4:17. அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி
மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ்
மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
4:18. தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில்
"நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்'' எனக் கூறுவோருக்கும், (ஏகஇறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை.384அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத்
தயாரித்துள்ளோம்.
4:32. சிலரை விட சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில்
பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு
அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ்
ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.
4:36. அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக்
கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும்,
உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும்,206 உங்கள் அடிமைகளுக்கும்107 நன்மை செய்யுங்கள்!
பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ்
நேசிக்க மாட்டான்.
4:37. (தாமும்) கஞ்சத்தனம் செய்து, மக்களையும் கஞ்சத்தனம் செய்யத் தூண்டி, தமக்கு அல்லாஹ் அளித்துள்ள அருளை
மறைக்கும் மறுப்பாளர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
4:38. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாது மக்கள்
மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு
ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்.
4:39. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி தமக்கு அல்லாஹ்
வழங்கியதை (நல்வழியில்) செலவிட்டால் அவர்களுக்கு என்ன (கேடு) ஏற்பட்டு விடும்? அல்லாஹ் அவர்களை அறிந்தவனாக இருக்கிறான்.
4:49. தம்மைத் தாமே பரிசுத்தவான்கள் எனக் கருதிக் கொள்வோரை
நீர் அறியவில்லையா? மாறாக, தான் நாடியோரை அல்லாஹ்வே
பரிசுத்தமாக்குகிறான். (அவர்கள்) அணுவளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
4:50. "அவர்கள் அல்லாஹ்வின் மீது எப்படி
இட்டுக்கட்டுகிறார்கள்!" என்பதைக் கவனிப்பீராக! பகிரங்கமான பாவத்தில் இதுவே
(அவர்களை நரகில் தள்ள) போதுமானது.