என்றும் நாங்கள் இப்ராஹீம் நபியின் வாரிசுகள்
இன்று
ஒரு சில அனாமதேயங்கள், அரசியல் சமுதாய ரீதியிலான அநாதைகள் சகோதரர்
பி.ஜே. இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார் என்று கூறியுள்ளனர்.
"டி.என்.டிஜே. அமைப்பின்
அமைப்பாளர் பி.ஜே. என்பவர் இஸ்லாமிய கொள்கைளுக்கு விரோத மாக பிரச்சாரங்களில்
ஈடுபட்டு, இஸ்லாமிய சமுதாய மக்களை வழிகெடுத்து வரும்
காரணத்தால் இவர் இஸ்லாத்தை விட்டும் நீங்கி விட்டார் என்று இச்சபை அறிவித்து, இவரைப் பின்பற்றியோர் தவ்பா செய்து (பாவமன்னிப்பு) தேடி மீள
வேண்டும் என்று இச்சபை கேட்டுக் கொள்கிறது''
சமுதாயத்தில் ஒரு சல்லிக்காசு மதிப்புக்குத்
தேறாத இவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இவரைப் பின்பற்றுபவர்கள் தவ்பாச்
செய்து இவரை விட்டு விலக வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அனாமதேயங்கள் சொல்ல வேண்டிய வார்த்தை
பி.ஜே.யும் அவர்களது ஆதரவாளர்களும் இஸ்லாத்தை விட்டும் நீங்கி விட்டார்கள் என்று
சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் இவர்களால் ஒரு போதும் இவ்வாறு சொல்ல
முடியாது. அப்படியே சொன்னாலும் அது செல்லவும் செல்லாது.
காரணம் தகப்பனார் பள்ளி முதவல்லியாக, பஞ்சாயத்துத் தலைவராக இருந்தால் தனயன் தவ்ஹீது ஜமாஅத்தில்
இருக்கின்றார்.
மாமன் சுன்னத் ஜமாஅத் என்றால் மருமகன் தவ்ஹீது
ஜமாஅத்.
அண்ணன் அந்தப் பக்கம் என்றால் தம்பி இந்தப்
பக்கம்.
இன்னும் சொல்லப்போனால் பள்ளியின் இமாம் சுன்னத்
ஜமாஅத் என்றால் பையன் தவ்ஹீத் ஜமாஅத்.
தவ்ஹீதுக் கொள்கை துளிர் விட்டு, தளிர்நடை போடுகின்ற சிறு ஊர்களில் இது எதிரொலிக்காமல்
இருக்கலாம். ஆனால் தவ்ஹீது வளர்ந்துள்ள பெரும் பெரும் ஊர்களில் இதன் எதிரொலியும்
எதிர்விளைவும் மிகக் கடுமையாகவே இருக்கும்.
அதைப் புரிந்து கொண்டுதான் இந்த கூழ்முட்டைகள்
விவேகத்துடன் காய் நகர்த்துகின்றோம்; விவரத்துடன் காரியத்தைக் கையாளுகின்றோம் என்று நினைத்துக் கொண்டு பி.ஜே.வை
மட்டும் இஸ்லாத்தை விட்டும் நீங்கி விட்டார் என்று இந்த இணைவைப்புக் கொள்கை
அரைவேக்காடுகள் தெரிவித்துள்ளன.
அல்லாஹ்வின் அருளால் இன்றைக்கு ஏகத்துவக்
கொள்கை வாதிகள் தனி சமுதாயமாக வாழ்கின்றார்கள். அதில் உள்ள எந்த ஒரு கடைமட்டத்
தொண்டனும் அவரை தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டும் தனித்து பார்க்க மாட்டான். தன்னுடைய
சத்தியக் கொள்கைச் சகோதரனாகவே பார்க்கின்றான். பி.ஜே.வுக்கென்று தனிக் கொள்கை
எதுவும் கிடையாது. தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை தான் பி.ஜே.யின் கொள்கை, அதைத் தான் இதிலுள்ள ஒவ்வொரு தொண்டனும் பின்பற்றுகிறான்.
எனவே பி.ஜே. மட்டும் இஸ்லாத்தை விட்டு நீங்கி
விட்டார்; மற்றவர்களெல்லாம் நீங்கவில்லை என்ற இவர்களது
முதுகெலும்பில்லாத அறிவிப்பு எவ்வளவு கேலிக்கூத்து என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
சுயமரியாதை இழந்த இந்த சுரண்டல் கூட்ட
அறிவிப்பு சுன்னத் ஜமாஅத்தின் கூட்டத்திற்குள் கூட முழுமையாகப் போய்ச் சேரவில்லை.
அப்படியே சேர்ந்தாலும் அதனால் ஒரு சிறு அதிர்வு ஒருபுறமிருக்கட்டும். ஒரு மயிர்
அளவு அசைவு கூட ஏற்படவில்லை.
தமிழகம் எங்கும் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய
பெருநாள் திடல் தொழுகைகளில் ஆண்கள் பெண்கள் அலைஅலையாய் பெருக்கெடுத்து உள்ளார்கள்.
ஆரம்ப காலத்தில் இருந்து இந்த ஏகத்துவவாதிகள்
சிறு கூட்டமாக இருக்கும் போதே அவர்களைத் தடுத்து, தகர்த்து, தடம் தெரியாமல் துடைத்து விட வேண்டும் என்று தான் நினைத்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீது
வாதிகள் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றார்கள்.
இதிலிருந்து பாடம் பெற்று தங்கள் வாயைப்
பொத்திக் கொண்டு தங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போக வேண்டும் அல்லவா? ஆனால் அவர்கள் அவ்வாறு அப்படி போகாமல் மீண்டும் தவ்ஹீத்
வாதிகளை வழிமறித்து வம்புக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது உண்மையில்
மென்மேலும் தவ்ஹீத் கொள்கைக்கு மாபெரும் வளர்ச்சியைக் கொடுத்துக்
கொண்டிருக்கின்றது. இதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் அல்லாஹ் வுக்கு நன்றி
செலுத்துகின்றனர்.
"உங்களை விட்டும், அல்லாஹ் வையன்றி எதனை வணங்குகிறீர் களோ அதை விட்டும்
நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கி றோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை
கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும்
என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' என்று
கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய
முன்மாதிரி இருக்கிறது.
திருக்குர்ஆன் 60:4
இதில் வேடிக்கை என்ன வென்றால் தவ்ஹீதுவாதிகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாக நான்கைந்து பேர்களாக இருந்து கொண்டிருக்கும் போதே
இப்றாஹீம் (அலை) அவர்கள் பாணியில், பாதையில் சென்று இந்த வசனத்தைச் சொல்லி, உனக்கும் எனக்கும் எந்த வரவு செலவும் இல்லை. ஒட்டும் உறவும் இல்லை என்று
முழங்கி விட்டனர்; விவாகரத்துச் செய்து விட்டனர்.
இன்று இந்த அனாமதேயங்கள் ஆங்காங்கே மாநாடு
போட்டு உங்களை விட்டு விலகி விட்டோம் என்று இப்போது மானங்கெட்டுப் போய்
சொல்கின்றனர்.
விவாகரத்து செய்யப்பட்ட வாழாவெட்டிப்
பெண்ணொருத்தி பல வருடங்கள் கழித்து தனது கணவனைப் பார்த்து, உங்களை ஒதுக்கி வைத்து விட்டேன். உங்களை விட்டும் விலகி
விட்டேன் என்று சொல்கின்ற கதையாக உள்ளது.
அன்றே உங்களை விட்டு விலகி ஊர் நீக்கம், வழக்கு என்று பல்வேறு சோதனைகளைச் சந்தித்து இன்று அல்லாஹ்வின் அருளால் தனியொரு
சமுதாயமாக நிற்கின்றோம். இந்நிலையில் மக்களை எங்களுக்கு எதிராகத் திரட்டி
ஏகத்துவப் படையை குலைநடுங்கச் செய்துவிடலாம், அவர்களது வளர்ச்சிக்கு அணை போட்டு விடலாம் என்று நப்பாசை கொள்ளாதீர்கள்.
என்ன தான் மக்கள் சக்தி எங்களுக்கு எதிராக
ஒன்று திரட்டப்பட்டாலும் நாங்கள் தொடர்ந்து இப்ராஹீம் (அலை) அவர்கள் மார்க்கத்தில்
நிலைத்து நிற்கின்றோம். அல்லாஹ்வின் அருளால் இனியும் நிற்போம்.
தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி
நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.
திருக்குர்ஆன் 4:125
"அல்லாஹ்வை மட்டும் நீங்கள்
நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' என்ற வீரமிக்க இந்த ஏகத்துவப் பிரகடனத்தைச் செய்த இப்ராஹீம்
(அலை) மார்க்கத்தில் இந்தியாவில், ஏன்? உலகத்தில் செயல்படுவது இந்த ஜமாஅத் தான்.
கடந்த காலத்தில் ஒரு குடும்பம் விருந்துக்கு
அழைக்கப்பட்டால் அதற்கு மகிழ்ச்சியுடன் பதிலளித்தது. ஆனால் இன்று என்ன விருந்து? எதற்காக? வரதட்சணை
கல்யாணமா? என்று விசாரணை செய்கின்றது.
வினாக்களால் விருந்துக்கு அழைத் தவரைத்
துளைத்து எடுக்கின்றது. இதற்குச் சரியான விடை அளித்தால் விருந்தை ஏற்கின்றனர்.
இல்லையேல் புறக்கணிக்கின்றனர். இது யாருடைய வேலை? எவருடைய வேலை?
ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்கள்
(நபித்துவ காலத்திற்கு முன்பு) இறையில்லம் கஅபாவின் மீது சாய்ந்து கொண்டு நின்றபடி, "குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைத் தவிர
உங்கüல் எவரும் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய
மார்க்கத்தின்படி நடக்கவில்லை'' என்று
சொல்-க் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். மேலும், அவர், உயிரோடு
புதைக்கப்படவிருந்த பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வாழவைத்து வந்தார். எவரேனும் தன்
பெண்மகவைக் கொல்ல நாடினால் அவரிடம், "அவளைக் கொல்லாதே. அவளுடைய செலவுக்கு உன்னிடம் நான்
பொறுப்பேற்கிறேன்'' என்று சொல்-விட்டு, அந்தப் பெண் குழந்தையை (தாமே வளர்க்க) எடுத்துக் கொள்வார்.
அவள் வளர்ந்ததும் அவளது தந்தையிடம் (சென்று), "நீ விரும்பினால் இவளை உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்; நீ விரும்பினால் அவளது செலவுக்குப் பொறுப்பேற்று (பழையபடி
நானே பராமரித்து)க் கொள்கிறேன்'' என்று
சொல்வார்.
அறிவிப்பவர்: அஸ்மா (ரலி)
நூல்: புகாரி 3828
ஸைது பின் அம்ரின் இந்தச் செய்கை பெண்ணினத்தைக்
காக்கின்ற பெரும் சேவை. இப்ராஹீம் (அலை) அவர்களின் செய்கை, பெண்ணினக் காவல் சேவையைப் பறை சாற்றுகின்றது.
வரதட்சணை தான் சிசு முதல் பெரிய மனுஷி வரை உள்ள
பெண்களை அழிப்பதற்குப் பெரிய காரணியாக, கருவியாக அமைந்துள்ளது. அதனால் பாவத்தின் கரை தன் மீது கடுகளவு கூட படியக் கூடாது என்பதற்காகவே வரதட்சணை
கல்யாணத்தை தவ்ஹீத் ஜமாஅத்தினர் புறக்கணிக்கின்றனர்.
சிசு முதல் பெரிய மனுஷி வரையிலான பெண்ணினம்
அழிவதற் குரிய கொள்ளிக் கட்டையாக பெண் வீட்டு விருந்து இருந்து கொண்டிருக்கின்றது.
அதனால் அந்தப் பாவத்தில் பலியாகி, பாவியாகி விடக்கூடாது என்பதற்காகப் பெண் வீட்டு விருந்து
புறக்கணிப்பை அமல்படுத்தும் ஒரே அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத்தான்.
ஏன் எதனால்? இப்ராஹீம் நபியின் மார்க்கத்தில் இருப்பதினால் ஆகும்.
அடுத்து வீடு குடிபுகும் விருந்து,
ஒரு குடும்பத்தை வீடேறி அழைக்க வந்து விட்டால்
மவ்லித் ஓதினீர்களா? அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து ராத்திபு நடந்ததா? அதற்கு அறுத்து பலியிட்டீர்களா? என்று வினாக்கள் தொடர்கின்றன. திருப்தியான பதில் என்றால்
விருந்து ஏற்கப்படுகிறது. இல்லையேல் புறக்கணிக்கப்படுகிறது.
ஏன்? எதற்கு?
நபி (ஸல்) அவர்கள், தமக்கு வேத வெüப்பாடு (வஹீ) அருளப் படுவதற்கு முன்பு பல்தஹ் எனும் அடிவாரத்தில் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல்
அவர்களைச் சந்தித் தார்கள். அப்போது (குறைஷிகüன்) பயண உணவு ஒன்று நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில்
பரிமாறப் பட்டது. அந்த உணவை ஸைத் பின் அம்ர் உண்ண மறுத்து விட்டார். பிறகு ஸைத்
(உணவைப் பரிமாறிய குறைஷிகüடம்), "நீங்கள் உங்கள் (சிலைகளுக்கு ப-யிடும்) ப-பீடக் கற்கüல் வைத்து அறுப்பவற்றை நான் உண்ண மாட்டேன். (அறுக்கும்
போது) அல்லாஹ்வின் பெயர் எதன் மீது கூறப்பட்டதோ அதைத் தவிர வேறெதையும் உண்ண
மாட்டேன்'' என்று சொன்னார்கள். ஸைத்
பின் அம்ர் அவர்கள், குறைஷிகளால் (சிலைகளுக்காக) அறுக்கப்பட்ட
வற்றைக் குறை கூறிவந்தார்கள். மேலும், "ஆட்டை அல்லாஹ்வே படைத்தான்; அதற்காக, வானத்தில்
இருந்து தண்ணீரைப் பொழிந்தான்; அதற்காக, பூமியி-ருந்து (புற் பூண்டுகளை) முளைக்கச் செய்தான்.
(இத்தனைக்கும்) பிறகு நீங்கள் அல்லாஹ்வின் பெயரல்லாத மற்ற (கற்பனைத் தெய்வங்கüன்) பெயர் சொல்- அதை அறுக்கிறீர்கள்; இறைவனின் அருட்கொடையை நிராகரிக்கும் விதத்திலும் அல்லாஹ்
அல்லாதவரை கண்ணியப்படுத்தும் விதத்திலும் இப்படிச் செய்கிறீர்கள்'' என்று கூறி வந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 3826
இப்படி எல்லா வகையிலும் இப்ராஹீம் வாரிசுகளான
இந்த ஜமாஅத்தைப் பார்த்து, வழிகெட்டது; இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டது என்று சொன்னால் அவன் யார்?
இதோ இதற்கு அல்லாஹ்வே பதிலளிக்கின்றான்.
தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர யார்
இப்ரா ஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில்
நல்லோரில் இருப்பார்.
திருக்குர்ஆன் 2:130
எனவே தவ்ஹீத் ஜமாஅத்தின் வளர்ச்சி காரணமாக
பாதிப்புக்குள்ளான இந்தப் பைத்தியங்களின் உளறல்கள் மக்களிடத்தில் எந்தப்
பாதிப்பையும் பிரதிபலிப்பையும் ஏற்படுத்தப் போவ தில்லை என்று உரக்கச் சொல்கிறோம்.
அவர்கள் கொண்டிருக்கும் இணை வைப்புப் கொள்கை
அணுஅணுவாக செத்துக் கொண்டிருக்கின்றது. அது அறவே எழுந்திருக்கப் போவதில்லை என்பதை
உலகுக்கு எடுத்துச் சொல்லவும் ஊசலாடிக் கொண்டிருக் கும் அதன் கொஞ்ச நஞ்ச
உயிரோட்டத்தை ஓய்ப்பதற்கும் வருகின்ற ஜனவரி 31ல் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தவ்ஹீது ஜமாஅத் நடத்த உள்ளது.
அது உண்மையில் "சத்தியம் வந்தது
அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழிந்தே தீரும் (திருக்குர்ஆன் 34:49)''
என்பதை
உலகுக்கு உணர்த்தும்.
EGATHUVAM AUG 2015