Sep 10, 2016

நம்பிக்கை கொண்டோர்

திருக்குர்ஆன் அதிகமான இடங்களில் 'நம்பிக்கை கொள்வது' 'நம்பிக்கை கொண்டோர்' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது.

பொதுவாக நம்பிக்கை கொள்வது என்பதை நாம் என்ன பொருளில் புரிந்து கொள்வோமோ அந்தப் பொருளில் இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை.

மாறாக, குறிப்பிட்ட சில விஷயங்களை உளமாற ஏற்று நம்பிக்கை கொள்வதையே இஸ்லாம் குறிப்பிடுகின்றது.

அல்லாஹ்வையும், வானவர்களையும், இறைத்தூதர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களையும், மறுமை நாளையும், அங்கு நடக்கும் விசாரணையையும், மறுமை நாளுக்கு முன் நடக்கும் அமளிகளையும், நல்லோர்க்குக் கிடைக்கும் சொர்க்கம் எனும் பரிசு, தீயோர்க்குக் கிடைக்கும் நரகம் எனும் தண்டனையையும், மண்ணறை வேதனை, விதி ஆகியவற்றையும் நம்புவதையே 'நம்பிக்கை கொள்வது' என இஸ்லாம் கூறுகின்றது.