Mar 6, 2017

தரீக்கா வழிகேடு

பொதுவாக நாம் ஓர் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். தரீக்கா என்று சொல்லி விட்டாலே அது ஷியா தான். காரணம் எல்லாத் தரீக்காக்களுமே சங்கிலித் தொடராகச் சென்று முடிவது அலீ (ரலி)யிடம் தான்.

ரகசிய ஞானம்?
ரகசிய ஞானம்! யாருக்கும் இல்லாத ரகசிய ஞானம் என்று பாட்டுப் படிப்பது ஷியாக்கள் தான். அந்தப் பாட்டைத் தான் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறும் இந்தத்தரீக்காக்களும் படிக்கின்றன. இவ்வாறு படிப்பதற்கு ஓர் அடிப்படைக் காரணமும்உண்டு.

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு மூல ஆதாரங்களில் இல்லாத ரகசிய ஞானம் அலீ (ரலி) அவர்களுக்கு இருப்பதாக அன்னார் வாழும் போதே கிளம்பி விட்டது. அலீ (ரலி)அவர்களின் வாழ்நாளிலேயே அவர்களிடம் நேரடியாக இது பற்றிக் கேட்கப் பட்டுவிட்டது.

அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார்: நான் அலீ (ரலி) அவர்களிடம், "(நபியவர்களின்குடும்பத்தினராகிய) உங்களிடம் குர்ஆனில் இல்லாத ஏதேனும் (செய்தி) உள்ளதா?''என்று கேட்டேன். அதற்கு அலீ (ரலி) அவர்கள், "வித்துக்களைப் பிளந்தவனும்உயினங்களை உருவாக்கிய வனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! குர்ஆனில்இருப்பதைத் தவிர வேறெதுவும் (நபியின் குடும்பத்தாராகிய) எங்களிடம் இல்லை.இறை வேதத்தில் ஒரு மனிதருக்கு வழங்கப்படும் விளக்கத்தையும் இந்த ஏட்டில்உள்ளவற்றையும் தவிர'' என்று கூறினார்கள். நான் "இந்த ஏட்டில் என்ன இருக்கிறது?''என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "இழப்பீடு (தொடர்பான விளக்கங்கள்), போர்க் கைதியை விடுவித்தல், இறைமறுப்பாளனுக்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது ஆகிய விஷயங்கள் இதிலுள்ளன'' என்றார்கள்.
(அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) சில வேளைகளில் "மக்களிடம் இல்லாத ஏதேனும் ஒன்று உங்களிடம் உள்ளதா?'' என்று அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்கள் கேட்டார்கள் என அறிவித்தார்.)
நூல்: புகாரி 6903

அலீ (ரலி) அவர்கள் அன்றே இந்த வாசலை அடைத்து விட்டார்கள்; ஆப்பு வைத்துவிட்டார்கள். இருப்பினும் யூத மதம் தனது கைப்பிள்ளையான ஷியாயிஸத்தைப்புகுத்தி இந்த வழிகேட்டின் வாசலைத் திறந்து விட்டது. அது இன்னும் தொடர்ந்துநரகத்தின் வாசலுக்கு இழுத்துச் செல்கின்றது. அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுளாகவும், கதாநாயகராகவும் கொண்டு செயல்படும் சங்கத்திற்கு காதிரிய்யா என்று பெயர்.

காஜா முஹ்யித்தீனைக் கடவுளாகக் கொண்டு செயல்படும் சங்கத்தின் பெயர் ஜிஷ்திய்யா. 

இது போன்று அபுல் ஹஸன் ஷாதுலியைக் கடவுளாகவும் கதாநாயகராகவும் கொண்டு செயல்படும் சங்கத்தின் பெயர் ஷாதுலிய்யா. தரீக்காக்களிலேயே மிகவும் கேடு கெட்ட தரீக்கா ஷாதுலிய்யா தரீக்கா.