ஏகத்துவவாதிகளே!
சிந்தியுங்கள் - 2
கொள்கை
ஊறவும் குருதி ஊறவும்
ஹெச்.
குர்ஷித் பானு, பி.ஐ.எஸ்.சி.
இன்றைய
தர்காவாதிகள் அன்றைய மக்கத்து முஷ்ரிக்குகளை விடவும் மோசமான கொள்கையுடையவர்கள்.
எப்படி?
மக்கத்துக்
காஃபிர்கள் இருளில் கடலில் செல்லும் போது கடல் அலைகள் கப்பலைக் கவிழ்த்து விடுமோ
என்ற சோதனையான நேரங்களில் உறுதியுடன், தூய்மையான
எண்ணத்துடன் அல்லாஹ்வை மட்டுமே அழைப்பார்கள்.
கடலிலும், தரையிலும் அவனே உங்களைப் பயணம் செய்ய
வைக்கிறான். நீங்கள் கப்பலில் இருக்கின்றீர்கள். நல்ல காற்று அவர்களை வழி
நடத்துகிறது. அவர்கள் மகிழ்ச்சியடையும் போது புயல் காற்று அவர்களிடம் வருகிறது.
ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவர்களிடம் அலையும் வருகிறது. தாம் சுற்றி வளைக்கப்பட்டு
விட்டதாக அவர்கள் முடிவு செய்கின்றனர். வழிபாட்டை உளத்தூய்மையுடன் அவனுக்கே
உரித்தாக்கி "இதிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நன்றியுள்ளோராக ஆவோம்'' என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
அல்குர்ஆன் 10:22)
அவர்கள்
கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி
அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களை காப்பாற்றி தரையில் சேர்த்ததும்
அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.
(அல்குர்ஆன் 29:65)
மக்கத்து
முஷ்ரிக்குகளின் கடவுள் கொள்கை எப்படியிருந்தது என்பதை இந்த வசனங்கள் தெளிவாகப்
படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆபத்தான கட்டத்தில் அல்லாஹ்வை மட்டுமே அழைப்பார்கள்
என்று இந்த வசனங்கள் கூறுகின்றன.
ஆனால்
இன்றுள்ள இணை வைப்பாளர்களோ மரண நேரத்தில் கூட அல்லாஹ்வை அழைக்க மாட்டார்கள்.
முஹ்யித்தீனையும், நாகூர்
ஆண்டவரையும் தான் அழைப்பார்கள். ஆம்! பிரசவ நேரத்தில் ஒரு பெண் மரணத்தின் வாசலைத்
தொட்டு விட்டு வருகிறாள் என்று கூறுவார்கள். அந்த அளவுக்குப் பிரசவ வேதனை என்பது
மிகவும் கடினமானது. அப்படிப்பட்ட பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும்
பெண்ணிடம் அவளைச் சுற்றியுள்ளவர்கள், "நீ
முஹ்யித்தீனைக் கூப்பிடு! நாகூர் ஆண்டவரை அழைத்துப் பிரார்த்தனை செய்! வெத்தலையை
மந்திரித்துச் சாப்பிடு! ஆத்தங்கரை அம்மாவை மனதில் நினைத்துக் கொள்!'' என்று சொல்லிக் கொடுக்கின்றார்கள்.
அந்தப் பெண்ணும், "யா முஹ்யித்தீனே! என் வேதனையை இலேசாக்குங்கள்'' என்று கேட்கின்றாள் என்றால் இவர்கள்
மக்கத்துக் காஃபிர்களை விட மோசமானவர்கள் என்பதை அறிய முடியும்.
மக்கா
காஃபிர்களை விட மோசமான கொள்கையில் உள்ள இணை வைப்பாளர்களான மாமன் மகளையும், மாமி மகளையும் ஏகத்துவவாதிகள் தேடிப்
போவதற்குக் காரணம் என்ன? ''இவர்கள் நம்முடைய உறவுகள்! நம்முடைய இரத்த பந்தங்கள்!'' என்று உறவுக்கு மதிப்பளிப்பதால் தான்.
ஆனால் அந்த
ஏகனாகிய அல்லாஹ்விடத்தில் இரத்த பந்தத்துக்கும் உறவுக்கும் எந்த மதிப்பும் இல்லை.
இணை
கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும்
அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
(அல்குர்ஆன் 9:113)
"நூஹே! அவன்
உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது
பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை
கூறுகிறேன்'' என்று அவன்
(அல்லாஹ்) கூறினான்.
(அல்குர்ஆன் 11:26)
நூஹுடைய
மனைவியையும், லூத்துடைய
மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான்.
அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத்
துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும்
காப்பாற்றவில்லை. "இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!'' என்று கூறப்பட்டது.
(அல்குர்ஆன் 66:10)
நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம்
(அலை) அவர்கள் (தமது தந்தை) ஆஸரை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில்
கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது
அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள், "நான் உங்களிடம் எனக்கு மாறு செய்ய
வேண்டாம் என்று கூறவில்லையா?'' என்று
கேட்பார்கள். அதற்கு அவர், "இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்'' என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், "இறைவா!
மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவு படுத்த
மாட்டாய் என்று நீ எனக்கு வாக்களித்திருந்தாய். வெகு
தொலைவி-ருக்கும் என் தந்தையை விட வேறெது அதிகம் இழிவு தரக்கூடியது?'' என்று கேட்பார்கள். அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களிடம், "நான்
சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன்'' என்று பதிலளிப்பான். பிறகு, "இப்ராஹீமே! உமது கால்களுக்குக் கீழே என்ன
இருக்கின்றது என்று பார்ப்பீராக!'' என்று
கூறப்படும். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த
முடிகள் நிறைந்த கழுதைப் பு- ஒன்று கிடக்கும். பின்னர்
அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்:
புகாரி 3350
மேற்கண்ட
வசனங்களும் ஹதீசும் நமக்கு எதைக் காட்டுகின்றன? இறைவன்
இரத்த பந்தத்தையும், உறவையும்
பார்க்கவில்லை. செயலைத் தான் பார்க்கிறான்.
இரத்த பந்த
அடிப்படையிலோ அல்லது இல்லற ஒப்பந்தம் என்ற அடிப்படையிலோ ஏகத்துவ வாதிகளுக்கும், இணை கற்பிப்பவர்களுக்கும் இடையில் எந்தவித
ஒட்டும் உறவும் இல்லை என்பதை இந்த ஆதாரங்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
ஏகத்துவவாதிகளாகிய
நம்மிடத்தில் தான் கொள்கையின் விவேகமும், வீரியமும்
குறைந்து இருக்கின்றது. ஆனால் இணை வைப்பாளர்களான அவர்களிடம் வேகமும், வீரியமும் சற்றும் குறையவில்லை. அதனால்
தான் இன்றளவும் பள்ளிவாசல்களில், "நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள், விரல் அசைப்பவர்கள், நெஞ்சில் கை கட்டுபவர்கள் இந்தப்
பள்ளியில் தொழ அனுமதியில்லை'' என்று
போர்டு வைத்துள்ளார்கள். ஊரில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், "இதோ! இந்த
வீட்டில் நஜாத்காரன் இருக்கிறான்; அவன் தான்
இதைச் செய்திருப்பான்'' என்று
பொய்ப் புகார் அளிப்பதும், ஏகத்துவப்
பிரச்சாரக் கூட்டங்களைத் தடை செய்வதும், ஏகத்துவவாதிகளை
ஊர் நீக்கம் செய்வதும் இந்த வீரியத்தின் வெளிப்பாடு தான்.
இந்த இணை
வைப்பவர்கள் இப்படிச் செய்வதற்குக் காரணம் என்ன?
நாம் என்ன
அவர்களுடைய பொருட்களை அபகரித்தோமா? அல்லது
அவர்களை ஏமாற்றினோமா? அப்படிச்
செய்தவர்களைக் கூட இவர்கள் மன்னித்து விடுவார்கள். "ஏகனாகிய அல்லாஹ்வை
மட்டுமே வணங்க வேண்டும்; அவனுக்கு
எதையும் இணையாக ஆக்கக் கூடாது; நபி (ஸல்)
அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும்'' என்று நாம் சொன்னதால் தானே நம்மை
எதிர்க்கின்றார்கள். இதைச் சொன்னதால் தான் அன்று அந்த மக்கா காஃபிர்களும் நபி
(ஸல்) அவர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்தார்கள். ஏகத்துவவாதிகளே! இப்படிப்பட்ட இணை
வைப்பவர் களிடத்தில் தான் நீங்கள் உறவை வலுப்படுத்திக் கொள்கிறீர்கள்.
நம்பிக்கை
கொண்டோரே! உங்களின் பெற்றோரும், உங்களின்
உடன்பிறந்தோரும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற
நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி
இழைத்தவர்கள்.
(அல்குர்ஆன் 9:23)
"உங்கள்
பெற்றோரும், உங்கள்
பிள்ளைகளும், உங்கள் உடன்
பிறந்தாரும், உங்கள்
வாழ்க்கைத் துணைவியரும், உங்களின்
குடும்பத்தாரும், நீங்கள்
திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு
நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள்
விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை
விட, அவன்
பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ்
தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு
அல்லாஹ் வழி காட்ட மாட்டான்'' என்று
கூறுவீராக!
(அல்குர்ஆன் 9:24)
சத்தியத்தை
விட்டு விட்டு, அசத்தியத்தில்
இருப்பவர்களைப் பொறுப்பாளிகளாக ஆக்காதீர்கள் என்று இறைவன் இந்த வசனங்களில்
எச்சரிக்கிறான். அவ்வாறு செய்வோரை அநியாயக்காரர்கள் என்றும் கூறுகின்றான்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக் கூடிய
சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போரை தமது
பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக
இருந்தாலும், சகோதரர்களாக
இருந்தாலும், தமது
குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்களின்
உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப்
பலப்படுத்தியுள்ளான். அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்கிறான். அவற்றின்
கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ்
பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே
அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி
பெறுபவர்கள்.
(அல்குர்ஆன் 58:22)
அல்லாஹ்வையும்
அவன் தூதரையும் மறுக்கக் கூடியவர்கள் பெற்ற தாயாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், எந்த உறவாக இருந்தாலும் அவர்களை ஓர் இறை
நம்பிக்கையாளன் நேசிக்க மாட்டான் என்று அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகின்றான்.
ஏகத்துவவாதிகளே! இந்த நிலை இன்று உங்களிடம் இருக்கின்றதா? சிந்தியுங்கள்.
வளரும்
இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM FEB 2007