கப்ர் வணங்கிகளுக்கு வக்காலத்து வாங்கும் ஸலபுக் கும்பல் - 1
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி
கடந்த
ஜனவரி 2015 தீன்குலப்பெண்மணியில் முஃதஸிலாக்கள் யார் என்ற கட்டுரை வெளியாகியிருந்தது.
ஹதீஸ்
காப்பாளர்களாக வெளி வேஷமிடும் போலி ஸலபுக் கும்பல் தவ்ஹீத் ஜமாஅத்தை நேர்மையாக எதிர்கொள்ளத்
துணிவற்று முஃதஸிலாக்களின் பாதையில் தவ்ஹீத் ஜமாஅத் பயணிக்கின்றது, பி.ஜே
ஒரு முஃதஸிலா போன்ற பசப்பு வாதத்தில் ஈடுபடலானார்கள்.
அவர்களின்
வாதங்களுக்கு பதிலளிக்கும் விதமாக
முஃதஸிலாக்கள்
என்றால் யார்?
அவர்களது
கொள்கை என்ன?
தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை என்ன?
அவர்களுக்கும், தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் உள்ள வேறுபாடு என்ன?
முஃதஸிலாக்களின்
அடிப்படை கொள்கைகள் எப்படி தவறாக உள்ளன
என்பதை
ஆதாரத்துடன் விளக்கி அக்கட்டுரை எழுதப்பட்டு இருந்தது.
முஃதஸிலாக்களிடம்
பல வழிகெட்ட கொள்கைகள் இருந்ததைப் போலவே நல்ல கொள்கைகளும் அவர்களிடம் இடம் பெற்றிருந்தன.
குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி சூனியம் என்பது பித்தலாட்டமே என்று அவர்கள் கூறியது
அதில் ஒன்று தான்.
வழிகெட்ட
கொள்கையினர் முன்வைக்கும் அனைத்தும் வழிகேடாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள்
சொன்னவற்றில் ஒன்றிரண்டு நல்லவைகளும் உள்ளடங்கியிருக்கலாம்.
அந்த
அடிப்படையில் முஃதஸிலாக்கள் வழிகேடர்களாக இருந்தாலும் அவர்கள் சூனியத்தை மறுத்தது சரியான
செயலே!
அவர்கள்
சூனியத்தை மறுத்தார்கள் என்பதினால் சூனியத்தை மறுக்கும் அனைவர்களும் முஃதஸிலாக்களாகி
விட மாட்டார்கள். அவ்வாறு சொல்வது அறிவீனம் என்ற கருத்தையும் அக்கட்டுரையில் எழுதியிருந்தோம்.
அதை
வாசிக்க
இதற்குப்
புதிதாக ஸலபுக் கும்பலை தஞ்சமடைந்திருக்கும் ஒருவர் எழுதிய மறுப்புக் கட்டுரையை இணையத்தில்
பார்க்க நேர்ந்தது.
அதில்
தர்க்கப்பூர்வமான விஷயங்களை விட அறிஞர் பி.ஜே.வைக் குறிவைத்துத் தாக்கும் போக்கே மிகைத்திருந்ததை
உணர முடிகிறது.
எப்படியாவது
அறிஞர் பி.ஜேவை முஃதஸிலாவாகச் சித்தரித்து முஸ்லிம்களை விட்டும் அவரை அப்புறப்படுத்தி
விட வேண்டும் என்கிற வெறியும் அதில் வெளிப்படையாகவே தென்படுகிறது.
பி.ஜே
முஃதஸிலாக்களுக்கு வக்காலத்து வாங்குவதாகக் கூறிக்கொண்டே இவர் கப்ர் வணங்கிகளுக்கு
வக்காலத்து வாங்கும் கேடு கெட்ட செயலையும் அந்தக் கட்டுரையில் அரங்கேற்றுகிறார். அதைப்
பின்னர் விளக்குகிறோம்.
ஒற்றுமை
பி.ஜேவுக்கும், முஃதஸிலாக்களுக்குமான
ஒற்றுமை என்று சில விஷயங்களை அந்த சலபி பட்டியலிடுகிறார்.
அதில்
ஒன்றாக முஃதஸிலாக்களின் தலைவன் வாஸில் பின் அதாஃ சிறந்த பேச்சாற்றலும் நாவன்மையும்
உள்ளவனாம். அதே போல பி.ஜேவும் சிறந்த நாவன்மையுடைவராக இருப்பதால் இந்த விஷயத்தில் முஃதஸிலாக்களுக்கு
பி.ஜே ஒப்பாகி விட்டாராம்.
வாஸில்
பின் அதா நல்ல அரபு மொழிப் புலமை படைத்தவராக இருந்தார். மதீனாவில் படித்து அரபு சல்லிக்கு
குப்பை கொட்டும் மதனிகளும் நல்ல அரபி புலமை பெற்றுள்ளதால் எல்லா மதனிகளும் முஃதஸிலாக்கள்
தான் என்று இந்த அறிவிலியின் வழியில் நாமும் வாதிடலாம்.
பி.ஜேவை
முஃதஸிலாவாக சித்தரிக்க இவர்கள் எப்படி எல்லாம் இறங்கி வருகிறார்கள்? பாடுபடுகிறார்கள்? மேலும்
சலபிக் கும்பலில் உள்ளவர்கள் பேச்சாற்றல் இல்லாத பேயன்களா? அவர்களும்
தான் தொண்டை கிழியப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களும் முஃதஸிலாக்கள் என்று
இந்த அறிவிலி சொல்வாரா?
பீஜேயும்
தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களும் சத்தியத்தைப் பேசுவதால் மக்கள் ஆர்வமுடன் அவர்களின் உரையைக்
கேட்கிறார்கள். சலபிக்கும்பல் பேசுவதெல்லாம் மடமையாக உள்ளதால் மக்கள் செவி கொடுப்பதில்லை
என்பதுதான் வித்தியாசம்.
இவர்களின்
முஃதஸிலா மாயை நாளடைவில் முற்றிப்போய், “முஃதஸிலாக்களின் தலைவன் சிகப்பு, நீலம், என
அடர்நிற சட்டைகளை அதிகம் அணிந்து வந்தான். பி.ஜேவும் இந்நிற சட்டைகளை அதிகம் அணிவதால்
அவர் ஒரு முஃதஸிலா என்பதில் எங்களுக்குச் சந்தேகமேயில்லை” என்று
இவர்கள் பிதற்றினால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.
அந்தளவு
இவர்களது முஃதஸிலா நோய் முற்றிப் போய் உள்ளது என்பதை இது காட்டுகிறது.
நபிமொழிகளை
மறுத்து சுய சிந்தனையைப் புகுத்தியதே முஃதஸிலாக்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம்.
இதே வேலையை சகோதரர் பி,ஜே தற்போது ஹதீஸ்களில் செய்கிறார். இதனாலேயே இவர் முஃதஸிலா வழியில் செல்கிறார்
என்கிறோம்.
என்று
அடுத்து கூறுகிறார்.
தவ்ஹீத்
ஜமாஅத் முஃதஸிலாக்களின் பாதையில் பயணிக்கிறதா? என்பதற்கு நம்மை விட தெளிவாக
அவரே விளக்கமளித்து,
பதிலளித்து, மறுத்து அவர் கூறும் இலங்கையை
சார்ந்த அறிஞர்களுக்கு நன்கு உணர்த்தும் படி பேசியுள்ளார்.
இந்த
இணைப்பில் அதை காணலாம்
அவரின்
வாதங்களுக்கு அவராலேயே திருப்தியாகப் பதில் சொல்ல முடியவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
அதாவது
கள்ள ஸலபுக் கும்பலில் சேர்வதற்கு முன்பு அவர் வைத்த வாதங்களுக்கு அவராலேயே தெளிவாக
பதிலளிக்க இயலவில்லை. சத்தியம் இருந்தால் தானே தெளிவான பதில் வரும்.
சரி
இவரின் இக்குற்றச்சாட்டிற்கு வருவோம்.
குர்ஆனுக்கு
முரண்படுவதாகக் கூறி சில செய்திகளை இது நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள்
என்று பி.ஜே. கூறியதையே இவ்வாறு விமர்சிக்கின்றார்.
குர்ஆனுக்கு
முரண்படும் செய்திகளை முரண்படுகிறது என்று சொல்லாமல் வேறு எப்படிக் குறிப்பிட இயலும்? அப்படி
முரண்படுகிறது என்று ஆதாரத்துடன் சொன்னால் அது ஹதீஸில் அறிவைப் புகுத்தும் செயலாகி
விடுமா?
இத்தனைக்கும்
ஒரு செய்தியை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று விமர்சிக்கும் போது அதற்குரிய ஆதாரங்களையும்
சேர்த்தே குறிப்பிடுகிறோம்.
கள்ள
சலபுகளைப் போன்று மனோஇச்சைக் கருத்துக்களையும், இமாம்களின் தலைப்புகளையும் குறிப்பிட்டு
மார்க்கம் பேசுவதில்லை.
இறைவார்த்தைகளுக்கு
நிகரான மதிப்பை இமாம்களின் தலைப்புகளுக்கும், கருத்துக்களுக்கும் கொடுக்கும்
கேடுகெட்ட செயலை தவ்ஹீத் ஜமாஅத்தோ, பி.ஜேவோ செய்தது கிடையாது.
இமாம்கள்
எப்படி புரிந்தார்களோ அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூப்பாடு போட்டு
இமாம்களின் புரிதலில் எந்தத் தவறும் ஏற்படாது என அவர்களை இறைவனுக்குச் சமமாக்கும் இழிவேலையை
பி.ஜேவோ, தவ்ஹீத் ஜமாஅத்தோ செய்வது கிடையாது.
இவ்வாறிருக்க, தகுந்த
ஆதாரங்களைக் குறிப்பிட்டு இந்தச் செய்தி குர்ஆனுடன் மோதுகிறது; எனவே
இதை நபி சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கூறினால் அதற்கு முறையாகப் பதில் கூற வக்கற்றவர்கள்
பி.ஜே முஃதஸிலாக்களின் பாதையில் செல்கிறார் என்று கூப்பாடு போடுகின்றார்கள்.
இங்கே
தான் கள்ள சலபுகளின் கள்ளத்தனத்தை, சத்தியத்தை மறைக்கும் கயமைத்தனத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
குர்ஆனுக்கு
முரண்படுவதாகக் கூறி நபியின் பெயரால் சொல்லப்பட்ட செய்திகளை நபி சொல்லியிருக்க மாட்டார்கள்
என்று கூறியது வரலாற்றில் முஃதஸிலாக்கள் மட்டும் தானா?
முஃதஸிலாக்களைத்
தவிர வேறு யாரும் இவ்வாறு கூறவில்லையா? இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவில்லையா? முதன்
முதலில் முஃதஸிலாக்கள் தான் இப்படி செய்தார்களா?
இதற்கெல்லாம்
ஆம் என்று இவர்கள் சொல்வார்களேயானால் பி.ஜே முஃதஸிலாக்களின் பாதையில் பயணிக்கிறார்
என்ற இவர்களின் வாதத்தில் ஓரளவாவது நியாயம் உள்ளது எனலாம்.
ஆனால்
உண்மை என்ன?
குர்ஆனுக்கு
முரணாக நபி பேசமாட்டார்கள் என்ற காரணத்தைக் கூறி நபியின் பெயரால் சொல்லப்பட்ட செய்தியை
வரலாற்றில் முஃதஸிலாக்கள் அல்லாத பலரும் மறுத்துள்ளார்கள்.
மிக
குறிப்பாக குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி நபியின் பெயரால் சொல்லப்பட்ட செய்தியை மறுத்தது
வரலாற்றில் முதன் முதலாக முஃதஸிலாக்கள் அல்ல. நபித்தோழர்கள் காலத்திலேயே இந்த அணுகுமுறை
ஆரம்பித்து விட்டது.
அன்னை
ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த அணுகுமுறையைக் கடைபிடித்துள்ளார்கள் என்பது மறுக்க முடியாத
ஒன்று.
மூடர்களைத்
தவிர வேறு யாரும் இதை மறுக்க மாட்டார்கள்.
(அவைகளை எல்லாம் ஆதாரங்களுடன்
எழுதியிருக்கிறோம். ஏன் அவருக்கே இந்த ஆதாரங்கள் அத்துப்படி. காரணம் அவரே இவற்றை எழுதியிருக்கிறார்.
மறந்திருந்தால் அந்தப் புத்தகத்தை நமது ஆன்லைனில் வைத்திருக்கிறோம். அதை பார்த்து நினைவுபடுத்திக்
கொள்ளலாம்.)
இங்கே
நாம் கேட்க விரும்புவது என்ன?
குர்ஆனுக்கு
முரண்படுவதாக சில செய்திகளை மறுக்கும் ஆயிஷா மற்றும் நபித்தோழர்களின் அணுகுமுறையை பி.ஜேயும், தவ்ஹீத்
ஜமாஅத்தும் செய்வதால் இது முஃதஸிலாக்களின் பாதையாக எப்படி ஆகிறது? இதுதான்
நமது கேள்வி.
அப்படி
என்றால் முஃதஸிலாக்கள் இப்படி செயல்பட்டதை ஆயிஷாவின் பாதை என்பார்களா இந்த குருட்டுக்
கூட்டம்?
முஃதஸிலாக்கள்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பாதையில் பயணித்தார்கள் என்று இவர்கள் குறிப்பிட வேண்டும்.
குர்ஆனுக்கு
முரண் எனக்கூறி மறுக்கும் அணுகுமுறையைக் கடைபிடித்ததில் முஃதஸிலாக்கள் முந்தியவர்களா? அன்னை
ஆயிஷா போன்ற நபித்தோழர்கள் முந்தியவர்களா என்றால் சந்தேகமற ஆயிஷா போன்ற நபித்தோழர்களே
முந்தியவர்கள் ஆவார்கள்.
குர்ஆனுக்கு
முரண்படுவதாகக் கூறி நபியின் பெயரால் சொல்லப்பட்ட ஓரிரு செய்திகளை ஆயிஷா உள்ளிட்டோர்
மறுத்து அந்த வழிமுறையை ஆரம்பித்து அதன் பின்னர் தானே முஃதஸிலாக்களும் இதைக் கடைபிடித்து
சூனியத்தை மறுத்தார்கள்?
இவர்கள்
இதற்காக பி.ஜேயை முஃதஸிலாக்களின் பாதையில் செல்கிறார் என விமர்சிப்பதில் நியாயவான்களாக
இருந்தால் ஆயிஷாவின் பாதையில் முஃதஸிலாக்கள் பயணித்தார்கள் என்று இவர்கள் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.
ஒரு
வழிமுறையை முதலாவதாகக் கடைபிடித்த நபர்களை விட்டு விட்டு இரண்டாவதாகப் பின்பற்றிய நபர்களோடு
அதை இணைக்கும் கள்ளத்தனத்தை கள்ள சலபுகளை விட வேறு யாராலும் அவ்வளவு நேர்த்தியாக செய்து
விட முடியாது.
இப்படியெல்லாம்
நியாயமற்று பி.ஜே அவர்களை விமர்சித்து விட்டு இது காழ்ப்புணர்வில் எழுதப்படவில்லை, குரோதத்தில்
எழுதப்படவில்லை என்று டயலாக் விட்டால் அது உண்மை என்றாகி விடாது.
எழுத்தில்
அல்ல; சொல்வதை செயலில் காட்ட வேண்டும். அப்போதுதான் மக்கள் அதை நம்புவார்கள்.
அடுத்து
நம்மை முஃதஸிலாக்களுக்கு வக்காலத்து வாங்குவதாகக் குற்றம் சுமத்தி பின்வருமாறு எழுதுகிறார்.
அல்லாஹ்வின்
மார்க்கத்தில் உள்ள ஒரு முஸ்லிமை பெரும்பாவம் செய்த காரணத்திற்காக அவன் முஸ்லிமே இல்லை
என்பது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாகும். முஸ்லிமைக் கொல்வதற்கு நிகரான மாபெரும்
ஃபித்னாவாகும். இந்த ஃபித்னாவில் தான் முஃதஸிலாக்கள் முதன்முதலில் உருவாகிறார்கள்.
ஆனால்
சகோதரர் பி.ஜேவிற்கு இவை பெரிய குற்றமாகத் தெரியவில்லை. ஏனென்றால் இவரும் முஃதஸிலாக்களைப்
போன்று நபிமொழிகளை நம்பும் முஸ்லிம்களுக்கு முஷ்ரிக் பட்டம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
எனவே தான் இவருக்கு முஃதஸிலாக்களின் இந்த ஃபித்னா பாரதூரமாகத் தெரியவில்லை. முஃதஸிலாக்களுக்கு
எப்படி வக்கலாத்து வாங்குகிறார் என்று பாருங்கள்.
என்று
கூறி தீன்குலப்பெண்மணியில் இடம்பெற்ற முஃதஸிலாக்கள் குறித்த நமது கட்டுரையிலிருந்து
சில வாசகங்களை எடுத்தெழுதுகிறார்.
அதன்
கருத்து என்னவென்றால் முஃதஸிலாக்கள் முதன் முதலாக அவ்வாறு அழைக்கப்படும் போது இதர வழிகெட்ட
கொள்கைகள் அவர்களிடம் இருக்கவில்லை.
பெரும்பாவம்
செய்தவனை முஃமின் என்றும் சொல்லக் கூடாது காஃபிர் என்றும் சொல்லக் கூடாது என்ற இந்தக்
கொள்கையே இருந்தது. இந்தக் கொள்கையில் சமுதாய அறிஞர்களின் கருத்துக்களை விட்டும் அவர்கள்
விலகி நின்ற காரணத்தினால் முஃதஸிலாக்கள் - விலகியவர்கள் என்று அழைக்கப்படலானார்கள்.
இவர்களின்
இந்தக் கொள்கை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் சமாதி
வழிபாட்டுக் கொள்கையை விட இது பயங்கரமானது அல்ல, இறைச்செய்தி மட்டுமே
மார்க்கம் என்ற அடிப்படையைத் தகர்த்து சஹாபாக்களைப் பின்பற்றுவோம், இமாம்களைப்
பின்பற்றுவோம் எனக் கூறும் சலபி மத்ஹபினர் மற்றும் நான்கு மத்ஹபினரின் கொள்கையை விட
இது பாரதூரமானது அல்ல.
இவ்வாறு
அதில் நாம் எழுதியிருந்தோம்.
இதைத்
தான் ஸலபுக் கும்பல் முஃதஸிலாக்களுக்கு வக்காலத்து வாங்குவதாகவும், முஃதஸிலாக்கள்
உருவாக்கிய இந்தக் கொள்கைக் குழப்பம் சகோதரர் பி.ஜேவிற்கு சிறிய பிரச்சனையாக தெரிகிறது
என்றும் விமர்சித்து எழுதியுள்ளார்.
குழப்பத்திலேயே
உழல்பவருக்கு எதையெடுத்தாலும் கொள்கைக் குழப்பமாகத்தான் தோன்றும்.
நாம்
சொன்னதில் தவறோ,
முஃதஸிலாக்களுக்கு வக்காலத்து வாங்கும் போக்கோ சிறிதும் இல்லை.
முஃதஸிலாக்களின்
ஒவ்வொரு வழிகெட்ட கொள்கையையும் குறிப்பிட்டு அது எப்படி வழிகேடான, தவறான
கொள்கை என்பதை குர்ஆன்,
ஹதீஸ் ஆதாரங்களுடன் அக்கட்டுரையில் விளக்கி எழுதியிருக்கிறோம்.
இது
எப்படி முஃதஸிலாக்களுக்கு வக்காலத்து வாங்குவதாக ஆகும்?
பெரும்பாவம்
செய்தவன் முஃமினும் அல்ல காஃபிரும் அல்ல என்று முஃதஸிலாக்கள் சொன்னது தவறானதே என்பதையும்
அவர்களின் இந்நிலைப்பாட்டிற்கு எதிரான ஹதீஸ் சான்றுகள் பலவற்றை அதில் விளக்கியுள்ளோம்.
இத்தனைக்குப்
பிறகும் இவர்களின் பார்வைக்கு நாம் முஃதஸிலாக்களுக்கு வக்காலத்து வாங்குவதைப் போன்று
தோற்றமளிக்கிறது என்றால் பிரச்சனை இவர்களது சிந்தையில் தான் உள்ளது என்பது தெளிவு.
இதில்
கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில்,
பெரும்பாவம்
செய்தவன் முஃமினும் அல்ல காஃபிரும் அல்ல என்று முஃதஸிலாக்கள் சொன்னதை விமர்சித்து விட்டு
இஸ்லாத்தின் பெயரால் தர்கா வழிபாடு நடத்தும் பெயர் தாங்கி முஸ்லிம்களின் செயலை விட
இது பாரதூரமானது அல்ல என்றும், வஹியின் இடத்தில் மனிதர்களின் கருத்தை கொண்டு
வந்து நிறுத்தும் சலபி மத்ஹபினரின் செயலை விட இது பயங்கரமானது அல்ல என்றும் ஒப்பீடு
செய்து எழுதியிருந்தோம் அல்லவா?
இது
தான் இவர்களுக்கு கோபக்கனலைத் தூண்டி விட்டிருக்கிறது.
முஃதஸிலாக்களைத்
திட்டி எழுதும் போது கூட உரிய இடத்தில் நம்மைத் தோலுரித்துக் காட்டுகிறார்களே என்ற
உணர்வு தான் இவர்களது மூக்கிற்கு மேல் கோபம் கொப்பளிக்கக் காரணமாகும்.
அதைத்
திசை திருப்பவே முஃதஸிலாக்களுக்கு நாம் வக்காலத்து வாங்குவதாக குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.
நாம்
செய்த ஒப்பீடு சரியா?
தவறா? என்பதை அறிவுடையோர் தீர்ப்பளிக்கட்டும்.
இஸ்லாத்தின்
கடமைகளை நிறைவேற்றும் ஒருவர் பெரும்பாவம் செய்தவன் முஃமினும் அல்ல, காபிரும்
அல்ல என்று சொல்கிறார்.
இஸ்லாத்தின்
கடமைகளை நிறைவேற்றும் ஒருவர் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கிறார்.
இரண்டில்
எதைப் பயங்கரமானது என்போம்?
அல்லாஹ்விற்கு
இணைகற்பிப்பது தானே பாவத்தில் பயங்கரமானது.
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும்போது "என் அருமை
மகனே! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் 31:13
தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக்
கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு
மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
அல்குர்ஆன் 4:48
இவ்வசனங்களின்
படியே பெரும்பாவம் செய்தவன் முஃமினும் அல்ல, காஃபிரும் அல்ல என்று முஃதஸிலாக்கள்
சொன்னது தர்கா வழிபாட்டினர் செய்யும் இணைவைப்பை விட பயங்கரமானது அல்ல என்ற ஒப்பீடைச்
செய்திருந்தோம்.
இதில்
என்ன குற்றத்தைக் கண்டுவிட்டார் கொள்கைக் குழப்ப கட்டுரையாளர்?
இதற்காக
தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பாரேயானால் இவர் உண்மையில் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்கவில்லை.
இணைவைப்பு தான் அதிபயங்கரமானது என்ற இறைவனின் தீர்ப்பையே இவர் விமர்சிக்கின்றார்.
இந்த
லட்சணத்தில் தங்களை ஹதீஸ் பாதுகாவலர்களாக வேறு எண்ணிக் கொள்கின்றனர்.
இறைச்செய்தியின்
இடத்தில் மனிதர்களின் கருத்தைக் கொண்டு வந்து நிறுத்தும் ஸலபி மத்ஹபினர் தங்களை ஏதோ
ஹதீஸ் பாதுகாவலர்களாக எண்ணிப் பெருமைபட்டுக் கொள்வதில் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
அதுமட்டுமின்றி
நம்மை முஃதஸிலாக்களுக்கு வக்காலத்து வாங்குவதாகக் குறை கூறிக்கொண்டே இவர் தர்காவாதிகளுக்கு
வக்காலத்து வாங்குகிறார்.
முஃதஸிலாக்கள்
பெரும்பாவி விவகாரத்தில் சொன்னதை விட தர்காவாதிகள் செய்யும் இணைவைப்புதான் பயங்கரமானது
என்று சொன்னால் இவருக்கு ஏன் கோபம் பீறிட வேண்டும்? அப்படி என்றால் தர்காவாதிகளுக்கு
இவர் வக்காலத்து வாங்குவதாகத் தானே புரிந்து கொள்ள முடிகிறது.
இப்போதும்
சொல்கிறோம்.
பெரும்பாவம்
செய்தவனை முஃமினும் அல்ல காஃபிரும் அல்ல என்று முஃதஸிலாக்கள் கூறியது தர்காவாதிகள்
செய்யும் இணை வைப்பை விட பயங்கரமானது அல்ல.
இதில்
எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒளிவு மறைவும் இல்லை.
இதை
தவ்ஹீத் ஜமாஅத் கூறியதற்காக வரிந்து கட்டிக்கொண்டு விமர்சித்து எழுதுகிறார் எனில் தர்காவதிகளுக்கு
வக்காலத்து வாங்குபவராகவே இவர் நமக்குக் காட்சியளிக்கின்றார்.
இந்த
ஒப்பீட்டையும் நாம் செய்வதற்கு ஒரு காரணம் இருந்தது. கட்டுரையாளரைப் போன்று சம்பந்தமே
இல்லாமல் ஒப்பீடு செய்யவில்லை.
ஒரு
உரையின் போது இவரிடத்தில் ஜூம்ஆவில் இரண்டு பாங்கு சொல்லப்படுவது குற்றமில்லையா? தாங்கள்
அமர்ந்து பேசும் இந்த பள்ளியில் அவ்வாறு சொல்லப்படுகிறதே என்ற தொனியில் கேள்வி கேட்கப்பட்ட
போது அதுபற்றி முக்கி முனகி பதில் சொல்லும் போது சம்பந்தமே இல்லாமல் அதை விட பெரிய
பாவம் ஹதீஸ்களை மறுப்பதுதான்? என்று ஒப்பீடு செய்தாரே அது போன்ற ஒப்பீடல்ல
இது.
நாம்
ஏன் இந்த ஒப்பீட்டைச் செய்தோம் என்றால்
பெரும்
பாவம் செய்தவர்களை முஃதஸிலாக்கள் காஃபிர்கள் என்று ஒரேயடியாகத் தீர்ப்பளித்து விடவில்லை.
மாறாக காஃபிரும் அல்ல,
முஃமினும் அல்ல என்ற கூறு கெட்ட தீர்ப்பையே அளித்திருந்தார்கள்.
முஃதஸிலாக்களின்
முட்டாள்தனமான இத்தீர்ப்பை உரிய சான்றுகளுடன் மக்களுக்குத் தெளிவுபடுத்தினாலே போதுமானது.
அதை
விட்டு ஹஸன் பஸரீ (ரஹ்) வாஸில் பின் அதாவை இந்த ஒன்றுக்காகவே தனது சபையிலிருந்து விலக்கி
வைத்ததை ஏதோ அல்லாஹ்வின் தூதர் விலக்கி வைத்ததைப் போன்று முஸ்லிம் சமூகம் கருதியது
சரியானது அல்ல என்பதை உணர்த்தவும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் விலக்கி வைக்கும்
அளவு இவர்களின் இந்தத் தீர்ப்பு இணைவைப்பை விட பயங்கரமானது அல்ல என்பதைப் பதியவுமே
நாம் இந்த ஒப்பீட்டை செய்திருந்தோம்.
(இந்தத் தீர்ப்புக்குப் பிறகு
இன்னும் பல வழிகேடுகள் அவர்களிடம் தோன்றிவிட்டன, அவை முஸ்லிம் கூட்டமைப்பிலிருந்து
அவர்களைத் தனிப்படுத்த போதுமான ஒன்றே என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை)
இக்கருத்தை
அதில் எழுதியமைக்காகவும் சகோ. பி.ஜேவின் மீது பின்வருமாறு நஞ்சை கக்குகின்றார்.
குர்ஆன்
வசனங்களை ஒடித்து நபிமொழிகளை மறுத்து இவர் கூறும் சுயக்கருத்தை யாராவது எதிர்த்தால்
அவரை ஜமாஅத்தை விட்டும் விலக்குவதும் சமுதாயத்தில் அவரைக் கேவலப்படுத்த முயற்சிப்பதும்
சகோதரர் பி.ஜே அவர்களின் இயல்பாகி விட்டது. சகோதரர் பி.ஜேவிற்கு மாற்றுக் கருத்து சொன்னால்
நம்மை ஒரு வழி செய்துவிடுவார் என்ற பயத்தை பரவலாக ஏற்படுத்தியுள்ளார். இந்த லட்சணத்தில்
நான் சொல்வதை எவரும் எதிர்க்கக் கூடாது என்பது போல் ஹஸன் பஸரீ நடந்து கொண்டார் என விமர்சிக்கும்
தகுதி இவருக்கு இருக்கின்றதா?
என்று
அதில் கேட்கிறார்.
பி.ஜேவைப்
பற்றி பேச மட்டும் இவருக்கு தகுதி உண்டா?
ரிவர்ஸ்
கியர்
முதலில்
ஆய்வு செய்து ஒரு புத்தகம் எழுதி மக்களிடையே பரப்புவாராம்.
சிறிது
காலத்திற்குப் பிறகு அதை வாபஸ் வாங்கி விடுவாராம்.
திரும்ப
மறுபடியும் ஆய்வு செய்து அதற்கு மாற்றமாக இன்னொரு புத்தகம் எழுதுவாராம். அதையும் விற்பனை
செய்வாராம். ஏனிந்த மாற்றம்? என்று கேட்டால் ஆய்வு என்பாராம்.
ஒரு
சில நபிமொழிகள் குறித்தோ,
விவகாரங்கள் குறித்தோ முன்பு சொன்ன கருத்தை மாற்றிக் கொண்டால்
அதை ஆய்வு எனலாம்.
ஒரு
அமைப்பில் இருக்கும் போது அறிவிப்பாளர் தொடர் சரியான செய்தி குர்ஆனுக்கு முரண்படும்.
அதை ஏற்க கூடாது
சூனியம்
என்பது பித்தலாட்டமே,
பால்குடி
செய்தி ஆபாசமே
குர்ஆனுக்கு
முரண்படும் படி பல செய்திகள் உள்ளது
பிறையைக்
கணிக்கக் கூடாது
பிறையைப்
பார்த்தே நோன்பு - பெருநாள் முடிவு செய்ய வேண்டும்
ஜகாத்
ஒரு பொருளுக்கு ஒரு முறை போதுமானதே
நபித்தோழர்களின்
தனிப்பட்ட கருத்து மார்க்கமாகாது
இத்தகைய
நிலைப்பாட்டில் இருந்து விட்டு அந்த அமைப்பை விட்டு வெளியேறிச் சென்றதும்
அறிவிப்பாளர்
தொடர் சரியான செய்தி குர்ஆனுக்கு முரண்படாது அதை ஏற்க வேண்டும்
சூனியம்
என்பது உண்மையே
பால்குடி
செய்தியில் ஆபாசமில்லை
குர்ஆனுக்கு
முரண்படும் படி எந்தச் செய்தியும் இல்லை
ஜகாத்
ஒரு பொருளுக்கு வருடா வருடம் கொடுக்க வேண்டும்.
இப்படி
அனைத்திலிருந்தும் பின்வாங்குகிறார் என்றால் இதற்குப் பெயர் ஆய்வு என்பதா? அல்லது
சுயநலம் என்பதா?
பார்ப்போருக்கு
எத்தகைய எண்ணம் தோன்றும் என்பதை நியாயவான்கள் சிந்தித்துப் பார்க்கட்டும்.
இத்தகைய
நபர் விஷயத்தில் சம்பந்தப்பட்ட அவர் என்ன முடிவை எடுப்பார் என்பதையும் அவர் சற்று யோசிக்கட்டும்.
இப்படி
டோட்டலாக ரிவர்ஸ் செல்லும் அளவு இவர் செய்தால் அதற்கு பெயர் ஆய்வு. அதுவே அறிஞர் பி.ஜே
சான்றுகளுடன் ஒரு கருத்தை ஆய்வு செய்து சொன்னால் குர்ஆன் வசனங்களை ஒடிக்கிறார், நபிமொழிகளை
மறுக்கிறார். சுய கருத்துக்களைப் புகுத்துகிறார் என்று விமர்சித்தால் அதில் நியாயம்
துளியும் இல்லை என்பதை அறிவுடையோர் அறிவார்கள்.
மனமறிந்து
பொய்
அடுத்து
பி.ஜே தனக்கு மாற்றுக் கருத்து சொன்னவர்களை ஜமாஅத்தை விட்டும் விலக்கி விடுவாராம்.
மக்களிடையே கேவலப்படுத்தி விடுவாராம். இது தான் பி.ஜேவின் இயல்பாம்.
மனமறிந்து
பொய் சொல்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
இக்கட்டுரையாளரே
ஜமாஅத்தை விட்டும் விலகி சென்ற பிறகு பேசிய உரைகளில் நான் சொன்னதன் பிறகு பி.ஜெ இக்கருத்தை
மாற்றியுள்ளார் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
இப்படி
தவ்ஹீத் ஜமாஅத்தின் மற்ற அறிஞர்கள் சொல்லும் கருத்து சரியானதாகவும், வலுவானதாகவும்
இருந்தால் பீஜே தன் கருத்தை மாற்றிக் கொள்ளத் தயங்க மாட்டார். பல நேரங்களில் மாற்றியுள்ளார் என்பதற்கு அவரின் வாக்குமூலமே
சான்றாகவுள்ளது.
ஜமாஅத்தை
விட்டு வெளியேற்றப்பட்டவர்களுக்கு இவ்விடத்தில் வக்காலத்து வாங்கும் கேவலத்தையும் செய்கிறார்.
மக்கள்
பொருளாதாரத்தைக் கொள்ளையடித்தவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்
பாலியல்
சேட்டை செய்தவர்கள் மக்கள் மத்தியில் கேவலப்பட்டார்கள்.
இத்தகைய
ஜென்மங்களை ஜமாஅத்தை விட்டு வெளியேற்றினால் அதற்கு இவர் ஏன் வக்காலத்து வாங்குகிறார்
என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.
இத்தகையவர்களை
ஜமாஅத்தை விட்டு வெளியேற்றாமல் அவர் இப்போது தஞ்சம் அடைந்திருக்கும் - புகலிடம் பூண்டிருக்கும்
அமைப்பைப் போன்று அவர்களுக்கு உயர் பதவிகளும் பொறுப்புகளும் கொடுக்க வேண்டும் என்கிறாரா?