Sep 7, 2016

அல்லாஹ் பற்றிய முழுத் தொகுப்பு

அல்லாஹ்
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? அல்லாஹ்வைப் பார்க்க முடியுமா?
அல்லாஹ் நம்மை எதற்காகப் படைத்திருக்கிறான்?
வணக்கம் என்றால் என்ன?
அல்லாஹ்வை நாம் எவ்விதம் வணங்க வேண்டும்?
வணக்கத்தில் சிறந்த முறை எது?

ஏகத்துவம்
ஏகத்துவம் என்றால் என்ன?
படைத்துப் பரிபாலனம் செய்வதில் ஏகத்துவப்படுத்துதல் என்றால் என்ன?
வணக்கத்தில் ஏகத்துவப்படுத்துதல் என்றால் என்ன?
அல்லாஹ்வின் திருநாமங்களிலும் அவனது பண்புகளிலும் ஏகத்துவப்படுத்துதல் என்றால் என்ன?
நமது நல்லறங்கள் ஒப்புக் கொள்ளப்படுவதற்கு நிபந்தனைகள் யாவை?

இணைவைத்தல்
இணைவைத்தல் என்றால் என்ன?
இணை கற்பித்தலின் மிகப் பெரும் வகை யாது?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தவர்களிடையே இணை கற்பித்தல் எனும் பெரும்பாவம் காணப்படுகிறதா?
இறந்தவர்களிடமும், நம் எதிரில் இல்லாதவர்களிடமும் பிரார்த்திப்பதைப் பற்றி இஸ்லாத்தின் விதி என்ன?
பிரார்த்தனை புரிவதே ஒரு வணக்கமா?
பிரார்த்தனைகளைச் செவிமடுக்கும் ஆற்றல் இறந்தவர்களுக்கு உண்டா?
பெரிய இணை வைத்தலின் வகைகள் யாவை?

உதவிக்கு அழைத்தல்
இறந்தவர்களையும், நம் எதிரில் இல்லாதவர்களையும் நம்மைக் காப்பாற்றும் படி அழைக்கலாமா?
அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் உதவி கேட்கலாமா?
உயிர் வாழ்பவர்களிடம் நாம் ஏதேனும் உதவி கேட்கலாமா?

நேர்ச்சை செய்தல்
அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு நேர்ச்சை செய்யலாமா?

பலியிடுதல்
அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்காகப் பிராணிகளைப் பலியிடுதல் கூடுமா?
வலம் வருதல்
வணக்கம் என்று கருதி நாம் சமாதிகளை வலம் வரலாமா?

சூனியம் செய்தல்
சூனியம் செய்வதைப் பற்றி இஸ்லாத்தின் தீர்ப்பு என்ன?

ஜோதிடம், குறிபார்த்தல்
தமக்கு மறைவானவற்றைப் பற்றித் தெரியும் என்று கூறும் ஜோதிடர்களையும், குறிகாரர்களையும் நாம் நம்பலாமா?

மறைவானவை பற்றிய அறிவு
மறைவானவற்றை வேறு யாராவது அறிய முடியுமா?

அணியக்கூடாதவை
முடிகயிறு, வளையம், மாலை போன்றவற்றை நோய் நிவாரணத்திற்காக நாம் அணிந்து கொள்ளலாமா?
ஜெபமணி மாலைகள், சோழி, சிப்பி ஆகியவற்றை கண்ணேறு போன்றவற்றிற்காக அணிதல் கூடுமா?

செயல்பாடும் தீர்ப்பும்
இஸ்லாத்திற்கு முரணான விதிமுறைகளின் படி செயல்படுவது பற்றி இஸ்லாத்தின் தீர்ப்பு என்ன?

சாத்தானின் ஊசலாட்டம்
அல்லாஹ் தான் அனைத்தையும் படைத்தான். அவனை யார் படைத்தது?என:று சாத்தான் நமக்குள் மனக் குழப்பத்தை ஏற்படுத்தினால் அதை எவ்வாறு தவிர்ப்பது?

இணை வைத்தலின் கேடுகள்
இணை வைத்தலின் பெரிய வகையினால் விளையும் கேடு என்ன?
அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பாவத்துடன் செய்யும் எந்த நல்லறங்களாலும் பயன் உண்டா?

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலின் சிறிய வடிவம்
இணை கற்பிக்கும் பாவத்தில் சிறய வகை என்பது யாது?

இணை வைத்தல் தொடர்பான மற்ற கேள்விகள்
அல்லாஹ்வைத் தவிர மற்றவற்றைக் கொண்டு சத்தியம் செய்வது ஆகுமா?
இறைவனை இறைஞ்சிட துணைச் சாதனம் தேவையா?
அனுமதிக்கப்பட்ட துணைச் சாதனம்,அனுமதிக்கப்படாத துணைச் சாதனம் என்றால் என்ன?
அல்லாஹ்விடம் ஒன்றை வேண்டுவதற்கு யாராவது ஒரு மனிதரின் இடைத் தரகு (துணை) தேவையா?
உயிருடனிருப்பவர்களிடம் நமக்குப் பிரார்த்தனை செய்யும்படிக் கேட்கலாமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கும் இறைவனுக்குமிடையே எந்த வகையில் துணைச் சாதனமாக நடுவில் இருப்பவராகிறார்கள்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நமக்குப் பரிந்துரை செய்ய அனுமதிக்கும்படி நாம் யாரிடம் கேட்க வேண்டும்?
உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் எதற்காவது பரிந்துரை செய்யும்படிக் கேட்கலாமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்வதில் நாம் வரம்பு மீறலாமா?
முஸ்லிம்கள் தமக்கிடையே எழுகின்ற பிரச்சினைகளில் எதன்படி தீர்ப்புக் கூற வேண்டும்?
ஒருவருக்கொருவர் நேசம் கொள்ளுதல், உதவிக் கொள்ளுதல் பற்றி இஸ்லாத்தின் முடிவு என்ன?
வலியுல்லாஹ் (அல்லாஹ்வின் நேசர்) என்பவர் யார்?

முஸ்லிம்கள் அல்லாஹ்வின் உதவியைப் பெற எப்போது தகுதி உடையவர்களாவார்கள்?



அல்லாஹ்வின் தோற்றம்
=========================

அல்லாஹ்விற்கு  உருவம் இருக்கிறது.. இறைவன் உருவமற்றவன் என்பது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும்.

இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைப் காண முடியாது.

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்எனக் கூறினார். அதற்கு (இறை வன்) என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்எனக் கூறினார்
(அல்குர்ஆன் 7:143)

அவனுடைய தோற்றத்தை மறுமையில் நல்லடியார்கள் காண்பார்கள்.

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். 
(அல்குர்ஆன் 75:22,23)

காஃபிர்கள் மறுமையில் இறைவனைப் பார்ப்பதை விட்டும் திரையிடப்படுவார்கள்.

அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்.  (அல்குர்ஆன் 83:15)

இறைவனுக்கு நாமாக உருவத்தைக் கற்பிக்கக் கூடாது.

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். 
(அல்குர்ஆன் 42:11)

அழகிய திருநாமங்கள்
======================
அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப் படுவார்கள். (அல் குர்ஆன் 7:180)


அல்லாஹ்வுக்கு பலவீனங்கள் இல்லை
======================================
மறதி இல்லை

(முஹம்மதே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவனாக இல்லை.
(அல் குர்ஆன் 19:64)

பசி, தாகம் இல்லை

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி  வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனாஅவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை”  என்று கூறுவீராக!  கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறும் இணை கற்பித்தோரில் ஒருவனாக ஆகி விடக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்எனவும் கூறுவீராக!
(அல் குர்ஆன் 6:14)


உதவியாளன் இல்லை

சந்ததியை  ஏற்படுத்திக்  கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்கு பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை’” என்று (முஹம்மதே!)  கூறுவீராக!  அவனை அதிகம் பெருமைப் படுத்துவீராக! (அல் குர்ஆன் 17:111)

தேவைகள் இல்லை

வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் புகழுக்குரியவன். தேவையற்றவன். (அல்குர்ஆன் 22:64)

மனைவி மற்றும் பிள்ளைகள் இல்லை

எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
(அல்குர்ஆன் 72:3)

குழந்தையைத் தருபவன்

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.



அல்லாஹ்வின் பண்புகள்

1.   அல்லாஹ் ஒருவன் தான் - 2:133
2.   அல்லாஹ்வுக்குப் பலவீனங்கள் இல்லை
  • அல்லாஹ்வுக்குத் தூக்கம் இல்லை - 2:255
  • அல்லாஹ்வுக்குச் சோர்வு இல்லை - 2:255
  • அல்லாஹ்வுக்கு மரணமில்லை - 2:255
  • அல்லாஹ்வுக்கு மறதி இல்லை - 19:64
  • அல்லாஹ்வுக்குப் பசி, தாகம் இல்லை - 6:14
  • அல்லாஹ்வுக்கு உதவியாளன் இல்லை - 17:111
  • அல்லாஹ்வுக்கு வீண் விளையாட்டு இல்லை - 3:191
  • அல்லாஹ்வுக்குத் தேவைகள் இல்லை - 2:48
  • அல்லாஹ்வுக்கு மனைவி இல்லை - 6:101
  • அல்லாஹ்வுக்கு மகன் இல்லை - 2:116
  • அல்லாஹ்வுக்குப் பெண் மக்கள் இல்லை - 6:100
  • அல்லாஹ்வுக்குப் பெற்றோர் இல்லை - 57:3

3. அல்லாஹ்வின் நிதானம்
அல்லாஹ் அவசரப்பட மாட்டான் - 3:178

4. அல்லாஹ் எங்கே இருக்கிறான்?
  • அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கிறான் - 7:54
  • அல்லாஹ்வின் இருக்கை வானம், பூமியை விடப் பெரியது - 2:255


5. அல்லாஹ்வுக்குப் பல பெயர்கள்
அல்லாஹ்வின் பெயர்களைச் சிதைக்கக் கூடாது - 7:180
அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் - 7:180
  • அல்லாஹ்வுக்கு ரப்பு (அதிபதி) என்ற பெயர் - 1:2
  • அல்லாஹ்வுக்கு அவ்வல் (முதலானவன்) என்ற பெயர் - 57:3
  • அல்லாஹ்வுக்கு ஆகிர் (முடிவானவன்) என்ற பெயர் - 57:3
  • அல்லாஹ்வுக்கு பாரீ (உருவாக்குபவன்) என்ற பெயர் - 59:24
  • அல்லாஹ்வுக்கு பாத்தின் (அந்தரங்கமானவன்) என்ற பெயர் - 57:3
  • அல்லாஹ்வுக்கு பதீவு (முன்மாதிரி இன்றி படைத்தவன்) என்ற பெயர் - 2:117
  • அல்லாஹ்வுக்கு பர்ரு (நல்லது செய்பவன்) என்ற பெயர் - 52:28
  • அல்லாஹ்வுக்கு பஸீர் (பார்ப்பவன்) என்ற பெயர் - 2:96
  • அல்லாஹ்வுக்கு தவ்வாப் (மன்னிப்பை ஏற்பவன்) என்ற பெயர் - 2:37
  • அல்லாஹ்வுக்கு ஜாமிவு (திரட்டுபவன்) என்ற பெயர் - 3:9
  • அல்லாஹ்வுக்கு ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) என்ற பெயர் - 59:23
  • அல்லாஹ்வுக்கு ஹஸீப் (கணக்கெடுப்பவன்) என்ற பெயர் - 4:6
  • அல்லாஹ்வுக்கு ஹஃபீள் (காப்பவன்) என்ற பெயர் - 11:57
  • அல்லாஹ்வுக்கு ஹக் (மெய்யானவன்) என்ற பெயர் - 6:62
  • அல்லாஹ்வுக்கு ஹக்கீம் (ஞானமிக்கவன்) என்ற பெயர் - 2:32
  • அல்லாஹ்வுக்கு ஹலீம் (சகிப்பவன்) என்ற பெயர் - 2:225
  • அல்லாஹ்வுக்கு ஹமீத் (புகழுக்குரியவன்) என்ற பெயர் - 2:267
  • அல்லாஹ்வுக்கு ஹய்யு (உயிருள்ளவன்) என்ற பெயர் - 2:255
  • அல்லாஹ்வுக்கு ஃகாலிக் (படைத்தவன்) என்ற பெயர் - 6:102
  • அல்லாஹ்வுக்கு ஃகபீர் (நன்கறிந்தவன்) என்ற பெயர் - 2:234
  • அல்லாஹ்வுக்கு ரவூஃப் (இரக்கமுடையவன்) என்ற பெயர் - 2:143
  • அல்லாஹ்வுக்கு ரஹ்மான் (அருளாளன்) என்ற பெயர் - 1:3
  • அல்லாஹ்வுக்கு ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) என்ற பெயர் - 1:3
  • அல்லாஹ்வுக்கு ரஸ்ஸாக் & ராஸிக் (உணவளிப்பவன்) என்ற பெயர் - 5:114
  • அல்லாஹ்வுக்கு ரகீப் (கண்காணிப்பவன்) என்ற பெயர் - 4:1
  • அல்லாஹ்வுக்கு ஸலாம் (நிம்மதியளிப்பவன்) என்ற பெயர் - 59:23
  • அல்லாஹ்வுக்கு ஸமீவு (செவியுறுபவன்) என்ற பெயர் - 2:127

  • அல்லாஹ்வுக்கு ஷா(க்)கிர் ஷ(க்)கூர் (நன்றியை ஏற்பவன்) என்ற பெயர் - 2:158
  • அல்லாஹ்வுக்கு ஷஹீத் (நேரடியாகக் கண்காணிப்பவன்) என்ற பெயர் - 3:98
  • அல்லாஹ்வுக்கு ஸமத் (தேவைகளற்றவன்) என்ற பெயர் - 112:2
  • அல்லாஹ்வுக்கு ளாஹிர் (வெளிப்படையானவன்) என்ற பெயர் - 57:3
  • அல்லாஹ்வுக்கு அஸீஸ் (மிகைத்தவன்) என்ற பெயர் - 2:129
  • அல்லாஹ்வுக்கு அளீம் (மகத்தானவன்) என்ற பெயர் - 2:255
  • அல்லாஹ்வுக்கு அஃபுவ்வு (பெருந்தன்மையுடன் மன்னிப்பவன்) என்ற பெயர் - 4:43
  • அல்லாஹ்வுக்கு அல்லாமுல் குயூப் (மறைவானவற்றை அறிபவன்) என்ற பெயர் - 5:109
  • அல்லாஹ்வுக்கு அலிய்யு (உயர்ந்தவன்) என்ற பெயர் - 2:255
  • அல்லாஹ்வுக்கு அலீம் (அறிந்தவன்) என்ற பெயர் - 2:29
  • அல்லாஹ்வுக்கு கஃப்பார் & கஃபூர் (மிகவும் மன்னிப்பவன்) என்ற பெயர் - 2:173
  • அல்லாஹ்வுக்கு கனிய்யு (தேவைகளற்றவன்) என்ற பெயர் - 2:263
  • அல்லாஹ்வுக்கு ஃபத்தாஹ் & ஃபாதிஹ் (தீர்ப்பளிப்பவன், வெற்றியளிப்பவன், அதிகம் வழங்குபவன்) என்ற பெயர் - 7:89
  • அல்லாஹ்வுக்கு காஹிர் & கஹ்ஹார் (ஆதிக்கம் செலுத்துபவன்) என்ற பெயர் - 6:18
  • அல்லாஹ்வுக்கு குத்தூஸ் (தூயவன்) என்ற பெயர் - 59:23
  • அல்லாஹ்வுக்கு காதிர் (ஆற்றலுடையவன்) என்ற பெயர் - 6:37
  • அல்லாஹ்வுக்கு கதீர் (ஆற்றலுடையவன்) என்ற பெயர் - 2:20
  • அல்லாஹ்வுக்கு கரீப் (அருகில் உள்ளவன்) என்ற பெயர் - 2:186
  • அல்லாஹ்வுக்கு ஹாகிம் (தீர்ப்பு வழங்குபவன்) என்ற பெயர் - 7:87
  • அல்லாஹ்வுக்கு கவிய்யு (வலிமையானவன்) என்ற பெயர் - 8:52
  • அல்லாஹ்வுக்கு கய்யூம் (நிலையானவன்) என்ற பெயர் - 2:255
  • அல்லாஹ்வுக்கு கபீர் (பெரியவன்) என்ற பெயர் - 4:34
  • அல்லாஹ்வுக்கு கரீம் (வள்ளல் - மதிப்புமிக்கவன்) என்ற பெயர் - 27:40
  • அல்லாஹ்வுக்கு அக்ரம் (பெரும் வள்ளல்) என்ற பெயர் - 96:3
  • அல்லாஹ்வுக்கு லத்தீஃப் (நுட்பமானவன்) என்ற பெயர் - 6:103
  • அல்லாஹ்வுக்கு முஃமின் (அபயமளிப்பவன்) என்ற பெயர் - 59:23
  • அல்லாஹ்வுக்கு முதஆலி (உயர்ந்தவன்) என்ற பெயர் - 13:9
  • அல்லாஹ்வுக்கு முதகப்பிர் (பெருமைக்குச் சொந்தக்காரன்) என்ற பெயர் - 59:23
  • அல்லாஹ்வுக்கு மதீன் (உறுதியானவன்) என்ற பெயர் - 51:58
  • அல்லாஹ்வுக்கு முஜீப் (ஏற்பவன், பதிலளிப்பவன்) என்ற பெயர் - 11:61
  • அல்லாஹ்வுக்கு மஜீத் (மகத் தானவன்) என்ற பெயர் - 11:73
  • அல்லாஹ்வுக்கு முஹ்யீ (உயிர் கொடுப்பவன்) என்ற பெயர் - 30:50, 41:39
  • அல்லாஹ்வுக்கு முஸவ்வீர் (வடிவமைப்பவன்) என்ற பெயர் - 59:24
  • அல்லாஹ்வுக்கு முக்ததிர் (ஆற்றலுடையவன்) என்ற பெயர் - 18:45
  • அல்லாஹ்வுக்கு முகீத் (ஆற்றலுடையவன், கண்காணிப்பவன்) என்ற பெயர் - 4:85
  • அல்லாஹ்வுக்கு மாலிகுல் முல்க் (ஆட்சிக்கு உரிமையாளன்) என்ற பெயர் - 3:26
  • அல்லாஹ்வுக்கு மாலிகு யவ்மித்தீன் (நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி) என்ற பெயர் - 1:4
  • அல்லாஹ்வுக்கு முபீன் (தெளிவுபடுத்துபவன்) என்ற பெயர் - 24:25
  • அல்லாஹ்வுக்கு முஹீத் (முழுமையாக அறிபவன்) என்ற பெயர் - 2:19
  • அல்லாஹ்வுக்கு மலிக் (அரசன்) என்ற பெயர் - 2:19
  • அல்லாஹ்வுக்கு மலீக் (அரசன்) என்ற பெயர் - 54:55
  • அல்லாஹ்வுக்கு துன்திகாம் (பழிதீர்ப்பவன்) என்ற பெயர் - 3:4
  • அல்லாஹ்வுக்கு முன்தகிம் (பழிதீர்ப்பவன்) என்ற பெயர் - 32:22
  • அல்லாஹ்வுக்கு முஹைமின் (கண்காணிப்பவன்) என்ற பெயர் - 59:23
  • அல்லாஹ்வுக்கு மவ்லா (எஜமான்) என்ற பெயர் - 2:286
  • அல்லாஹ்வுக்கு நூர் (ஒளி) என்ற பெயர் - 24:35
  • அல்லாஹ்வுக்கு ஹாதி (வழிகாட்டுபவன்) என்ற பெயர் - 22:54
  • அல்லாஹ்வுக்கு வாஹித் (ஏகன் - தனித்தவன்) என்ற பெயர் - 2:133
  • அல்லாஹ்வுக்கு வாரிஸ் (உரிமையாளன்) என்ற பெயர் - 15:23
  • அல்லாஹ்வுக்கு வாஸிவு (தாராளமானவன்) என்ற பெயர் - 2:115
  • அல்லாஹ்வுக்கு வதூத் (அன்புமிக்கவன்) என்ற பெயர் - 11:90, 85:14
  • அல்லாஹ்வுக்கு வக்கீல் (பொறுப்பாளன்) என்ற பெயர் - 3:173
  • அல்லாஹ்வுக்கு வலீ (பொறுப்பாளன்) என்ற பெயர் - 2:107
  • அல்லாஹ்வுக்கு நஸீர் (உதவுபவன்) என்ற பெயர் - 2:107
  • அல்லாஹ்வுக்கு வஹ்ஹாப் (வள்ளல்) என்ற பெயர் - 3:8


6. அல்லாஹ்வைப் போல எதுவுமில்லை
  • அல்லாஹ்வுக்கு இணையாக எவரும் இல்லை - 2:22
  • அல்லாஹ்வைப் போல எதுவுமில்லை - 36:78
  • ஆட்சியில் அல்லாஹ்வுக்கு இணை இல்லை - 2:107
  • அதிகாரத்தில் அல்லாஹ்வுக்கு இணை இல்லை - 6:57
  • அல்லாஹ்வுக்கு உதாரணம் கூறக்கூடாது - 16:74

7. அல்லாஹ்வைக் காண முடியுமா?
  • இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைக் கண்டதில்லை; காண முடியாது - 2:55
  • மறுமையில் அல்லாஹ்வைக் காண முடியும் - 2:46

8. அல்லாஹ் இருக்கிறான் என்பதற்குச் சான்றுகள்
  • வானமும் பூமியும் படைக்கப்பட்டது பற்றிச் சிந்தித்தல் - 2:164
  • இரவு பகல் மாறி வருவது பற்றிச் சிந்தித்தல் - 2:164
  • நெருப்பைப் பற்றிச் சிந்தித்தல் - 36:80
  • கடலில் செல்லும் கப்பலைப் பற்றிச் சிந்தித்தல் - 2:164
  • மழையைப் பற்றி சிந்தித்தல் - 2:22
  • பூமியில் பயிர்கள் முளைப்பதைப் பற்றிச் சிந்தித்தல் - 2:22
  • ஆகாயத்தில் பறக்கும் பறவைகளைச் சிந்தித்தல் - 16:79
  • வானம் முகடாக இருப்பதைச் சிந்தித்தல் - 2:22
  • ஈஸா நபி, தந்தையில்லாமல் பிறந்தது பற்றிச் சிந்தித்தல் - 19:21
  • நூஹ் நபி காலத்து வெள்ளப் பிரளயம் மற்றும் கப்பல் பற்றிச் சிந்தித்தல் - 23:30
  • தேனீயைப் பற்றிச் சிந்தித்தல் - 16:68,69
  • ஃபிர்அவ்னின் உடல் பற்றியும் அவன் அழிக்கப்பட்டது பற்றியும் சிந்தித்தல் - 10:92
  • சூரியன் உள்ளிட்ட கோள்கள் ஓடிக் கொண்டிருப்பதைப் பற்றிச் சிந்தித்தல் - 13:2
  • தாவரங்களிலும் ஜோடி இருப்பதைச் சிந்தித்தல் - 13:3
  • அழிக்கப்பட்ட லூத் நபியின் சமுதாயத்தினர் வாழ்ந்த ஊரைப் பார்த்துச் சிந்தித்தல் - 15:75
  • காற்று மாறி மாறி வீசுவது பற்றிச் சிந்தித்தல் - 2:164
  • மேகத்தைப் பற்றிச் சிந்தித்தல் - 2:164
  • நட்சத்திரங்கள் பற்றிச் சிந்தித்தல் - 6:97
  • ஒரே மனிதர் தாம் அனைவரின் மூலபிதா என்பதைச் சிந்தித்தல் - 4:1
  • சூரியன், சந்திரன் பற்றிச் சிந்தித்தல் - 6:96
  • கணவன் மனைவியரிடையே ஏற்படும் அன்பு பற்றிச் சிந்தித்தல் - 30:21
  • பல்வேறு மொழிகள் பற்றிச் சிந்தித்தல் - 30:22
  • மனிதர்கள் பல நிறங்களுடையவர்களாக இருப்பது பற்றிச் சிந்தித்தல் - 30:22
  • தூக்கத்தைப் பற்றிச் சிந்தித்தல் - 30:23
  • மின்னலைப் பற்றிச் சிந்தித்தல் - 13:12
  • திறமையற்றவர்களும் செல்வந்தர்களாக இருப்பது பற்றிச் சிந்தித்தல் - 30:37
  • தான் படைக்கப்பட்டது பற்றி மனிதன் சிந்தித்தல் - 19:67
  • அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கு குர்ஆன் கூறும் சான்றுகள் - 2:22

9. மறைவானவை பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கே
  • மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் - 6:59
  • வானவருக்கும் மறைவான ஞானம் இல்லை - 2:,30
  • ஜின்களுக்கும் மறைவான ஞானம் இல்லை - 34:14
  • நபிமார்களுக்கும் மறைவான ஞானம் இல்லை - 5:109
  • ஆதம் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 2:36
  • நூஹ் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 11:31
  • இப்ராஹீம் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 9:114
  • ஈஸா நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 5:116
  • லூத் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 11:77
  • ஸுலைமான் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 27:20
  • யாகூப் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 12:11-15
  • தாவூத் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 38:22-24
  • மூஸா நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 7:150
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை - 3:44
  • நபிமார்களுக்கு சிலவற்றை மட்டும் அல்லாஹ் அறிவிப்பான் - 3:179

10. அதிகாரங்கள் அல்லாஹ்வுக்கே
  1. படைத்தல் அல்லாஹ்வின் அதிகாரம் - 2:21
  2. காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம் - 6:61
  3. அழித்தல் அல்லாஹ்வின் அதிகாரம் - 3:145
  4. அறிவை வழங்குவது அல்லாஹ்வின் அதிகாரம் - 2:32
  5. குழந்தையைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரம் - 3:6
  6. நபிமார்களும் தமக்குக் குழந்தைகளை உருவாக்கிக் கொள்ள இயலாது - 3:38
  7. ஆட்சியைத் தருவதும் அல்லாஹ்வின் அதிகாரம் - 2:247
  8. செல்வத்தையும், வறுமையையும் வழங்குவது அல்லாஹ்வின் அதிகாரம் - 2:155
  9. மழையைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரம் - 2:22
  10. நோய் நிவாரணம் தருவது அல்லாஹ்வின் அதிகாரம் - 2:156
  11. பாவங்களை மன்னிப்பது அல்லாஹ்வின் அதிகாரம் - 2:37
  12. பிரார்த்தனையை ஏற்பது அல்லாஹ்வின் அதிகாரம் - 2:186

11. அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது
  • அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதக் கூடாது - 4:36
  • அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் பெரும் பாவம் - 4:48
  • அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் வழிகேடு - 4:116
  • அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் பெரும் அநியாயம் - 31:13
  • அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவர்கள் விதியின் மீது பழிபோட்டு தப்ப முடியாது - 6:148
  • அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தோர் முன்னோர் மீது பழிபோட்டு தப்ப முடியாது - 7:173

12. அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க நியாயம் இல்லை
  • பாவிகளுக்கும் அல்லாஹ் அருள் புரிவதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 3:135
  • அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழக்கக் கூடாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 12:87
  • அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் யாருக்கும் எந்த ஆற்றலும் கிடையாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 5:17
  • படைக்கப்பட்டவை படைத்தவனுக்கு இணையாகாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 7:191
  • அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் கொசுவையும் படைக்க முடியாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 7:191
  • அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் செவியேற்க மாட்டார்கள் என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 7:198
  • அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் பதில் தரமாட்டார்கள் என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 6:36
  • இறைவன் அருகே இருக்க தொலைவில் உள்ளவர்களை அழைக்க நியாயம் இல்லை - 2:186
  • அல்லாஹ்வுக்கு இடைத்தரகர் கிடையாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 2:186
  • இணை கற்பிக்கச் சான்று இல்லாததால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 3:151
  • அல்லாஹ்வைத் தவிர யாரை அழைத்தாலும் அவர்களும் நம்மைப் போன்ற அடிமைகளே என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 3:79
  • மகான்களும், நல்லவர்களும் தம்மை வணங்குமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 3:79
  • அல்லாஹ்வையன்றி மற்றவர்களைப் பிரார்த்திப்பது பயனற்றது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 2:171
  • மறுமையில் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே. எந்த மகான்களும், வணங்கப்பட்டவர்களும் உதவ முடியாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 2:165-167
  • இறைவனுக்கு இணையாகக் கருதப்படுபவற்றுக்கு அஞ்சக் கூடாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 6:80
  • யாரை வணங்கினாலும் அவர்கள் ஷைத்தானையே வணங்குகின்றனர் என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 4:117

13. அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதன் விளைவுகள்
  • இணைகற்பித்தலுக்கு மன்னிப்பே கிடையாது - 4:48
  • இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது - 5:72
  • இணைகற்பித்தால் நிரந்தர நரகம் - 5:72
  • இணைகற்பித்தால் நல்லறங்கள் அழியும் - 6:88
  • இணைகற்பிக்கப்பட்டவர்கள் கற்பித்தவர்களைக் கைகழுவுவார்கள் - 6:22

14. வணக்கங்கள் அல்லாஹ்வுக்கே
  • வணக்கங்கள் அல்லாஹ்வுக்கே 1:5
  • படைத்தவனையே வணங்க வேண்டும் - 2:21
  • அனைத்து அதிகாரமும் உள்ளவனையே வணங்க வேண்டும் - 5:76
  • நேர்ச்சை எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே - 2:270
  • அறுத்துப் பலியிடுதல் எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே - 2:173
  • பாவமன்னிப்புத் தேடுதல் எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே - 2:199
  • ஸஜ்தா எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே - 3:43
  • பிரார்த்தனை எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே - 2:186
  • பரிந்துரையை வேண்டுவதும் அல்லாஹ்விடமே - 10:18

15. யாரையும், எதனையும் வணங்கக் கூடாது
  • கால்நடைகளைக் கடவுளாக்கக் கூடாது - 2:51
  • வானவர்களை வணங்கக் கூடாது - 3:80
  • சிலைகளை வணங்கக் கூடாது - 6:74
  • மகான்களை வணங்கக் கூடாது - 3:79
  • மத குருமார்களை வணங்கக் கூடாது - 9:31
  • நபிமார்களை வணங்கக் கூடாது - 3:79
  • மனிதனை மனிதன் வணங்கக் கூடாது - 3:64
  • சூரியன் சந்திரனை வணங்கக் கூடாது - 41:37

16. நபிமார்களும் மனிதர்களே

17. அதிகாரத்தில் நபிமார்களுக்குப் பங்கில்லை

18. நபிமார்களும் இறைவனின் அடிமைகளே

19. நபிகள் நாயகமும் இறைவனின் அடிமை

20. நபிமார்களுக்கு அற்புதங்கள் செய்யும் அதிகாரம் இல்லை

"நபிமார்களை நம்புதல்'' என்ற தலைப்பில் இதற்கான சான்றுகளைக் காண்க!

21. இறந்தவரிடம் பிரார்த்திக்கக் கூடாது
  • மரணித்தவர்கள் செவியுற மாட்டார்கள் - 2:259
  • மரணித்தவர்கள் எதையும் அறிய முடியாது - 2:259
  • மரணித்தவர்கள் ஒருபோதும் பதில் தர மாட்டார்கள் - 7:194
  • தாங்கள் பிரார்த்திக்கப்படுவது மரணித்தவர்களுக்குத் தெரியாது - 46:5

22. இணைகற்பித்தோருடன் உறவாடுதல்
  • இணைகற்பித்தோருக்காகப் பாவமன்னிப்பு கேட்கக் கூடாது - 9:31, 9:113
  • இணைகற்பித்தவர் அடைக்கலம் கேட்டால் அடைக்கலம் தரலாம் - 9:6
  • இணைகற்பித்தோர் பள்ளிவாசல்களை நிர்வகிக்கக் கூடாது - 9:17
  • இணைகற்பித்தோர் கஅபா வளாகத்துக்குள் அனுமதிக்கப்படக் கூடாது - 9:28
  • பெற்றோர் சொன்னாலும் இறைவனுக்கு இணைகற்பிக்கக் கூடாது - 29:8
  • பெற்றோர் இணைகற்பித்தாலும் அவர்களுக்குச் செய்யும் கடமைகளைச் செய்ய வேண்டும் - 29:8