சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்
அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிப(இ)ன் முபா(இ)ர(க்)கன் பீ(எ)ஹி ஃகைர மக்பி(எ)ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(இ)னா
இதன் பொருள்:
தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல.
ஆதாரம்: புகாரி 5858
அல்லது
அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா(எ)னா வ அர்வானா ஃகைர மக்பி(எ)ய்யின் வலா மக்பூ(எ)ர்
இதன் பொருள்:
உணவளித்து தாகம் தீர்த்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனது அருள்
மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமல்ல.
ஆதாரம்: புகாரி 5459
அல்லது
அல்ஹம்து லில்லாஹ்
என்று கூறலாம். ஆதாரம்: முஸ்லிம் 4915
Thanks : www.onlinepj.com & "நமக்குள் இஸ்லாம்"