Sep 18, 2011

வட்டியிலிருந்து விலகியவருக்கு தண்டனையுண்டா


கேள்வி
இரு சகோதரர்கள் சேர்ந்து கிரெடிட் கார்டு மூலம் நகை வாங்கி சகோதரிக்கு கொடுக்கின்றனர். இதில் ஒரு சகோதரனுக்கு வட்டி கட்டுவதில் விருப்பமின்மையால் அசலான தங்க நகைக்கு மட்டும் பணத்தைத் தர ஒப்புக் கொள்கிறார். மற்றொரு சகோதரர் வட்டியை சேர்த்து கட்டுகிறார். இதில் வட்டி கட்டாதவருக்கு வட்டி தொடர்புடைய ஏதேனும் பாவத்தை சம்பாதித்த குற்றமாகுமா?

சீனி இஸ்மத் Dubai, U.A.E.


பதில்
வட்டி என்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றாகும்.

நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் ! இதனால் வெற்றி பெருவீர்கள். ஏக இறைவனை மறுப்போருக்காகத் தயாரிக்கப் பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்
(3:130,131)

வட்டி உண்பவன் மறுமையில் ஷைத்தான் தீண்டியவனைப் போல் எழுப்பப்படுவான்.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.வியாபாரம் வட்டியைப் போன்றதே என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது.அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது.மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(2:275)

வட்டியை விடாதவருடன் இறைவன் போர் பிரகடனம் செய்கிறான்.

அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.
(2:279)

மேற்கண்ட செய்திகள் அனைத்தும் வட்டி மிகப்பெரியதொரு பாவமான காரியம் என்பதை மிகத் தெளிவாக நமக்கு விளக்குகின்றன.

யாருக்கு வட்டி பாவமான காரியம் என்று தெரிந்து அதிலிருந்து அவர் விளகிக் கொள்கிறாரோ அவருடை பாவத்தை அல்லாஹ் மண்ணிக்கிறான்.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.வியாபாரம் வட்டியைப் போன்றதே என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
(2:275)

வட்டியை விட்டும் யார் விளகிக்கொள்கிறாரோ அவர் அந்தப் பாவத்திலிருந்து தப்பிவிட்டார் என்று அர்த்தமாகிவிடும். மீண்டும் மீண்டும் அதில் ஈடுபடுபவர்கள் நரகவாதிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று மேற்கண்ட வசனம் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

குறிப்பிட்ட சகோதரர் வட்டியுடன் தொடர்புபடாமல் தான் கொடுக்க வேண்டிய கடனை மாத்திரம் கொடுக்கிறார் என்றால் அவர் வட்டி தொடர்பான பாவத்தில் ஈடுபட்டவராக கருதப்படமாட்டார்.

அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
பதில் : ரஸ்மின் MISc
Source : www.frtj.net