Sep 8, 2016

மலக்குமார்கள் (வானவர்கள்)

மலக்குமார்கள் (வானவர்கள்)

இறைவனது படைப்புகளில் வானவர்கள் என்றொரு இனம் இருப்பதாக திருக்குர்ஆன் கூறுகிறது. இவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். இவர்களில் ஆண் பெண் என்ற பால் வேற்றுமை இல்லை. எனவே இனப்பெருக்கம் செய்ய மாட்டார்கள். இவர்களை இறைத்தூதர்கள் தவிர மற்ற மனிதர்கள் காண இயலாது.

ஏகஇறைவன் தனித்தே தனது காரியங்களை ஆற்ற வல்லவன் என்றாலும் வானவர்கள் என்ற இனத்தைப் படைத்து அவர்கள் மூலம் பல்வேறு வேலைகளை வாங்குகிறான்.

மலக்குமார்களின் தோற்றம்

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(அலை) உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட மண்ணால் படைக்கப்பட்டார்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ர­லி),  நூல் : முஸ்லிம் (5314)

வானங்களையும்பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டுமும்மூன்று நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன் 35:1)

நபி (ஸல்) அவர்கள்ஜிப்ரயீல்(அலை) அவர்களை 600 இறக்கை உடையவர்களாகக் கண்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ர­லி)நூல் : புகாரீ (4857)

எண்ணிக்கை

மலக்குமார்களின் எண்ணிக்கைளை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வரையறுத்துக் கூற முடியாது.

நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின் போது ஏழாவது வானத்திற்கு வந்தார்கள். அங்கு நடந்ததைப் பற்றிக் கூறும்போதுஎனக்கு பைதுல் மஃமூர் காட்டப்பட்டது. நான் அதைப் பற்றி ஜிப்ரயீ­டம் கேட்டேன். அவர் இது பைதுல் மஃமூர் ஆகும். இதில் நாள்தோறும் எழுபதினாயிரம் மலக்குமார்கள் தொழுகின்றனர். அவர்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் அவர்களில் யாரும் அதில் நுழைவதில்லை என்று கூறினார்கள்.
நூல் : புகாரீ (3207)

பெயர் கூறப்பட்ட மலக்குமார்கள்

1. 
ஜிப்ரீல்(அலை): (அல்குர்ஆன் 2:98)
ரூஹ்ரூஹுல் குதுஸ்
வானவர்களின் தலைவராக திகழ்பவர் ஜிப்ரயீல் எனும் வானவர். இவர் திருக்குர்ஆனில் பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகிறார். ரூஹ்ரூஹுல் குதுஸ் என்றும் குறிப்பிடப்படுகிறார். ரூஹ் என்றால் உயிர் என்றும்ரூஹுல் குதுஸ் என்றால் பரிசுத்த உயிர் என்றும் பொருள்.

2. 
மீகாயீல்(அலை): (அல்குர்ஆன் 2:98)

மீகாயீல் என்பது ஒரு வானவரின் பெயர். இவர் ஜிப்ரீலுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவத்துடன் குறிப்பிடப்படுகிறார். ஆயினும் இவரது பணிகள் பற்றி அதிகமான விபரங்கள் எதுவும் கூறப்படவில்லை. 
(பார்க்க திருக்குர்ஆன் 2:98)

3. இஸ்ராஃபீல்(அலை): (முஸ்­லிம் 1289)

4. 
மாலி­க்(அலை) இவர் நரகத்தின் காவலாளி ஆவார். (அல்குர்ஆன் 43:77)

மலக்குமார்களின் பணிகள்

கருவறையில் விதியை எழுதுதல்
தாயின் வயிற்றிலுள்ள கருநான்கு மாதங்களை அடைந்ததும் அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்பி அவனுடைய வாழ்வாதாரங்கள்ஆயுள்செயல்கள் ஆகியவை எவ்வளவு என்றும் அதன் முடிவு எவ்வாறு அமையும் என்பதையும் எழுதுமாறு கட்டளையிடுவான்.
நூல் : புகாரீ (7454)

பாதுகாவல்மனிதனுக்கு முன்னரும்பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர்.
(அல்குர்ஆன் 13:11)

நன்மைதீமைகளைப் பதிவு செய்தல்
வலப்புறமும்இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத் தெழுதும் போதுஅவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.
(அல்குர்ஆன் 50:17,18)

உயிரைக் கைப்பற்றுதல்
உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 32:11)

கப்ரில் விசாரணை செய்தல்
கப்ரில் மய்யித் வைக்கப்பட்டதும் இரு மலக்குகள் அதனிடம் வந்து அல்லாஹ்வைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும்நபி யார்என்பதாகவும் கேள்விகளைக் கேட்பார்கள்.
நூல் : திர்மிதீ (991)

வஹீயை கொண்டு வருதல்
என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்!” என்று எச்சரிக்குமாறு தனது உயிரோட்டமான கட்டளையுடன் வானவர்களை தான் நாடிய அடியார்களிடம் அவன் அனுப்புகிறான்.
(அல்குர்ஆன் 16:2)

அர்ஷைச் சுமப்பவர்கள்
வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள்.
(அல்குர்ஆன் 69:17)

நரகக் காவலாளிகள்
அதன் மேல் பத்தொன்பது (வானவர்கள்) உள்ளனர். நரகத்தின் காவலர்களை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. அவர்களின் எண்ணிக்கையை (நம்மை) மறுப்போ ருக்குச் சோதனையாகவே தவிர நாம் ஆக்க வில்லை.
(அல்குர்ஆன் 74:30,31)

வானவர்களின் பல்வேறு பணிகள்
இறைவனை வணங்குவார்கள் - 2:30
உயிரைக் கைப்பற்றும் வானவர்கள் 4:97
மனிதர்களைக் கண்காணித்து அவர்களது செயல்களைப் பதிவு செய்யும் வானவர்கள் 10:21
மனிதர்களைப் பாதுகாக்கும் வானவர்கள் - 6:61
வானவர்கள் மறுமையில் நல்லோர்க்குப் பரிந்துரை செய்வார்கள். - 21:28
வானவர்கள் மனிதர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவார்கள்; பிரார்த்தனை செய்வார்கள் - 11:73
இறைத்தூதர்களுக்கும், இறைவன் தேர்ந்தெடுத்த அடியார்களுக்கும் வானவர்கள் நற்செய்தி கூறுவார்கள் - 3:39
வானவர்கள் போர்க்களங்களில் நல்லோர்க்கு உதவுவார்கள் - 3:124
வானவர்கள் இறைவனின் தண்டனையைக் கொண்டு வருவார்கள் - 6:158
இறைச்செய்தியை, இறைத்தூதர்களுக்கு வானவர்கள் கொண்டு வருவார்கள் - 2:97
இறைவனின் அர்ஷைச் சுமக்கும் வானவர்கள் 40:7
வானவர்கள் நரகின் காவலர்கள் - 39:71,73
வானவர்கள் சொர்க்கவாசிகளுக்குப் பணிவிடை செய்வார்கள் - 13:23
பிரச்சினைகளைத் தீர்க்கவும் அனுப்பப்படுவார்கள் - 2:248
இறைத்தூதருக்கு பக்கபலமாக இருப்பார்கள் - 2:253
சொர்க்கவாசிகளுக்கு வாழ்த்து கூறுவார்கள் - 7:43



வானவர்களின் பண்புகள்
வானவர்களில் ஆண், பெண் என்ற பால்வேற்றுமை இல்லை - 17:40
இறைவனுக்கு அஞ்சி நடுங்குவார்கள் - 13:13
வானவர்கள் சாப்பிட மாட்டார்கள் - 11:70
50 ஆயிரம் ஆண்டுக்கு நிகரான ஒருநாள் வேகத்தில் பயணம் செய்வார்கள் - 70:4
இறைவனின் கட்டளையில்லாமல் பூமிக்கு வரமாட்டார்கள் - 19:64
வானவர்கள் இறைக்கட்டளையை எதிர்க் கேள்வியின்றி ஏற்றுச் செயல்படுவார்கள் - 7:206
வானவர்களுக்கு இறக்கைகளும் இருக்கும் - 35:1
வானவர்கள் மனித வடிவம் எடுப்பார்கள் - 19:17
வானவர்கள் சோர்வடைய மாட்டார்கள் - 21:20
வானவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை - 2:,30
வானவர்கள் தூதர்கள் என்றும் கூறப்பட்டுள்ளனர் - 6:61

பெயர் குறிப்பிடப்பட்ட வானவர்கள்
திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கொண்டு வந்த வானவர் ஜிப்ரீல் - 2:97
ரூஹுல் குதூஸ் (தூய உயிர்) என்பது ஜிப்ரீலின் பெயர் - 2:87
ரூஹ் (உயிர்) என்பது ஜிப்ரீலின் பெயர் - 19:17
ரூஹுல் அமீன் (நம்பிக்கைக்குரிய உயிர்) என்பது ஜிப்ரீலின் பெயர் - 26:193
மீகாயில் எனும் வானவர் - 2:98
மாலிக் எனும் வானவர் - 43:77
ஆண்டுதோறும் ஜிப்ரீலின் வருகை - 97:4