Mar 8, 2017

ஒரு நோன்பும் ஈராண்டு பாவ மன்னிப்பும்

ஒரு நோன்பும் ஈராண்டு பாவ மன்னிப்பும்
அரஃபா நாளில் நோன்பு நோற்றால் இரு ஆண்டுகள் புரிந்த பாவங்கள் மன்னிக்கப்படுவதாகவும்அதே போல ஆஷூரா தினத்தன்று (முஹர்ரம் 9,10) நோன்பு நோற்றால் ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும் என்றும் நபிகள் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்கள். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, "முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அது பாவப் பரிகாரமாக அமையும்'' என்றார்கள். ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு "அது கடந்த ஆண்டின் பாவப் பரிகாரமாகும்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),
நூல்: முஸ்லிம் 2152