16. இணை கற்பித்தல் – நபிகளாரின் பிரார்த்தனைகள்
உரை: பி.
ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்:
ரூபான் எம்.ஐ.எஸ்.சி.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாளைக்கு எழுபது தடவைக்கு மேலாக அல்லாஹ்விடத்தில்
பாவமன்னிப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள் என்ற செய்தியைப் பார்த்தோம்.
அதே போன்று
ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் ஒரு
துஆவை அதிகமதிகம் ஓதுபவர்களாக இருந்தார்கள். அந்த துஆவை நாம் பார்த்தால் முன்பின்
பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனை ஓதத் தேவையே இல்லை
என்று நாம் நினைக்கின்ற அளவுக்கு இறையச்சத்துடன் கூடிய ஒரு துஆவாக இருக்கும்.
என் இறைவா!
என் குற்றங்களையும், என் அறியாமையையும், என்
செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னைவிட
நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச்
செய்ததையும், வேண்டுமென்றே
செய்ததையும், அறியாமல்
செய்ததையும், அறிந்து
செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.
இறைவா!
நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச்
செய்ததையும், பகிரங்கமாகச்
செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு
ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.
நூல்:
புகாரி 6398, 6399
நாம்
இன்றைக்கு அவ்லியாக்கள், மகான்கள் என்றால் அவர்கள் பாவம்
செய்யமாட்டார்கள். அவர்களிடத்தில் பாவங்கள் நிகழுமா? அவர்கள் பாவங்கள் செய்வார்களா? அவர்களுக்கு
மறதி வருமா? அவர்களுக்கு
அறியாமை வருமா? அவர்கள்
வேண்டுமென்றே ஏதேனும் பாவங்கள் செய்வார்களா? அவர்கள் அவற்றையெல்லாம் விட்டு விதிவிலக்கு
பெற்றவர்களாயிற்றே! அந்த மாதிரி தன்மைகளெல்லாம் அவர்களுக்குக் கிடையாதே! என்று
நினைத்து வைத்திருக்கிறோம்.
ஆனால் நபி
(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் முறையிடுகிறார்கள். அதுவும் இந்த முறையீட்டை
மக்களுக்குக் கேட்கும் அளவுக்கு அத்தஹிய்யாத் அமர்வில் சப்தமாக கேட்கிறார்கள்.
நானும் மனிதன் தான் என்னிடமும் தவறுகள் நிகழும். மறதியாகவும் தவறு செய்து
விடுவேன். வேண்டுமென்றும் தவறு செய்து விடுவேன். கேலியாகவும் தவறு செய்து
விடுவேன். எல்லாவிதமான தவறுகளும் என்னிடம் நிகழும். பாவங்களை மன்னிப்பவன் உன்னைத்
தவிர வேறுயாருமில்லை. எனவே நீ என்னுடைய அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடு என்று
கேட்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், அனைத்து
நபிமார்களும் அனுப்பப்பட்டதன் நோக்கமே அனைவரும் அல்லாஹ்விடத்தில் சரணடைந்து விட
வேண்டும். எல்லாக் காரியங்களையும் அவனிடத்தில் ஒப்படைத்து விட வேண்டும். எல்லாக்
காரியங்களுக்கும் அல்லாஹ்விடத்தில் உதவி தேட வேண்டும் என்பதற்காகத் தான்.
இவ்வாறுதான்
அல்லாஹ்வும் கட்டளையிட்டிருக்கின்றான்.
வணக்கத்தை
அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை
நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு
வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.
அல்குர்ஆன்
98:5
ஆக
நபிமார்களுக்கே இந்த நிலை என்றால் மகான்கள், அவ்லியாக்கள் எல்லாம் நபிமார்களை விட உயர்ந்த
நிலையை அடைந்து விட முடியுமா? அவர்கள் பாவம் செய்வதை விட்டும் விதிவிலக்கு
பெற்றவர்களாக முடியுமா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நபிகளார் சந்தித்த சோதனைகள்
நபி (ஸல்)
அவர்கள் மக்காவில் இருந்த போது ஆரம்ப காலத்தில் பலவிதமான கஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும்
ஆளானார்கள். அதில் ஒரு முக்கியமான நிகழ்வு என்னவென்றால், நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்து விட்டு கஅபத்துல்லாவிற்குச் சென்று தொழுகை
நடத்துவார்கள். கஅபத்துல்லாஹ்வில் சிலைகள் இருந்தாலும் அது நமக்கு சொந்தமான
பள்ளிவாசல் என்ற ஓர் உரிமையுடன் அதில் தொழுது வந்தார்கள்.
ஒருநாள்
நபியவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது, இன்று முஹம்மதுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்
என்ற திட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தது. நபியவர்கள் ஸஜ்தாவிற்குச் சென்றவுடன்
தாங்கள் மறைத்து வைத்திருந்த ஒட்டகக் குடலை நபியவர்களின் முதுகில் வைத்தனர்.
அந்தக் குடல் அதிக பாரமாக இருந்ததால் நபியவர்களால் எழ முடியவில்லை. நபியவர்கள்
சிரமப்படுவதைப் பார்த்து எதிரிகள் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது
தான் நபியவர்களுக்கு, இவர்கள் ஏற்கனவே திட்டம் தீட்டித் தான் இதனைச்
செய்துள்ளார்கள் என்பது தெரியவந்தது.
இதைக்
கேள்விப்பட்ட நபியவர்களுடைய மகள் பாத்திமா (ரலி) அவர்கள் தன்னுடைய தந்தை
சிரமப்படுவதைப் பார்த்து அந்தக் குடலை அப்புறப்படுத்துகிறார்கள். உடனே நபியவர்கள்
ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தி ஒரு துஆச் செய்கிறார்கள். அந்தச் சம்பவம்
பின்வருமாறு:
நபி (ஸல்)
அவர்கள் கஅபதுல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும்
அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து "இன்ன
குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப் பையைக் கொண்டு வந்து முஹம்மத்
ஸஜ்தாச் செய்யும் போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?' என்று
கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி
(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வதைப் பார்த்ததும் அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில்
போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால் அதைத் தடுத்து
நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு
அமர்ந்திருந்த இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி
(ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். அப்போது
ஃபாத்திமா (ரலி) அங்கே வந்து, நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது
போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள்
தங்களின் தலையை உயர்த்தி "யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக' என்று
மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்குக் கேடாக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது
குறைஷிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், "அந்நகரில்
கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்' என அவர்களும் நம்பியிருநார்கள்.
பின்னர்
நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்)
பெயர்களைக் குறிப்பிட்டு, "யா அல்லாஹ்! அபூ ஜஹ்ல், உத்பா
இப்னு ரபீஆ, ஷைபா இப்னு
ரபீஆ, வலீத் இப்னு
உத்பா, உமய்யா
இப்னு கலப், உக்பா
இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக!' என்று கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நான் மறந்துவிட்டேன். என்னுடைய உயிர்
எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி (ஸல) அவர்க்ள குறிப்பிட்ட
அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் "கலீப்' என்ற பாழ் கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை
பார்த்தேன்''
என
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.
நூல்:
புகாரி 240
இந்தச்
சம்பவத்தில், எதிரிகள்
இழைத்த இந்த மாதிரியான அவமானத்திற்கு நபியவர்களுக்கு மட்டும் அபார சக்தி இருந்தால், அதிகாரம்
இருந்தால், ஏதேனும்
மாய மந்திரம் தெரிந்திருந்தால் இந்தக் கஷ்டம் வந்திருக்குமா? அதுமட்டுமல்ல!
அல்லாஹ் அவர்களுக்கு சக்தியை - பவரைக் கொடுத்திருந்தால் அத்தனை பேருக்கும் கை, கால்கள்
விளங்காமல் போயிருக்குமே! ஆனால் அப்படி ஏதேனும் நடந்ததா? அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை பார்த்து
எதிரிகள் கைகொட்டி சிரித்துக் கொண்டு தான் இருந்தார்கள்.
நபியவர்கள்
அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்த உடனேயே அவர்கள் அழிந்து
போய்விட்டார்களா? துஆ செய்த பிறகு அவர்களுடைய (எதிரிகளுடைய) கை
தான் ஓங்கியது. மேலும் மேலும் நபியவர்களுக்குத் துன்பங்களையும் தொல்லைகளையும்
அதிகளவில் கட்டவிழ்த்துவிட்டனர்.
அதற்குப்
பிறகு நபியவர்களை ஊரை விட்டு விரட்டுவதிலும் அவர்கள் தான் வெற்றி பெற்றார்கள்.
நபியவர்களால் அதனை வெல்ல முடியவில்லை. அத்தனை நபித்தோழர்களும் ஊரை விட்டு ஹிஜ்ரத்
செய்து வேறு நாட்டிற்குத் தஞ்சம் புகுந்தார்கள். அவர்களுடைய சொத்து, செல்வங்களை
சூறையாடினார்கள். அதிலும் எதிரிகளின் கை தான் ஓங்குகிறது. ஊரை விட்டு
நபிகளார் சென்ற பிறகும் அவர்களைக் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால்
இவ்வளவும் செய்த பிறகும் கூட நபிகளார் அவர்களுக்கு எதிராகச் செய்த பிரார்த்தனைக்கு
எந்தவித விளைவும் ஏற்படவில்லை. அல்லாஹ் அவர்களை உடனே தண்டிக்கவுமில்லை.
நீ
என்னிடம் பிரார்த்தித்தால் உடனே அவர்களை நான் தண்டிக்க வேண்டுமா? அவர்களைத்
தண்டிப்பதும் தண்டிக்காமல் இருப்பதும் என்னுடைய அதிகாரத்திற்குட்பட்டது. அவர்களை
உடனேயும் தண்டிப்பேன். அவர்களை சிறிது விட்டுப் பிடிக்கவும் செய்வேன் என்று அவர்களைத்
தண்டிக்காமல் விட்டுவிடுகிறான்.
நபிமார்கள்
அனைவரும் மனிதர்களாகத் தான் இருந்தார்கள். மனித சக்தி தான் அவர்களுக்கு இருந்தது.
ஒரு மனிதனுக்கு என்ன ஆற்றல் இருக்குமோ அதற்கு மேற்கொண்ட ஆற்றல் அவர்களிடத்தில்
இருந்ததில்லை. நபியவர்களும் கூட தன்மீது வைக்கப்பட்ட குடலை தன்னுடைய சக்தியைப்
பயன்படுத்தி, தானே
அப்புறப்படுத்துவதற்குக் கூட ஆற்றல் இல்லாமல் இருந்தார்கள்.
நபி (ஸல்)
அவர்கள் செய்த பிரார்த்தனைக்காக அல்லாஹ் அவர்களை உடனே தண்டித்திருந்தால் அந்த
மக்கள், அல்லாஹ்வை
வணங்குவதற்குப் பதிலாக, அவனை பயப்படுவதற்குப் பதிலாக, "இம்முஹம்மதுக்கு
ஏதோ சக்தி இருக்கிறது; அதனால் தான் இவரை நோவினை செய்ததற்காக உடனே
அவர்களை அழித்து விட்டார்' என்று நபிமார்களை வணங்கும் மக்கள்
உருவாகியிருப்பார்கள். நபிமார்களுக்கு எந்த அற்புதமும் செய்ய ஆற்றல் இல்லாத போதே
பல சமுதாய மக்கள் நபிமார்களைக் கடவுள்களாக ஆக்கியிருக்கிறார்கள்.
அறிவியல்-
உறக்கம் ஓர் அற்புதம்
கடவுளையும்
மனிதனையும் பிரிக்கின்ற பல காரணிகள் உள்ளன. அவற்றில் பசி, தூக்கம், மறதி ஆகியன
முக்கியமான காரணிகள். படைத்த அல்லாஹ் இந்த பலவீனமான காரணிகளை விட்டும்
தூய்மையானவன். இதை நினைவுபடுத்தும் விதமாகவும் எல்லாம் வல்ல இறைவனை என்றும்
நினைக்கும் விதமாகவும் சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் தூய்மையானவன் - என்று நாம்
அடிக்கடி நமது
நாவுகளை நனைத்துக் கொண்டிருக்கின்றோம். உயிர்ப் பிராணிகள் அத்தனையும்
உறக்கத்துக்கு விதிவிலக்கல்ல! எல்லாம் உறங்கிக் கொண்டிருக்கின்றன.
மதுரையில் உள்ள
பிரபலமான கோவிலுக்கு மீனாட்சி அம்மன் என்று பெயர்! நீரில் நீந்தும் மீனுக்கு
நித்திரை கிடையாது. அது போன்று நித்திரையின்றி மதுரையை மட்டுமல்ல! இத்தரை
முழுவதும் விழித்திருந்து ஆட்சி செய்வதால் அந்தக் கடவுளுக்கு மீனாட்சி என்று
பெயர். இது தவறு என்பதைப் பின்வரும் அறிவியல் உண்மை தெளிவுபடுத்துகின்றது.
நீந்தும் மீனுக்கும் நித்திரை உண்டு
உண்மையில்
மீனுக்கு தூக்கம் இல்லையா என்று பார்க்கும் போது மீனுக்கும் தூக்கம் உண்டு என்றே
அறிவியல் கூறுகிறது. இமைகள் மூடியிருப்பதை வைத்து மனிதர்கள் தூங்குவதை அறிந்து
கொள்ள முடியும். மீன்கள் தூங்குவதை எப்படி அறிய முடியும்?
நம்மைப்
போன்று மீன்களுக்கு இமைகள் உள்ளனவா என்று வெளிப்படையாகப் பார்த்தால் இமைகள் இல்லை
என்றே முடிவு செய்ய முடியும். ஆனால் மீன்களுக்கு விழித்திரைகள் உள்ளன. அவை கண்ணாடி
போன்று இலைமறை காயானவை ஆகும். மெல்லிய இமைகளை மூடிக்கொண்டு அந்தக் கயல்களும்
நீரில் கண்ணயர்கின்றன.
அவ்வாறு
கண்ணயரும் போது நீரில் அவை அந்தரமாக ஆடாமல் அசையாமல் சலனமின்றி நிற்கின்றன; அல்லது
மனிதர்களைப் போன்று தரையில் மண்ணோடு மண்ணாக ஒட்டி படுத்துக்கொள்கின்றன. தண்ணீரில்
இழுப்பு அதிகமாக இருக்குமேயானால் நீரின் அடியில் கிடக்கும் மரத் துண்டுகளில்
அல்லது கற்பாறைகளில் ஒதுங்கி உறங்குகின்றன. ஆனால் இவற்றை மீன்கள் உறங்குவதற்குரிய
உறுதியான அடையாளங்களாக எடுத்துக் கொள்ள முடியாது. அவை உறங்குவதை உறுதி செய்ய ஆய்வு
ரீதியிலான அணுகுமுறைகள் உள்ளன.
மீன்கள்
ஏராளமான அளவு தண்ணீரை உட்கொள்கின்றன. வாய் வழியாக உட்கொள்கின்ற அந்தத் தண்ணீரைத்
தாடையினால் அழுத்துகின்றன. தாடையினால் அழுத்தப்படுகின்ற அந்தத் தண்ணீர் சீப்பு
போன்று அமைந்திருக்கும் செவுள் போன்ற பற்கள் வழியாக வெளியேறுகின்றது. இந்தக்
கட்டத்தில் தான் தண்ணீரில் இருந்து ஆக்ஸிஜன் பிரிக்கப்பட்டு மீன்களின் இரத்தத்
துளைகளிலும் துவாரங்களிலும் செலுத்தப்படுகின்றது. இதேவேளையில் கார்பன்டை ஆக்ஸைட்
வெளியேற்றவும் படுகின்றது. இந்த பண்டமாற்றமும் பரிமாற்றமும் மீன் சுவாசத்தின் போது
மின்னல் வேகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
இந்த
ஏக்கம் கூடுதல் வேகத்தில் நடக்கும் போது அது விழித்துக் கொண்டிருக்கிறது என்றும்
அந்த வேகம் குறையும் போது அது உறங்கிக் கொண்டிருக்கிறது என்று அறிவியல் உறுதி
செய்கின்றது. (தி ஹிந்து 07/12/2007 அறிவியல் பகுதி).
மீனுக்கு
உறக்கம் இல்லை அதனால் அது கடவுள் என்று மக்களின் ஒரு சாரார் முடிவு செய்துள்ளனர்.
இந்தக் கண்ணோட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு தான் மீனாட்சி என்று பெயர் அந்த
தெய்வத்துக்குப் பெயர் சூட்டப்படிருகின்றது. இது தவறு என்று சுட்டிக்காட்டவே இந்த
அறிவியல் உண்மை இங்கு தரப்படுகிறது.
ஒருபோதும்
எந்த ஓர் உயிர்ப்பிராணியும் உறக்கம் இல்லாமல் உயிர் வாழ முடியாது. அதனால் அது ஒரு
போதும் கடவுள் ஆக முடியாது என்பதற்கும் இந்த அறிவியல் உண்மை எடுத்துக்காட்டாகும்.
உறக்கம் இல்லாத உயர் நாயன்
உறக்கம்
என்பது மனிதனையும் இறைவனையும் பிரித்துக்காட்டும் ஒரு அளவுகோல் என்பதால் எல்லாம்
வல்ல அல்லாஹ் தனக்கு சிறு உறக்கமோ ஆழ்ந்த உறக்கமோ இல்லையென்று தெளிவாக
மறுக்கின்றான்.
அல்லாஹ்வைத்
தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.
அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.
(அல்குர்ஆன் 2:255)
ஆனால்
மனிதர்களைக் கண்டிப்பாக தூக்கம் ஆக்கிரமிக்கும். அது அவனை அமுக்கி படுக்க வைத்து
விடும். இந்தத் தூக்கத்தை இறைவனோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது மனிதனுக்கு
பலவீனம் ஆகும். அதே சமயம் மனிதனுடன் அதை இணைத்துப் பார்க்கும் போது அவனுக்கு
அதுதான் பலமும் சிரமப் பரிகாரமும் ஆகும்.
அவனே இரவை
உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை
இயங்குவதற்காகவும் அமைத்தான்.
(அல்குர்ஆன் 25:47)
உங்கள்
தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம்.
(அல்குர்ஆன் 78:9)
அல்லாஹ்
மனிதனின் தூக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது அதை ஓர் ஓய்வாகவும் சிரமப்
பரிகாரமாகவும் ஆக்கி வைத்ததாகக் கூறுகின்றான்.
இரவிலும், பகலிலும்
நீங்கள் உறங்குவதும், அவனது அருளைத் தேடுவதும் அவனது சான்றுகளில்
உள்ளவை. செவியுறும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 30:23)
இந்த
வசனத்தில் உறக்கம் ஓர் அற்புதம் என்று குறிப்பிடுகின்றான். குவைத்தில் அரப் டைம்ஸ்
என்ற பத்திரிகை 19.10.2013 இதழில் அமெரிக்காவின் ஆய்யை மேற்கோள் காட்டி
ஒரு துணுக்கை வெளியிட்டுள்ளது.
பெரிய
கட்டிடத்தின் விளக்குகளை அணைத்துவிட்டு அதன் வாயிற்காப்பாளன் அதன் முற்ற வெளிகளில்
குவிந்து கிடக்கும் குப்பைக் கூழங்களை கூட்டிப் பெருக்கி, துப்புரவு
செய்வது போன்று தூக்கம் மூளையிலிருந்து கழிவுகளை அகற்றி துப்புரவு செய்கின்றது.
அத்துடன் சில நோய்கள் வராமல் தடுத்துக் காக்கின்றது. மக்கள் ஏன் தங்கள்
வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதியை உறக்கத்தில் கழிக்கின்றனர் என்ற ஆய்வு
வினாவுக்கு அறிவியல் இதழ் (நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங் ஓர்ன்ழ்ய்ஹப்) இவ்வாறு
பதிலளிக்கின்றது. வயோதிக பருவத்தில் ஏற்படும் டிமின்ஷியா (உங்ம்ங்ய்ற்ண்ஹ) என்ற
நினைவு மறதி நோய் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு நோய்க்கு தூக்கம் தான் அருமருந்து
என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. அல்ஸீமியர்ஸ் (ஆப்க்ஷ்ட்ங்ம்ங்ண்ழ்’ள்
உண்ள்ங்ஹள்ங்) என்ற நினைவு மறதி நோய் ஏற்பட காரணமே அமிலாய்ட் பீட்டா
(ஆம்ஹ்ப்ர்ண்க் இங்ற்ஹ) என்ற புரதம் தான். இந்த புரதச் சத்து தான் மூளையில் இருந்து
நீக்கப்படும் கழிவு என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.
அல்குர்ஆன்
தூக்கத்தை ஓர் ஓய்வு என்று மட்டும் நிறுத்தாமல் ஓர் அற்புதம் என்று கூறுவதன்
உண்மையினை இந்த ஆய்வு நமக்குத் தெளிவாக விளக்குகின்றது.
இன்று
உலகில் இன்ஸோமேனியா என்ற உறக்கமின்மை நோயால் பலர் அதிகமான அளவில்
பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி மனநோயாளியாக
இருக்கின்றனர். இதற்காக வேண்டி தூக்க மாத்திரைகளை உட்கொண்டும் தூக்கமின்றி
தவிக்கின்றனர். ஆனால் அல்லாஹ் நமக்கு இது போன்ற சிரமம் இன்றி உறக்கத்தை
அளித்திருக்கின்றான். இந்த உறக்கம் என்பது பாக்கியம் ஆகும். அதனால் தான் நபி (ஸல்)
அவர்கள் உறங்கி முடிந்து எழுந்ததும் இறைவனுக்கு நன்றி செலுத்தியிருக்கின்றார்கள்.
நபி (ஸல்)
அவர்கள் (உறக்கத்திலிருந்து) எழும்போது "அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத
மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்'' "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை
இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து
வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது' என்று கூறுவார்கள்.
(புகாரி 6312)
தூங்கிவிட்டு
எழுந்ததும் நாமும் இந்த வார்த்தைகளை நாள்தோறும் சொல்லி நாயனுக்கு நன்றி செலுத்தும்
நன்மக்களாக ஆவோமாக!