Sep 8, 2016

நபிமார்கள் (இறைத்தூதர்கள்)

இறைத்தூதர்கள்


நபி என்ற சொல் அறிவிப்பவர் என்று பொருள்படும். இஸ்லாமிய மரபில் இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்று மக்களுக்கு அறிவிப்பவர் என்று பொருள்.

மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களிலிருந்தே தகுதியானவர்களை இறைவன் தேர்வு செய்து ஒரு வாழ்க்கை நெறியைக் கொடுத்து அனுப்புவான். இவ்வாறு அனுப்பப்படுவோரை இறைத்தூதர்கள் என இஸ்லாம் குறிப்பிடுகிறது.

முதல் மனிதரிலிருந்து இறுதித் தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை ஏராளமான தூதர்கள் உலகின் பல பாகங்களுக்கும்பல்வேறு மொழிகள் பேசும் மக்களுக்கும் நல்வழி காட்ட அனுப்பப்பட்டனர்.

இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களின் எண்ணிக்கை குறித்து திருக்குர்ஆனிலோநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏற்கத்தக்க பொன்மொழிகளிலோ குறிப்பிடப்படவில்லை.

ஒரு இலட்சத்து இருபத்தி நான்காயிரம் நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்னத் அஹ்மத் உள்ளிட்ட சில நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அறிவிக்கும் மூன்றாவது அறிவிப்பாளரான அலீ பின் யஸீத் என்பவர் பொய் சொல்பவர் என்று சந்தேகிக்கப்பட்டவர். அவர் கூறியதாக அறிவிக்கும் நான்காவது அறிவிப்பாளர் முஆன் பின் ரிஃபாஆ என்பவர் பலவீனமானவர். எனவே இது ஏற்கத்தக்க செய்தி அல்ல.

தூதர்களாக அனுப்பப்படுவோர் எல்லா வகையிலும் மனிதர்களாகவே வாழ்ந்தனர். தூதர்களாக நியமிக்கப்பட்டதால் அவர்களுக்கு இறைத்தன்மை வழங்கப்படவில்லை. இறைவனிடமிருந்து செய்தி அவர்களுக்குக் கிடைக்கும் என்பதே அவர்களுக்குரிய முக்கிய சிறப்பாகும்.

நபிமார்கள் என்பதும் தூதர்கள் என்பதும் இருவேறு தகுதிகளை உடையது எனச் சிலர் கூறுகின்றனர். இதற்குச் சான்று ஏதுமில்லை.

அனைத்து சமுதாயத்திற்கும் இறைத்தூதர்கள்

அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!” என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.
(அல்குர்ஆன் 16:36)

இறைத்தூதர்களின் எண்ணிக்கை

இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் மொத்த எண்ணிக்கை பற்றி குறிப்பிடும் ஆதரப்பூர்வமான எந்த ஹதீஸிம் கிடையாது.

அல்லாஹ் கூறுகிறான் :
உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை.
(அல்குர்ஆன் 40:78)

குர்ஆனில் பெயர் கூறப்பட்ட நபிமார்கள்

திருமறைக் குர்ஆனில் இருபத்தைந்து இறைத்தூதர்களின் பெயர் கூறப்பட்டுள்ளது.

6 83…86   வரை 18 நபிமார்களின் பெயர் கூறப்பட்டுள்ளது.

1.    ஆதம் (அலை)
ஆதம் (அலை) அவர்கள் முதல் மனிதரும் நபியும் ஆவார்கள். ஆனால், உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக அனுப்பபட்ட முதல் நபி நூஹ்(அலை) அவர்கள் ஆவார்கள்.

இஸ்லாமிய நம்பிக்கைப்படி அல்லாஹ் முதல் மனிதரைக் களிமண்ணால் படைத்தான். அவ்வாறு படைக்கப்பட்டவரின் பெயர் தான் ஆதம். இவர் தான் முழு உலகில் வாழும் அனைத்து மக்களின் தந்தையாவார். அவரிலிருந்து அவரது பெண் துணையை இறைவன் படைத்தான். கிறித்தவர்கள் இவரை ஆதாம் என்பர்.


2.    நூஹ் (அலை)
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஆரம்ப காலத்தில் அனுப்பப்பட்ட தூதராவார். திருக்குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களில் ஆதம், இத்ரீஸ் தவிர மற்ற எல்லா நபிமார்களுக்கும் இவர் முந்தியவராவார். இவர் 950 வருடங்கள் வாழ்ந்தார்.


3.    இப்ராஹீம் (அலை)
இறைத் தூதர்களில் அதிகமான அருள் பெற்றவர் இப்ராஹீம் தான். இவரது தகுதியைப் பெரிதும் அல்லாஹ் உயர்த்தியுள்ளான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமின்றி இஸ்ஹாக், யாகூப், தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் அனைவரும் இவரது வழித் தோன்றல்களே.

யூதர்களும், கிறித்தவர்களும், முஸ்லிம்களும் பெரிதும் மதிக்கின்ற மகானாகவும் இவர்கள் திகழ்கிறார்கள். இவரை 'ஆப்ரஹாம்' என்று யூத கிறித்தவர்கள் கூறுவார்கள்.

4.    இஸ்ஹாக் (அலை)
இப்ராஹீம் நபியின் இன்னொரு புதல்வர் இஸ்ஹாக். இவரும் இறைத்தூதர்களில் ஒருவர் என்பதைத் தவிர இவரைப் பற்றி அதிகமான விபரங்கள் ஏதும் திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. பல நபிமார்களுடன் இணைத்து இவரும் நல்லவராக இருந்தார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இவரது பிரச்சாரம், அதில் சந்தித்த பிரச்சினைகள் பற்றி ஏதும் கூறப்படவில்லை.


5.    
யஃகூப் (அலை)

இப்ராஹீம் நபியின் மகன் இஸ்ஹாக். இஸ்ஹாக்குடைய மகன் யாகூப். யாகூபின் மற்றொரு பெயர் தான் இஸ்ராயீல். இஸ்ரவேலர்கள் எனப்படுவோர் யாகூப் நபியின் வழித்தோன்றல்களாக இருப்பதால் அவர்கள் இஸ்ராயீலின் மக்கள் என்று கூறப்படுகின்றனர். கிறித்தவர்கள் இவரை இஸ்ரவேல், யாகோப், ஜேக்கப் என்பர்.

6.    தாவூத் (அலை)
இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஸுலைமான் நபியின் தந்தையுமாவார். தாவீது ராஜா என்று கிறித்தவர்கள் இவரைக் குறிப்பிடுவார்கள்.

7.    
ஸுலைமான் (அலை)
ஸுலைமான் அவர்கள் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரது தந்தை தாவூது (தாவீது) அவர்களும் இறைத்தூதராகவும், மன்னராகவும் திகழ்ந்தார். ஸுலைமான் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆட்சி மற்ற எவருக்கும் வழங்கப்படாத மகத்தான ஆட்சியாகும்.


யூத கிறித்தவர்கள் இவரை சாலமோன் என்பர்.

8.    அய்யூப் (அலை)
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். யூதகிறித்தவர்கள் இவரை யோபு என்பர்.

இவ்வுலகில் பல்வேறு நோய்களாலும்வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர்.

அவரது உடலில் புழுக்கள் உற்பத்தியாகின என்று கட்டுக் கதைகள் உள்ளன. அவற்றுக்குச் சான்று ஏதுமில்லை.

9.    யூஸுஃப் (அலை)
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். மற்ற இறைத்தூதர்களை விட பல தனிச்சிறப்புக்கள் இவருக்கு உள்ளன.

பாரம்பரியம், குலம் என்ற அடிப்படையில் மிகச் சிறந்தவர் ஒருவர் இருக்க வேண்டுமானால் அதற்கு முதல் தகுதி பெற்றவர் இவராகத்தான் இருக்க முடியும்.

இவரும் இறைத்தூதராக இருந்தார். இவரது தந்தை யாகூபு என்றழைக்கப்படும் இஸ்ராயீலும் இறைத்தூதராவார். அவருடைய தந்தை இஸ்ஹாக்கும் இறைத்தூதராவார். அவருடைய தந்தை இப்ராஹீமும் இறைத்தூதராவார். இந்தக் கருத்தில் நபிமொழியும் உள்ளது.
(புகாரி 3382, 3390, 4688)

திருக்குர்ஆனில் இவருடைய வரலாறு மட்டுமே சிறுபிராயம் தொடங்கி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. யூஸுஃப் என்ற பெயரில் அமைந்த அத்தியாயம் பெரும் பகுதி இவரது வரலாறால் நிரம்பியுள்ளது. இவருடைய வரலாற்றை அழகிய வரலாறு என்று அல்லாஹ்வும் சிலாகித்துக் கூறியுள்ளான்.


இவரைப் பற்றி அறிந்து கொள்ள சிரமப்படத் தேவையில்லை. யூஸுஃப் என்ற 12வது அத்தியாயத்தில் ஒரே இடத்தில் இவரது வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளதைக் காண்க.

10.    மூஸா (அலை)
மூஸா நபி திருக்குர்ஆனில் மிக அதிகமான இடங்களில் குறிப்பிடப்படும் இறைத்தூதர் ஆவார்கள். ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்கள். மூஸாவிடம் அல்லாஹ் நேரடியாகப் பேசினான். கிறித்தவர்கள் இவரை மோஸே என்பர்.

11.    ஹாரூன் (அலை)
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரும் மூஸா நபியும் சேர்ந்து இரட்டைத் தூதர்களாக ஃபிர்அவ்ன் கூட்டத்தாருக்கு அனுப்பப்பட்டனர்.

12.    ஸக்கரிய்யா (அலை)
இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஈஸா நபியின் தாயாரை எடுத்து வளர்த்தவர் என்பதற்கு குர்ஆனில் சான்றுகள் உள்ளதால் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் எனலாம்.

இவரை யூதர்கள் கொலை செய்தார்கள் என்று கூறப்படுவதுண்டு. யூதர்கள் இவரை விரட்டி வரும்போது ஒரு மரத்திடம் பாதுகாப்புத் தேடியதாகவும், மரம் பிளந்து அவரை உள்ளே மறைத்துக் கொண்டதாகவும், ஆடை மட்டும் வெளியே தெரிந்ததால் மரத்துடன் அவரை இரண்டாக அறுத்துக் கொலை செய்ததாகவும் ஒரு கட்டுக்கதை நிலவுகிறது.

யூதர்கள் பல நபிமார்களைக் கொன்றது உண்மை என்றாலும் அவர்களில் ஸக்கரியா நபி இருந்தார் என்பதற்கு எந்த ஹதீஸிலும் சான்று இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாமல் இருக்கும்போது இப்படிக் கூறுவது மிகத் தவறாகும்.


மேலும் அவர் சமுதாயத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தார். தள்ளாத வயதில் தான் குழந்தை பிறந்தது என்பதை வைத்துப் பார்க்கும்போது அவர் கொல்லப்பட்டிருக்க முடியாது எனக் கருதவே அதிக வாய்ப்பு உள்ளது.

13.    யஹ்யா (அலை)


இவர் ஸகரிய்யா நபியின் மகனும் இறைத்தூதருமாவார். இவர் ஸகரிய்யா நபியின் தள்ளாத வயதில் பிறந்தவர். யூத, கிறித்தவர்கள் இவரை யோவான் என்பர்


14.    ஈஸா (அலை)
கிறித்தவர்கள் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடும் இயேசுவை திருக்குர்ஆன் ஈஸா எனக் கூறுகிறது.

ஈஸா நபியவர்கள் சில அற்புதங்கள் நிகழ்த்தியதையும், தந்தையின்றிப் பிறந்ததையும் இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அவரும் மற்ற இறைத்தூதர்களைப் போல் ஒரு தூதராவார். இறைவனுக்கு மகன் இருக்க முடியாது என்பதால் இவர் இறைமகன் அல்லர் என்று குர்ஆன் அடித்துக் கூறுகிறது.

15.    இல்யாஸ் (அலை)

இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் இல்யாஸீன் என்று 37:130 வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார். 37:123, 6:85 வசனங்களில் இவரைப்பற்றி கூறப்பட்டுள்ளது. இவர் தமது சமுதாயத்தின் பல கடவுள் நம்பிக்கையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த விவரம் தவிர அதிகமான விவரம் இவரைப் பற்றிக் கூறப்படவில்லை.

16.    
இஸ்மாயீல் (அலை)


இப்ராஹீம் நபியின் மகன் இஸ்மாயீல். இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இஸ்மாயீலின் வழியில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். யூத, கிறித்தவர்கள் இவரை 'இஸ்மவேல்' என்பர்.

17.    அல்யஸவு (அலை)
அல்யஸஃ என்பார் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி திருக்குர்ஆனில் 6:86, 38:48 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. அதிகமான விவரங்கள் எதுவும் இவரைப் பற்றிக் கூறப்படவில்லை.

18.    யூனுஸ் (அலை)
இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரது சமுதாயத்தினர் கடுமையாக எதிர்த்தாலும் இறைவனின் தண்டனை வரப்போகும் அறிகுறிகள் தென்பட்டவுடனே திருந்திக் கொண்டனர். அறிகுறிகள் தென்பட்டவுடன் திருந்திக் கொண்ட வேறு எந்தச் சமுதாயமும் கிடையாது.


இவருக்கே தெரியாமல் இவரது சமுதாயத்தை இறைவன் காப்பாற்றியதால் இவர் இறைவனிடம் கோபித்துக் கொண்டு சென்றார். எனவே இவரை அல்லாஹ் தண்டித்தான்.

19.    
லூத் (அலை)
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் இப்ராஹீம் நபியின் சமகாலத்தவராக இருந்தார். ஆயினும் வேறுபகுதியில் இவர் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்.

இவரது சமுதாயம் பலகடவுள் நம்பிக்கையில் ஊறித் திளைத்தது மட்டுமின்றி ஆண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார்.

20.    இத்ரீஸ் (அலை)         (19:50)


இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி திருக்குர்ஆன் 19:56, 21:85 ஆகிய இரு வசனங்களில் மட்டுமே குறிப்பிடுகிறது. அதிகமான விபரம் எதுவும் இவரைப் பற்றி குர்ஆனில் கூறப்படவில்லை.

21.    ஹுத் (அலை)        (26:125)
'ஹூத்' எனும் இறைத்தூதர் அனுப்பப்பட்ட சமுதாயமே 'ஆது' சமுதாயம் எனப்படும். இவர்கள் மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்தனர். ஹூத் நபியை ஏற்க மறுத்து அக்கிரமம் புரிந்ததால் வறண்ட காற்றை அனுப்பி இறைவன் அவர்களை அழித்தான்.

22.    ஸா­லிஹ் (அலை)’    (26:143)


இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். ஸாலிஹ் நபியின் சமுதாயத்தின் பெயர் ஸமூத். இவர்கள் மலைகளைக் குடைந்து குகைகள் அமைத்து வாழ்ந்தவர்கள்.

23.    ஷுஐப்(அலை)        (26:178)


இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததுடன் தனது சமுதாயத்தில் நிலவிய பொருளாதாரச் சுரண்டலையும், அளவு நிறுவைகளில் மோசடி செய்ததையும் கண்டித்துப் பிரச்சாரம் செய்தார்.

மத்யன்

இந்நகரம் ஷுஐப் நபி அவர்கள் வாழ்ந்த நகராகும். இந்நகர மக்கள் அளவு நிறுவைகளில் மோசடி செய்பவர்களாகவும், பல தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். இவர்கள் இறுதிவரை திருந்தாததால் அழிக்கப்பட்டனர்.

24.    துல்கிஃப்ல் (அலை)        (38:48)
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி 21:85, 38:48 ஆகிய இரு வசனங்களில் மட்டுமே திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. அதிகமான விபரம் எதையும் இவரைப் பற்றி கூறவில்லை.

25.    
முஹம்மது (ஸல்)        (33:40)

இறைத்தூதர்களில் இறுதியானவர் நபி முஹம்மது (ஸல்) ஆவார்கள். இறுதி நாள் வரை தோன்றுகின்ற மனித சமுதாயம் முழுமைக்கும் இவர்கள்தான் கடைசி நபியாவார்கள். இவர்களுக்குப் பின்னர் எந்த இறைத்தூதரும் வரமாட்டார்கள். தூதுத்துவம் இவர்களோடு நிறைவு பெற்றுவிட்டது. 


முதல் நபி

ஆதம் (அலை) அவர்கள் முதல் மனிதரும் நபியும் ஆவார்கள். ஆனால்உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக அனுப்பபட்ட முதல் நபி நூஹ்(அலை) அவர்கள் ஆவார்கள்.

ஷஃபாஅத் பற்றிய ஹதீஸில் ….. மறுமையில் மக்கள் நூஹ் (அலை) அவர்கள் வந்து உலக மக்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களில் நீங்கள்தான் முதலாமவர் என்று   கூறுவார்கள்.
அறிவிப்பவர் :  அபூஹுரைரா(ரலி)நூல் : புகாரீ (3340)



நபி என வாதிடும் பொய்யர்கள்



நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என்னுடைய சமுதாயத்தில் 30 பொய்யர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அனைவரும் தன்னை நபி என்று வாதிப்பார்கள். நான்தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.
அறிவிப்பவர் :  ஸவ்பான் (ர­லி)நூல் :  திர்மிதீ (2145)

நபிரசூல் ஒன்றே!

குர்ஆனில் கூறப்பட்ட நபி என்று சொல்லப்பட்டவரும் ரசூல் என்று சொல்லப்பட்டவரும் வேவ்வாறானவர்கள் என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.

அதுபற்றிய விவரத்தைக் காண்போம்.

நபி என்ற சொல் அறிவிப்பவர் என்று பொருள்படும். இஸ்லாமிய மார்க்கத்தில் நபி என்பவர் இறைவனிடமிருந்து பெற்ற செய்தியை மக்களுக்கு அறிவிப்பவர் என்று பொருள்,

ரசூல் என்ற சொல்லும் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தூதர் என்பது இதன் பொருள். இஸ்லாமிய மார்க்கத்தில் தூதர் என்பவர் இறைவனிமிருந்து செய்தியை மக்களுக்கு கொண்டு வருபவர் என்று பொருள்.

இவ்விரு சொற்களுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு என்று சிலர் கருதுகின்றனர்.

ரசூல் என்பவர் வேதம் வழங்கப்பட்டவர். நபி என்பவர் அவ்வேதத்தின் அடிப்படையில் பிரச்சாரம் செய்பவர் என்றும் சிலர் கூறுகின்றனர்.  இது தவறானதாகும். நபிக்கும் வேதம் வழங்கப்பட்டதாக பின்வரும் வசனம் கூறுகிறது.

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும்நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் கொடுக்கப்பட்டோர் தாம்அதற்கு முரண்பட்டனர். தமக்கிடையே உள்ள பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான்.
(அல்குர்ஆன் 2:213)


மேலும்  2:136, 3:79, 3:81, 19:30, 27:112..117, 29:27, 45:16, 57:26 ஆகிய வசனங்கள் நபிக்கும்
வேதம் வழங்கப்பட்டதாக கூறுகிறது.

வேறு சிலர் நபி என்பவர் தனி மார்க்கம் கொண்டு வந்தவர் ரசூல் அந்த வழியில் நடைபோடுபவர் என்பர்.

இதுவும் தவறாகும். ரசூலுக்கும் தனிமார்க்கம் இருந்ததை பின் வரும் வசனம்
இணை கற்பிப்போர் வெறுத்தாலும்எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நேர் வழியுடனும்உண்மை மார்க்கத்துடனும் அவனே தனது தூதரை அனுப்பினான்.
(அல்குர்ஆன் 9 : 33)

மேலும் இதே கருத்தை  10:47, 17:15, 48:28, 61:9 என்ற வசனங்களி­ருந்து அறியலாம்.

ரசூல்மார்கள் 313, நபிமார்கள் ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் என்றும் கூறுவர். இதுவும் ஆதாரமான செய்தி இல்லை. நபிரசூல் இரண்டும் இறைத்தூதர்களைக் குறிக்கும் இரு வார்த்தைகள். இரண்டும் ஒன்றே. நபிக்கும் ரசூலுக்கும் இடையே எந்த வேறுபாடும் கிடையாது

இறைத்தூதர்களின் பண்புகள்


இறைத்தூதர்கள் ஆண்களே!

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும்ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்.
(அல்குர்ஆன் 16:43)

ஒவ்வொரு தூதருக்கும் தனி வழிமுறைகள்

உங்களில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும்வழியையும் ஏற்படுத்தியுள்ளோம்.
(அல்குர்ஆன் 5:48)

நபிமார்களும் இறைவனின் அடிமைகளே!

வ­மையும்சிந்தனையும் உடைய இப்ராஹீம்இஸ்ஹாக்யஃகூப் ஆகிய நமது அடியார்களை நினைவூட்டுவீராக!
(அல்குர்ஆன் 38:45)

நபிமார்களும் மனிதர்களே!

நான் உங்களைப் போன்ற மனிதன்தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 18:110)

நபிமர்களுக்கு அதிகாரத்தில் பங்கில்லை!

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோதீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்க வில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மை களை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும்நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 7:188)

நபிமார்கள் தாமாக அற்புதம் செய்ய இயலாது!

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது.
(அல்குர்ஆன் 13:38)

நபிமார்கள் மனைவியருடன் குடும்பம் நடத்தினர்

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவி யரையும்மக்களையும் ஏற்படுத்தினோம்.
(அல்குர்ஆன் 13:38)

ஈஸா(அலை) இறைவனின் அடிமையே!

உடனே அவர் (அக்குழந்தை), ”நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான். ” என்று கூறினார்.
(அல்குர்ஆன் 19 30)


இது ஈஸா(அலை) தொட்டில் குழந்தையாக இருந்தபோது பேசிய வார்த்தைகளாகும்.

ஈஸா(அலை)  கொல்லப்படவில்லை!

அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்” என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்.
(அல்குர்ஆன் 4:157,158)

குர்ஆனுடன் நபிவழியும் அவசியம்
நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களி­ருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும்ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான  வழி கேட்டில் இருந்தனர்.
(அல்குர்ஆன் 3:164)

உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.
(அல்குர்ஆன் 53:2,3)

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும்அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
(அல்குர்ஆன் 16:44)


இவ்வசனத்தில் திருக்குர்ஆனை விளங்கிட இரு வழிகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

முதலாவது வழிவாசிப்பவர்கள் அவர்களே சிந்தித்து விளங்கிக் கொள்ளுதல்.
இரண்டாவது வழியார் வேதத்தைக் கொண்டு வந்தாரோ அந்தத் தூதர் தந்துள்ள விளக்கங்களின் அடிப்படையில் விளங்குதல்.

திருக்குர்ஆனை நாம் ஆய்வு செய்தால் கணிசமான வசனங்கள் எந்த விளக்கமும் தேவைப்படாமல் மேலோட்டமாக வாசிக்கும் போதோஅல்லது கவனமாக சிந்திக்கும் போதோ விளங்கி விடும். ஆனால் சில வசனங்கள் எவ்வளவு தான் சிந்தித் தாலும் நபிகள் நாயகத்தின் விளக்கம் இல்லாமல் சரியாக விளங்காது.

முஹம்மதே! உமக்கு வேதத்தை அளித்ததுநீர் விளக்குவதற்காகவும்அவர்கள் சிந்திப்பதற்காகவும் தான் என்று இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகிறது.
திருக்குர்ஆனுடன் நபிகள் நாயகத்தின் விளக்கம் பின்னிப் பிணைந்ததுதவிர்க்க இயலாதது என்பதற்கு வலுவான சான்றாக இவ்வசனம் திகழ்கிறது.

(விரிவான விளக்கத்திற்கு வழிகெட்ட இயக்கங்கள் என்று தலைப்பில் இடம் பெற்ற கருத்தை பார்வையிடுக!)

நபிமார்களுக்கு மத்தியில் பாகுபாடு கிடையாது!

நபிமார்களுக்கு எந்த எந்த சிறப்புகளைக் கூறியுள்ளானோ அதைக் கொண்டுதான் அவர்களைச் சிறப்பிக்கவேண்டும். நாமாக நபிமார்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கக்கூடாது.

இத்தூதர் (முஹம்மத்) தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப் பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்).அல்லாஹ்வையும்வானவர் களையும்அவனது வேதங்களையும்அவனது தூதர் களையும் அனைவரும் நம்பினார்கள். ”அவனது தூதர்களில் எவருக்கிடை யேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம்செவியுற்றோம்கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே (எங்கள்) திரும்புதல் உண்டு எனக் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 2:285) 

நபிமார்கள் என்பதும் ரசூல்மார்கள் என்பதும் இறைத்தூதர்கள் அனைவரையும் குறிக்கும் சொற்களாகும்.
இது குறித்து முழு விபரம் அறிய 398வது குறிப்பைப் பார்க்கவும்
நபி – ரசூல் வேறுபாடு
ரசூலுக்கும் வேதம் – 2:1292:1512:2523:1643:1844:1365:155:675:836:1307:359:9735:2539:7157:2562:2
நபிக்கும் வேதம் – 2:1362:2133:793:813:845:8119:3037:112-11729:2745:1657:26
நபியும், ரசூலும் ஒன்றே – 7:1577:1589:6119:5119:5443:6
ரசூலுக்குத் தனி மார்க்கம் – 9:3310:4717:1548:2861:9
நபிக்குத் தனி மார்க்கம் – 19:4966:8
நபி, ரசூல் வேறு என்று கருதும் வகையில் ஒரே ஒரு வசனம் – 22:52
ஒரே சமுதாயத்துக்குப் பல தூதர்கள்
மூஸா, ஹாரூன் இருவரும் ஒரு சமுதாயத்துக்கு சமகாலத்தில் அனுப்பப்பட்டனர் – 10:7519:5320:3021:4823:4525:3526:1328:34
ஏக காலத்தில் மூன்று தூதர்கள் ஒரு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டனர் – 36:13
இப்ராஹீம் நபியும், லூத் நபியும் ஏககாலத்தில் இறைத்தூதர்களாக வெவ்வேறு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டனர் – 11:7011:7421:7129:2629:32
ஒரே காலத்தில் ஒரே ஊரில் ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா ஆகியோர் இறைத்தூதர்களாக இருந்துள்ளனர் – 19:7-34
ஒவ்வொரு மொழிக்கு ஒரு நபி – 14:4
ஒரு சமுதாயத்துக்கு ஒரு நபி
ஒரு சமுதாயத்துக்கு ஒரு நபி – 10:4716:3623:4428:59
நபிமார்களிடையே வேற்றுமை காட்டுதல்
நபிமார்களிடையே வித்தியாசம் உண்டு – 2:25317:55
நபிமார்களிடையே வேற்றுமை கூடாது – 2:1362:2853:84
பெண்களில் நபி இல்லை
ஆண்கள் தாம் நபிமார்களாக அனுப்பப்பட்டனர் – 12:10916:43,4421:7,
இது பற்றி மேலும் அறிய 239வது குறிப்பைப் பார்க்கவும்
நபிமார்கள் வருகையால் மாறும் சட்டங்கள்
நபிமார்கள் வருகையால் சில சட்டங்கள் மாறும் – 3:503:1834:1605:156:1467:15719:2634:13
நபித்துவம் இறைவனின் நியமனம்
நபியாக நியமிப்பது தகுதியால் அல்ல. இறைவனின் நியமனமே – 3:816:12419:1219:2993:7
நபிமார்களும் மனிதர்களே
வானவர் தன்மை நபிமார்களுக்கு இல்லை – 6:50
நபிமார்களும் மனிதர்களே – 3:7910:211:2714:1014:11,1216:4317:9317:9418:11021:321:723:2423:3323:3423:4726:15426:18636:1541:654:2464:6
நபிமார்கள் உணவு உட்கொண்டனர் – 3:935:7518:7721:823:5125:725:2026:7933:53
நபிமார்கள் மனைவியருடன் குடும்பம் நடத்தினர் – 2:354:17:197:837:18911:4011:8113:3815:6519:5520:1020:11720:13221:7621:8421:9026:16926:17027:727:5728:2728:2929:3229:3333:633:2833:3733:5033:5233:5333:5937:7637:13438:4339:651:2666:166:366:5
நபிமார்கள் பிள்ளைகள் பெற்றனர் – 2:1322:1333:393:615:2711:4211:4511:7111:7212:512:6712:8112:8713:3814:3514:3915:5319:733:5937:10137:10237:11251:28
நபிமார்கள் மரணித்தனர் – 2:1333:1446:16219:1521:821:3426:8134:1439:3046:5
நபிமார்கள் கவலைப்பட்டனர் – 3:1765:416:3310:6511:7012:1312:8412:86
நபிமார்கள் கொல்லப்பட்டனர் –2:612:872:913:213:1123:1813:1834:1555:70
நபிமார்கள் நோய்நொடிக்கு ஆளானார்கள் – 2:2146:3412:11014:1226:8038:41
அதிகாரத்தில் நபிமார்களுக்குப் பங்கில்லை
நபிமார்களும் மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் – 5:1095:116,1177:639:6977:11
நபிமார்கள் தம்மை வணங்கியவர்களை மறுமையில் கைவிடுவார்கள் – 4:415:116,117
தவறு செய்தால் நபிமார்களும் தப்ப முடியாது – 2:1206:1510:1510:10611:6339:13
தமக்கு நன்மையோ, தீமையோ செய்ய நபிமார்களுக்கு இயலாது – 6:177:18810:4910:10736:2339:3872:21
சுயமாக அற்புதம் செய்ய நபிமார்களுக்கு இயலாது – 3:495:1106:376:576:10913:3814:1140:78
நபிமார்களிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இல்லை – 6:506:5811:31
நபிமார்களையும் அல்லாஹ்தான் மன்னிக்க முடியும் – 4:1067:237:15111:4723:11826:8228:1638:2438:3540:5547:1948:266:171:28110:3
மகனையும், மனைவியையும் நூஹ் நபியால் காப்பாற்ற முடியவில்லை – 11:4211:45,4666:10
தமது சந்ததிகளுக்கும், தந்தைக்கும் இப்ராஹீம் நபியால் உதவ முடியவில்லை – 2:1249:11414:35
ஈஸா நபியை இறைவன் அழிக்க நினைத்தால் யாராலும் அவரைக் காப்பாற்ற இயலாது – 5:17
மகன் காணாமல் போவதை யாகூப் நபியால் தடுக்க முடியவில்லை – 12:84, 85
சிறைக்குச் செல்லாமல் யூஸுஃப் நபியால் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை – 12:35
அய்யூப் நபியால் தம்மைக் காப்பாற்ற முடியவில்லை – 21:83,8438:41
யூனுஸ் நபி நினைத்தது நடக்கவில்லை – 21:8737:14468:49
லூத் நபியால் தம் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை – 7:8366:1015:59,60
நபிமார்கள் இறைக்கட்டளைக்கு மாறுசெய்ய முடியாது – 6:1510:1511:6339:13
முதுமை வரை இப்ராஹீம் நபியால் தமக்கு ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை – 14:3915:54
முதுமை வரை ஸக்கரியா நபியால் தமக்கு ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை – 3:38-4019:2-921:89,90
நபிமார்கள் இறைவனின் அடிமைகளே
நபிமார்களும் இறைவனின் அடிமைகளே – 2:293:798:4111:3117:1
மறுமையில் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகளாகவே வருவார்கள் – 19:93
பிரார்த்திக்கப்படும் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகளே – 7:19418:102
ஈஸா நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 4:1725:1719:3043:59
நூஹ் நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 17:337:8154:966:10
ஸக்கரியா நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 19:2
தாவூது நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 38:17
ஸுலைமான் நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 38:30
அய்யூப் நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 38:4138:44
லூத் நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 66:10
இப்ராஹீம் நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 37:11138:45
இஸ்ஹாக் நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 38:45
யாகூப் நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 38:45
மூஸா நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 37:122
ஹாரூன் நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 37:122
இல்யாஸ் நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 37:132
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் அடிமை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையே – 2:238:4117:118:125:153:1057:972:1996:10
இறைவனின் ஆற்றலில் எந்த ஒன்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இல்லை – 6:507:188
அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இல்லை – 3:1276:507:18810:4910:107
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமக்கே நன்மை செய்துகொள்ள முடியாது – 6:177:188
ஷைத்தானிடமிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் தான் பாதுகாப்புத் தேட வேண்டும் – 23:97
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அல்லாஹ் தான் மன்னிக்க வேண்டும் – 4:1069:4323:11848:2
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தண்டிக்க நினைத்தால் யாரும் காப்பாற்ற முடியாது – 6:1767:28
நேர்வழியில் சேர்ப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அதிகாரத்தில் இல்லை – 2:2643:86:356:5210:9917:74-, 28:56
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனின் அதிகாரமில்லை – 3:1284:80
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளமும் அல்லாஹ்வின் கையில் – 17:74
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மனிதரே – 3:14411:1218:11041:6
எதிரிகளை அழிக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இல்லை – 6:57
நபிமார்களின் அற்புதங்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அற்புதம் செய்யும் அதிகாரம் இல்லை – 6:3510:2013:713:2717:90-93
அற்புதங்கள் அல்லாஹ் நாடினால் மட்டுமே – 2:2036:376:10913:3814:1129:5040:78
அல்லாஹ்வின் அனுமதி பெற்றே ஈஸா நபி அற்புதம் நிகழ்த்தினார்கள் – 3:495:110
அல்லாஹ்வின் கட்டளைக்குப் பிறகே மூஸா நபி கைத்தடியால் கடலில் அடித்தார்கள் – 2:6020:7726:6344:24
அல்லாஹ்வின் கட்டளைக்குப் பிறகே மூஸா நபியின் கைத்தடி பாம்பாக ஆனது – 7:117
அல்லாஹ்வின் கட்டளைக்குப் பிறகே மூஸா நபி பாறையில் கைத்தடியால் அடித்து தண்ணீர் வரச் செய்தனர் – 2:607:160
கெட்டவர்க்கும் அற்புதம். 7:14820:85-88
நபிமார்களைப் பின்பற்றுவதன் அவசியம்
அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியை மட்டும் பின்பற்றுதல் – 2:382:1703:1036:1066:1557:310:1510:10920:12325:3033:239:339:5546:949:16
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுவதன் அவசியம் – 3:323:1233:1324:594:644:694:805:928:208:469:7124:4724:5124:5224:5424:5633:7147:3348:1749:1458:1364:12
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல் – 2:1433:313:534:654:1157:1577:15814:4420:13425:2728:4736:2043:61
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட எதுவும் மார்க்கமாகாது – 5:36:15016:11639:342:2149:1657:27
முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது – 2:1705:1047:2810:7821:5331:2136:7443:2243:2353:23
தலைவர்களையும், அறிஞர்களையும் கண்மூடிப் பின்பற்றக் கூடாது – 3:649:3125:28,2933:6633:67
மனோ இச்சைகளைப் பின்பற்றக் கூடாது – 2:1202:1454:1355:485:495:776:566:15013:3718:2819:5920:1623:7125:4328:5030:2938:2642:1545:1845:2347:1447:1653:2354:3
பெரும்பான்மையைப் பின்பற்றக் கூடாது – 6:1167:18712:2112:4012:6816:3825:5030:630:3034:2834:3640:5745:26
சந்தேகமானதைப் பின்பற்றக் கூடாது – 6:1166:14810:3610:6630:2931:649:1253:2353:28
இஸ்லாம் ஒரேவழி தான், பல வழிகள் அல்ல – 4:595:36:1536:1596:1619:3312:10830:3242:1345:18
அல்லாஹ்வின் தூதரைத் தவிர மற்றவர்களைப் பின்பற்றினால் பின்பற்றியவர்களை அவர்கள் மறுமையில் கைவிடுவார்கள் 2:166,16714:2133:67,6840:47
ஹராமாக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை – 5:876:140-1446:1507:329:299:3710:5916:11666:1
அல்லாஹ்வின் அனுமதியுடன் ஹராமாக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உண்டு – 7:1579:29
அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல் பெரும் குற்றம் – 3:944:484:506:216:936:1386:1406:1447:377:15210:1710:6911:1816:5616:10516:11618:1520:6129:1329:6861:7
இறைச் செய்தி வருவதாக இட்டுக்கட்டிக் கூறுவது கடும் குற்றம் – 6:93
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி – 4:794:1707:1589:3310:5710:10814:5221:10722:4925:133:4034:2862:3
திருக்குர்ஆனுடன் நபிவழியும் அவசியம்
ஓதிக் காட்டி விளக்கும் நபி – 2:1292:1513:16462:2
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய கிப்லாவுக்கு திருக்குர்ஆன் அங்கீகாரம் – 2:142-145
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய நோன்பின் சட்டத்துக்கு திருக்குர்ஆன் அங்கீகாரம் – 2:187
புனித மாதங்களைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் – 2:1942:2175:25:979:59:36
தமத்துவ் ஹஜ்ஜைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் – 2:196
ஹஜ்ஜின் மாதங்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் – 2:197
இரண்டு நாட்களில் புறப்படுதல் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் – 2:203
வேதமும் ஞானமும் – 2:1292:1512:2313:813:1644:544:11333:3462:2
அச்சமில்லாதபோது தொழும் முறை – 2:2394:103
வேதங்களும், ஏடுகளும் 3:18416:4435:25
பிள்ளை இல்லாதவனின் சொத்து பற்றி திருக்குர்ஆன் கூறும் மாறுபட்ட இரு சட்டங்கள் – 4:124:176
திருக்குர்ஆனின் விளக்கம், நபிமார்களுக்கே காட்டித் தரப்படும் – 4:105
கட்டுப்படுவதில் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் பாகுபாடு காட்டுவோர் முஸ்லிம்கள் அல்லர் – 4:150,151
வேதத்தைப் பெற்றுத் தருவது மட்டும் இறைத்தூதரின் வேலையல்ல – 6:917:95
நபிமார்களுக்கு வேதமும், அதிகாரமும் – 3:796:8919:1221:7428:1445:16
நபிமார்களுக்கு தடை செய்து அனுமதிக்கும் அதிகாரம் – 7:1579:29
தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர் – 9:118
விளக்குவதற்காகவே தூதர்களின் தாய் மொழியில் வேதம் – 14:4
நபிகள் நாயகம் (ஸல்) தான் திருக்குர்ஆனை விளக்க வேண்டும் – 16:4416:64
இறைவன் காட்டிய காட்சி எது என்பதை அறிய நபியின் விளக்கம் – 17:60
வேதமும், தூதர்களிடம் கொடுத்து அனுப்பப்பட்டதும் – 40:70
வேதம் மட்டுமின்றி வேறு வகையான இறைச்செய்திகளும் உண்டு – 42:5166:3
இறைத்தூதரின் தடையை இறைவன் அங்கீகரித்தல் – 58:8
மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து புறப்படுமாறு கட்டளை – 2:199
வேதமில்லாது பல வருடங்கள் பிரச்சாரம் செய்த மூஸா நபி – 7:142-145
அல்லாஹ் வாக்களித்தது எது? – 8:7

பொருள் திரட்டுவது குற்றமா? – 9:34