கிட்னி திருட்டு
பணமாகத் திருடியது போக, இப்போது மனிதனின்
உறுப்புகளையே திருட ஆரம்பித்து விட்டார்கள். வயிற்றுவலி என்று மருத்துவமனைக்குச் செல்கின்றான்.
அறுவை சிகிச்சை நடைபெறுகின்றது. சிறிது காலம் கழித்த பின் சிறுநீர் வெளியேறுவதில் தகராறு!
என்னவென்று சோதித்துப் பார்க்கும் போது தான் கிட்னி களவு போன விபரம் தெரிகின்றது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவன் என்ன செய்வான்? இப்படிப்பட்ட மருத்துவரைக் கொல்ல வேண்டும் என்று துடிப்பான்.
ஆனால் இஸ்லாமோ கிட்னி எடுத்தவனின் உடலிலிருந்து கிட்னியை எடு என்று சொல்கின்றது.
உயிருக்கு உயிர், கண்ணுக்குக்
கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக்
காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல்
ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது
அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன்
அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.
அல்குர்ஆன் 5:41
மூன்று முக்கிய அம்சங்கள்
இதை யாராவது காட்டுமிராண்டித் தனம் என்று சொல்ல முடியுமா?
குற்றவியல் தண்டனையைப் பொறுத்தவரை இஸ்லாம் மூன்று முக்கிய அடிப்படைகளைப்
பார்க்கின்றது.
1. குற்றவாளியின் குற்றத்துக்கு ஏற்ப தண்டனை.
2. பாதிக்கப்பட்ட தனிநபர், குடும்பம், உறவினர்கள், நண்பர்கள்
ஆகியோரைத் திருப்திப்படுத்துவதன் மூலம் பழிவாங்கல் என்ற பெயரில் குற்றங்கள் பெருகாமல்
தடுப்பது.
3. ஒரு குற்றத்துக்கு வழங்கப்படும் தண்டணையின் மூலம் மீண்டும் அதே
குற்றம் நடப்பதைத் தடுப்பது.
இதை விட்டுவிட்டு, ஒரு பெண்ணின்
கற்பைச் சூறையாடியவனுக்கு ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதித்தால்
அது குற்றங்களைக் குறைக்காது. மற்றவர்களையும் கற்பழிப்பதற்குத் தூண்டி விடுவதற்கான
அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அழைப்பாகும்.
இதை இன்னொரு கோணத்தில் பார்க்க வேண்டும்.
சிறைத் துறைக்கான செலவுகள் அனைத்தும் மக்களின் வரிப் பணத்திலிருந்து
தான் செய்யப்படுகின்றன. அதாவது கற்பழிக்கப்பட்டவளின் வரிப் பணத்திலிருந்து குற்றவாளிக்கு
உணவும், உறைவிடமும் வழங்கப்படுகின்றது. தனக்கு அநீதி இழைத்தவனுக்கு தானே
விருந்து வழங்க யாரேனும் முன் வருவாரா? இந்த அக்கிரமத்தைத்
தான் இஸ்லாத்தை விமர்சிக்கும் விவேகிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இரக்கத்தைப் பற்றிப்
பேசுகின்ற இவர்கள் தான் இந்த அரக்கத்தனமான, காட்டுமிராண்டித்தனமான
காரியத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்கு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும்
விமர்சிப்பதற்கு என்ன அருகதை இருக்கின்றது?
இஸ்லாம் தூர நோக்குப் பார்வையுடன் சொல்கின்ற விவரமான, விவேகமான செயல்பாட்டால் தான் அதன் சட்டம் ஆள்கின்ற சவூதியில்
குற்றங்களின் சதவிகிதம் பெரிய அளவில் குறைவாக இருக்கின்றது.
புள்ளி விபரப் புலனாய்வு
குற்றம் சவூதி ஜப்பான்
அமெரிக்கா
கொலை 0.71 1.10 5.51
கற்பழிப்பு 0.14 1.78 32.05
கொள்ளை 0.14 4.08 144.92
பலவந்தத் தாக்குதல் 0.12 23.78 323.62
வீடுபுகுந்து கொள்ளை 0.05 233.6 728.42
சொத்து அபகரிப்பு 79.71 1401.26 2475.27
வாகனத் திருட்டு 76.25 44.28
இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில்
(இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின்
அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?
அல்குர்ஆன் 29:67
இந்த வசனத்தின் அடிப்படையில் சவூதியை சற்று உற்று நோக்குவோம்.
இன்டர்போலின் புள்ளி விபரப்படி சவூதி அரேபியா ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. ஒப்பிட்டுப்
பார்ப்பதற்காக!
எங்க்ங்ழ்ஹப் இன்ழ்ங்ஹன் ர்ச் ஒய்ஸ்ங்ள்ற்ண்ஞ்ஹற்ண்ர்ய் (எஇஒ)
என்ற அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையில் ஏழு குற்றங்களுக்கான அட்டவணை பெறப்பட்டது.
அவை:
1. கொலை. 2. கற்பழிப்பு. 3. வழிப்பறி. 4. வன்முறைத்
தாக்குதல். 5.
வீடு புகுந்து கொள்ளையடித்தல். 6. சொத்து அபகரிப்பு. 7. வாகனத் திருட்டு.
இந்த ஏழு குற்ற அட்டவணைகளில் சவூதி அரேபியா, ஜப்பானுடனும், அமெரிக்காவுடனும்
ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றது. ஜப்பான் குற்றங்களில் குறைந்தது. அமெரிக்கா குற்றங்களில்
அதிகரித்தது என்ற அடிப்படையில் இவ்விரு நாடுகளுடன் இந்த ஒப்பீடு செய்யப்படுகின்றது.
2000ம் ஆண்டுக்கான கணக்கு இது!
இந்தக் குற்ற அட்டவணைப்படி, குற்றங்களின்
ஒட்டுமொத்த விகிதாச்சாரம் என்று பார்க்கையில் சவூதி 157.12, ஜப்பான் 1709.88, அமெரிக்கா 4123.97 என்ற எண்ணிக்கையில் உள்ளது.
இந்தத் தகவல், "குற்றம்
மற்றும் சமூகம் தொடர்பான உலகக் குற்றவியல் ஒப்பீட்டு உலா'' என்ற தலைப்பில் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தயவு தாட்சண்யமின்றி, குற்றவாளிகளைத்
தண்டித்து குற்றம் பெருகாமல் தடுப்பது தான் ஓர் ஆட்சியின் அடிப்படை இலக்கணம். அதைச்
செய்வதன் காரணமாகத் தான் சவூதி இன்று குற்ற அட்டவணையில் குறைந்து காணப்படுகின்றது.
இது தான் மனித சமுதாயத்திற்கு மாபெரும் அருட்கொடையாகும். இந்த அருட்கொடையைத் தான் மேற்கத்திய
மேதாவிகள் அரக்கத்தனம் என்று விமர்சனம் செய்கின்றனர். இதையே அல்லாஹ் தன் திருமறையில்
கேட்கிறான்.
இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில்
(இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின்
அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?
அல்குர்ஆன் 29:67
ஆகாயத்தில் சுனிதா ஆபத்தில் ஐரிஸ்
மூன்று வருடங்களுக்கு முன்னால் விழாக் கோல வெளிச்சத்தில் குளித்தது
இந்தியத் தலைநகரம் டெல்லி! போதையின்றி ஒரு விழாவா? கிடையாது
என்பதற்கு எடுத்துக்காட்டாக நான்கு நபர்கள் குடிபோதையில் 18 வயது ஐரிஸ் என்ற பெண்ணை மறிக்கிறார்கள். நால்வரில் ஒருவனது
காமப் பசிக்கு இரையாகின்றாள். விடிய விடிய கற்பழிக்கப்படுகின்றாள். தண்டனை என்ன? கற்பழித்தவனே கணவனாக வாய்க்கின்றான். கற்பழிப்பின் போது உருவான குழந்தையுடன் மூன்றாண்டுகளுக்குப்
பிறகு வீதிக்கு விரட்டியடிக்கப்படுகின்றாள்.
இந்தத் தகவலை சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சியில் 04.05.08 அன்று குறிப்பிட்டு விட்டு, கடந்த
ஆண்டு மட்டும் இந்தியாவில் 20,000 கற்பழிப்புகள் நடந்துள்ளன; கற்பழிப்புத் தலைநகரான டெல்லியில் கடந்த மாதம் மட்டும் 10 பேர் என்று குறிப்பிடுகின்றது.
சுனிதா வில்லியம்ஸ் ஆகாயத்தில் நடப்பதில் சமுதாயத்திற்குப் பெருமை
கிடையாது. மண்ணில் நடக்கின்ற ஐரிஸ்களின் கற்புகள் காக்கப்படுவது தான் மனித குலத்திற்குப்
பெருமையாகும்.
கற்பழிக்கப்படும் பெண் மருத்துவர்
ஐரிஸ் ஓர் அப்பாவிப் பெண் என்றால், ஒரு குழந்தை நல மருத்துவப் படிப்பு பயிலும் 24 வயதுப் பெண் டாக்டர் டெல்லியில் ஆர்.எஸ்.ஐ. அரசு மருத்துவமனையில்
கற்பழிக்கப்படுகின்றாள்.
இந்தக் கற்பழிப்புகளின் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே இருக்கின்றது.
அவை அனைத்தையும் வெளியிட்டால் இது கற்பழிப்பு சிறப்பிதழ் ஆகிவிடும் என்பதால் இத்துடன்
நிறுத்திக் கொள்கிறோம்.
இப்போது நாம் இங்கு கவனிக்க வேண்டியது, கற்பழிக்கும் காட்டுமிராண்டிகளைத் தான்! இந்த மிருகங்களைச் சிறைச்
சாலைகளில் போட்டுப் பூட்டி, நமது வரிப் பணத்தைக் கொட்டி
வளர்க்கலாமா?
இவர்களுக்குக் கருணை காட்டலாமா? அதனால் தான் அத்வானி போன்றோர்கள் கூட அரபு நாட்டுச் சட்டம் கொண்டு
வர வேண்டும் என்று பகிரங்கமாகக் குறிப்பிடுகின்றனர்.
இஸ்லாமியச் சட்டம், குர்ஆனியச்
சட்டம் என்று சொன்னால் அது இஸ்லாத்தின் மேலாண்மையை ஒத்துக் கொண்டதாக ஆகி விடும் என்பதால்
அரபு நாட்டுச் சட்டம் வேண்டும் என்கிறார்.
ஆம்! இங்கு இருக்கும் சட்டங்களால் இந்த மனித மிருகங்களைக் கட்டுப்படுத்த
முடியவில்லை என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்கின்றார். இந்தச் சட்டங்களினால் மனித சமுதாயத்திற்கு
மத்தியில் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை என்று தெளிவான ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கின்றார்.
குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் தான் மனித
சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்பது அல்குர்ஆனின் நிலைப்பாடு!
அதனால் தான் உலகில், சவூதியில்
குற்றத்தின் விகிதாச்சாரம் உலகத்தின் ஏனைய பகுதிகளை விடக் குறைந்து காணப்படுகின்றது; அமைதி நிலவுகின்றது.
இந்த அமைதியை, இஸ்லாம் சட்டத்தின்
மூலம் நிறைவேற்றுகின்றது.
இறைநம்பிக்கை ஏற்படுத்தும் மாற்றங்கள்
சட்டத்தின் கண்கள் சாட்சிகள்
எல்லாவற்றையும் சட்டத்தின் மூலம் சாதித்து விடலாம் என்று இஸ்லாம்
நம்பவில்லை. ஏனெனில் சட்டத்திற்கென்று சில குறைபாடுகள் உள்ளன. சட்டத்திற்குச் சாட்சிகள்
என்ற இரு கண்கள் தேவை! சாட்சிகள் இல்லாமல் சட்டம் செயல்படாது. அதனால் இஸ்லாம் மனிதர்களின்
உள்ளத்தைத் தான் முதலில் சரி செய்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்கின்றார்கள்.
உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால்
உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து
விடும். அறிந்து கொள்ளுங்கள்: அது தான் உள்ளம்.
அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரி 52
இந்த உள்ளம் சரியாகி விட்டால் எல்லாமே சரியாகி விடும். அந்த
உள்ளத்தை, திருக்குர்ஆன் எப்படிச் சரி செய்கின்றது? அந்த உள்ளத்தில், படைத்த இறைவனைப்
பற்றிய அச்சத்தை விதைக்கின்றது.
அல்லாஹ் ஒருவனே!
இறைவனைப் பற்றிய அச்சத்தை மனிதனது உள்ளத்தில் விதைப்பதற்கு முன், "இறைவன் ஒருவன்; அவன் தனித்தவன்; அவனுக்கு நிகரானவன் யாருமில்லை, எவருமில்லை' என்பதைத் தெளிவுபட, தர்க்க ரீதியாக அந்த உள்ளத்தில் நிலை நிறுத்துகின்றது.
EGATHUVAM SEP 2008