இசையினால் இன்னலே! இறை நினைவால் இன்பமே!
இயந்திரமயமாகி
விட்ட மனித வாழ்க்கையில் மக்கள் தமது வேலைகள்அனைத்தையும் முடித்து விட்டு மனம்
நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக டிவி பார்ப்பது, இசை கேட்பது, இன்னும் இது
போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இசை தான் மனதுக்கு அமைதியைத் தந்து, கவலைகளை மறக்கச்
செய்யும் என்றும் சிலர் கூறுகின்றனர்.
இசையை
கேட்கும் போது அது ஒரு பொழுதுப் போக்காகவும், உற்சாகத்தை
தூண்டுவதாகவும் இருக்கின்றது: எனவே இசை அமைதியை அளிக்கின்றது. மகிழ்ச்சியைத்
தருகின்றது என்று எண்ணுகின்றார்கள். அதனால்தான் தங்களுக்கு ஏதேனும் மன இறுக்கம்
ஏற்படும்போது அல்லது சலிப்பு ஏற்படும்போது இசையை கேட்க விரும்புகின்றார்கள்.
இசை
நம்முடைய உடலுக்கும்இ உள்ளத்திற்கும் அமைதி, ஓய்வைத்
தருகின்றது என்ற எண்ணம் பரவலாக இருந்து வருவதும் இதற்குக் காரணம். பெண்களும் கூட
வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது வேலையில் கஷ்டம் தெரியாமல் இருக்க
வேண்டும் என்பதற்காக இசையைக் கேட்டுக் கொண்டே வேலை செய்வார்கள். இதில் யாரும்
விதிவிலக்கல்ல. மார்க்கம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என
அனைவருமே இந்த இசையில் மூழ்கியுள்ளனர்.
இந்த
இசையைக் கேட்பதால் மனம் நிம்மதி அடையுமா? என்றால் நிச்சயம்
இல்லை. மாறாக இசையைக் கேட்பதால் நரம்புகள் பாதிப்படைதல், தூக்கமின்மை, அமைதியின்மை
ஆகியவை தான் ஏற்படுகின்றன. இசையை கேட்கும் போது மனித உடலில் அட்ரினல் என்ற
ஹார்மோன் அதிகமாகச் சுரக்கின்றது என்பதை சமீபத்தில் ஓர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
அட்ரினல் என்ற ஹார்மோன் பொதுவாக ஏதாவது மன இறுக்கம் ஏற்படும்போதோ அல்லது சாதாரண
நிலைகளிலோ சிறிதளவு தான் உற்பத்தியாகின்றது.
இசையைக்
கேட்கும் போது அட்ரினல் தொடர்ந்து உற்பத்தியாகி, மனித உடலில் ஒரு
பரபரப்பு, அமைதியின்மை, தூக்கமின்மை
போன்றவையை ஏற்படுத்துகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இதனால்
மேலும் பல தீமைகள் ஏற்படுகின்றன.
இசையை கேட்பது மனதுக்கு நிம்மதி அளிக்காது. மாறாக
அமைதியின்மையை ஏற்படுத்தும். இறைவனை நினைவு கூர்வது தான் மனதுக்கு அமைதியை தரும்.
பாவமான, மானக்கேடான காரியங்களை விட்டும் தடுக்கும்.
(முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக!. தொழுகையை நிலைநாட்டுவீராக!. தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
(அல்குர்ஆன் 29:45)
நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால்
அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள்
அமைதியுறுகின்றன.
(அல்குர்ஆன் 13:38)
இறைவனை நினைவு கூர்வதால்; தான்
உள்ளங்கள் அமைதி பெறுகின்றனஎன்று அல்லாஹ் கூறுகின்றான். மேலும், நாம்
அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் அவனும் நம்மை நினைவு கூறுகிறான்.
என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள். எனக்கு நன்றி மறக்காதீர்கள்.
என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள். எனக்கு நன்றி மறக்காதீர்கள்.
(அல்குர்ஆன் 2:152)
இன்று
ஆண்களாயினும் பெண்களாயினும் அவர்கள் எந்த நேரமும் வாயில் நுழையாத இரட்டை
அர்த்தங்கள் கொண்ட பாடல்களதை; திரும்பத்
திரும்பக் கேட்கிறார்கள். அந்தப் பாடல்களை எப்படியாவது பாடியே ஆக வேண்டும்
என்பதற்காக அவற்றைக் கேட்டு மனப்பாடம் செய்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு
வாயில் நுழையாத இரட்டை அர்த்தங்கள் கொண்ட பாடல்களைப் பாடி தீமையைச் சேர்ப்பதை விட
மிகவும் சிறந்த இரண்டு வார்த்தைகளைச் சொல்வது நாவுக்கு எளிதானது. மறுமையில் மீஸான்
தராசினையும் கனமாக்கும்.
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஸீப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி
(அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்)
ஸீப்ஹானல்லாஹில் அழீம்
(கண்ணியமிக்க அல்லாஹ்வை துதிக்கிறேன்).
அறிவிப்பவர்: அபூஹீரைரா (ரலி) புகாரி முஸ்லிம்
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஸீப்ஹானல்லாஹில் அழீம்
என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு
பேரீச்ச மரம் நடப்படும்.
அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி) நூல்: திர்மிதி 3464
நாம்
நம்மையும் அறியாமல் எத்தனையோ சிறு சிறு தவறுகளைச் செய்கின்றோம். இன்னும் சில
நேரங்களில் அந்தச் சிறு தவறுகளை நாம் தவறு என்று தெரிந்து செய்கின்றோம். ஆனால் அதை
பெரிதாக எண்ணுவதில்லை. மிகவும் சாதாரணமானது என்று நினைக்கிறோம். ஆனால் நம்முடைய
பதிவேடு அதையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் பதிவு செய்து விடும். அல்லாஹ் தன்
திருமறையில்..
பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக
குற்றவாளிகள்அச்சமடைந்திருக்கக் காண்பீர்!. இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ
பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே! எனக் கூறுவார்கள். தாங்கள்
செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க
மாட்டான்.
(அல்குர்ஆன் 18:49)
தூய்மையான
எண்ணத்துடன் ஸீப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி என்று ஒரு நாளைக்கு நூறு முறை கூறினால்
நம்முடைய பாவங்கள் கடலின் நுரையளவு இருந்தாலும் அதை அல்லாஹ் மன்னித்து
விடுகின்றான்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஸீப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி
(அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து துதிக்கிறேன்)
என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள்
அழிக்கப்பட்டு விடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (அதிகமாக) இருந்தாலும் சரியே.
அறிவிப்பவர்: அபூஹீரைரா(ரலி) நூல்: புகாரி 6405
நபி(ஸல்)
அவர்கள் ஷைத்தானைப் பற்றிக் கூறும் போது மனிதர்களின் இரத்த நாளங்களில் ஓடுவதாகக்
கூறுகின்றார்கள். இந்த ஷைத்தான் மனிதர்களை வழி கெடுப்பதற்கு ஏதேனும் ஒரு சிறு
வழியேனும் கிடைக்காதா? என்று தேடிக்
கொண்டேயிருக்கின்றான். இந்த ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு கிடைக்க வேண்டுமெனில்
அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஒரு வழியைக் கற்றுத் தருகின்றார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லாயிலாஹ இல்லல்லாஹீ வஹ்தஹீ லா ஷரீக்கலஹீ லஹீல் முல்க்கு வலஹீல்
ஹம்து வஹீவ அலா குல்லி ஷையின் கதீர்
(வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன்
தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சி
அதிகாரம் உரியது.அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின்
மீதும் வலிமை உள்ளவன்)
என்று யார் ஒரு நாளில் நூறு முறை செல்கின்றாரோ அவருக்கு அது பத்து
அடிமைகளை விடுதலை செய்ததற்கு சமமாகும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள்
எழுதப்படும். நூறு தவறுகள் அவரது கணக்கிலிருந்து அழிக்கப்படும். மேலும் அடுத்த
நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது
அவருக்கு இருக்கும். மேலும் அவர் புரிந்த நற்செயலை விட சிறந்ததை வேறு யாரும்
செய்திட முடியாது. ஒருவர் இதை விட அதிகமான ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர
அறிவிப்பவர்: அபூஹீரைரா(ரலி) நூல்: புகாரி 6403
அல்லாஹ்வை நினைவு கூறாத மனிதனை நபி(ஸல்)
அவர்கள் இறந்தவனுக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகின்றவனின் நிலை உயிருள்ளவரின்
நிலைக்கும் தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும்
ஒத்திருக்கின்றது.
(அறிவிப்பவர்: அபூமூசா(ரலி) நூல்: புகாரி 6407)
முஸ்லிமான ஆண்களும் பெண்களும் நம்பிக்கைக் கொண்ட ஆண்களும்
பெண்களும் கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும் பெண்களும் உண்மை பேசும் ஆண்களும்
பெண்களும் அடக்கமாக நடக்கும் ஆண்களும் பெண்களும், தர்மம்
செய்யும் ஆண்களும் பெண்களும் நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்
தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ்
தன்னுடைய மன்னிப்பையும் மகத்தான நற் கூலியையும்; தயாரித்துள்ளான்.
(அல்குர்ஆன் 33:35)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு
கூர்ந்து போற்றுபவர்களைத் தேடிய வண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை
நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரைக் கண்டால் உங்கள் தேவையைப்
பூர்த்தி செய்ய வாருங்கள் என்று அவர்கள் தம்மில் ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர்.
பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகின்றவர்களைத் தம் இறக்கைகளால் முதல்
வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களுடைய இறைவன் என்
அடியார்கள் என்ன கூறுகின்றனர்? என்று கேட்கிறான். (அந்த வானவர்களை
விட அவனே தம் அடியார்களை நன்கு அறிந்தவன் ஆவான்). அவர்கள் உன்னைத் தூய்மையானவன்
என்று கூறித் துதிக்கின்றனர். உன்னை பெருமைப்படுத்திக் கொண்டும் உன்னைப் புகழ்ந்து
கொண்டும் உன்னை போற்றிக் கொண்டும் இருக்கின்றனர் என்ற வானவர்கள் கூறுவார்கள்.
அதற்கு இறைவன் அவர்கள் என்னைப் பார்த்திருக்கின்றார்களா? என்று
கேட்பான். அதற்கு வானவர்கள் இல்லை உன் மீது ஆணையாக அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை
என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன்என்னைப் பார்த்திருந்தால்
எப்படியிருப்பார்கள்? என்று கேட்பான். அதற்கு
வானவர்கள், உன்னைப்பார்த்திருந்தால்
இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள் என்று
பதிலளிப்பார்கள்.
அதற்கு இறைவன் அவர்கள் என்னிடம் எதை வேண்டுகிறார்கள்? என்று
கேட்பான். அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கிறார்கள் என்று வானவர்கள் கூறுவர்.
அவர்கள் அதைப் பார்த்ததுண்டா? என்று இறைவன் கேட்பான். இல்லை
உன் மீது ஆணையாக! அதிபதியே! அவர்கள் அதைப்; பார்த்ததில்லை
என்று வானவர்கள் கூறுவர். அதற்கு இறைவன் அவ்வாறாயின் அவர்கள் அதைப்
பார்த்திருந்தால் அவர்களின் நிலை எப்படியிருக்கும்? என்று
கேட்பான். அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன்
மீது ஆசை கொண்டு அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள் என்ற வானவர்கள்
பதிலளிப்பார்கள்.
அவர்கள் எதிலிருந்து என்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றனர்? என்று
இறைவன் வினவுவான். நரகத்திலிருந்து பாதுகாப்புக் கோருகின்றனர் என்ற வானவர்கள்
பதிலளிப்பார்கள். அவர்கள் அதைப் பார்த்ததுண்டா? என்று
இறைவன் கேட்பான். இல்லை. உன் மீது ஆணையாக! அவர்கள் அதைப் பார்த்ததில்லை என்று
வானவர்கள் கூறுவர். அதற்கு இறைவன, அவ்வாறாயின் அவர்கள் அதைப்
பார்த்திருந்தால் அவர்களின் நிலை என்னவாக இருக்கும்? என்று
கேட்பான். அவர்கள் நரகத்தைப் பார்த்திருந்தால் நிச்சயமாக அதிலிருந்து கடுமையாக
வெருண்டு ஓடுபவர்களாகவும் அதை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள் என்று
வானவர்கள் பதில் கூறுவர்.
அப்போது
இறைவன் ஆகவே அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான்
சாட்சியாளர்களாக ஆக்குகிறேன் என்று கூறுவான். அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர்
இன்ன மனிதன் உன்னைப் போற்றுகின்ற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ வேலை
நிமித்தமாக அங்கு வந்தான் என்று கூறுவார்கள். அதற்கு இறைவன் அவர்கள் ஒன்றாக
அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால்
பாக்கியமற்றவனாக மாட்டான் என்று கூறுவான்
அறிவிப்பவர்: அபூஹீரைரா(ரலி) நூல்: புகாரி 6408
இத்தனை
சிறப்புகளையும் நன்மைகளையும் கொண்ட இந்த திக்ருகளைத் துதிக்க வேண்டிய நாவுகள்
இன்று நம்மவர்களை தீமைக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. பாவத்தைச்
சேர்க்கக் கூடிய இரட்டை அர்த்தங்கள் கொண்ட பாடல்களைத் துதித்துக்
கொண்டிருக்கின்றது.
இனியாவது
இது போன்ற பாடல்களை ஒதுக்கி விட்டு நன்மையைச் சேர்க்கக் கூடிய திக்ருகளை
அதிகமதிகம் துதிப்போமாக! நமது பிள்ளைகளையும் நம்மைச் சுற்றியுள்ளர்களையும் தீய
பாடல்களைப் பாடுவதை விட்டும் தடுத்து. இறைவனை அதிpகமாக நினைவு
கூரக் கூடியவர்காளக ஆக்குவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
Source: www.onlinepj.com / www.dubaitntj.net