ஏகத்துவ வாதிகளின் இனிய கவனத்திற்கு...
தமிழகத்தில்
1980களில்
துளிர் விட்ட தவ்ஹீது (ஏகத்துவ) இயக்கம் அல்லாஹ்வின் அளவற்ற அருளால் இன்று ஆல் போல்
தழைத்து, விண்ணை முத்தமிடும் கிளைகளுடன் பரந்து விரிந்து நிற்கின்றது. இதை அண்ணாந்து பார்க்கும்
மக்கள் அதிசயித்து நிற்கிறார்கள். பல்கலைக் கழகங்களில் டாக்டர் பட்டம் பெறுவதற்கான
(பி.ஹெச்.டி.) படிப்பை மேற்கொள்ளும் பட்டதாரிகள், இந்த இயக்கத்தின் வரலாற்றைத் தங்கள் மேற்படிப்பில் ஆய்வுப் பொருளாகத்
தேர்வு செய்து படிக்கின்றனர்.
அதற்காக
அவர்கள் இந்த இயக்கத்தின் வேர்ப்பிடிப்பு, வளர்ச்சி போன்ற விபரங்கள் அடங்கிய வரலாற்று ஆவணத்தைத் தேடி நமது
அலுவலகத்திற்கு வருகின்ற போது அத்தகைய ஆவணம் எதுவும் நம்மிடம் இல்லை என்று கைவிரிக்கும்
நிலையே உள்ளது. இந்தக் கையறு நிலை அவர்களை மட்டுமல்ல, நம்மையும் சேர்த்தே வேதனையில்
ஆழ்த்துகின்றது. எனவே இந்தக் குறையைக் களையும் விதத்தில், வரலாறு படைத்த தவ்ஹீது
ஜமாஅத்தின் வரலாற்றைப் படைக்க,
நாம் நடந்து வந்த பாதையை வரலாற்றுத் தடயமாகப் பதிவு செய்து அதை
ஆவணமாக்க முடிவு செய்துள்ளோம்.
இந்தப்
பணியைத் தொடங்கவும், தொடரவும், நிறைவடையவும் உங்கள் கைகளையே எதிர்பார்த்து நிற்கிறோம். எனவே...
ஏகத்துவக்
கொள்கையின் தொடக்க காலம் முதல் உங்கள் ஊர்களில் நீங்கள் சந்தித்த சோதனைகள், அடி உதைகள், அடக்குமுறைகள், ஊர் நீக்கங்கள் என உங்களுக்கு
எதிராக விதிக்கப்பட்ட அனைத்து விதமான தடைகள், காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகார்கள், அவற்றை ஒட்டிய கைதுப்
படலங்கள், நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள்...
நீங்கள்
நடத்திய பொதுக் கூட்டங்கள், நடத்திய வரதட்சணை ஒழிப்புத் திருமணங்கள், வெளியிட்ட துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகைகளில் வந்த
செய்திகள்...
ஆரம்ப
காலங்களில் நாம் வெளியிட்ட நூற்களில் தற்போது விற்பனையில் இல்லாத பதிப்புகள், மாத இதழ்களின் தொகுப்புகள், பொதுக்கூட்டங்களின் ஆடியோ, வீடியோ பதிவுகள்...
இவை
அனைத்தையும் ஒன்று விடாது நாள்,
தேதி குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள்.
மேற்கண்ட
குறிப்புகளை வழங்கி தவ்ஹீது ஜமாஅத்தின் வரலாற்றுப் பக்கங்களில் உங்கள் ஊர் நிகழ்வுகளையும்
பதிய வையுங்கள். ஆய்வுகள் மேற்கொள்வோருக்கு அவற்றை ஆவணமாக்குவோம், இன்ஷா அல்லாஹ்!
அனுப்ப
வேண்டிய முகவரி:
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத்
30, அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி,
சென்னை - 1.
EGATHUVAM AUG 2007