Apr 17, 2011

சிறு குறிப்புகள் - உளூ, தயம்மும் மற்றும் குளிப்பு

சிறு குறிப்புகள் தொழுகை

உளூ, தயம்மும் மற்றும் குளிப்பு

நிய்யத்
நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும். நடைமுறையில் உள்ள சில அரபி வாசகங்கள் நபி (ஸல்) அவர்கள் கற்றுதராத பித்அத்.

உளூ செய்யும் முறை
  • உளூவை வரிசைப்படி செய்ய வேண்டும்.
  • உளூ செய்யும் முன் பல் துலக்குவது நபி வழி.(மிஸ்வாக் குச்சி அல்லாமல் கையை வைத்தோ, பிரஷ்ஷை வைத்தோ கூட பல் துலக்கலாம். மேலும் பல் துலக்குவது உளூவின் ஓர் அங்கம அல்ல)
  • பிஸ்மில்லாஹ் கூறுதல்
  • முதலில் இருமனிகட்டு வரை கழுவுதல்
  • இரண்டு தடவை தண்ணீர் எடுக்காமல் ஒரே நீரில் வாயையும் மூக்கையும் சுத்தம் செய்தல்.
  • முகத்தைக் கழுவ வேண்டும்- தாடி வைத்திருப்போர் கோதி கழுவுதல்
  • இரு கைகளையும் முழங்கை வரை கழுவுதல்
  • மஸஹ் செய்ய வேண்டும் - இரண்டு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து பிடரி வரை கொண்டு சென்று எந்த இடத்திலிருந்து தடவ ஆரம்பத்தீர்களோ அதே இடத்துக்கு திரும்ப கொண்டு வரவும்.ஒரு தடவையோ இரு தடவையோ செய்யலாம். காதுகளுக்கும் மஸஹ் செய்வது நபிவழி. பிடரிக்கு செய்வது பித்அத்.
  • முதலில் வலது காலையும் பின்னர் இடது காலையும் கரண்டை, குதிகால் உட்பட முழுமையாக கழுவ வேண்டும்.

குறிப்பு :
  • தலைக்கும் மஸஹ் செய்வதைத் தவிர மற்ற அனைத்தையும் ஓன்று, இரண்டு அல்லது மூன்று தடவை செய்யலாம். மூன்று தடவைக்கு மேல் அதிகப் படுத்தக்கூடாது. 
  • ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் போதும் தனிதனி துஆக்கள் இல்லை

தயம்மும்
  • உளூ செய்ய தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீர் கிடைத்தும் பயன்படுத்தும் முடியாத நிலை இருந்தால் தயம்மும் செய்து கொள்ளலாம்.
  • குளிர் தாங்க முடியாத நிலையிலும் தயம்மும் செய்யலாம்.
தயம்மும் செய்யும் முறை
உள்ளங்கைகளால் தரையில் அடித்து , வாயால் ஊதி விட்டு அல்லது கைகளை உதறி விட்டு இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் கழுவ வேண்டும்.

குறிப்பு :
  • களிமண், மணல், இறுகிய மண்ணாங்கட்டி, மன் சுவர் போன்றவற்றில் தயம்மும் செய்யலாம்.
  • தயம்மும் செய்து தொழுது முடித்த பின் தொழுகை நேரம் முடிவதற்குள் தண்ணீர் கிடைத்தால் மீண்டும் தொழத் தேவை இல்லை.

உளூவை நீக்குபவை
  • சிறுநீர் மற்றும் மல ஜலம் கழித்தல்
  • காற்றுப் பிரிதல்
  • ஒட்டகத்தின் இறைச்சியை உண்ணுதல்
  • ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது ஏற்படும் திரவம் மதி (இச்சை நீர்) உளூவை நீக்கும்.
  • ஆணோ பெண்ணோ மர்ம ஸ்தானத்தை இச்சையுடன் தொட்டால் உளூ முறியும்.

குறிப்பு :
  • காற்றுப் பிரிந்தது போல போன்ற உணர்வோ அல்லது சிறுநீர் ஓரிரு சொட்டுக்கள் இறங்கி விட்டது போன்ற உணர்வோ உளூவை முறிக்காது.
  • ஆனால் காற்றுப் பிரியும் சப்தத்தை கேட்டாலோ, நாற்றத்தை உணர்ந்தாலோ உளூ முறிந்து விடும்.
  • சமைக்கப் பட்ட உணவை சாப்பிடுவதால் உளூ நீங்காது
  • இரத்தம் வெளிப்பட்டால், வாந்தி எடுத்தால் உளூ நீக்காது.
  • ஆன் பெண்ணைத் தொட்டாலோ, பெண் ஆணைத் தொட்டாலோ உளூ முறியாது.

கடமையான குளிப்பு
குளிப்பு கடமையானால் குளித்து விட்டுத்தான் தொழ வேண்டும்.

குளிப்பை கடமையாக்குபவை
  • ஆணும பெண்ணும் உடலுறவு கொண்டால்
  • ஆணுக்கோ பெண்ணுக்கோ தூக்கத்தில் விந்து வெளிப்பட்டு உறுதியாகத் தெரிந்தால் குளிப்பு கடமையாகும். அதற்கான அடையாளம் இல்லை என்றால் குளிக்கத் தேவை இல்லை.
  • மாதவிடாய் நின்றவுடன் பெண்கள் குளித்து விட்டுத்தான் தொழ வேண்டும்.
  • ஜும்மாவுக்கு முன் குளிப்பது கட்டாயக் கடமை.

குளிக்கும் முறை
  • கடமையான குளிப்பின் போது தாம்பத்தியத்தின் மூலம் உடலில் பட்ட அசுத்தங்களையும், மர்ம ஸ்தானத்தையும் வலது கையால் இடது கையில் தண்ணீர் ஊற்றி, பின் இடது கையால் மர்ம ஸ்தானத்தை கழுவ வேண்டும்.
  • கடமையான குளிப்பை நிறைவேற்றும் முன் உளூ செய்வது நபி வழி. 
  • கைகளைத் தண்ணீரில் நனைத்து, பின் ஈரக் கையால் தலையின் அடிப்பாகத்தை கோதி விட்டுப் மூன்று தடவை தலையில் மற்றும் உடலில் ஊற்றினால் போதுமானது.
  • பெண்கள் சடையை அவிழ்க்க வேண்டிய கட்டாயம் இல்லை.

(இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சட்டங்களும் M.I சுலைமான் அவர்கள் எழுதிய தொழுகையின் சட்டங்கள் என்ற நூலிலிருந்து தொகுப்பட்டது. இந்நூலைக் காண இங்கே கிளிக் பண்ணவும்.)

Thanks: www.onllinepj.com

தொகுப்பு: இஸ்மத