8. இணை கற்பித்தல் - அடையாளம் காட்டப்பட்ட அவ்லியாக்கள்
நாம்
யாரையாவது இறைநேசர் என்று சொல்வதாக இருந்தால், அது அல்லாஹ்வின் மூலமாக நமக்கு சொல்லித்
தரப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் ஒருவரை இறைநேசர் என்று சொல்லிவிட்டால்
அதை நாம் ஒருபோதும் மறுக்க முடியாது. முந்திச் சென்ற சமுதாயத்தை எடுத்துக்
கொண்டால் இறைவனால் அனுப்பப்பட்ட எல்லா நபிமார்களும் இறைநேசர்கள், அவ்லியாக்கள்
என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்காது.
இறைவன் அந்தந்த சமுதாயத்தில் வாழக்கூடிய மக்களிலேயே ஒரு மனிதரை மட்டும் தேர்ந்தெடுத்து அவருக்குத் தன்னுடைய பொறுப்புகளைச் சுமத்துகிறான் என்றால் கண்டிப்பாக அவர்கள் இறைவனுடைய நேசர்களாகத் தான் இருக்க முடியும். மூஸா நபி இறைநேசரா? என்று கேட்டால் ஆம் என்று சொல்வோம். எதனால்? அல்லாஹ் சொல்லியிருக்கின்றான். ஈஸா நபி இறைநேசரா? என்று கேட்டால் ஆம் என்று சொல்வோம். எதனால்? அல்லாஹ் சொல்லியிருக்கின்றான்.
ஆக எந்த நபிமார்களைப் பற்றிக் கேட்டாலும் அவர்கள் இறைநேசர்கள் தான். அவ்லியாக்கள் தான் என்பதைத் திட்டவட்டமாக நாம் சொல்ல முடியும். அவ்வாறு தான் சொல்லவும் வேண்டும். ஏனென்றால், அல்லாஹ்வே அவர்களை நேசிப்பதாக நமக்குச் சொல்லித் தந்து விட்டான். அவர்களை உயரிய அந்தஸ்திற்கு உரியவர்களாகத் தேர்ந்தெடுத்துவிட்டதாகவும் சொல்லித் தந்து விட்டான். எனவே எந்த நபியாக இருந்தாலும், அவர்கள் பெயர் குறிப்பிடப்பட்ட நபிமார்களாக இருந்தாலும், பெயர் குறிப்பிடப்படாத நபிமார்களாக இருந்தாலும் அனைவருமே இறைநேசர்கள் தான். நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதியாக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் வரை எத்தனை நபிமார்கள் அனுப்பப்பட்டார்களோ அத்தனை பேருமே இறைநேசர்கள் தான் என்று நாம் சொல்லலாம்.
நாம் அவர்களுடைய உள்ளத்தை அறிந்து இவ்வாறு சொல்லவில்லை. அல்லாஹ் அவ்வாறு சொல்லித் தந்ததால் நாம் இதைச் சொல்கிறோம். அவரை நான் நேசிக்கிறேன் என்று அல்லாஹ்வே காட்டித் தந்ததால் நாம் இதை சொல்லிக் கொள்கிறோம். அதேபோல் மர்யம் (அலை) அவர்களைப் பற்றி நல்லடியார் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
"மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தான்'' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன்
3:42
மர்யம் (அலை) அவர்களையும், பிர்அவ்னின் மனைவி ஆசியா அவர்களையும் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக, ஒரு முஃமின் எப்படி வாழ வேண்டும் என்பதை இந்த இருவரைப் பார்த்து வாழ்ந்து கொள்ளுங்கள் என்று படிப்பினையாக ஆக்கியிருக்கின்றான் என்றால் இதிலிருந்தே நாம் அந்த இருவரும் இறைநேசர்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம். அவர்களைப் பற்றி இறைவன் திருமறையில் கூறுகிறான்:
"என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்ரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். இம்ரானின் மகள் மர்யமையும் இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான். அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராக இருந்தார்.

அல்குர்ஆன்.
66:11, 12
எனவே இவர்கள் இருவரையும் இறைநேசர்கள் என்று நாம் சந்தேகமறச் சொல்லலாம். ஆசியா என்ற பெயரை அல்லாஹ் பயன்படுத்தாவிட்டாலும், ஃபிர்அவ்னின் மனைவி என்று சொல்லிவிட்டதால் நாம் அவர்களையும் இறைநேசர் என்று முடிவு செய்யலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிர்அவ்னின் மனைவி ஆசியா என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆண்கüல் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்கüல் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லா வகை உணவுகளை விடவும் "ஸரீத்' உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.

அறிவிப்பவர்:
அபூ மூசா (ரலி),
நூல்:
புகாரி 3411
இந்தச் செய்தி மேலும் புகாரி 3434, 3769, 5418 ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளது.
இதேபோன்று குகைவாசிகளையும் நல்லடியார்கள் என்று இறைவன் சொல்கிறான். இவ்வாறு நமக்கு முன்னால் வாழ்ந்த மக்களில் யாரை அல்லாஹ் இறைநேசர் என்று சொல்கிறானோ அவர்கள் கண்டிப்பாக இறைநேசர்களாகத் தான் இருப்பார்கள் என்பதை நாம் உறுதியாகச் சொல்லலாம்.
இது போக நாம் இந்த சமுதாயத்தில் சொர்க்கவாசிகள், நல்லடியார்கள் என்று சொல்வதாக இருந்தால் உண்மைத் தோழர், நபியவர்களின் உற்றதோழர் அபூபக்கர் (ரலி) அவர்களைச் சொல்லலாம்.

நபி
(ஸல்) அவர்களும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோரும் உஹுது மலை மீது
ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "உஹுத்!
அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு
சித்தீக்கும், இரு
உயிர்த் தியாகிகளும் உள்ளனர்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்:
அனஸ் (ரலி),
நூல்:
புகாரி 3675, 3686
அபூபக்கர் (ரலி) அவர்கள் ஒரு நல்லடியார் என்பதற்கு இந்த ஹதீஸே மிகப் பெரிய ஆதாரமாக இருக்கிறது.
சித்தீக் என்றால் நல்லடியார்களிலேயே மிக உயர்ந்த அந்தஸ்தை உடையவர்கள். இதைப்பற்றி இறைவன் திருமறையில் கூறுகிறான்:
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.
அல்குர்ஆன். 4:69
மேற்கண்ட வசனத்தில் நபிமார்களுக்கு அடுத்த அந்தஸ்தில் உள்ளவர்கள் உண்மையாளர்கள். அதாவது அனைத்தையும் உண்மையெனக் கருதியவர்கள். இஸ்லாத்தில் இறைத்தூதர் சொல்வதைச் சந்தேகமில்லாமல் உண்மைப் படுத்தியவர்கள். இத்தகைய சிறப்பை நபித்தோழர்களில் அபூபக்கர் (ரலி) அவர்கள் மட்டும் தான் பெற்றிருந்தார்கள். அதனால் தான் அவர்களுக்கு சித்தீக் என பெயர் வந்தது. இத்தகைய உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர் தான் அபூபக்கர் (ரலி) அவர்கள். அதுமட்டுமல்லாமல் மேற்குறிப்பிட்ட ஹதீஸை ஆதாரமாக வைத்தே உமர் (ரலி) அவர்களையும், உஸ்மான் (ரலி) அவர்களையும் நாம் நல்லடியார்கள் என்று சொல்லலாம்.
நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் தோட்டங்கüல் ஒன்றில் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து (வாயிற் கதவைத்) திறக்கும்படி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "அவருக்காகத் திறவுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்'' என்று சொன்னார்கள். நான் அவருக்காக (வாயிற்கதவைத்) திறந்தேன். அவர் அபூபக்ர் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்கüடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன நற்செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒரு மனிதர் வந்து (கதவைத்) திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்கüடம் அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், "அவருக்குத் திறந்து விடுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்'' என்று சொன்னார்கள். அவருக்கு நான் கதவைத் திறந்து விட்டேன். அம்மனிதர் உமர் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்கüடம் நான் நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒரு மனிதர் கதவைத் திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்கüடம் சென்று அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், "அவருக்கும் திறந்து விடுங்கள்; அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து சொர்க்கம் அவருக்குக் கிடைக்கவிருக்கிறது என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்'' என்று சொன்னார்கள். (நானும் சொன்று கதவைத் திறக்க) அம்மனிதர் உஸ்மான் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்கüடம் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தேன். அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, "(எனக்கு நேரவிருக்கும் அந்தத் துன்பத்தின் போது) அல்லாஹ்வே (சகிப்பாற்றலைத் தந்து) உதவி புரிபவன் ஆவான்'' என்று சொன்னார்கள்.

அபூமூசா (ரலி),
நூல்:
புகாரி 3693
இந்த
ஹதீஸ் மேலும் புகாரியில் 3674, 3695, 6216, 7097, 7262 ஆகிய
இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸிலிருந்து நாம் பெறக்கூடிய படிப்பினை என்னவென்றால், நாம் ஒருவரை அவ்லியா, மகான், இறைநேசர் என்று சொல்வதற்கு மிகவும் தகுதி படைத்தவர்கள் இந்த மூவரும் தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அம்மூவருக்கும் சொர்க்கம் என்னும் நற்செய்தியைக் கூறியிருக்கிறார்கள்.
அதேபோல, மறுமை நாளில் அனைத்து வாசல் வழியாகவும் அழைக்கப்படக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் மறுமையில் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு வழங்கியிருக்கிறான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவர் அல்லாஹ்வின் பாதையில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருள்களைச் செலவிட்டாரோ அவர் சொர்க்கத்தின் வாசல்கüல் (ஒவ்வொன்றில்) இருந்து "அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)' என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாüயாக இருந்தவர் தொழுகைக்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். ஜிஹாத் (அறப்போர்) புரிபவராக இருந்தவர் ஜிஹாதுக்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். தர்மம் (ஸதகா) செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். நோன்பாüயாக இருந்தவர் நோன்பின் வாசலிலிருந்தும், "அர்ரய்யான்' என்னும் (நோன்பாüகளுக்கே உரிய சிறப்பு) வாசலிலிருந்தும் அழைக்கப்படுவார்' என்று சொன்னார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், "இந்த வாசல்கüலிருந்து அழைக்கப்படுபவருக்குத் துயரம் எதுவும் இருக்காது. (அவர் எந்த வழியிலாவது சொர்க்கம் சென்றுவிடுவார்.)'' என்று கூறி விட்டு, "அவை அனைத்திலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், "நீங்கள் அவர்கüல் ஒருவராக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அபூபக்ரே!'' என்று சொன்னார்கள்.

அபூஹுரைரா (ரலி),
நூல்:
புகாரி 3666
ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, "அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)' என்று அழைக்கப்படுவார். (தமது உலக வாழ்வின்போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின்வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் "ஜிஹாத்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் "ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் "ஸதகா' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகிறேன்!'' என்றார்கள்.

புகாரி 1897
மேற்கண்ட ஹதீஸில் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு இத்தகைய சிறப்பு இருப்பதால் அவர்களை அவ்லியா, நல்லடியார் என்று நாம் சந்தேகமில்லாமல் உறுதிபடக் கூறலாம்.
"அபூபக்கர் சொர்க்கத்தில் இருப்பார். உமர் சொர்க்கத்தில் இருப்பார். உஸ்மான் சொர்க்கத்தில் இருப்பார். அலீ சொர்க்கத்தில் இருப்பார். தல்ஹா சொர்க்கத்தில் இருப்பார். ஸுபைர் சொர்க்கத்தில் இருப்பார். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் சொர்க்கத்தில் இருப்பார். ஸஅத் பின் அபீ வக்காஸ் சொர்க்கத்தில் இருப்பார். ஸயீத் பின் ஸைத் சொர்க்கத்தில் இருப்பார். அபூஉபைதா அல்ஜர்ராஹ் சொர்க்கத்தில் இருப்பார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி),
நூல்:
அஹ்மத் 1543
மேலும் இச்செய்தி திர்மிதியில் 3680, 3748 ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச்
செய்தியில் சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 நபர்களில் முதல் நான்கு பேரும் கலீபாக்கள்.
அவர்களிடத்தில் மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் நிகழ்ந்திருந்தாலும், அவர்கள்
ஆட்சி செய்த நேரத்தில், அவர்களுடைய ஆளுமை மக்களுக்கு அதிருப்தியைத்
தந்தாலும் அவர்களுடைய தியாகத்திற்கு முன் அது சாதாரண காரியமாகத் தான் அமையும்.
நம்முடைய பார்வையில் அது தவறாகத் தெரிந்தாலும் அல்லாஹ்வுடைய பார்வையில் அது மன்னிக்கப்படக்கூடிய பாவமாகத் தான் தெரிந்திருக்கிறது. அந்த 10 பேரும் பாவங்களைச் செய்திருந்தாலும் அல்லாஹ் அதை மன்னித்து விட்டான். அதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கத்திற்குரியவர்கள் என்று நற்செய்தி கூறினார்கள். ஆனால் இன்றைக்கு நாம் யாரை அவ்லியாக்கள் என்று சொல்கிறோமோ அவர்கள் இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்திருக்கிறார்களா? அவர்களுடைய தியாகத்திற்கு இவர்கள் ஒப்பாவார்களா? அல்லது நபியவர்களால் சொர்க்கத்திற்குரியவர் என்று நற்செய்தி கூறப்பட்டவரா? இத்தகைய எந்த அம்சமும் இல்லாதவர்களைத் தான் நாம் அவ்லியாக்கள் என்று கூறி வருகின்றோம்.
அதேபோல இரண்டாம் ஆட்சியாளராகிய உமர் (ரலி) அவர்களையும் நாம் அவ்லியா, இறைநேசர் என்று சொல்லலாம்.
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் இருந்த போது அவர்கள், "நான் தூங்கிக் கொண்டிருந்த பொழுது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனையொன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலக வாழ்வில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையிலும் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக் கொள்ளவும்) உளூ செய்து கொண்டிருந்தாள். நான் (ஜிப்ரீலிடம்), "இந்த அரண்மனை யாருக்குரியது?' என்று கேட்டேன். அவர், "உமர் அவர்களுக்குரியது' என்று பதிலüத்தார். அப்போது (அதில் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. ஆகவே, (அதில் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்'' என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு, "தங்கüடமா நான் ரோஷம் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே!'' என்று சொன்னார்கள்

புகாரி 3680
மேலும்
இச்செய்தி புகாரியில் 3422, 5227, 7023, 7025 ஆகிய இடம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அலீ (ரலி) அவர்களையும் நாம் நல்லடியார் என்று கூறலாம்.
அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. "நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனே'' என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். எந்த நாüன் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நாüன் மாலை நேரம் வந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்'' என்றோ, "அத்தகைய ஒரு மனிதர் இந்தக் கொடியைப் பிடித்திருப்பார்'' என்றோ அல்லது, "அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்'' என்றோ சொல்லி விட்டு, "அவருக்கு அல்லாஹ் வெற்றியüப்பான்'' என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், "இதோ, அலீ அவர்கள்!'' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்கüடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியüத்தான்.

சலமா பின் அக்வஃ (ரலி),
நூல்:
புகாரி 2975
மேலும் இச்செய்தி புகாரியில் 3702, 4209 ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளது.
இந்த செய்தியில் அலீ (ரலி) அவர்களை அல்லாஹ் நேசிப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே அவர்களை நாம் சந்தேகமே இல்லாமல் நல்லடியார் என்று சொல்லலாம்.

அதே
மாதிரி ஸஅத் பின் முஆத் அவர்களையும் நபிகளார் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்று அன்பüப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் பட்டை (அணியக் கூடாது என்று) தடை செய்து வந்தார்கள். மக்களோ, அந்த அங்கி(யின் தரத்தை மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (என் தோழர்) சஅத் பின் முஆதுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதை விட உயர்ந்தவை'' என்று கூறினார்கள்.

புகாரி 2616, 3248
இவர்களையும் நாம் நல்லடியார், சொர்க்கவாசி, மகான் என்று நாம் சொல்லிக் கொள்வதற்கு அனுமதி இருக்கிறது.
இதுபோன்று இன்னும் ஏராளமானவர்களைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறியிருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் அதை அடுத்த இதழில் பார்ப்போம்.

EGATHUVAM JAN 2013