மாநபி வழியும் மத்ஹபுகளும்
நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு
அனுமதியில்லை.
இது பள்ளிவாசல்களில் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகளில் எழுதப்பட்டிருக்கும்
தடையுத்தரவு.
இந்தத் தடை உத்தரவைப் படிப்பவர்களுக்கு,
"மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் ஒரு பாவி' என்ற தோற்றம் ஏற்படும். அதனால் தான் மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்களுக்கு
அடி உதை விழுகின்றது. காவல்துறையில் புகார் பதிவாகின்றது. நீதிமன்றங்களில் வழக்குகள்
தொடரப்படுகின்றன.
ஏன் இந்தத் தாக்குதல்கள்? மக்கள் ஏன் இந்த மத்ஹபுகளை வெறித்தனமாகப் பின்பற்றுகிறார்கள்?
இந்த மத்ஹபுகளில் மண்டிக் கிடக்கின்ற, இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைக்கும் விஷக் கருத்துக்கள்
மக்களிடம் மறைக்கப்படுவதால் தான். மக்களை வெட்கப்பட வைக்கும் ஆபாசங்களை தங்கள் வயிற்றுப்
பிழைப்புக்காக ஆலிம்கள் மறைப்பதால் தான்.
மத்ஹபுகளை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால் கூட்டம் கூட்டமாக இன்று வெளியேறிக் கொண்டிருக்கும் மக்கள்
யார்?
அன்று இவர்களும் பள்ளிவால்களில், மத்ஹபு வெறியில் இருந்து கொண்டு தவ்ஹீதுவாதிகளைத் தாக்கியவர்கள்
தான். இவர்கள் ஏன் வெளியில் வந்தார்கள்?
மத்ஹபுச் சட்ட நூற்களில் எழுதப்பட்டுள்ள விஷக் கருத்துகளை, ஆபாசக் களஞ்சியங்களைப் படித்துப் பார்த்த மக்கள் தான் மத்ஹபுகளை
விட்டு வெளியே வந்தார்கள். எனவே இதை அனைவரும் தெரிந்து கொண்டு, மத்ஹபு மாயையிலிருந்து இன்னும் வெளியேறாமல் இருக்கும் மக்களிடம்
இதைப் பிரச்சாரம் செய்து, அவர்களையும்
குர்ஆன்,
ஹதீஸ் என்ற சத்தியத்தின் பால் இழுக்க வேண்டும் என்பதற்காக இதை
இங்கு பிரசுரம் செய்கிறோம்.
ஷாஃபி, அபூஹனீபா, மாலிக், அஹ்மது
பின் ஹன்பல் ஆகிய நான்கு இமாம்களால் ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள் தான் மத்ஹபுகள் என்று
ஆலிம்கள் பிரச்சாரம் செய்தாலும், உண்மையில்
அந்த நான்கு இமாம்களுக்கும் இந்த மத்ஹபுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
சில நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மத்ஹபுச் சட்ட நூற்கள்
தான் இன்று இமாம்களின் பெயரால் பின்பற்றப்படுகின்றன. அந்த நூற்களிலுள்ள அபத்தங்களையும்
ஆபாசங்களையும் பார்ப்பதற்கு முன், மார்க்க
மேதைகளான அந்த நான்கு இமாம்களும் என்ன சொன்னார்கள் என்பதை முதலில் பார்ப்போம்.
நான்கு இமாம்களுமே குர்ஆன், ஹதீஸைத் தான் பின்பற்ற வேண்டும் என்று ஒருமித்துக் கூறியுள்ளார்கள்.
ஆனால் இந்த ஆலிம்கள் இதை மக்களிடம் எடுத்துச் சொல்வதில்லை.
1. இமாம் அபூஹனீபா (ரஹ்) கூறுகிறார்கள்
1
ஹதீஸ் ஸஹீஹாக (ஆதாரப்பூர்வமாக) கிடைக்கும் போது அதைப் பின்பற்றுவதே
எனது கொள்கையாகும்.
ஆதாரம்: ஹாஷியது ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்:
72
2
"எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம்'' என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஹலால்
இல்லை.
ஆதாரம்: ஜாமிவுஸ்ஸகீர், பாகம்: 1 பக்கம்:
19
3
நானும் ஒரு மனிதன் தான். நான் சரியாகவும் நடப்பேன். தவறிழைக்கவும்
செய்வேன். எனவே எனது கூற்றை கவனித்துப் பாருங்கள். குர்ஆனுக்கும் ஹதீஸிற்கும் எனது
கூற்று ஒத்திருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய வேதத்துக்கும் நபி
(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் மாற்றமாக இருந்தால் என் சொல்லை விட்டு விடுங்கள்.
ஆதாரம்: ரவாயுவு அபீஹனீபா, பாகம்: 1, பக்கம்:
3
இவை அனைத்தும் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் கூற்றுக்கள்.
மத்ஹபு ஆலிம்களே! குர்ஆனும், ஹதீசும்
தான் பின்பற்றத்தக்கவை என்பதை இவ்வளவு தெளிவாகச் சொல்லியிருந்தும் தக்லீதுக்கு நீங்கள்
வக்காலத்து வாங்கக் காரணம் என்ன? இது
தான் இமாமை மதிக்கின்ற நிலையா? பதில்
தாருங்கள்.
2. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்
நான் (சில நேரங்களில்) சரியாகவும், (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக்கூடிய ஒரு மனிதன் தான்.
எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள். குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பொருத்தமானவற்றை
எடுத்துக் கொள்ளுங்கள். குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பொருத்தமில்லாதவற்றை விட்டு விடுங்கள்.
ஆதாரம்: மவ்ஸ‚அது உஸ‚லில்
பிக்ஹ்,
பாகம்: 5, பக்கம:
414
"உளூச் செய்யும் போது கால் விரல்களைக் கோதிக் கழுவ வேண்டியதில்லை'' என்ற கருத்தை இமாம் மாலிக் அவர்கள் கொண்டிருந்தார்கள். அப்போது
நான்,
"கால்களைக் கோதிக் கழுவ வேண்டும்' என்று ஹதீஸ் உள்ளதாகக் கூறி அவர்களிடம் ஸனதுடன் அறிவித்தேன்.
அதற்கு இமாம் மாலிக் அவர்கள், "இது சரியான ஹதீஸ் தான். நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை'' என்று கூறி விட்டு, அதன்பின் கால் விரல்களையும் கோதிக் கழுவிட வேண்டும் என உத்தரவிட்டார்கள்.
இவ்வாறு இப்னு வஹ்ப் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
ஆதாரம்: அல்ஜர்ஹு வத்தஃதீல், முன்னுரை, பக்கம்:
31,
32
மத்ஹபு ஆலிம்களே! மிகப் பெரும் இரண்டு இமாம்களையும் பின்பற்றுவோர்
யார்?
உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள்.
2. இமாம் ஷாஃபிஈ (ரஹ்) கூறுகிறார்கள்
எவராக இருந்தாலும் அவரை விட்டும் ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறைகளில்
ஏதேனும் (சில) தவறிடத் தான் செய்யும். நான் ஏதேனும் ஒரு சொல்லைச் சொல்லும் போது, அல்லது ஏதேனும் அடிப்படையை வகுத்துத் தரும் போது, அல்லாஹ்வின் திருத்தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால்
ரசூல் (ஸல்) அவர்களின் கூற்றே ஏற்கப்பட வேண்டும். ரசூல் (ஸல்) அவர்களின் கூற்றை ஏற்பதே
எனது கொள்கையுமாகும்.
ஆதாரம்: முக்தஸருல் முஅம்மல், பாகம்: 1, பக்கம்:
58
"ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறை எவருக்குத் தெரிகின்றதோ அதை எவருடைய
கருத்துக்காகவும் விடுவது ஹலால் இல்லை'' என்று முஸ்லிம்கள் அனைவரும் இஜ்மாவு செய்துள்ளனர்.
ஆதாரம்: அல்ஹதீஸ‚ ஹ‚ஜ்ஜதுன் பீ
நப்ஸிஹி. பாகம்: 1, பக்கம்: 79
இஜ்மாவு என்பதற்குத் தவறான விளக்கம் தரும் மத்ஹபு ஆலிம்களே!
ஸஹாபாக்கள், தாபியீன், தபவுத் தாபியீன்கள் ஆகியோரின் இஜ்மாவைத் தான் இமாம் ஷாஃபி (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள். இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?
3. இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) கூறுகிறார்கள்
என்னையோ மாலிக், ஷாபியீ, அவ்ஸாயீ, ஸவ்ரீ போன்ற இமாம்களையோ பின்பற்றாதே! அவர்கள் எதிலிருந்து புரிந்து
கொண்டார்களோ (அந்தக் குர்ஆன், ஹதீஸிலிருந்து)
நீயும் புரிந்து கொள்.
ஆதாரம்: அல்ஹதீஸ‚ ஹ‚ஜ்ஜதுன் பீ
நப்ஸிஹி,
பாகம்: 1, பக்கம்:
80
நான்கு இமாம்களைப் பின்பற்றுகிறோம் என்று கூறுபவர்கள் உண்மையில்
அந்த இமாம்களைப் பின்பற்றுகிறார்களா? என்பதை மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள கூற்றுக்களிலிருந்து
அறிந்து கொள்ளலாம்.
ஹனபி மத்ஹப் என்று சொல்லிக் கொண்டு இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின்
வழியில் செல்வதாக நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஹனபி மத்ஹபு
என்று இவர்களுக்குப் போதிக்கப்பட்டதும், இவர்கள் பிறருக்குப் போதிப்பதும் இமாம் அபூஹனீபா எழுதிய நூற்களையா? அல்லது அவர்களின் மாணவர்களான இமாம் அபூயூசுப், இமாம் முஹம்மத் ஆகியோர் எழுதிய நூற்களையா? இல்லையே! இந்தியாவின்
எந்த மதரஸாவிலும் அந்த இமாம்கள் எழுதிய நூற்கள் போதிக்கப்படுவதில்லையே! இதன் மர்மம்
என்ன?
ஹிஜ்ரி 1118ல்
எழுதப்பட்ட ஆலம்கீரி, ஹனபி மத்ஹபின்
சட்ட நூலாக ஆனது எப்படி? ஹிஜ்ரி 1071ல் எழுதப்பட்ட துர்ருல் முக்தார் எவ்வாறு ஹனபி மத்ஹபின் சட்ட
நூலாக ஆக்கப்பட்டது? ஏன் ஆக்கப்பட்டது? யாரால் ஆக்கப்பட்டது? ஹிஜ்ரி 745ல்
எழுதப்பட்ட ஷரஹ் விசாயா, எப்படி ஹனபி
மத்ஹபின் சட்ட நூல் ஆனது? ஹிஜ்ரி 710ல் எழுதப்பட்ட கன்சுத் தகாயிக் என்ற நூல் எவ்வாறு அபூஹனீபா இமாமின்
சட்ட நூல் என்று நம்ப வைக்கப்பட்டது? ஹிஜ்ரி 593ல்
எழுதப்பட்ட ஹிதாயா என்ற நூல் ஹனபி இமாம் எழுதியதா? ஹிஜ்ரி 428ல்
எழுதப்பட்ட குதூரி என்ற நூல் இமாம் அவர்களால் எழுதப்பட்டதா?
இமாமுடைய நூலையும், அவர்களின் மாணவர்களின் நூலையும் பாட நூற்களாக ஆக்காததன் மர்மம்
என்ன?
உங்கள் இஷ்டத்திற்கு சட்ட விளக்கம் தர, இன்று பாடத் திட்டத்தில் இருக்கும் நூற்கள் தான் இடம் தருகின்றன
என்பதைத் தவிர வேறு என்ன காரணமிருக்க முடியும்? தெளிவுபடுத்துங்கள்.
எந்த ஒரு சிறு மஸ்அலாவுக்கும் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் ஆகியவற்றிலிருந்து சான்றுகள் காட்டாமல் விட்டு வைக்கவில்லை
என்று மத்ஹபு ஆலிம்கள் கூறுகின்றனர். இதோ இவர்கள் குறிப்பிடும் மத்ஹபுச் சட்ட நூற்களில்
காணப்படும் குப்பைகள் சிலவற்றை இங்கே தந்துள்ளோம். இவற்றுக்குக் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் ஆகியவற்றில் ஆதாரம் உள்ளதா? காட்டுங்கள் பார்ப்போம்.
சதித் திட்டம்
குர்ஆன் முழுவதையும் படிப்பதை விட பிக்ஹ் நூலைப் படிப்பது மிகச்
சிறந்தது.
கன்சுத்தகாயிக், முன்னுரை
அல்லாஹ் நமக்கு அருளிய மாபெரும் பொக்கிஷமான குர்ஆன் பக்கம் மக்களை
நெருங்க விடாமல் தடுப்பதற்காக நீங்கள் செய்த சதித் திட்டத்திற்கு, குர்ஆன், ஹதீஸில்
ஆதாரம் உண்டா? மத்ஹபு ஆலிம்களே! பதில்
சொல்லுங்கள்.
பகுத்தறிவுச் சட்டங்கள்
10
பல் துலக்கும் குச்சியைச் சூப்பினால் கண்கள் குருடாகும்.
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்:
124
இந்தப் பகுத்தறிவுச் சட்டம் குர்ஆனின் எந்த வசனத்திலிருந்து
பெறப்பட்டது? எந்த ஹதீஸிலிருந்து வகுக்கப்பட்டது? தெளிவுபடுத்துவீர்களா?
தொழுகையில் விளையாட்டு
11
ஒரு மனிதனிடத்தில், "நீ லுஹர் தொழுகையை நிறைவேற்றினால் உனக்கு ஒரு தீனார் உண்டு' என்று சொல்லப்பட்டு அவரும் அந்த எண்ணத்தில் தொழுதால் அவருக்களித்த
வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம்.
ரத்துல் முக்தார் பாகம்: 1, பக்கம்: 447
12
தொழுபவன் பறவை மீது கல்லெறிந்தால் அவனது தொழுகை வீணாகாது.
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்:
677
13
ஒருவன் பறவையை விரட்டினால் அல்லது ஏதோ ஒரு சப்தத்தினால் அழைத்தால்
அவனுடைய தொழுகை வீணாகாது.
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்:
677
14
தொழுகை முழுமையான பிறகு (அதாவது ஸலாம் கொடுப்பதற்கு முன்னால்)
தொழுகைக்கு வெளியில் செய்யக்கூடிய சொல், செயல் போன்றவற்றினால் தொழுகையை முடிப்பது கூடும். உதாரணமாக சப்தமிட்டு
சிரித்தல், வேண்டுமென்றே பின் துவாரத்தின்
வழியாகக் காற்றை விடுதல், பேசுதல், நடத்தல், ஸலாம்
கூறுதல் போன்ற காரியங்களால் தொழுகையை முடிப்பது கூடும்.
ரத்துல் முக்தார், பாகம்: 3, பக்கம்:
400
15
சுப்ஹானல்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், இன்னும் அல்லாஹ்வை மட்டும் கண்ணியப்படுத்தும் வார்த்தைகளைக்
கூறி தொழுகையை ஆரம்பிப்பது மக்ரூஹ‚டன் கூடும்
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்:
521
16
கடமையான தொழுகையில் பிந்திய இரண்டு ரக்அத்துகளில் தொழுபவன் விரும்பினால்
சூரத்துல் பாத்திஹாவை ஓதலாம். விரும்பினால் சுப்ஹானல்லாஹ் என்று சொல்லலாம். விரும்பினால்
மவுனமாக இருந்துவிடலாம்.
மப்சூத், பாகம்:
1,
பக்கம்: 81
மத்ஹபு ஆலிம்களே! மத்ஹபுக் கிதாபுகள் தொழுகையைக் கேலிக்கூத்தாக
ஆக்கிக் காட்டுகின்றன. மேற்கூறிய விளையாட்டுக்களுக்கு குர்ஆன், ஹதீஸிலிருந்து இஜ்மாவு, கியாஸிலிருந்து ஆதாரம் காட்டுங்கள். இறையச்சம் கடுகளகாவது இருந்தால்
தொழுகையில் இப்படி விளையாடி இருப்பார்களா?
இமாமுடைய தகுதிகள்
17
அழகான முகமுள்ளவர், சிறந்த வம்சத்தைச் சார்ந்தவர், அழகிய மனைவி உள்ளவர், இவரே இமாமத் செய்வதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்.
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்:
259
18
இமாமத் செய்பவரின் மண்டை பெரிதாக இருக்க வேண்டும். இமாமுடைய
"உறுப்பு' சின்னதாக இருக்க வேண்டும்.
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்:
601
மத்ஹபுச் சட்ட நூற்களில் கூறப்படும் தகுதிகள் இவை. பேஷ் இமாமுக்கு
இவ்வளவு அசிங்கமான தகுதிகளை நிர்ணயம் செய்தது குர்ஆனா? ஹதீஸா? இஜ்மாவா, கியாஸா? சொல்லுங்கள்.
இந்தத் தகுதிகளின் அடிப்படையில் தான் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிவாசல்களில்
இமாமைத் தேர்வு செய்கிறீர்களா?
மோசடிகள்
19
இமாமோ, கலீபாவோ, அரசரோ விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு ஹத் தண்டனை கிடையாது.
துர்ருல் ஹிகம், பாகம்: 5, பக்கம்:
310
20
போதையூட்டக் கூடிய கடைசிக் கிண்ணம் தான் ஹராமாகும். ஒன்பது கிண்ணங்கள்
மது அருந்தியவனுக்கு பத்தாவது கிண்ணம் புகட்டப்பட்டால் அவன் தண்டிக்கப்பட மாட்டான்.
ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்:
9
21
திருமணம் செய்து கொள்ள முடியாத தாய், சகோதரி போன்றவர்களையோ, அடுத்தவனின் மனைவியையோ, இத்தா இருக்கும் பெண்ணையோ ஒருவன் மணமுடித்து, இது தவறில்லை என்று கருதி உடலுறவு கொண்டால் அவனுக்குத் தண்டனை
இல்லை. ஆனால் கண்டிக்கப்படுவான். இது ஹராம் என்று கருதி அவன் செய்திருந்தாலும் இவ்வாறு
தான்.
ரத்துல் முக்தார், பாகம்: 15, பக்கம்:
60
இந்த மோசடிகள், ஏமாற்றுக்கள் எல்லாம் மத்ஹபு சட்ட நூற்களில் தான் உள்ளன. இவற்றுக்குக்
குர்ஆன்,
ஹதீஸில் ஆதாரம் காட்ட முடியுமா?
விசித்திரமான சட்டம்
22
ஒரு பெண்ணின் கணவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாத நிலையில்
120 வருடங்கள் கழித்து அவன் இறந்து விட்டதாக முடிவு செய்து (பின்னர்
அவளுக்குத் திருமணம் (?) செய்து வைக்க
வேண்டும்)
ஹிதாயா, பாகம்:
2,
பக்கம்: 62
நடைமுறை சாத்தியமில்லாத, பெண்களுக்குத் துரோகம் இழைக்கின்ற இந்தச் சட்டத்துக்குக் குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டுங்கள்.
23
ஒருவன் தன் பின்துவாரத்தில் தன் ஆண்குறியை நுழைத்தால் விந்து
வெளியாகாத வரை குளிப்பு கடமையில்லை.
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்:
175
இந்த மானங்கெட்ட அசிங்கங்கள், குர்ஆன் ஹதீஸில் உள்ளவையா? அல்லது இஜ்மா, கியாஸில் உள்ளவையா? விளக்குங்கள்.
குறிப்பு: இதை விட ஆபாசமான விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. ஆனால்
எங்கள் எழுதுகோல்கள் எழுதுவதற்கு வெட்கப்படுகின்றன.
தமிழில் தொழலாம்
24
அரபி தெரிந்திருந்தாலும், தொழுகையில் அரபி அல்லாத மொழிகளில் ஓதுவது கூடும்.
ரத்துல் முக்தார், பாகம்: 1, பக்கம்:
488
25
பார்ஸி மற்றும் ஏனைய மொழிகளில் பாங்கு சொல்வது கூடும்.
ஹாஷியத்துல் ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்:
523
இந்த மாடர்ன் மஸ்அலாவுக்கும் குர்ஆன் ஹதீசுக்கும் சம்பந்தம்
உள்ளதா?
தெளிவுபடுத்துங்கள்.
26
ஒருவனுக்கு மூக்கில் தொடர்ந்து இரத்தம் வடிந்தால் அல்ஹம்து சூராவை
மூத்திரத்தால் அவனது நெற்றியில் எழுதலாம்.
ரத்துல் முக்தார், பாகம்: 2, பக்கம்:
117
மூத்திரத்துக்கு இவ்வளவு மகிமை இருப்பதாக மத்ஹபு நூற்கள் கூறுகின்றன.
திருக்குர்ஆனை, அதன் தலைசிறந்த அத்தியாயமான
பாத்திஹா சூராவை மூத்திரத்தால் எழுதலாம் என்று கூறி, குர்ஆனை இழிவுபடுத்துகின்றன. மத்ஹபு ஆலிம்களே! இது தான் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்த சட்டங்களா? சிந்தியுங்கள்.
ஜும்ஆ
27
இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாட்டில் தான் ஜும்ஆ நடத்தப்பட வேண்டும்
என்பது ஜும்ஆவின் விதிகளில் ஒன்றாகும்.
ஹிதாயா, பாகம்:
1,
பக்கம்: 83
மேற்கூறிய சட்டத்தின் அடிப்படையில் உலகில் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக இந்தியாவில் எவரது ஜும்ஆவும் நிறைவேறாமல் போகுமே!
"இனி இந்தியாவில் ஜும்ஆ கிடையாது'' என்று அறிவிக்கத் தயாரா? மத்ஹபு நூற்கள் அப்படித் தான் கூறுகின்றன.
மத்ஹபு மாறினால் தண்டனை
நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்ற வேண்டும் என்று போர்டு
வைக்கின்றனர். ஆனால் ஹனபி மத்ஹபைத் தவிர மற்ற மத்ஹபுகள் தவறானவை என்றும் அவற்றைப் பின்பற்றுவது
தண்டனைக்குரிய ஒன்று என்று ஹனபி மத்ஹபின் சட்ட நூற்கள் கூறுகின்றன.
28
ஒரு ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவன், ஷாபியாக மாறி விட்டால் அவன் தண்டிக்கப்பட வேண்டும்.
ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 4, பக்கம்:
249
29
ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஷாபி மத்ஹபில் சேர்ந்து விட்டால்
அவருடைய சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாது.
ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்:
565
30
நமது மத்ஹபு தான் சரியானது. மற்றவர்களின் மத்ஹபு தவறானது.
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்:
18
ஹனபி மத்ஹபின் இந்தச் சட்டத்தின் படி ஷாபியாக இருப்பது பாவமான
காரியம் என்றாகிறது. தவறான மத்ஹபில் இருக்கும்படி போர்டு எழுதி வைப்பது ஏன்?
இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? என்று ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். இமாம்களின் பெயரைச் சொல்லிக்
கொண்டு 200,
300 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட நூல்களை
ஆதாரமாக ஆக்கியது தான் என்பதை உணர்வீர்கள்.
முரண்பாடுகள்
இந்த மத்ஹபுச் சட்ட நூற்களில் பொய்களுக்கும் பஞ்சமில்லை. முரண்பாடுகளும்
மலிந்து கிடக்கின்றன. மாதிரிக்குச் சில முரண்பாடுகளைப் பார்ப்போம்.
31
முஃதஸிலா பிரிவினரை திருமணம் முடித்துக் கொள்வது கூடும். ஏனென்றால்
ஒரே கிப்லாவினரில் எவரையும் காஃபிர் என்று நாம் கூறமாட்டோம்.
துர்ருல்முக்தார், பாகம்: 3, பக்கம்:
50
32
முஃதஸிலா பிரிவினருக்கும் சுன்னத்து வல்ஜமாஅத்தினருக்கும் மத்தியில்
திருமணம் செய்வது கூடாது.
ஃபத்ஹ‚ல்
கதீர்,
பாகம்: 6, பக்கம்:
397
33
இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் சொல்லை நிராகரிப்பவன் மீது மணல்
எண்ணிக்கைக்கு அல்லாஹ்வின் லஃனத் உண்டாகட்டும்.
துர்ருல் முக்தார் முன்னுரை
34
இமாம் அபூயூசுப், இமாம் முஹம்மது ஆகிய இருவரும் மூன்றில் இரண்டு பங்கு சட்டங்களுக்கும்
அதிகமாக அபூஹனீபா இமாமுக்கு மாறு செய்துள்ளனர்.
ஜாமிஉஸ் ஸகீர், பாகம்: 1, பக்கம்:
8
ஹனபி மத்ஹபின் இமாம்களான அபூயூசுப், முஹம்மது ஆகிய இருவரின் மீது லஃனத் (அல்லாஹ்வின் சாபம்) உண்டாகட்டும்
என்று கூறுகின்றனர்.
இப்படி முன்னுக்குப் பின் முரணான, ஆபாசமான, இஸ்லாத்தின்
அடிப்படைக்கு வேட்டு வைக்கின்ற சட்டங்களைத் தான் இமாம்களின் பெயரால் எழுதி வைத்துள்ளனர்.
மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் பள்ளியில் தொழ அனுமதியில்லை என்று
போர்டு வைப்பதற்கு முன்னால் மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள மத்ஹபுச் சட்டங்களை நடைமுறைப்படுத்தத்
தயாரா?
மத்ஹபு வெறியை ஊட்டி, மக்களை வழி கெடுத்துக் கொண்டிருக்கும் ஆலிம்களே!
இமாம்களை மதிக்கிறோம் என்ற பெயரில் அவர்களை இழிவு படுத்தும்
இந்தச் சட்டங்களைத் தூக்கி எறிந்து விட்டு குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்கத்தின் அடிப்படை என்ற கொள்கையின்
பக்கம் வாருங்கள்.
"அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ்
(தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 3:32
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை
கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும்
தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.
அல்குர்ஆன் 33:36
EGATHUVAM JUL 2008