பொருளியல் தொடர் 16 - ஹலாலை ஹராமாக்கும் வீண் சந்தேகங்கள்
சந்தேகமானதை விட்டு விலக வேண்டிய அதே நேரத்தில் அல்லாஹ் ஹலாலாக்கியதை
நாமாக ஹராமாக்கக் கூடாது. அவ்வாறு செய்வது குற்றம். நாம் ஒரு விஷயத்தை சந்தேகம் கொண்டால், சந்தேகம் கொள்வதற்குரிய முகாந்திரம் இருக்க வேண்டும். வீணாண
சந்தேகத்தால் ஹலாலான விஷயங்களை ஹராமாக்கிவிடக் கூடாது
"தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! "அவை இவ்வுலக வாழ்க்கையிலும்
குறிப்பாக கியாமத் நாளிலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்குரியது'' எனக் கூறுவீராக! அறிகிற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளை விளக்குகிறோம்.
அல்குர்ஆன் 7:32
"அல்லாஹ் உங்களுக்கு உணவை இறக்கினான். அதில் விலக்கப்பட்டதையும், அனுமதிக்கப்பட்டதையும் நீங்களாக ஏற்படுத்திக் கொண்டீர்கள்!'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! "அல்லாஹ்வே உங்களுக்கு அனுமதியளித்தானா? அல்லது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுகிறீர்களா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' என்று கேட்பீராக
அல்குர்ஆன் 10:59
அல்லாஹ் ஹராமாகிய விஷயங்களை பேணுதல் என்ற அடிப்படையில் ஹராமாக்குவது
மறுமை வாழ்வை அழித்துவிடும்.
அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும்
நஷ்டம் அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை.
அல்குர்ஆன் 6:140
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை
விலக்கப்பட்டவைகளாக்கி விடாதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க
மாட்டான்.
அல்குர்ஆன் 5:87
சில நபர்கள் ஆடு அறுத்து விருந்திற்காக அழைக்கப்பட்டால், ஒரு உயிரைப் பலி கொடுத்து விருந்தா? என்பார்கள். விருந்திற்கு வரமாட்டார்கள். பேணுதல் என்ற அடிப்படையில்
இப்படி செய்கிறார்கள் இவ்வாறு செய்வது குற்றம்.
அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு
என்ன நேர்ந்தது?
நீங்கள் நிர்பந்திக்கப்படும் போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு
அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான். அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள்
மூலம் வழி கெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன்.
அல்குர்ஆன் 6:119
"இது அனுமதிக்கப்பட்டது; இது விலக்கப்பட்டது'' என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்
கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்.
அல்குர்ஆன் 16:116
நபி (ஸல்) அவர்களுக்குக் கூட ஹலாலை ஹராமாக்கக் கூடிய அதிகாரமில்லை.
ஒருமுறை நபி (ஸல்) அவர்களுடைய குடும்பப் பிரச்சனைக்காக தேனை
தமக்கு ஹராமாக்கிக் கொண்டார்கள். அதை அல்லாஹ் கண்டிக்கின்றான்.
நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின்
திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்.
அல்குர்ஆன் 66:1
அடிப்படை இல்லாமல் சந்தேகம் கொள்பவர்களுக்கு நபியவர்களின் அறிவுரை
மார்க்கத்தில் ஹரமாக உள்ள பொருட்கள் இரண்டு வகைப்படும்.
1. அடிப்படையில் ஹராம்
2. புறக் காரணத்தால் ஹராம்
பன்றி இறைச்சி, தானாக செத்தவை
போன்றவை முதல் வகையைச் சேரும். இவை அடிப்படையிலேயே ஹராம்.
இரண்டாவது வகை, ஆயிரம் ரூபாய்
என்பது ஹலால். ஆனால் அதே ஆயிரம் ரூபாயை லஞ்சமாக வாங்கினால் ஹராம். லஞ்சம் என்ற புறக்
காரணத்தால் ஹராமாகின்றது.
இரண்டாவது வகையில் தான் பெரும்பாலானோர் தவறு செய்கிறார்கள்.
வட்டி வாங்குபவரிடத்திலோ அல்லது சாராயக்கடை வைத்திருப்பவரிடத்திலோ அல்லது ஹராமான முறையில்
தொழில் செய்யக் கூடிய வேறு எவரிடத்திலோ அன்பளிப்பாகவோ, வேறு எந்த வகையிலோ பணம் வாங்குவது சந்தேகத்திற்கு இடமானது என
நினைக்கிறார்கள். ஆலிம்களும் அவ்வாறே ஃபத்வா கொடுக்கிறார்கள். இது தவறாகும். நாம் ஒருவரிடத்தில்
பணம் வாங்கினால் அவரிடமிருந்து நாம் எப்படி வாங்குகிறோம் என்பதைத் தான் நாம் பார்க்க
வேண்டும். (நாம் வட்டியாக வாங்கினால் அது தவறு; அன்பளிப்பாக
வாங்கினால் அது சரி) ஆனால் அவருக்கு அந்தப் பணம் எப்படி வந்தது என்று பார்க்கத் தேவையில்லை.
அவர்கள், சென்று விட்ட சமுதாயம். அவர்கள்
செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள்
விசாரிக்கப்பட மாட்டீர்கள்.
அல்குர்ஆன் 2:134
அல்லாஹ் அல்லாதோரையா இறைவனாகக் கருதுவேன்? அவனே அனைத்துப் பொருட்களின் இறைவன். (பாவம் செய்யும்) எவரும்
தமக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்.
பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு
அறிவிப்பான்''
என்றும் கூறுவீராக
அல்குர்ஆன் 6:164
நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர்
தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு
தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை
அல்குர்ஆன் 17:15
இந்த விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் நடைமுறை எப்படி இருந்தது
என்று பார்க்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் ஸகாத் வரியை வசூல் செய்தார்கள். அவ்வாறு வசூல்
செய்யும் போது ஹலாலான முறையில் சம்பாதித்தவர்களிடமிருந்து மட்டும் தான் வசூல் செய்தார்களா? ஹலாலான முறையில் சம்பாதித்தவர்களிடமிருந்து மட்டும் தான் வசூல்
செய்ய வேண்டும் என்று சொன்னார்களா? இல்லை. அப்படியானால்
அல்லாஹ்வின் துôதருக்கு இல்லாத பேணுதல்
இவர்களுக்கு இருக்கிறதா? இந்த ஜகாத் பின்வரும் விஷயங்களுக்காகப்
பயன்படுத்தப்படுகின்றது.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள்
ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின்
பாதையிலும்,
நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை.
அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்
அல்குர்ஆன் 9:60
இந்த ஸகாத்தை அல்லாஹ்வின் பாதையில் கொடுப்பதற்குக் கூட மார்க்கம்
கட்டளையிடுகிறது. இது சந்தேகத்திற்கிடமான ஒன்றாக இருந்தால் அல்லாஹ் இவ்வாறு கட்டளையிடுவானா?
ஜிஸ்யா வரியென்பது காஃபிர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்களால்
வசூல் செய்யப்பட்டது. அன்றைய காஃபிர்கள் ஹலாலான முறையில் மட்டும் சம்பாதித்தார்கள்
என்று சொல்ல முடியுமா?
போர்க்களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற பொருட்களுக்கு கனீமத்
என்று பெயர். நபி (ஸல்) அவர்களின் எதிரிகள் ஹலாலான முறையிலா சம்பாதித்தார்கள்? ஆனாலும் இது மார்க்க அடிப்படையில் நமக்கு ஹலால் ஆகும்.
தகப்பன் விட்டுச் சென்ற சொத்தில் மகன் வாரிசாவார். இதற்கு வாரிசுரிமை
என்று பெயர். ஒரு மனிதர் முழுக்க முழுக்க ஹராமான முறையில் சம்பாதித்துள்ளார். இப்போது
அவருடைய சொத்தில் மகன் வாரிசாக மாட்டார் என்று சொல்ல முடியுமா? அல்லது ஹலாலான முறையில் தகப்பன் சம்பாதித்தால் மட்டுமே மகன்
வாரிசாக முடியும் என்று மார்க்கம் கூறுகிறதா?
நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்களிடமிருந்து அன்பளிப்பைப்
பெற்றுள்ளார்கள்.
அய்லா என்ற மன்னர் கோவேறுக் கழுதையையும் போர்வையையும் அன்பளிப்பாக
கொடுத்துள்ளார்.
அய்லா என்ற ஊரின் மன்னன் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு வெள்ளை நிறக்
கோவேறுக் கழுதையை அன்பளிப்புச் செய்து ஒரு சால்வையும் போர்த்தினார். தம் நாட்டவருக்காக
(ஜிஸ்யா வரி தருகிறோம்) என்று எழுதிக் கொடுத்தார்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி)
நூல்: புகாரி 1482
உகைதிர் என்ற மன்னர் பட்டாடையை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார்.
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: "தூமத்துல் ஜந்தல்' பகுதியின் மன்னர் உகைதிர் என்பவர், நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டுத் துணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அதை நபி (ஸல்) அவர்கள்
எனக்கு அன்பளிப்பாக வழங்கி, இதை முக்காடுகளாக வெட்டி, ஃபாத்திமாக்களிடையே (பெண்களுக்கிடையே) பங்கிட்டுவிடுங்கள்'' என்று சொன்னார்கள் .
நூல்: முஸ்லிம் 1409
தூயசன் என்ற மன்னர் 33 ஒட்டகங்கள்
கொடுத்து வாங்கிய ஆடையை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை அவர்கள்
ஏற்றுக் கொண்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: அபூதாவூத் 3516
மன்னர்கள் ஹலாலான முறையில் சம்பாதித்து வாழ்ந்தார்கள் என்று
சொல்ல முடியாது,
மக்களுடைய வரிப் பணத்தில் ஆடம்பர வாழ்கை வாழ்ந்தவர்கள். எனவே
இந்தப் பணத்திலிருந்து வாங்கப்பட்ட பொருட்களை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்த
போது அதை ஏற்றுள்ளார்கள். யூதப் பெண்மணி கொடுத்த
விருந்தை நபி (ஸல்) அவர்கள் ஏற்றார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் அடிமையாக இருந்த பரீரா என்ற அடிமைப்
பெண்ணுக்கு தர்மமாக வந்த இறைச்சியை அந்த பெண் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக்
கொடுத்த போது அதை ஏற்றுக் கொண்டார்கள்.
ஹலாலான விஷயங்களை ஹராமாக நாம் கருதியதன் விளைவு, ஹராமான விஷயங்களை சர்வ சாதாரணமாகச் செய்கிறோம்.
பேணுதல் என்ற பெயரில் ஹலாலை ஹராம் ஆக்கலாமா?
முஸ்லிம்கள் சிலர் பேணுதல் என்ற பெயரில் ஹலாலை ஹராமாக்கிக் கொள்கிறார்கள்.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதை அனுமதித்தார்களோ அதைத் தடை செய்வதற்கு நாம் உரிமை
படைத்தவர்கள் அல்லர் என்பதை நாம் மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வையும் அவனுடைய துôதரையும்
நம்பியவர்கள் இப்படி சுயமாக முடிவெடுப்பதும் கூடாது. அதோடு மட்டும் நின்று விடாமல்
அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நாம் பின்பற்றுவது தான் அதற்கு உரிய வழியாகும். குர்ஆனிலும்
ஹதீஸிலும் எது தடை என்று சொல்லப்பட்டதோ அதை மட்டும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இதற்கு சில உதாரணத்தைப் பார்ப்பதன் மூலம் இதை நாம் விளங்கி கொள்ளமுடியும்.
இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையில் வேட்டை ஆடுவது தடை செய்யபட்டுள்ளது.
.நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக்
கொல்லாதீர்கள்!
அல்குர்ஆன் 5:95
இஹ்ராம் அனிந்தவர்கள் தரையில் வேட்டை ஆடுவது தடையாகும். கடலில்
வேட்டை ஆடுவது கூடும்.
உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும்
பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.
இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை
அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 5:96
இஹ்ராம் அனிந்திருப்பவர் தரையில் வேட்டையாடக் கூடாது என்று சொல்லப்பட்டிருப்பதால்
அது மட்டுமே தடை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன்
(மக்களும்) புறப்பட்டனர். அவர்களில் என்னையும்
சேர்த்து ஒரு சிறு கூட்டத்தை நபி (ஸல்) அவர்கள்
வேறு வழியாக அனுப்பி வைத்தார்கள். "நாம்
சந்திக்கும் வரை கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்!'' என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கடலோரமாகச் சென்று திரும்பிய போது என்னைத் தவிர அனைவரும்
இஹ்ராம் கட்டினர்; நான் மட்டும் இஹ்ராம் கட்டவில்லை. இவ்வாறு நாங்கள் சென்று கொண்டிருக்கும்போது
என் தோழர்கள் காட்டுக் கழுதைகளைக் கண்டனர்.
நான் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி, ஒரு பெண் கழுதையின்
கால்களை வெட்டி (வேட்டையாடி)னேன். அனைவரும்
ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை சாப்பிட்டோம். "நாம் இஹ்ராம் கட்டியிருக்கும்
நிலையில் வேட்டையாடப்பட்ட இறைச்சியை உண்ணலாமா?'' என்றும் தோழர்கள்
(ஒருவரையொருவர்) கேட்டுக் கொண்டனர். எஞ்சிய இறைச்சியை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம்
சென்றோம். என் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம்
கட்டியிருந்தோம்: அபூகத்தாதா இஹ்ராம் கட்டவில்லை; அப்போது காட்டுக்
கழுதைகளை நாங்கள் கண்டோம்: அபூகத்தாதா அவற்றைத் தாக்கி அதில் ஒரு பெண் கழுதையின் கால்களை
வெட்டி (வேட்டையாடி)னார். ஓரிடத்தில் தங்கி
அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம். "நாம் இஹ்ராம் கட்டியிருக்கும்போது வேட்டையாடப்பட்ட
மாமிசத்தை உண்ணலாமா?'' என்று நாங்கள் (எங்களுக்குள்)
பேசிக் கொண்டோம். பிறகு, எஞ்சிய மாமிசத்தை எடுத்து வந்திருக்கிறோம்!'' என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவருக்குக் கூறினாரா? அல்லது அதை சுட்டிக் காட்டி சைகை செய்தாரா?'' என்று கேட்டார்கள்.
நபித் தோழர்கள் "இல்லை!'' என்றனர். "அப்படியானால் எஞ்சிய மாமிசத்தை உண்ணுங்கள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நுôல்: புகாரி 2570, 5407, 1821,
1822, 1823, 1824, 2914, 5491, 5492
இந்த ஹதீஸிலிருந்து நாம் விளங்க வேண்டியது என்னவென்றால் இஹ்ராம்
அனிந்திருப்பவர் வேட்டையாடக் கூடாது. அதே நேரத்தில் இஹ்ராம் அனியாதவர் வேட்டையாடிக் கொண்டு வந்தால்
அதைத் தாராளமாக நாம் உண்ணலாம். பேணுதல் என்ற அடிப்படையில் அதை உண்ணாமல் இருப்பது நபிவழிக்கு
முரணானதாகும்
புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள் கொடுத்தால் உண்ணலாமா?
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதரே! ஒரு கூட்டத்தினர்
எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அதனை அறுக்கும்போது) அல்லாஹ்வின்
பெயர் கூறினார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை என்று ஒரு கூட்டத்தினர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் அல்லாஹ்வின் பெயர்
கூறி அதை உண்ணுங்கள் என்றார்கள்.
நூல்: புகாரி 2057, 5507
ஆகவே பேணுதல் என்ற அடிப்படையில் நாம் உண்ணாமல் இருப்பதும் அதை
வெறுத்து ஒதுக்குவதும் தவறாகும்.
மது ஊற்றி வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை உபயோகிக்கலாமா?
இஸ்லாத்தில் ஆரம்ப காலத்தில் மது அருந்துவது முறையாகத் தடுக்கப்படவில்லை.
மாறாக மது அருந்திவிட்டு தொழுகைக்கு வரக்கூடாது என்ற தடை மட்டும் வழங்கப்பட்டது. பின்பு
முற்றிலுமாக அல்லாஹ் தடுத்து விட்டான். பின்பு நபி (ஸல்) அவர்கள் அந்தப் பாத்திரத்தை
உபயோகிப்பதை தடுத்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல் கைஸ் குலத்தாரின்
தூதுக்குழு ஒன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம்
வந்தது. அக்குழுவினர், "(அல்லாஹ்வின் தூதரே!) நாங்கள்
(இன்ன குலத்தாரில்) இந்தக் குடும்பத்தார் ஆவோம். (போர் நிறுத்தம் செய்யப்படுகின்ற)
புனித மாதங்கüலே தவிர வேறு மாதங்கüல் நாங்கள்
தங்கüடம் வந்து சேர முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே, (தெüவான) ஆணையொன்றை எங்களுக்குப்
பிறப்பியுங்கள். அதை உங்கüடமிருந்து நாங்கள் எடுத்துக்
கொள்வோம்; எங்கள் பின்னணியில் (இங்கே வராமல் ஊரில்) இருப்போருக்கு, அதன்பக்கம் அழைப்பு விடுப்போம்'' என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்கு நான்கு விஷயங்களைச் செய்யும்படி கட்டளையிடுகிறேன்; நான்கு விஷயங்களைச் செய்ய வேண்டாமெனத் தடை விதிக்கிறேன்'' என்று கூறிவிட்டு, "அல்லாஹ்வின்
மீது நம்பிக்கை கொள்வது - அதாவது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை.
நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று உறுதி கூறுவது, தொழுகையை
நிரந்தமாகக் கடைபிடிப்பது, ஸகாத் கொடுப்பது, உங்களுக்குப் போரில் கிடைத்த செல்வத்தி-ருந்து ஐந்திலொரு பங்கை
(இறைவனுக்காக) என்னிடம் செலுத்துவது ஆகியவையே நான் கட்டளையிடும் அந்த நான்கு விஷயங்கள்.
மேலும், (மது சேகரித்து வைக்கப் பயன்படுத்தப்பட்டு
வரும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவை, மண்சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம், (பேரீச்ச
மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப்பீப்பாய் ஆகியவற்றை (குடிபானங்கள்
ஊற்றி வைக்கப் புழங்க வேண்டாமென) நான் உங்களுக்குத் தடை விதிக்கிறேன்'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 523
நீக்கப்பட்ட தடை
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
சில வகைப் பாத்திரங்களுக்கு (அவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென)த் தடை விதித்தார்கள்.
அப்போது (மதீனாவாசிகளான) அன்சாரிகள் "அவை எங்களுக்குத் தேவைப்படுகின்றனவே!'' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் தடை இல்லை. (அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்)'' என்று சொல்-விட்டார்கள்.
நூல்: புகாரி 5592
முதலில் நபி (ஸல்) அவர்கள் மது ஊற்றி வைத்த பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது
என்று கூறினார்கள். பின்பு மதுவை அருந்துவது தான் தவறேயன்றி அந்தப் பாத்திரத்தை உபயோகம்
செய்வதற்குத் தடையில்லை என்று கூறி விட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவதற்குக் காரணம், ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் மது குடிப்பதில் மூழ்கி இருந்தார்கள்.
அதை அவர்கள் மறக்க வேண்டும் என்பதற்காகத் தடுத்தார்கள். பின்பு, அந்தப் பாத்திரங்களை உபயோகம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை.
இன்று நம்மில் சிலர் பேணுதல் என்ற பெயரில், இந்தப் பாத்திரத்தையா நாம் உபயோகம் செய்வது என்று விதண்டாவாதம
செய்கின்றனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அனுமதி
வழங்கியதை மேற்கூறப்பட்ட ஹதீஸில் நாம் பார்த்தோம். ஆகவே பேணுதல் என்ற பெயரில் சுன்னத்தை
மறுத்து விடுதல் கூடாது.
இறை மறுப்பாளர்களின் அன்பளிப்பை வாங்கலாமா?
இன்று நாம் பரவலாக முஸ்லிமல்லாத அன்பர்களுக்கு மத்தியில் வாழ்ந்து
வருகிறோம். இந்நிலையில் அவர்கள் ஒரு பொருளை அன்பளிப்பாகக் கொடுத்தால் அதைப் பெற்றுக்
கொள்ளலாமா?
அல்லது பேணுதல் என்ற
பெயரில் மறுக்க வேண்டுமா? என்றால் மறுக்கக்கூடாது.
இதற்கு ஒரு சிறந்த உதாரணம் கூறுவதாக இருந்தால், எந்த நபியை அல்லாஹ் உற்ற தோழனாக எடுத்துக் கொண்டானோ, இன்னும் எவருடைய வாழக்கையின்
மூலம் நமக்கு ஹஜ் என்ற கடமையை வகுத்துத் தந்தானோ அப்படிப்பட்ட இப்ராஹீம் (அலை) அவர்களின்
வாழ்விலிருந்து ஒரு செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம். இதோ அந்த செய்தி:
(நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக) அபூஹுரைரா (ர-) அவர்கள் கூறியதாவது:
இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில்
இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை: 1. (அவரை இணை வைக்கும்
திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது,) "நான்
நோயுற்றிருக்கின்றேன்'' என்று (அதில் கலந்து கொள்ளாமல்
தவிர்ப்பதற்காகக்) கூறியதும். 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோüல் கோடரியை மாட்டிவிட்டு
மக்கள்,
"இப்படிச் செய்தது யார்?'' என்று கேட்ட போது,) "ஆயினும், இவர்கüல் பெரியதான இந்தச் சிலை தான்
இதைச் செய்தது''
என்று கூறியதுமாகும். 3. (மூன்றாவது
முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு:) ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்கüன் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்கüல் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம்
(அவர்களைக் குறித்து) "இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார்: அவருடன் அவரது அழகான மனைவியும் இருக்கிறாள்'' என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம்
(அலை) அவர்களை அழைத்து வரச் சொல்- அந்த மன்னன்
ஆள் அனுப்பினான். (அவர்கள் வந்தவுடன்) அவர்கüடம் சாராவைப்
பற்றி, "இவர் யார்?'' என்று விசாரித்தான். இப்ராஹீம்
(அலை) அவர்கள்,
"என் சகோதரி'' என்று பதிலüத்தார்கள்.
பிறகு சாரா(அலை) அவர்கüடம் சென்று, "சாராவே! பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கை
உடையவர் (தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நான், "நீ என் சகோதரி' என்று அவனுக்குத்
தெரிவித்து விட்டேன். ஆகவே, நீ (உண்மையைச் சொல்-) என்னைப்
பொய்யனாக்கி விடாதே'' என்று கூறினார்கள். அந்த மன்னன்
சாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது
அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வ-ப்பு
நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா அவர்களிடம்) "அல்லாஹ்விடம் எனக்காக (என்
கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்'' என்று சொன்னான். உடனே, சாரா (அலை)
அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க, அவன் (வ-ப்பி-ருந்து)
விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க
முயன்றான். முன்பு போலவே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத்
தண்டிக்கப்பட்டான். அப்போதும், "எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி)
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்'' என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வ-ப்பி-ருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, "நீங்கள் என்னிடம், ஒரு மனிதரைக்
கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு
வந்துள்ளீர்கள்''
என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை, சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா (அலை)
அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்கüடம் அவர்கள்
தொழுது கொண்டிருக்கும் போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, "என்ன நடந்தது?' என்று கேட்டார்கள்.
அவர், "அல்லாஹ் நிராகரிப்பாளனின்.... அல்லது தீயவனின்.... சூழ்ச்சியை
முறியடித்து அவன் மீதே திருப்பி விட்டான். ஹாஜரைப் பணிப்பெண்ணாக அüத்தான்'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3358
அந்தக் கொடுங்கோல் மன்னன், ஹாஜர்
அவர்களை, சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். அன்னை ஹாஜர்
அவர்கள் வழியாகத் தான் இஸ்மாயீல் நபி பிறக்கிறார்கள். பின்பு அவர்களுடைய சந்ததியிலிருந்து
தான் நபி (ஸல்) அவர்கள் வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம்.
ஆகவே, முஸ்லிமல்லாத நண்பர்கள் கொடுக்கும்
அன்பளிப்பை எந்த ஒரு மன உறுத்தலும் இல்லாமல் நாம் அதை பெற்றுக் கொள்ளலாம். பேணிக்கை
என்ற பெயரில் தவிர்ந்திருப்பது கூடாது.
இன்னும் சொல்லப் போனால், ஒரு காஃபிர்
என்பதையும் தாண்டி அவன் ஒரு கொடிய அரசன்; இப்ராஹிம்
நபியவர்களின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றவன். இதன் காரணமாகத் தான் இப்ராஹீம் நபியவர்கள், சாரா அவர்களைத் தமது தங்கை எனப் பொய் கூறினார்கள். இந்த விபரங்களை
நாம் மேற்கண்ட ஹதீஸில் பார்த்தோம். அப்படியிருந்தும் இப்ராஹீம் (அலை) அவர்கள் அந்த
மன்னனின் அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டார்கள்.
எனவே பேணுதல் என்பதை ஒரு அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பேணுதல் என்ற பெயரில் ஹலாலானதைப் புறக்கணிப்பது கூடாது.
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM OCT 2011