மார்க்க ஆய்வுகளும்மாற்றப்பட்ட
நிலைப்பாடுகளும்
கே.எம்.அப்துந் நாசிர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்
திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும்மட்டுமே முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாகக் கொண்டு செயல்பட
வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு நாம்
செயல்பட்டு வருகிறோம்.
இதில்
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் வளைந்து கொடுத்ததில்லை. இந்த
அடிப்படைக்கொள்கையில் நம்மிடம் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. ஆயினும் ஒரு ஹதீஸ்ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் நம்மிடம் தவறுகள் ஏற்பட்டுஅதை
அவ்வப்போது பகிரங்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
நம்மை
விடப் பல மடங்கு அறிவும், ஆற்றலும் மிக்க எத்தனையோ
அறிஞர்கள், ஒரு ஹதீஸ்ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறாக முடிவு செய்துபின்னர் மாற்றிக்
கொண்டுள்ளனர். இந்த நிலை ஏற்படாத எந்த அறிஞரும் உலகத்தில் ஒருகாலத்திலும்
இருந்ததில்லை.
அறிவிப்பாளர்
குறித்த விமர்சனங்கள் அடங்கிய அனைத்து நூல்களும் கிடைக்கப்பெறாமை
பொதுவாக
மனிதரிடம் காணப்படும் மறதி, கவனமின்மை
ஒருவரைப்
பற்றி செய்த விமர்சனத்தை அதே பெயருடைய மற்றவருக்குப் பொருத்திவிடுதல்
இந்தத்
துறையில் விற்பன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் செய்த விமர்சனங்களில் தவறுஏற்படாது
என்று எண்ணி அப்படியே அவர்களின் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளுதல்
இது
போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன.
தவ்ஹீத்
ஜமாஅத் மூத்த அறிஞர்களைப் பொறுத்த வரை அவர்கள் அனைவருமே மத்ஹபைஅடிப்படையாகக் கொண்ட
கல்விக் கூடங்களில் தான் கற்றனர். அவர்கள் கற்ற கல்விக்கூடங்களில் ஹதீஸ் கலை
குறித்து முறையாகக் கற்பிக்கப்படாததால் அந்தக் கலையைக் கூடசுய முயற்சியால் கற்கும்
நிலையில் இருந்தனர்.
இதன்
காரணமாகத் தான் துவக்க காலங்களில் சில ஹதீஸ்கள் குறித்து நிலை மாற்றம்ஏற்பட்டது.
தற்போது
ஹதீஸ் கலை தொடர்பான அனைத்து நூல்களும் திரட்டப்பட்டுள்ள நிலையில், கடந்தகாலங்களில் நாம் பேசிய, எழுதிய, அங்கீகரித்த ஹதீஸ்களில் பலவீனமானவை உள்ளனவா? என்பதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்
என்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டது.
அதன்
அடிப்படையில் கடந்த காலங்களில் நாம் ஒரு ஹதீஸை ஸஹீஹ் என்று கருதியதால்அதன்
அடிப்படையில் சில சட்டங்களைக் கூறியிருப்போம். பின்னர் அவை பலவீனம் எனத்தெரிய
வரும் போது நாம் முன்பு பலவீனமான ஹதீஸின் அடிப்படையில் கூறிய சட்டத்தைதவறு என்று
தெளிவுபடுத்தியிருப்போம்.
பெரும்பாலான
மக்கள் அதனை அறிந்திருந்தாலும் இன்னும் அதிகமானவர்கள் நாம் முன்னர் சரிஎன்று கூறி, பின்னர் தவறு என்று மாற்றியவற்றை அறியாமல்
இருக்கின்றனர். எனவேஅனைவரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கத்தில், மாற்றப்பட்டசட்டங்கள் என்ற தலைப்பில் அது பற்றிய
விவரங்களை வெளியிடுகிறோம்.
ஏற்கனவே
ஒரு கருத்தைச் சொல்லிவிட்டால் அது தவறு என்று தெரிந்த பின்னர் அதில்பிடிவாதமாக
இருப்பதும் பொருந்தாத காரணம் கூறி உண்மையை மறைப்பதும்இறையச்சத்திற்கு
எதிரானதாகும்.
மறுமையைப்
பற்றிய அச்சம் இல்லாமல் குரோதப் புத்தி கொண்ட சில குறுமதியாளர்கள்இளக்காரம்
செய்வார்கள் என்றாலும் நம் கவுரவத்தை விட மார்க்கம் முக்கியமானது என்றஅடிப்படையில்
இதைத் தெளிவு படுத்துகின்றோம்.
ஆரம்பத்தில்
நாம் சரியான செய்தி என்று சொல்லி, பின்னர் பலவீனமான செய்தி என்று
சொன்னஹதீஸ்களையும், மக்களிடம் பரவலாக உள்ள பலவீனமான
செய்திகளையும் இங்கு தொகுத்துஎழுதவுள்ளோம். குறைகள் இருப்பின் தெரியப்படுத்தவும்.