Mar 9, 2017

காலையில் ஓதும் துஆ

காலையில் ஓதும் துஆ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.




அஸ்ப(இ)ஹ்னா வஅஸ்ப(இ)ஹல் முல்(க்)கு லில்லாஹிவல்ஹம்து லில்லாஹிலாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹுலஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்துவஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி(இ) அஸ்அலு(க்)க கைர மாபீ(எ) ஹாதிஹில் லைலத்தி வ கைர மா ப(இ)ஃதஹாவஅவூது பி(இ)(க்)க மின் ஷர்ரி மாபீ(எ) ஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரிமா ப(இ)ஃதஹாரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிப(இ)ரிரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அதாபி(இ)ன் பி(எ)ன்னாரிவஅதாபி(இ)ன் பி(எ)ல் கப்(இ)ரி

இதன் பொருள்:
நாங்கள் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். காலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி.புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும்அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும்மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும்மண்ணறை யின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 4901