விவாதங்கள்ஓய்வதில்லை 5 : விவாதங்கள்
ஓய்வதில்ல இறந்தவர் எழுந்து வருவாரா?
எம். ஷம்சுல்லுஹா
இறந்து போன பெரியார்களிடம் பிரார்த்திப்பது முஸ்லிம்களிடம் அன்றிலிருந்து இன்று வரை நீடித்து வரும் வழக்கமாகும். இது கொடிய இணை வைப்பெனும் பெரும் பாவமாகும். இந்தப் பாவத்தை எதிர்த்து தான் அன்று குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் போர்க் கொடி தூக்கினோம்.
அவ்வாறு நாம் மட்டும் போர்க் கொடி தூக்கினால் போதாது. ஆலிம் பெருமக்களையும் அணி சேர்த்துக் கொண்டு களம் கண்டால் எளிதில் வெற்றியடையலாம் என்ற நோக்கில் அப்போதைய ஜமாஅத்துல் உலமாவின் மாநிலத் தலைவர் ஷம்சுல்ஹுதா ஆலிமைச் சந்தித்த விபரத்தைக் கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம்.
நாம் எடுத்து வைத்த வாதங்களுக்கு - குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தொடுத்த கேள்விகளுக்கு அவர் பதில் தரவில்லை.
காரணம், அவர் இருந்தது அசத்தியம்! இதை அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.
தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? "என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, "நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:258)
இவ்வாறு மவ்லானா மவ்லவி ஷம்சுல்ஹுதா மவ்னம் வகித்து அசத்தியத்திலேயே உறுதியாக இருந்து விட்டார். நாம் எதிர்பார்த்தது போன்று நம்முடன் சேர்ந்து சத்தியத்தைச் சொல்ல முன்வரவில்லை. கடைசி வரை சத்தியத்திற்கு வர மறுத்தது மட்டுமல்ல! அதற்கு எதிரான காரியங்கள் அனைத்தையும் செய்து கொண்டு இருந்தார். எனினும் நாங்கள் எங்கள் முயற்சியில் தளரவில்லை.
அப்துஸ்ஸலாம் ஆலிமுடன் ஒரு சந்திப்பு
அடுத்தக்கட்ட முயற்சியாக கிளியனூர் மத்ரஸாவின் முதல்வர் மவ்லானா மவ்லவி எஸ்.ஏ. அப்துஸ்ஸலாம் அவர்களைச் சந்திப்பதற்கு முயற்சி எடுத்தோம். அதற்கு அவரும் இசைவு தெரிவித்தார். இங்கு அப்துஸ்ஸலாம் அவர்களைப் பற்றி சில விபரங்களைத் தருகின்றோம். அவர் எனக்கு ஆசிரியராக இருந்தவர். சிறந்த அறிஞர். ஷம்சுல்ஹுதா ஆலிமுடன் இணைந்து படித்தவர். கிளியனூரில் பி.ஜே. மளிகைக் கடை நடத்தி வந்தார். பி.ஜே.யின் சகோதரர் பி.எஸ். அலாவுதீன் கிளியனூருக்கும் சங்கரன்பந்தலுக்கும் இடையிலுள்ள ஒரு ஊரில் மளிகைக் கடை நடத்தி வந்தார்.
அப்போது அப்துஸ்ஸலாம் அவர்கள் பி.ஜே.யை அடிக்கடி சந்தித்து, "நீங்கள் இந்த மார்க்கத் துறைக்கு வர வேண்டும்'' என்று வலியுறுத்தி, தனது ரஹ்மானிய்யா மத்ரஸாவில் பி.ஜே.யை ஆசிரியராகப் பணியாற்றும் படி செய்தார். அந்த மத்ரஸாவில் பணியாற்றிய பிறகு தான் பி.ஜே. சங்கரன்பந்தல் மத்ரஸாவில் பணியாற்றினார். அப்போது தான் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. ஷம்சுல்ஹுதா ஆலிமைச் சந்திக்கச் சென்ற அதே குழுவினரில் ஒன்றிரண்டு பேர் அதிகமாக இதில் இடம் பெற்றிருந்தனர்.
ஷம்சுல்ஹுதாவைப் போன்று மறுக்காமல் டேப் ரிக்கார்டரில் பதிவு செய்வதற்கு அனுமதியளித்தார். ஒரு மாலை நேரத்தில் மத்ரஸாவின் மைய வளாகத்தில் அமர்வு தொடங்கியது. கூடவே மத்ரஸா மாணவர்களும் இருந்தனர்.
பி.ஜே.:
இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்தனை செய்யலாமா? இதற்கு ஆதாரம் இருக்கின்றதா?
அப்துஸ்ஸலாம்:
குர்ஆனில் இதற்கு ஆதாரம் இருக்கின்றது.
பி.ஜே.:
எங்கே இருக்கின்றது?
அப்துஸ்ஸலாம்:
பனூ இஸ்ராயீல் சமூகத்தில் ஒருவர் கொலை
செய்யப்பட்டு விடுகின்றார். அந்த விவகாரம் மூஸா (அலை) அவர்களிடம் வருகின்றது.
மாட்டின் ஒரு பகுதியைக் கொண்டு கொலையுண்டவரின் மீது அடிக்கப் படுகின்றது. அவர்
எழுந்து வந்து பதில் சொல்கின்றார் அல்லவா?
(அப்போது தான்
ஏகத்துவ சிந்தனையில் அடியெடுத்து வைத்திருக்கும் எங்களுக்கு இது பெரிய ஆதாரமாகத்
தோன்றியது.)
பி.ஜே.: நீங்கள் சொல்கின்ற அந்தச் சம்பவத்தில்
கொலையுண்டு இறந்தவரின் உயிர் மட்டும் வந்ததா? அல்லது
உயிருடன் உடலும் சேர்ந்து அப்படியே எழுந்து வந்தாரா?
அப்துஸ்ஸலாம்:
(உடலும் உயிரும் சேர்ந்து) அப்படியே உயிர்
பெற்று எழுந்து வந்தார்.
பி.ஜே.:
இங்குள்ள நிலைமை அப்படி இல்லையே! முஹய்யித்தீன்
அப்துல் காதிர் ஜீலானியின் பெயரால் நடத்தப்படும் யாகுத்பா எனும் திக்ர் சபையில்
முஹய்யித்தீனின் உயிர் மட்டும் வருகின்றது என்று தானே மக்கள் நம்புகின்றார்கள்.
உடலுடன் சேர்ந்து வந்தால் தான் பிரச்சனையே இல்லையே! இதற்கு என்ன சொல்கின்றீர்கள்?
இதற்கு அப்துஸ்ஸலாம் ஆலிம் எந்தச் சரியான
பதிலையும் தரவில்லை.
பின்னர் யாகுத்பா, புர்தா போன்றவற்றில் வரும் ஷிர்க்கான, இறைவனுக்கு
இணை கற்பிக்கும் கவிதை வரிகள் பற்றி பி.ஜே. கேட்டார். எல்லாவற்றுக்கும்
"பார்த்துப் பதில் சொல்கின்றேன்'' என்று
சொன்னார். அத்துடன் அமர்வு நிறைவு பெற்றது.
தமிழகத்தில் இதுவரை நடந்து வருகின்ற இந்த
குத்பியத் திக்ர் எனும் இணை வைப்புப் பிரார்த்தனைக்கு தமிழகத்தில் மூத்த அறிஞர்களின்
பட்டியலில் இருந்த எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா, எஸ்.ஏ.
அப்துஸ்ஸலாம் போன்ற அறிஞர்களிடம் கூட ஆதாரமில்லை என்று அப்போது நன்கு தெளிவாகத்
தெரிய வந்தது.
சத்தியம் என்று வருகின்ற போது அங்கு பதில்கள்
நெத்தியடியாக இருக்க வேண்டும். அசத்தியத்தின் கபாலங்கள் தெறித்தோடி மூளையைத்
துளைத்து எடுக்கும் சுத்தியல் அடியாக இருக்க வேண்டும். இதைத் தான் அல்லாஹ்வும்
திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது.
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது.
(அல்குர்ஆன் 21:18)
அந்த நெத்தியடி, சுத்தியல் அடி நம்மிடம் தான் இருக்கின்றது, அவர்களிடம் இல்லை என்பது உறுதியானது. அதுவே சத்தியப் பாதையில் கடுகளவும் சலனம், சஞ்சலமின்றி நடை போட வைத்தது.
இனிமேல் இந்தக் கருத்தை உலமாக்கள் மன்றத்தைத் தாண்டி மக்கள் மன்றத்தில் கொண்டு போவோம் என்று அல்லாஹ்வை நம்பி அடியெடுத்து வைத்தோம்; இடியென முழங்கினோம்; மழையெனப் பொழிந்தோம். விளைவு, நம் நெஞ்சை அள்ளி அரவணைக்கின்ற வகையில் கும்பகோணத்தில் சத்திய வயலில் ஏகத்துவ விளைச்சல்.
"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது'' என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:81)
அந்த நெத்தியடி, சுத்தியல் அடி நம்மிடம் தான் இருக்கின்றது, அவர்களிடம் இல்லை என்பது உறுதியானது. அதுவே சத்தியப் பாதையில் கடுகளவும் சலனம், சஞ்சலமின்றி நடை போட வைத்தது.
இனிமேல் இந்தக் கருத்தை உலமாக்கள் மன்றத்தைத் தாண்டி மக்கள் மன்றத்தில் கொண்டு போவோம் என்று அல்லாஹ்வை நம்பி அடியெடுத்து வைத்தோம்; இடியென முழங்கினோம்; மழையெனப் பொழிந்தோம். விளைவு, நம் நெஞ்சை அள்ளி அரவணைக்கின்ற வகையில் கும்பகோணத்தில் சத்திய வயலில் ஏகத்துவ விளைச்சல்.
"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது'' என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:81)
"சத்தியமே
வெல்லும்; அசத்தியம் அழிந்து போகும்'' என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறிக் கொண்டிருக்கின்றது. அனைத்துப் புகழும்
அல்லாஹ்வுக்கே!
EGATHUVAM MAY 2006