Apr 2, 2017

கடையநல்லூர் அல்மஸ்ஜிதுல் முபாரக் திறப்பு - சதியை முறியடித்த சந்தாதாரர்கள்

கடையநல்லூர் அல்மஸ்ஜிதுல் முபாரக் திறப்பு - சதியை முறியடித்த சந்தாதாரர்கள்

ஏகத்துவத்திற்கு எதிராகக் களமிறங்கிய கழகத்தாரை விட்டு தவ்ஹீத் ஜமாஅத் பிரிந்தது. அதுவரை கழகத்தாரை காஃபிர்கள் ரேஞ்சுக்குப் பேசிக் கொண்டிருந்த சந்தர்ப்பவாத ஜாக் பரிவாரம், அவர்களுடன் போய் ஒட்டிக் கொண்டது.

இன்னும் தவ்ஹீதுக்கு எதிரான என்னென்ன அமைப்புகள் இருக்கின்றனவோ அவை அனைத்துடனும் சேர்ந்து கொண்டு பள்ளிவாசல்களை இழுத்து மூடும் பணியிலும் ஜாக் பரிவாரம் இறங்கியது.

அதன் உச்சக்கட்டப் பணியாக கடையநல்லூர் அல்மஸ்ஜிதுல் முபாரக் பள்ளியில் வெளியூர் அடியாட்களை அழைத்து வந்து ரவுடித்தனம் செய்து பள்ளிவாசலுக்கு மூடு விழா நடத்தியது.

அதே பாணியில் மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானிலும் அடியாட்களை அழைத்து வந்து பிரச்சனையை ஏற்படுத்தி, இழுத்து மூட ஜாக் பரிவாரம் செய்த சதி இறையருளால் முறியடிக்கப் பட்டது.

எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் ஐவேளைத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக்கில் ஜாக் மற்றும் தமுமுக ரவுடிகள் புகுந்து ரத்தக்களறியாக்கி அதன் காரணமாக இழுத்து மூடியதை அனைவரும் அறிவார்கள்.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் அன்றைய ஆளுங்கட்சியின் துணையுடன் பள்ளியை மூடினார்கள் என்று ஜாக், தமுமுக கும்பல் பொய்ப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியது.

ஆனால் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! மார்ச் 25ம் தேதி லுஹர் தொழுகைக்குப் பின் மூடப்பட்டு, ஐந்து மாதங்கள் தொழுகை நடத்தப்படாமல் நிறுத்தப்பட்ட அல்மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் ஆகஸ்ட் 23ம் தேதி மக்ரிப் தொழுகையின் போது திறக்கப்பட்டது.

மஸ்ஜிதுல் முபாரக்கின் கட்டுமானத்தின் ஒவ்வொரு செங்கலும் எந்த ஊர் மக்களின் உழைப்பில் உதிர்த்த வியர்வைத் துளியில் பதிந்து நிற்கின்றதோ அந்த ஊர் மக்களின் - சந்தாதாரர்களின் - சத்திய சந்ததிகளின் கண்ணீர் திவலைகளுக்கு, கவலைகளுக்குக் காணிக்கையாக, 17.08.05 அன்று நெல்லை முதன்மை சார்பு நீதிமன்றம் ஓர் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

தீர்ப்பு விபரம்

மனுதாரர்கள்

1. வி.கே. மஸ்ஊத்

2. எம்.எஸ். ஷைக் உஸ்மான்

எதிர் மனுதாரர்கள்

1. ஜாக் மாநிலத் தலைவர் மற்றும் அவரது ஆட்கள்

2. கடையநல்லூர் முபாரக் பள்ளி நிர்வாகக் கமிட்டி

....மனுதாரர்கள் கூறியவாறு மனுச் சொத்தில் மனுதாரர்களும் அந்தப் பள்ளிவாசல் மற்ற உறுப்பினர்களும் தொழுகை நடத்தி வக்ஃப் நடவடிக்கை மேற்கொள்வதை எதிர் மனுதாரர்களோ அவரது ஆட்களோ தடை செய்யக் கூடாது என்று நிரந்தர உறுத்துக் கட்டளை பரிகாரம் கோரியுள்ளதில் மனுதாரர்களுக்கு முதல் நிலை வழக்கும், சமநிலை பாகுபாடும் சாதகமாக அமைந்துள்ளதாகக் கருதுகின்றேன்.

எனவே மனுதாரர்கள் கோரியவாறு பரிகாரத்தைப் பெற தகுதி படைத்தவர்கள் என்று தீர்மானித்து இந்தப் பிரச்சனைக்கு இவ்வாறாக தீர்வு காண்கின்றேன்.

இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

அதன் படி ஆகஸ்ட் 23ம் தேதி மாலை ஐந்தரை மணிக்குத் தங்கள் உள்ளங்கள் குளிர, கண்கள் ஆனந்தக் கண்ணீரை வடிக்க அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவர்களாக அல்மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசலைத் திறந்தனர்.

நீதிபதி தனது தீர்ப்பில் எதிர் மனுதாரர்களான 1. ஜாக், 2. மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டியினர் ஆகிய இரு சாராரும் தொழுகையைத் தடுக்கக் கூடாது என்று கட்டளையிடுகின்றார்.

இந்தத் தீர்ப்பின் படி அல்மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டியினர் பள்ளியில் தொழுகை நடத்துவதற்கு மனுதாரர்களான வி.கே. மஸ்ஊத், எம்.எஸ். ஷைக் உஸ்மான் ஆகிய இருவருக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். தொழுகையைத் தடுத்து நிறுத்தும் எந்த ஒரு துரோகத் தனத்திலும் இறங்கவில்லை.

ஆனால் ஜாக், தமுமுக கும்பலோ மறுபடியும் வெளியூரிலிருந்து அடியாட்களைத் திரட்டிக் கொண்டு வந்து தகராறு செய்து மீண்டும் பள்ளியை இழுத்து மூடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன் மூலம் தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் பள்ளிவாசலை மூடி விட்டார்கள் என்று இவர்கள் செய்த பொய்ப் பிரச்சாரம் தூள் தூளாகிப் போயுள்ளது.

உண்மையில் இந்த ரவுடிக் கும்பல் வந்து ரத்தக்களறியை ஏற்படுத்தியதால் தான் பள்ளிவாசல் இழுத்து மூடப் பட்டது. அன்று ஆர்.டி.ஓ. தனக்கு அதிகாரமில்லாத ஒரு தீர்ப்பை முதலில் வழங்கி விட்டு, பின்னர் அதனால் உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும் என்று பயந்து தனது தீர்ப்பை மாற்றினார்.

ஆர்.டி.ஓ.வின் இந்தத் தவறான அணுகுமுறையை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஜாக், தமுமுக கும்பல் பள்ளிவாசலில் நுழைந்து பிரச்சனை செய்து, ரத்தக்களறி ஏற்படுத்தி பள்ளிவாசலை இழுத்து மூடியதுடன், அன்றைய ஆளுங்கட்சியினரின் நெருக்குதலால் தான் ஆர்.டி.ஓ. தனது தீர்ப்பை மாற்றினார் என்று பொய்ப் பிரச்சாரமும் செய்து வந்தனர்.

ஆனால் பள்ளிவாசல் மூடப்பட்ட நாள் முதல் அல்மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டியினர் அதைத் திறப்பதற்குப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தனர்.

1. பள்ளிவாசலைத் திறக்கக் கோரி டி.ஜி.பி.க்கு தந்தியடித்தது.

2. பள்ளியைத் திறப்பதற்காக மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் ரிட் தாக்கல் செய்தது.

3. பள்ளியைத் திறப்பதற்காக தீர்ப்பாயம் சென்றது.

4. சந்தாதாரர்கள் பள்ளிவாசலைத் திறப்பதற்கு நீதிமன்றத்தை அணுகி உத்தரவு வாங்கிக் கொண்டு வந்த போது அதை நிறைவேற்ற ஒத்துழைப்பு கொடுத்தது.

ஆகிய அடுக்கடுக்கான செயல் பாடுகள் அனைத்தும், பள்ளியைத் திறக்க வேண்டும் என்பதற்கு அல்மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டியினர் எடுத்த தூய முயற்சிகளுக்கு சாட்சிகளாகத் திகழ்கின்றன.

ஜாக், கலகக் கும்பலின் சதித் திட்டங்கள்

அல்மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டியின் முழுமையான ஒத்துழைப்பின் காரணமாக 23ம் தேதி பள்ளிவாசல் திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பள்ளியில் தொழுகை தடையின்றி நடந்து வருகின்றது. ஆனால் இதற்கு நேர் மாற்றமாக பள்ளி திறக்கப்பட்டதும் ஜாக் மற்றும் கலகக் கும்பல் தொழுகை நடத்த விடாமல் தடுப்பதற்கு பல்வேறு சதி முயற்சிகளைச் செய்தது.

பள்ளி திறந்ததும் இவர்களது வழக்கப்படி வெளியூரிலிருந்து அடியாட்களை அழைத்து வந்து ஒவ்வொரு தொழுகையிலும் வேண்டுமென்றே இரண்டாவது ஜமாஅத் நடத்தி தகராறு இழுக்க முயற்சி செய்தனர்.

ஜும்ஆ தினத்தன்று பள்ளியில் பெண்கள் அமரும் தளத்தில் திரைகளை விலக்கிக் கொண்டு உள்ளே வந்து பெண்களைத் தொழ விடாமல் தடுத்தனர். இந்த அடாவடித்தன அடியாட்களைக் கண்டு பெண்கள் தொழாமல் வெளியேறும் அநியாயம் நடந்தேறியது.

இவர்கள் ஜும்ஆ தொழுகையை மட்டும் சீர்குலைக்க வரவில்லை; பள்ளியை மீண்டும் இழுத்து மூடும் வெறித்தனத்தில் வந்திருக்கின்றனர் என்று புரிந்து கொண்ட ஜமாஅத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்ததும், அந்தத் தளத்திலிருந்து வெளியேறினர்.

போட்டி ஜும்ஆ நடத்த முயற்சி

அங்கிருந்து வெளியேறி மூன்றாவது தளத்திற்குச் சென்று, சும்மா உட்காராமல் ஜும்ஆ நடத்த முயற்சி செய்தனர். அதற்கும் காவல்துறையில் முறையிட்ட போது உலக மகாப் பொய்யன் ஏர்வாடி சிராஜ், நீதிமன்ற உத்தரவு தொழுகையைத் தான் எடுத்துக் கொள்ளும்; ஜும்ஆ குத்பா நடத்துவதை எடுத்துக் கொள்ளாது என்று உளறிக் கொட்டியுள்ளான்.

"இனிமேல் ஒன்னுக்கு இருப்பதற்கு ஓர் உத்தரவு, உளூச் செய்வதற்கு ஓர் உத்தரவு என்று தனித்தனி உத்தரவுகள் வாங்க வேண்டியது தான்'' என்று ஜமாஅத்தினர் இடித்துரைத்த பின்னர் ஜும்ஆ நடத்தும் முயற்சியைக் கைவிட்டனர்.

கூட்டி வரப்பட்ட கூலிப் படையினர்

கடையநல்லூரில் ஜாக் என்று சொல்வதற்கு விரல் விட்டு எண்ணும் அளவுக்குக் கூட ஆள் இல்லை என்பதால் வெளியூரிலிருந்து கலகக் கும்பலை - கூலிப் படையை உள்ளே கூட்டி வைத்துத் தான் பள்ளியை பூட்டி மகிழ்ந்தார்கள்.

வெளியூர்களிலிருந்து வேன்களிலும் ஆட்டோக்களிலும் அடியாட்களை அழைத்து வந்து அந்த அக்கிரமத்தை அரங்கேற்றினார்கள். இப்போதும் அதே பாணியில் கூலிப் படையினரை அழைத்து வந்து தான் தகராறு செய்துள்ளனர்.

வந்த இந்தக் கூலிப் படையினருக்கு ஏர்வாடி சிராஜ், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை அள்ளி வீசியதைப் பார்த்து மக்கள் வெறுத்துப் போய் இருக்கின்றனர்.

நடுநிலையாளர்களே! நியாயவான்களே! பள்ளியை இழுத்து மூடிவிட்டு, அதைத் திறப்பதற்கு ஒரு துரும்பையும் அசைக்காமல், எள் முனையளவும் முயற்சிக்காமல் இருந்தனர். அந்த ரத்த வெறியோடு மேலப்பாளையத்திலும் வந்து பள்ளியை மூடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இப்போது மஸ்ஜிதுல் முபாரக்கின் சந்தாதாரர்களின் முயற்சியால் இந்த நயவஞ்சகர்களின் சதி முறியடிக்கப் பட்டு பள்ளிவாசல் திறக்கப்பட்டவுடன் கலகக் கும்பலைக் கூட்டி வந்து கலகம் செய்து மீண்டும் பள்ளிவாசலை மூடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இவர்களின் சதியை முறியடிக்க அல்லாஹ் போதுமானவன்.

EGATHUVAM SEP 2006