ஷியாக்கள் ஓர் ஆய்வு 6 - முஹம்மது
நபிக்குத் தெரியாதது முஹய்யித்தீனுக்குத் தெரிகிறது?
அபூஉஸாமா
ஷியாக்கள் பற்றிய
இந்த ஆய்வுத் தொடரில், ஷியாக்களின்
கொள்கைகளை அப்படியே உரித்து வைத்திருக்கும்
தமிழகத்தின் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்பவர்களைப் பற்றியும், அவர்கள்
வேதமாக ஓதி வரும் மவ்லிது கிதாபுகள் எப்படியெல்லாம் இஸ்லாத்திற்கு
முரணான வகையில் ஷியாக்களை ஒத்திருக்கின்றன என்பது பற்றியும் பார்த்து
வருகிறோம்.
குறிப்பாக முஹ்யித்தீன்
அப்துல் காதிர் ஜீலானி அவர்களைக் கடவுள் நிலைக்குக் கொண்டு செல்லும்
மவ்லிது வரிகளைக் கடந்த இதழ்களில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இப்போது
பார்ப்போம்.
முஹம்மது நபி (ஸல்)
அவர்கள் மக்காவில் இருக்கும் வரை காஃபிர்கள் என்ற ஒரு சாராரை மட்டும்
தான் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் மதீனா வந்ததும்யூதர்கள், கிறித்தவர்கள், மக்கத்துக்
காஃபிர்கள் என்று அவர்களுக்குரிய எதிர்ப்புகள்
மும்முனையானது.
இம்மூன்று அணியினரின்
எதிர்ப்பும் வெளிப்படையானது. இவர்கள் அல்லாத இன்னொரு மறைமுக அணியும்
இருந்தது. அந்த அணி தான் நபி (ஸல்) அவர்கள் எதிர்கொள்வதற்கு மிகவும்
சிரமமான அணியாக இருந்தது. அதற்குக் காரணம் நான்காவது அணி என்று அவர்களை
எதிரணியில் சேர்க்க முடியவில்லை;நம்பிக்கைக்குப்
பாத்திர மான முஸ்லிம்களின்
அணியிலும் அவர்களைச் சேர்க்க முடியவில்லை.
ஏன்? இவர்கள்
முஸ்லிம்களிடம் வந்தால் தங்களை முஸ்லிம்கள் என்றுஅடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
காஃபிர்களிடம் போய் தங்களைக் காஃபிர்கள்என்று அடையாளப் படுத்திக் கொண்டார்கள். இது
தான் நபி (ஸல்) அவர்கள் சந்தித்த
சாராரில் அபாயகரமான அணியினராய் இருந்தனர். இவர்களை எதிர் கொள்வதற்கு
நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் அவசியமாய் தேவைப்பட்ட ஒன்று, உள்ளத்தில்
உள்ளதை அறியும் ஆற்றல்! அல்லாஹ் இந்த ஆற்றலை நபி
(ஸல்) அவர்களுக்கு
வழங்கவில்லை.
உங்களைச் சுற்றியுள்ள
கிராம வாசிகளிலும், மதீனாவாசிகளிலும்
நயவஞ்சகர்கள் உள்ளனர். அவர்கள்
நயவஞ்சகத்தில் நிலைத்துள்ளனர். (முஹம்மதே!) அவர்களை நீர் அறிய மாட்டீர்!
நாமே அவர்களை அறிவோம். அவர்களை இரண்டு தடவை தண்டிப்போம். பின்னர் அவர்கள்
கடும் வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அல்குர்ஆன் 9:101
இந்த ஒரு ஞானம்
மட்டும் அவர்களுக்கு இருந்திருந்தால் அவர்கள் நயவஞ்சகர்களைஇனங்கண்டு
களையெடுத்திருப்பார்கள். அதற்குரிய வாய்ப்பை அல்லாஹ் அவர்களுக்கு அளிக்கவில்லை.
ஆனால் சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொள்வோர் வேதமாகக் கருதும்
முஹய்யித்தீன் மவ்லிதோ, அப்துல்
காதிர் ஜீலானிக்கு இந்த ஞானத்தைத் தாராளமாக
வழங்கி, பரவசப்படுகின்றது.
முஹ்யித்தீன்
மவ்லிதின் திமிர் பிடித்த திரு வாசகங்களைப் பாருங்கள்.
தெளிவான அல்லாஹ்வின்
ஆணையின் உறுதிப்பாட்டுடன் நான் கூறுகின்றேன்: பேசவைக்கப்படுகிறேன்; (அதனால்)
பேசுகிறேன். வழங்கப்படுகிறேன்; வினியோகிக்கிறேன்.
கட்டளையிடப்படுகிறேன்; (அதனால்)
காரியம் ஆற்றுகிறேன். செலவு
செய்ய வைக்கப்படுகிறேன்; (அதனால்)
செலவு செய்கிறேன்.
காப்புறுதி என் மீது
கட்டளையிடப்பட்டிருக்கின்றது. என்னை வெறுப்பவருக்கும் (என்னைத்) தொடர்தல்
உள்ளது. என்னை உண்மைப்படுத்துவதே உங்கள் வியாபாரத்தில் சிறந்தது. நீங்கள்
என்னைப் பொய்ப்பிப்பது இறுதி நாளின் விஷமாகும். உங்கள் அழிவிற்குக் காரணமாகும்.
உங்கள் மறு உலகில் வேதனையாகும்.
ஷரீஅத் என்ற
கடிவாளம் இல்லையெனில் நீங்கள் வீட்டில் என்ன சாப்பிடுகிறீர்கள்?உங்கள்
வீட்டில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்பதையெல்லாம்
நான் அறிவித்து
விடுவேன். நீங்கள் எனது முன்னிலையில் பளிங்குக் கண்ணாடி போல் இருக்கிறீர்கள்.
அதனால் உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அப்படியே பார்க்கிறேன்.
உங்கள் அந்தரங்கத்தில் உள்ளவற்றை நான் அப்படியே காண்கிறேன்.
இவ்வாறு
முஹ்யித்தீன் கூறியதாக அபுல் லதீப் அறிவிக்கின்றார்.
இது தான்
முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பெறும் வாசகம்.
இன்றைய தினம்
உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு
முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக
பொருந்திக் கொண்டேன்.
அல்குர்ஆன் 5:3
இந்த வசனம் வஹீ
நின்று விட்டது என்பதற்கான அல்லாஹ்வின் பிரகடனம். ஆனால் முஹ்யித்தீன்
தன்னிடம் அல்லாஹ் பேசுவதாக புருடா விடுகின்றார். (அவ்வாறு மவ்லித்
கூறுகின்றது) இவரை நம்பவில்லை எனில் அது உலக அழிவிற்குரிய காரணமாம்.
மறுமையில் வேதனையாம். இவ்வாறு கதையளக்கின்றது இந்த மவ்லிது!
இது முஹம்மத்
(ஸல்) அவர்களின் தூதுத்துவத்தில் முஹ்யித்தீனின் அத்துமீறியபிரவேசமாகும். நாம்
அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கும் அந்தச் செய்தி முஹ்யித்தீன்,அல்லாஹ்வின்
அதிகாரத்தில், ஆதிக்கத்தில்
வரம்பு மீறி அடியெடுத்து
வைப்பதாகும்.
வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அவன் அறிவான். நீங்கள்
மறைப்பதையும்,வெளிப் படுத்துவதையும்
அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.
அல்குர்ஆன் 64:4
உள்ளத்தில் உள்ளதை
அல்லாஹ்வே அறிவான் என்பதை இந்த வசனம் கூறுகின்றது.5:7, 8:43, 11:5, 28:69, 31:23, 29:10, 35:38, 39:7, 40:19, 42:24,
57:6, 67:13 ஆகிய வசனங்களும்
இதே கருத்தை எடுத்துரைக்கின்றன. இந்தப் பண்புகளைத் தான் முஹ்யித்தீன்
தனக்கு இருப்பதாகக் கூறுகின்றார். அல்லது அவரது பெயரால் இந்த மவ்லிது
பிதற்றுகின்றது.
உள்ளத்தில் உள்ளதை
அறியும் ஆற்றல் ஒரு கடுகளவு கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக்
கிடைத்திருந்தால் எத்தனையோ எதிரிகளை, இஸ்லாத்தின்
விரோதிகளை மிகவும்
எளிதில் கண்டுபிடித்துக் கதையை முடித்திருப்பார்கள். ஆனால்அவர்களுக்கு இந்த ஆற்றல்
அணுவளவும் கொடுக்கப்படவில்லை.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களின் அருமை மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறப்பட்ட
நிகழ்வு இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஆயிஷா
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமாரிடையே (எவரைப்
பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக்
குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டுவருகின்றதோ அவரைத்
தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள்.
இவ்வாறே அவர்கள்
மேற்கொண்ட (பனூ முஸ்தலிக் என்ற) ஒரு புனிதப் போரின் போது (பயணத்தில்
உடன் அழைத்துச் செல்ல) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப்போட்டார்கள். அதில் எனது
(பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே நான் அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்)
புறப்பட்டுச் சென்றேன். இது ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான்
எனது ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து
செல்லப்பட்டும், அதில் இருக்கும்
நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்பட்டும்
வந்தேன்.
நபி (ஸல்)
அவர்கள் எங்களுடன் அந்தப் போர் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தநிலையில் நாங்கள்
மதீனாவை நெருங்கிய போது, இரவு
நேரத்தில் (ஓரிடத்தில்)தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள். அப்போது நான்
(சிவிகையிலிருந்து) எழுந்து
(இயற்கை கடனை நிறைவேற்று வதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்துசென்றேன். என்
(இயற்கைத்) தேவையை நான் முடித்துக் கொண்ட பின் முகாமைநோக்கிச் சென்றேன். அப்போது
என் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தேன். (என்கழுத்திலிருந்த யமன் நாட்டு) ழஃபாரி நகர
முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து)
விட்டிருந்தது.
ஆகவே நான்
திரும்பிச் சென்று எனது மாலையைத் தேடலானேன். அதைத் தேடிக்கொண்டிருந்தது (நான்
படையினருடன் சேர விடாமல்) என்னைத் தாமதப்படுத்திவிட்டது. என்னை எடுத்துச் சென்று
ஒட்டகத்தில் வைக்கும் குழுவினர் என்சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு, அதைச் சுமந்து சென்று நான்சவாரி செய்து வந்த
என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டி விட்டனர்.
அந்தக் கால
கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர்.அவர்களுக்குச் சதை
போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவையே அவர்கள் உண்பார்கள். ஆகவே
சிவிகையைத் தூக்கிய போதும் அதைச் சுமந்த போதும் அது கனமில்லாமல் இருந்ததை
மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும் நான் வயது குறைந்த இளம் பெண்ணாக
இருந்தேன்.
அவர்கள் ஒட்டகத்தை
(முன்னே) அனுப்பி விட்டு நடக்கலானார்கள். படையினர்
சென்ற பிறகு (தொலைந்து
போன) எனது மாலை கிடைத்து விட்டது. நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு
வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்று விட்டிருந்தனர்.) அங்கு அவர்களில்
அழைப்பவரோ, பதில்
கொடுப்பவரோ எவரும் இருக்கவில்லை.
நான் ஏற்கனவே
தங்கியிருந்த இடத்தைத் தேடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு
படையினர் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில்
அமர்ந்திருக்க, என்
கண்ணில் உறக்கம் மிகைத்து விட, நான்
தூங்கி விட்டேன்.
படை புறப்பட்டுச்
சென்றதற்குப் பின்னால் (படையினர் தவற விட்டுச் சென்றபொருள்களை எடுத்துச்
செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமீ அத்தக்வானீ என்பவர் அங்கு
இருந்தார். நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அவர் காலையில் வந்தார். அவர் அங்கே தூங்கிக்
கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னைக்)
கண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப்
பார்த்திருந்தார். ஆகவே என்னைப் பார்த்ததும் அவர் அடையாளம் புரிந்து
கொண்டார்.
அவர் என்னை
அறிந்து கொண்டு,
"இன்னாலில்லாஹி
வ இன்னா இலைஹி ராஜிஊன் - நாம் அல்லாஹ்விற்கே
உரியவர்கள். மேலும் நாம் அவனிடமே திரும்பிச்செல்லவிருக்கின்றோம்'' என்று
கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். உடனே எனது முகத்திரையால் எனது
முகத்தை மறைத்துக் கொண்டேன்.அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் ஒரு வார்த்தை
கூடப் பேசவில்லை. அவர்"இன்னாலில்லாஹி
வ இன்ன இலைஹி ராஜிஊன்'' என்று
கூறியதைத் தவிர வேறெதையும் நான்
அவரிடமிருந்து கேட்கவுமில்லை.
பிறகு அவர்
விரைவாக தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக் கொள்ள வசதியாக) அதன்
முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் எழுந்து சென்று அதில்
ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டுநடக்கலானார். இறுதியில்
நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அப்போது அவர்கள் (மதிய
ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கிவிட்டிருந்தார்கள். (இப்போது
எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என்விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்து
போனார்கள். என் மீது அவதூறு செய்வதில்பெரும் பங்கு எடுத்துக் கொண்டிருந்தவன்
அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல்(எனும்
நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான்.
பிறகு நாங்கள்
மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து சேர்ந்து ஒரு மாத காலம் நான்நோயுற்று விட்டேன்.
மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு
பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நான்நோயுறும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் என்னிடம் வழக்கமாகக்காட்டுகின்ற பரிவை (இந்த முறை நான் நோய்வாய்ப்
பட்டிருந்த போது) அவர்களிடம்காண முடியாமல் போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
என்னைக் குறித்து
வெளியே பேசப்பட்டு வந்த அந்தத் தீய சொல்லில் ஒரு சிறிதும் நான் நோயிலிருந்து
குணமடைந்து வெளியே செல்லும் வரை எனக்குத் தெரியாது. அப்போது நான்
மிஸ்தஹின் தாயாருடன் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த மனாஸிஉ என்ற
பகுதியை நோக்கிச் சென்றோம்.
நாங்கள் இரவு
நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை
அமைத்துக் கொள்வதற்கு முன்னர் இவ்வாறு நாங்கள் புறநகர் பகுதிகளுக்குச்
சென்று கொண்டிருந்தோம். எங்களுடைய இந்த வழக்கம் முந்தைய அரபுகளின்
வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்கள்
அமைப்பதை நாங்கள் தொந்தரவாகக் கருதி வந்தோம்.
நானும் உம்மு
மிஸ்தஹும் சென்று கொண்டிருந்தோம். அவர் அபூ ருஹ்ம் பின் முத்தலிப் பின் அப்து
மனாஃப் அவர்களின் மகளாவார். அபூபக்ர் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியான
(ஸல்மா) பின்த் ஸக்ர் பின் ஆமிர் தான் உம்மு மிஸ்தஹின் தாயார் ஆவார்.
மிஸ்தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் முத்தலிப் என்பார் உம்மு மிஸ்தஹின்
மகன் ஆவார்.
உம்மு மிஸ்தஹும், நானும் எங்கள் இயற்கைத் தேவைகளை முடித்துக்
கொண்டு என் வீடு நோக்கித்
திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தன் ஆடையில் இடறிக்
கொண்டார். உடனே அவர், "மிஸ்தஹ்
நாசமாகட்டும்'' என்று (தன்
மகனைச் சபித்தவராகக்)
கூறினார். நான்,
"மிக மோசமான
சொல்லைச் சொல்லி விட்டீர். பத்ருப்
போரில் கலந்து கொண்ட ஒரு மனிதரையா ஏசுகின்றீர்?'' என்று
கூறினேன்.
அதற்கு அவர், "அம்மா!
அவர் என்ன சொன்னார் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா?'' என்று
கேட்டார். என்ன
சொன்னார்? என்று நான் கேட்க,அவதூறு
கற்பித்தவர்கள் சொன்ன
அந்தச் செய்தியை அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு, என் நோய் இன்னும் அதிகரித்து விட்டது.
நான் என்
இல்லத்திற்குத் திரும்பி வந்த போது, அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள்வந்து ஸலாம் கூறி விட்டு, "எப்படி
இருக்கிறாய்?'' என்று
கேட்டார்கள். அப்போது
நான், "என் தாய்
தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?'' என்று
கேட்டேன்.
உண்மையிலேயே அப்படி ஒரு
செய்தி நிலவுகின்றதா? என்று
விசாரித்து என் பெற்றோரிடம் உறுதி செய்து கொள்ள விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் எனக்கு அனுமதி அளித்தார்கள்.
நான் என் தாய்
வீட்டிற்குச் சென்று என் தாயாரிடம், "அம்மா!
மக்கள் என்னைப் பற்றிஎன்ன பேசிக் கொள்கின்றார்கள்'' என்று கேட்டேன். என் தாயார், "அன்பு
மகளே! உன் மீது
சொல்லப்படும் இந்த விஷயத்தைப் பற்றி பெரிது படுத்திக் கொள்ளாதே! அல்லாஹ்வின்
மீதாணையாக! சக்களத்திகள்
பலரும் இருக்க, தன்
கணவரிடம்பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணொருத்தியைக் குறித்து,அவளுடைய
சக்களத்திகள் அதிகமாக வதந்திகள் பேசத் தான் செய்வார்கள். அவ்வாறுபேசாமல் இருப்பது
மிகவும் குறைவேயாகும்'' என்று
கூறினார்கள்.
நான், "சுப்ஹானல்லாஹ்!
(அல்லாஹ் தூய்மையானவன்) இப்படியா மக்கள் பேசிக்கொள்கின்றார்கள்'' என்று
(வியப்புடன்) கேட்டேன். அன்றிரவு காலை வரை அழுதேன். என் கண்ணீரும் நிற்கவில்லை. உறக்கமும்
என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்த
போதும் அழுதேன்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை) பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை
கேட்பதற்காக அலீ பின் அபீதாலிப் அவர்களையும், உஸாமா பின்
ஸைத் அவர்களையும்
அழைத்தார்கள். அப்போது வஹீ (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா
அவர்கள், நான் நிரபராதி எனத் தாம் அறிந்துள்ளதையும் நபி
(ஸல்) அவர்களின்
குடும்பத்தார் மீது உள்ளத்தில் தான் கொண்டிருந்த பாசத்தையும்வைத்து ஆலோசனை
சொன்னார்கள். "அல்லாஹ்வின் தூதரே! தங்களுடைய துணைவியரிடம் நல்ல
குணத்தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை'' என்று
உஸாமா கூறினார்கள்.
அலீ அவர்களோ, "அல்லாஹ்வின்
தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றி பெண்கள் நிறையப்
பேர் இருக்கின்றார்கள். பணிப் பெண்
பரீராவைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்'' என்று
கூறினார்கள்.
ஆகவே அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து, "பரீராவே!
நீ(ஆயிஷாவிடம்)
உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் செயல் எதையாவதுபார்த்திருக்கின்றாயா?'' என்று
கேட்டார்கள். அதற்கு பரீரா, "தங்களை சத்தியத்துடன்
அனுப்பியவன் மீதாணையாக! அவர் குழைத்த மாவை அப்படியே போட்டு விட்டு
உறங்கிப் போய் விடுவார். வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்று விடும்.
அத்தகைய கவனக் குறைவான இள வயதுப் பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்
கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை'' என்று பதில் கூறினார்.
அன்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி நின்று அப்துல்லாஹ் பின் உபை பின்
சலூலைத் தண்டிப்பதற்கு தமக்கு உதவும்படி தோழர்களிடம் கோரினார்கள். அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், "முஸ்லிம்களே!
என் வீட்டார் விஷயத்தில் வதந்தி
கிளப்பி எனக்கு மன வேதனை அளித்த ஒரு மனிதனைத் தண்டித்திட எனக்கு உதவி
புரிபவர் யார்? அல்லாஹ்வின்
மீதாணையாக! என் வீட்டாரிடம் நான் நல்லதையே அறிவேன். அவர்கள்
ஒரு மனிதரை (என் மனைவியுடன் இணைத்து அவதூறு) கூறியுள்ளனர். ஆனால் அவரைப் பற்றி நான்
நல்லதையே அறிவேன். என்னோடு தான் அவர் என் வீட்டாரிடம் வந்திருக்கின்றார்.
(தனியாக வந்ததில்லை)'' என்று கூறினார்கள்.
உடனே பனூ
அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து
நின்று, "அல்லாஹ்வின்
தூதரே! அவனைத் தண்டிக்கத் தங்களுக்கு நான் உதவுகின்றேன். அவன் எங்கள் அவ்ஸ் குலத்தைச்
சேர்ந்தவனாயிருந்தால் அவனது கழுத்தைத்
துண்டித்து விடுகின்றோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக
அவன் இருந்தால் என்ன செய்ய வேண்டுமென்று தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள்.
நாங்கள் தங்களது உத்தரவை நிறைவேற்றுகிறோம்''என்று கூறினார்கள்.
உடனே, கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த ஒருவர் எழுந்தார்.
அவர் கஸ்ரஜ் குலத்தின் தலைவரான ஸஅத் பின்
உபாதா ஆவார். ஹஸ்ஸான் பின் ஸாபித் அவர்களின் தாயார் இவரது குடும்பத்தில்
ஒருவரும், இவருடைய தந்தையின் சகோதரரின் மகளும் ஆவார். இவர் அதற்கு
முன் நல்ல மனிதராகத் தான் இருந்தார். ஆயினும்
குலமாச்சரியம் அவரை உசுப்பி
விடவே ஸஅத் பின் முஆத் அவர்களைப் பார்த்து, "அல்லாஹ்வின் மீதாணையாக!
தவறாகச் சொல்லி விட்டீர். அவனை நீர் கொல்ல மாட்டீர். அது உம்மால்
முடியாது. அவன் உமது
குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவன் கொல்லப்படுவதை நீர் விரும்ப மாட்டீர்'' என்று
கூறினார்.
உடனே, ஸஅத் பின் முஆத் அவர்களின் தந்தையின் சகோதரர்
மகன் உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள்
எழுந்து, ஸஅத் பின் உபாதா அவர்களிடம், "நீர் தாம்
தவறாகப் பேசினீர். அல்லாஹ்வின்
மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு
நயவஞ்சகர். அதனால்
தான் நயவஞ்சகர் சார்பாக வாதிடுகின்றீர்''என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் மேடை மீது நின்று கொண்டிருக்க அவ்ஸ்,கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து
சண்டையிடத் தயாராகி விட்டனர். நபி (ஸல்)
அவர்கள் மேடையிலிருந்து இறங்கி, அவர்கள்
மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள்.
பிறகு தாமும் மௌனமாகி விட்டார்கள்.
அன்றைய நாள்
முழுவதும் நான் அழுது கொண்டிருந்தேன். என்
கண்ணீரும் நிற்கவில்லை. என்னை
உறக்கமும் தழுவவில்லை. காலையானதும் என் தாய்,தந்தையர்
என் அருகேயிருந்தனர். நானோ, இரண்டு இரவுகள் ஒரு பகல் முழுக்க, என் ஈரல் பிளந்து விடுமோ என்று எண்ணும் அளவுக்கு
அழுதிருந்தேன். என்
கண்ணீரும்நிற்கவில்லை. என்னை உறக்கமும் தழுவவில்லை. என் தாய்
தந்தையர் என்அருகேயிருக்க நான் அழுது கொண்டிருந்த போது அன்சாரிப் பெண்ணொருத்தி
வந்துஎன்னிடம் உள்ளே வர அனுமதி கேட்டாள். நான்
அவளுக்கு அனுமதி அளித்தவுடன்என்னுடன் சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள்.
நாங்கள் இவ்வாறு
இருந்து கொண்டிருக்கும் போது, அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம்
வந்து, ஸலாம் கூறி அமர்ந்து கொண்டார்கள். என்னைப்
பற்றி அவதூறு சொல்லப்பட்ட
நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. ஒரு மாத
காலம் என்
விஷயத்தில் அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்
படாமலேயே இருந்து வந்தார்கள்.
பிறகு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனைப் புகழ்ந்து
விட்டு, "நிற்க!
ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்துள்ளது. நீ
நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ
குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம்
பாவ மன்னிப்பு கோரி, அவன்
பக்கம் திரும்பி விடு,ஏனெனில் அடியான்
தனது பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்புகோரினால் அல்லாஹ் அவனை
மன்னிக்கிறான்'' என்று
கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்த போது எனது கண்ணீர் (முழுவதுமாக) நின்று
போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருப்பதாக நான் உணரவில்லை. நான் என்
தந்தை அபூபக்ர் (ரலி) யிடம், "அல்லாஹ்வின்
தூதர்சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்'' என்று
கூறினேன். அதற்கு என் தந்தை, "அல்லாஹ்வின்
மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரிடம் என்ன பதில் சொல்வதுஎன்றே எனக்குத் தெரியவில்லை'' என்று
கூறினார்கள்.
நான் என் தாயார்
(உம்மு ரூமான்) இடம், "அல்லாஹ்வின்
தூதர் சொன்னதற்கு என்சார்பாக பதில் கூறுங்கள்'' என்று
கூறினேன். அதற்கு என்
தாயார், "அல்லாஹ்வின்
மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரிடம் என்ன பதில் சொல்வது என்றே எனக்குத்
தெரியவில்லை'' என்று
கூறினார்கள்.
அதற்கு நான், "நானோ வயது
குறைந்த இளம் பெண் ஆவேன். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவளும்
ஆவேன். இந்நிலையில் அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் என்னைப் பற்றி
பேசிக் கொண்ட இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள்
மனத்தில் பதிந்து போய் அதை உண்மையென்று நீங்கள் நம்பி விட்டீர்கள் என்பதை
நான் அறிவேன். ஆகவே, நான்
குற்றமற்றவள் என்று உங்களிடம் சொன்னால் நீங்கள் அதை நம்பப் போவதில்லை. நான்
குற்றம் ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் - நான் குற்றமற்றவள் என்று
அல்லாஹ்வுக்குத் தெரியும் - (நான்
சொல்வதை உண்மையென்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும்
உங்களுக்கும் நபி யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை நபி யஃகூப்
(அலை) அவர்களையே உவமையாகக் கருதுகின்றேன். (இதைச்)
சகித்துக் கொள்வதே
நல்லது. நீங்கள்
புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்பு கோர வேண்டும் (அல்குர்ஆன் 12:18)'' என்று
கூறினேன்.
நான் அப்போது
குற்றமற்றவள் என அல்லாஹ் அறிவான் (அந்த அல்லாஹ்) நான் குற்றமற்றவள் என
நிச்சயம் அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் வேறு பக்கமாகத்
திரும்பிப் படுத்துக் கொண்டேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக!
என் விஷயத்தில் (மக்களால்) ஓதப்படுகின்ற வஹீ - வேத வெளிப்பாட்டை (திருக்குர்ஆனில்) அல்லாஹ்
அருளுவான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை.
அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் பேசுகின்ற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்ல என்பதே என் மனத்தில்
என்னைப் பற்றிய முடிவாக இருந்தது.
மாறாக, "என்னை
அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் ஏதேனுமொரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உறக்கத்தில்
காண்பார்கள்' என்று தான்
எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம்
அமர்ந்திருந்த இடத்திலிருந்து
எழுந்திருக்கவுமில்லை. வீட்டார் எவரும் வெளியேசெல்லவுமில்லை. அதற்குள் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் மீது திருக்குர்ஆன்
வசனங்கள் அருளப்படத் தொடங்கி விட்டன. உடனே (வஹீ வரும் நேரத்தில்)
ஏற்படும் கடுமையான சிரம நிலை நபிகளாருக்கு ஏற்பட்டது. அது கடும் குளிர்
காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து சின்னஞ்சிறு முத்துக்களைப்
போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அவர்கள் மீது அருளப்
பட்ட (இறைச்)சொற்களின் பாரத்தினால் தான் இந்தச் சிரம நிலை ஏற்பட்டது.
அந்த நிலை
அல்லாஹ்வின் தூதரை விட்டு விலகியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே பேசிய
முதல் வார்த்தையாக, "ஆயிஷா!
அல்லாஹ் உன்னை குற்றமற்றவள் என அறிவித்து விட்டான்'' என்று
கூறினார்கள்.
உடனே என் தாயார், "அல்லாஹ்வின்
தூதரிடம் எழுந்து செல்'' என்று
என்னிடம்கூறினார்கள். அதற்கு நான், "மாட்டேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம்நான் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே
புகழ்ந்து அவனுக்கே நன்றிசெலுத்துவேன்'' என்று
கூறினேன்.
அப்போது அல்லாஹ், "(ஆயிஷாவின்
மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம்'' என்று
தொடங்கும் (அல்குர்ஆன் 24:11-20) பத்து
வசனங்களைஅருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவு படுத்தி அல்லாஹ்
இதைஅருளினான்.
அறிவிப்பவர்:
ஆயிஷா (ரலி), நூல்:
புகாரி 2661
1. ஆயிஷா
(ரலி) அவர்களின் கழுத்தணி காணாமல் போய் அதை அவர்கள் தேடிச் செல்கிறார்கள்
2. ஒட்டகத்தில்
தம்முடன் ஆயிஷா (ரலி) பயணிக்கவில்லை என்ற விபரம் நபி (ஸல்) அவர்களுக்குத்
தெரியாமல் போனது.
3. ஆயிஷா
(ரலி) மீது அவதூறு கிளம்பியதும் உண்மை நிலவரம் தெரியாமல் தமதுமனைவியைப் பற்றி அலீ
(ரலி) அவர்களிடமும், உஸாமா
(ரலி) அவர்களிடமும் நபி(ஸல்)
அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள். அதற்கு அலீ (ரலி), ஆயிஷா
(ரலி)அவர்களை விவாகரத்துச் செய்து விடுமாறு கூறுகிறார்கள்.
4. நபி (ஸல்)
அவர்கள் தமது மனைவி பற்றி பரீரா (ரலி)யிடம் ஆலோசனை செய்கிறார்கள்.
5. நபி (ஸல்)
அவர்கள் பள்ளிக்கு வந்து மிம்பரில் நின்று இது தொடர்பாக விசாரித்தபோது, அன்சாரிகளில்
உள்ள அவ்ஸ், கஜ்ரஜ்
என்ற இரு அணியினர் மோதிக் கொள்ளத் துவங்கினார்கள்.
5. இன்னின்ன
தகவல் உன்னைப் பற்றி வந்துள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி)
அவர்களிடம் கூறி, பாவ
மன்னிப்புத் தேடுமாறு கூறுகிறார்கள்.
6. ஆயிஷா
(ரலி) அவர்களைத் தூய்மைப்படுத்தும் வசனம் இறங்கும் வரை நபி (ஸல்)அவர்களும், ஆயிஷா
(ரலி) அவர்களும் பெரும் மனக் கஷ்டத்திற்கு உள்ளானார்கள்.
நபித்தோழர்கள் இரு
அணியினராகப் பிரிந்து வெட்டிக் கொள்ள முனைகின்ற அளவுக்கு ஆயிஷா (ரலி) மீது
அவதூறு கூறப்பட்ட விவகாரம் முற்றிப் போனது.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களுக்கு உள்ளத்தில் உள்ளதை அறியும் ஆற்றல் ஒரு நொடிப் பொழுது
இருந்திருக்குமானால் அவர்கள் இவ்வளவு பெரிய சோதனைக்குஉள்ளாகியிருக்க
வேண்டியிருக்குமா? ஆனால்
அவர்களுக்கு அந்த ஆற்றல் இல்லை.அதனால் தான் இந்த வேதனையை அனுபவித்தார்கள்.
ஆனால் அல்லாஹ்வின்
தூதருடன் ஒப்பிட்டுக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு எங்கோ உள்ள
முஹ்யித்தீன், தனக்கு
முன்னால் உள்ளவரின் உள்ளத்தை அப்படியேகண்ணாடியில் உள்ளதைப் போல் பார்க்கிறாராம்.
அதாவது, அல்லாஹ்வின்தூதருக்குத்
தெரியாதது, முஹ்யித்தீனுக்குத்
தெரியும் என்பது தான் இவர்களதுநம்பிக்கை.
இதிலிருந்தே
இவர்கள் ஷியாக்களை விடப் பன்மடங்கு வழி கெட்டவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
வளரும்
இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM JUL 2006