9. அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் அஜ்ஸி வல்கஸலி வல்ஜுபு(இ)னி வல்பு(இ)க்லி வல்ஹரமி வஅதாபி(இ)ல் கப்(இ)ரி. அல்லாஹும்ம ஆ(த்)தி நப்(எ)ஸீ தக்வாஹா வஸக்கிஹா அன்(த்)த கைரு மன் ஸக்காஹா அன்(த்)த வலிய்யுஹா வமவ்லாஹா, அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மின் இல்மின் லாயன்ப(எ)வு வமின் கல்பி(இ)ன் லாயக்ஷவு வமின் நப்(எ)ஸின் லா தஷ்ப(இ)வு வமின் தஃவ(த்)தின் லா யுஸ்(த்)தஜாபு(இ) லஹா
இதன் பொருள் :
இறைவா! பலவீனம், சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமை, மண்ணறையின் வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! எனது உள்ளத்துக்கு இறையச்சத்தை வழங்கி விடு! அதைத் தூய்மைப்படுத்து! தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீ தான் அதன் பொறுப்பாளன். அதன் எஜமானன். இறைவா! பயனற்ற கல்வியை விட்டும், அடக்கமில்லாத உள்ளத்தை விட்டும், நிறைவடையாத ஆத்மாவை விட்டும், அங்கீகரிக்கப்படாத துஆவை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 4899