காசு
பணமா? கற்பு மானமா?
படிப்பதற்கு முன்...
சமுதாயத்தில் நடைபெறும் அவலங்களைச் சுட்டிக் காட்டுவதே
இந்தக் கட்டுரையின் நோக்கம். இதில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையில்
நடந்த நிகழ்வுகளாகும். சமுதாயத்தில் அனைத்துப் பெண்களும் இப்படித் தான் என்பது
இதன் பொருளல்ல! மார்க்கத்தைப் பின்பற்றி, தங்கள் கற்பு நெறிகளைப்
பாதுகாக்கும் பெண்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், சூழ்நிலை காரணமாக வழிதவறும்
பெண்களைப் பற்றி எச்சரிப்பது மார்க்க அடிப்படையில் நமது கடமை என்பதற்காகவே இந்தக்
கட்டுரை வெளியிடப்படுகின்றது.
காலம் காலமாக முஸ்லிம்கள் வெளிநாட்டில் போய் சம்பாதித்து
வருகின்றனர். கடந்த காலத்தில் சிங்கப்பூர், மலேஷியா என்று பயணம்
மேற்கொண்டனர். அப்படிப் பயணம் சென்றவர்கள் இரண்டாண்டுக்கு ஒரு முறை அல்லது
ஓராண்டுக்கு ஒரு முறை வந்தாலும் ஆறு மாத காலம் விடுப்பில் வருவார்கள். இத்தகைய
பயணங்களால் பெரும்பாலும் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை. அரபு நாட்டுப் பயணம்
துவங்கியது தான் தாமதம். பிரச்சனைகள், மடை திறந்த வெள்ளமாய்
சமுதாயத்தை நோக்கிப் பாய ஆரம்பித்து விட்டன.
வளைகுடாப் பயணம் மேற்கொள்வோருக்குப் பெரும்பாலும்
இரண்டாண்டுகளுக்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் அல்லது 40 நாட்கள் விடுமுறை
தருகிறார்கள். சில கம்பெனிகளில் ஆண்டுக்கு ஒரு மாதம் விடுமுறை!
இவ்வளவு குறைந்த விடுமுறையில் வருகின்ற ஒருவர் திருமணம்
முடித்து விட்டுச் செல்கின்றார். கணவனின் முகம் மனைவிக்கும், மனைவியின் முகம் கணவனுக்கும்
நினைவில் நன்கு பதியாத இந்தக் குறைந்த அவகாசத்தில் மீண்டும் வெளிநாடு திரும்பி
விடுகின்றார்.
அடுத்து அவர் ஊருக்குத் திரும்புவது இரண்டாண்டுகளுக்குப்
பின்னர் தான். இதற்கிடையே இங்கே நடப்பது என்ன? அது தான் இரத்தத்தைக்
கொதிக்க வைத்து இதயத்தை வெடிக்கச் செய்யும் அதிர்ச்சி நிகழ்வுகளாகும்.
குடும்பத்திலேயே குள்ள நரி
நம் நாட்டு வாழ்க்கை அமைப்பு முறை கூட்டுக் குடும்பமாகும்.
அண்ணன், தம்பிகள் எல்லோரும் ஒரே குடும்பமாக, ஒன்றாய் உண்டு ஒரே வீட்டில்
வாழ்கின்றனர்.
அண்ணன் மனைவி தம்பியிடமோ, தம்பி மனைவி அண்ணனிடமோ
பலியாகி விடுகின்றனர். கணவன் ஊரில் இருக்கும் போதே இந்த அபாயம் நடக்கின்றது எனும்
போது கணவன் வெளிநாட்டில் இருந்தால் ஏற்படும் அபாயத்தைப் பற்றிச் சொல்ல
வேண்டியதில்லை. கணவன் வீட்டிலே அல்லது மனைவியின் வீட்டிலே கூட இந்தப் பேராபத்தும்
பெரு விபத்தும் நடைபெறுகின்றது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மக்களிடம் இஸ்லாம்
அதன் தூய வடிவில் வந்து சேரவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்கள்
இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள்.
அப்போது அன்சாரிகüல் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற)
உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன
கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள்
மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: புகாரி 5232
தவ்ஹீத் ஜமாஅத் வந்து தான் இந்த ஹதீஸை தயவு தாட்சண்யமின்றி
போட்டு உடைத்துச் சொல்கின்றது. மார்க்கம் சொல்கின்ற இந்தத் தடுப்பு அரண் கணவன்
ஊரில் உலவிக் கொண்டிருக்கும் போதே உடைத்து நொறுக்கப்பட்டு விபத்தும் விபரீதமும்
ஏற்படுகின்றது. கணவன் வெளிநாடு சென்று விடுகிறான் எனும் போது ஷைத்தான் முழுமையாகப்
புகுந்து விளையாடி விடுகின்றான். இப்படிக் குடும்பத்தில் விளையாடும் குள்ள நரிக்கு
இப்பெண்கள் பலியாவது ஒரு ரகம்.
வேலி தாண்டும் வெள்ளாடு
குடும்பத்தில் நடக்கும் இந்தக் குழப்பம் புகைந்து, பற்றி எரிந்து விவாகரத்தில்
போய் முடிகின்றது. அண்ணன், தம்பிக்கு மத்தியில் மாறாப் பகை, தீராப் பழி ஏற்பட்டு
விடுகின்றது.
குடும்பத்தைத் தாண்டிச் சென்று சில பெண்கள், வேலி தாண்டும் வெள்ளாடாகவும்
ஆகி விடுகின்றனர். இந்தக் கட்டத்தில் இப்பெண்கள் இஸ்லாத்தை விட்டே ஓடி
விடுகின்றனர். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
வட்டிக்காரன்
பொதுவாக நம்முடைய சமுதாயத்தின் பலவீனத்தைப் பிற
சமுதாயத்தவர்கள் நன்கு தெரிந்தே வைத்திருக்கின்றனர். வெளிநாட்டுக்குச்
செல்கின்றவர்களின் குடும்பங்களை நன்கு நோட்டமிட்டு இரையைப் பார்த்து வட்டமிடுகின்ற
கழுகாக கணக்குப் போட்டு தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
இதில் வட்டிக்கென்றே பெயர் பெற்ற ஒரு சமுதாயத்தினர்
முதலிடம் வகிக்கின்றனர். இவர்களிடம் தான் நம்முடைய சமுதாய மக்கள் தன் மனைவியையும்
அழைத்துக் கொண்டு போய் வட்டிக்கு வாங்குகின்றனர். அதன் பின்னர் கணவன் பயணம் போய்
விடுகின்றான். இங்கே இவனுடைய மனைவியிடம் வட்டிக்காரனின் புதிய பயணம் துவங்கி
விடுகின்றது. கடனும் அடைத்தபாடில்லை. கள்ளத் தொடர்பும் முடிந்தபாடில்லை. இப்படியே
கணவனுக்கு விவகாரம் தெரிய வர விவாகரத்தில் போய் முடிகின்றது.
பலி கொள்ளும் பால்காரன்
பொதுவாகவே பால்காரனின் பார்வைகள் பலான பலன் கிடைக்காதா என்ற
ஏக்கப் பார்வைகள் தான். நெல்லை மாவட்டத்தில் ஓர் ஊரில் வெளிநாட்டில் இருக்கின்ற
ஒருவரின் மனைவி பால்காரனிடம் வழிதவறுகின்றாள். 5 மணிக்குக் கொடுக்கும் வழக்கத்தை மாற்றி 7 மணிக்குப் பால்
கொடுக்கின்றான்; பலனை அனுபவிக்கின்றான்.
மேய வருகின்ற மேஸ்திரி
இது பால்காரனின் பாலியல் விளையாட்டு என்றால் வீடு
கட்டுவதற்குக் காண்டிராக்ட் எடுக்கின்ற கொத்தனார் மேஸ்திரியின் மேய்ச்சலை
நினைத்தால் வயிறு எரிகின்றது.
இவனுக்கும் நமது சமுதாயப் பெண்களின் கற்பு கறிவேப்பிலையாகி
விட்டது. இது போல் வீட்டிற்கு வருகின்ற பொற்கொல்லன், ஆசாரி என்று பட்டியலே
நீள்கின்றது.
பிரச்சார ஆலிமின் விபச்சாரம்
சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் ஒரு பிரச்சார ஆலிமின்
பெயர் முஜீபுர்ரஹ்மான். இவனுடைய காமக் களியாட்டத்தைப் பாருங்கள்.
வெளிநாட்டில் இருக்கும் ஒரு சகோதரருக்கும் அவரது
மனைவிக்கும் இடையே ஒரு விரிசல்! இந்தச் சிறிய இடைவெளியில் இந்த ஆபாச ஆலிம்சா, சமாதானம் செய்கிறேன் என்ற
சந்தடி சாக்கில் நுழைந்து விடுகிறான்.
சில துஆக்கள் மூலம் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன் என்று
சதி சரச வலையைப் பின்னுகிறான். ஆலிம் என்ற போர்வையில் கணவனிடம் பேசுகிறான். ஆலிம்
என்றால் இந்தச் சமுதாயம் ஈமானையும் இழந்து விடும் அளவுக்கு நம்பும் அல்லவா? அது தான் இங்கு
நடந்திருக்கின்றது. இவனும் அடிக்கடி வர ஆரம்பித்திருக்கிறான். போன் தொடர்பும்
ஏற்பட்டுள்ளது. பிறகு விவகாரம் முற்றிப் போய் ஊர் முழுக்க நாற
ஆரம்பித்திருக்கிறது.
கல்லூரி படிக்கின்ற வயது வந்த மகள், +2 படிக்கின்ற மகனுடன் அந்தப் பெண்ணைக் கடத்திக்
கொண்டு ராஜபாளையம் என்ற ஊருக்கு வந்து விடுகின்றான். சைதை ஜமாஅத் கொந்தளித்துப்
போய் ராஜபாளையம் வந்து, கையும் களவுமாகப் பிடித்து பிள்ளைகளைக் காப்பாற்றிச்
செல்கின்றனர். மனைவி ராமநாதபுரத்தைச் சேர்ந்த வசதி படைத்த பெண். விவாகரத்துச்
செய்யப்படுகின்றாள்.
வைப்புக்கு எதிராக வைஃப் போராட்டம்
விவகாரம் இத்துடன் நிற்கவில்லை. இந்த அயோக்கிய
ஆலிம்சாவுக்கு ஆராம்பண்ணை என்ற இடத்தில் புரோகித வேலையும் கிடைக்கிறது.
பொறுக்கிகளும் இமாமத் வேலை பார்க்கலாம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
"நான் இருக்கும் போதே இவளை எப்படி இழுத்து வரலாம்' என்று இவனது மனைவி
போராடுகின்றாள்.
அன்றாடம் தன்னை அலைக்கழிக்கின்ற மனைவியை திட்டமிட்டே இந்த
ஷைத்தான் ஒரு ஆசாரியுடன் போகச் சொல்கிறான். அவள் ஆசாரியுடன் சுற்ற
ஆரம்பிக்கின்றாள். பூங்கா, ஹோட்டல்கள் என அவ்விருவரும் பொழுதுபோக்க ஆரம்பிக்கின்றனர்.
இந்தச் சமயத்தில் சமுதாயத்தின் சில இளைஞர்களிடம் இந்தக் கள்ள ஜோடியினர் சிக்கிய
போது தான் காமுக ஆலிம்சாவின் கரை படிந்த வரலாறு தெரிய வருகின்றது.
கணவனின் வீட்டில் கள்ளக் காதலன்
இன்னொரு கணவன் வெளிநாட்டில் காலா காலம் சம்பாதித்து
அவற்றைத் தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளான். சம்பாதித்த பணத்தில் சொத்துக்களை
வாங்கச் சொல்லியிருக்கிறான், மனைவியும் கணவன் வெளிநாட்டில் இருப்பதால் தனது பெயருக்கு
வீடுகளை வாங்கியிருக்கிறாள்.
கணவன் அனுப்பிய பணத்தில் வாங்கிய வீட்டில் மின்வாரிய ஊழியர்
ஒருவனை வாடகைக்கு வைத்துள்ளாள். அவனுடன் தொடர்பு ஏற்பட்டு, கணவன் ஊருக்கு வந்த
சமயத்தில் நேரிலேயே அதைப் பார்த்து விட தற்போது விவாக ரத்தில் போய்
முடிந்திருக்கிறது.
கணவனது பணத்தில் வாங்கிய நான்கு வீடுகள் மட்டுமின்றி, கணவனது பூர்வீக வீட்டிலும்
இருந்து கொண்டு காலியாக மறுக்க தகராறு ஏற்பட்டு காவல்துறையில் வழக்கு பதிவாகியுள்ளது.
இதில் வயதுக்கு வந்த மகன், தாயின் நடத்தை தெரிந்தே அவளுக்கு ஆதரவாக இருப்பது
கொடுமையிலும் கொடுமை!
அப்பாவிக் கணவன் தனது வாழ்க்கையையும் இழந்து, சம்பாதித்த
பொருளாதாரத்தையும் இழந்து, சொந்த வீட்டையும் இழந்து, தற்போது வழக்கிலும்
சிக்கியுள்ளான்.
இன்னொருவர் வெளிநாட்டில் இருக்கும் போது அவரது மனைவி ஒரு
மாற்று மதத்தவருடன் ஓடிப் போய் விட, வீட்டிலிருந்த அவளது ஒரு
வயது கைக்குழந்தை தாயைப் பிரிந்த ஏக்கத்தில் மரணத்தைத் தழுவிய கொடுமையும்
நடந்தேறியுள்ளது.
இதுவரை நீங்கள் பார்த்த பதிவுகள் நம்மை உணர்ச்சிப் பிழம்பாக
ஆக்கியிருக்கும். நமது உடலில் ஓடுகின்ற உதிரம் மட்டுமல்ல! நம்முடைய மூச்சும்
சூடாகின்றது.
ஆட்டோ, கார் ஓட்டுனர்கள், கண்டக்டர்கள், கணவன் அனுப்புகின்ற பணத்தைக்
கை நீட்டி வாங்குவதற்காகச் செல்லும் வங்கியின் ஊழியர்கள் என நமது சமுதாயத்தின்
கற்பு சூறையாடப்படுகின்றது.
இப்போது சிந்தியுங்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம்
என்ன? வெளிநாட்டுப் பணம்! அதற்காக நமது பயணம்!
இந்தக் காசு பணத்திற்காகக் கற்பும் மானமும் காணாமல்
போகின்றது. கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா? இதனால் ஏற்படக் கூடிய
விளைவுகள் என்னென்ன?
1. சமுதாய மானம் காற்றில் பறக்கின்றது.
2. நல்ல பெண்களிடம் கூட விபச்சார சிந்தனை தோன்றி
விடுகின்றது.
3. பிற மதத்தவருடன் ஓடி இஸ்லாத்தை விட்டே
வெளியேறி விடுதல்.
4. வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்களின்
பிள்ளைகளை மனைவி தான் வளர்க்கிறாள். தாயுடன் இருக்கும் அந்தக் குழந்தைகளின் நிலை
என்ன? தாய் நல்லவளாக இருந்தால் பிள்ளைகளும்
நல்லவர்களாக இருப்பார்கள். மேற்கண்ட சம்பவங்களில் பிள்ளைகள் தாய்க்கு ஆதரவாக
இருந்ததை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் நம்முடைய தலைமுறையே தவறில்
தொடருவதற்கு இந்த வெளிநாட்டுப் பயணம் காரணமாகி விடுகின்றது.
நாம் வெளிநாட்டில் இருந்தோம்; நமது மனைவி தவறி விட்டாள்
என்று இதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அல்லாஹ் அவ்வாறு எடுத்துக்
கொள்ள மாட்டான். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüயே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு
குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தம்
குடிமக்கள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மக(னான குடும்பத் தலைவ)னும் தன்
குடும்பத்துக்குப் பொறுப்பாüயே! அவன் தன் பொறுப்புக்கு
உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (-மனைவி-), தன் கணவரது வீட்டிற்குப்
பொறுப்பாüயாவாள். அவளுடைய
பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாளர் தன் எஜமானின்
செல்வத்திற்குப் பொறுப்பாüயாவான். அவனும் தன்
பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி 893,
2409
இந்த ஹதீஸின் அடிப்படையில் நமது மனைவி, மக்கள் தவறு செய்தாலும்
அதற்குப் பொறுப்பான நாம் மறுமையில் மாட்டிக் கொள்வோம். அந்த விசாரணையிலிருந்து
நாம் தப்ப முடியாது. அதிலும் மதம் மாறுதல் என்பது சாதாரண பாவம் கிடையாது.
நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை)
மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை
அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி
காட்டுபவனாகவும் இல்லை. (அல்குர்ஆன் 4:137)
இதற்கும் நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.
அடுத்தது, நம்முடைய சந்ததிகள் கெடுவார்களானால் அதனால் ஏற்படும்
தீமைகள், இறுதி நாள் வரை அதன் பங்கு நம்முடைய கணக்கில் சேர்ந்து
கொண்டே இருக்கும்.
யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ
அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும்
-அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 1848
இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு முஸ்லிமுக்கு ரோஷம் வர
வேண்டும்.
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் என் மனைவியுடன்
(அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருப்பதைக் கண்டால், நான்கு சாட்சிகளைக் கொண்டு
வரும்வரை நான் அவனைத் தொடக் கூடாதா?'' என்று கேட்டார்கள். அதற்கு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"ஆம்' என்றார்கள். அதற்கு சஅத்
(ரலி) அவர்கள், "இல்லை; தங்களைச் சத்திய
(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நானாக இருந்தால், அதற்கு முன்பே வாளால் அவனை
வெட்டிவிடுவேன்'' என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் தலைவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்!
அவர் ரோஷக்காரர். ஆனால், நான் அவரை விட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னை விட
ரோஷக்காரன்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 3000
இப்படி ஒரு ரோஷம் முஸ்லிம்களிடம் இருக்க வேண்டும்.
"கண்ணியமும் மகிமைûயும் நிறைந்த அல்லாஹ், இறுதி நாளில் மூன்று
பேர்களைப் பார்க்க மாட்டான். 1. தன் பெற்றோருக்கு மாறு
செய்தவன். 2. ஆணைப் போல் காட்சியளிக்கும்
பெண். 3. மனைவி விவகாரத்தில்
ரோஷமில்லாதவன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: பஸ்ஸார்
இந்த ரோஷத்தைத் தான் மார்க்கம் வலியுறுத்துகின்றது.
மேற்கண்ட ஹதீஸ்களின் எச்சரிக்கையும், ரோஷமும் நமக்கு வந்து
விட்டால், "கற்பை இழந்து விட்டுக் காசு
பணம் தேவையில்லை; கற்புடன் கூழும் கஞ்சியும் போதும்' என்ற முடிவுக்கு வந்து
விடுவோம்.
EGATHUVAM
JUL 2010