் இவற்றில் தான் அல்லாஹ் எங்களுக்கு உணவை ஏற்படுத்தியிருக்கிறான் என்று கூறின. ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதனை தடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
அபூதாவுத் (35)
Thanks : http://rajmohamedmisc.blogspot.com
- NEXT PART WILL BE UPDATED INSHA ALLAH -