எஸ்.யூ. கானின் இந்து மத அழைப்பு
உலகத்தில் ஏகத்துவக் கருத்தை இறைத் தூதர்கள் மக்களிடம் எடுத்துச்
சொன்ன போது அவர்களுக்கு இறை மறுப்பாளர்கள் அளித்த பதில்,
"எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் வந்து விடுங்கள்; இல்லையேல் நாங்கள் உங்களை ஊரை விட்டு வெளியேற்றுவோம்'' என்பது தான்.
"உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள்
மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர்.
"அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப்
பின்னர்,
உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்'' என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இது, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது.
அல்குர்ஆன் 14:13
அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்த மத்யன் நகர மக்களை நோக்கி
இறைத் தூதர் ஷுஐப் அவர்கள் இறை வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்த போது அம்மக்கள் அளித்த
பதில்:
"ஷுஐபே! உம்மையும், உம்மோடு நம்பிக்கை கொண்டோரையும் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம்.
அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்துக்குத் திரும்ப வேண்டும்'' என்று அவரது சமுதாயத்தில் கர்வம் கொண்ட பிரமுகர்கள் கூறினர்.
(அதற்கு ஷுஐப்) "நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுத்தாலுமா?'' என்று கேட்டார்.
அல்குர்ஆன் 7:88
ஓரினச் சேர்க்கையில் ஊறித் திளைத்த தன் சமுதாயத்தை நோக்கி நபி
லூத் (அலை) அவர்கள் எச்சரிக்கை விடுத்த போது அவரை நோக்கி அவரது சமுதாயம் அளித்த பதில்:
"தெரிந்து கொண்டே வெட்கக்கேடான காரியத்தைச் செய்கிறீர்களா? பெண்களை விட்டு விட்டு இச்சையுடன் ஆண்களிடம் செல்கிறீர்கள்!
நீங்கள் மூடர் கூட்டமாகவே இருக்கிறீர்கள்'' என்று லூத் தமது சமுதாயத்திடம் கூறிய போது "லூத்துடைய குடும்பத்தினரை
உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றுங்கள்! அவர்கள் தூய்மையான மக்களாகவுள்ளனர்'' என்பதே அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருந்தது.
அல்குர்ஆன் 27:56
மூஸா (அலை) அவர்கள் தூதுச் செய்தியை ஃபிர்அவ்னிடம் எடுத்துக்
கூறிய போது, மூஸாவையும் அவரது கொள்கையை
ஏற்ற சமுதாயத்தையும் ஊரை விட்டு விரட்டவும் வெளியேற்றவும் ஃபிர்அவ்ன் திட்டமிட்டான்.
அவர்களை அப்பூமியை விட்டு வெளியேற்ற அவன் நினைத்தான்.
அல்குர்ஆன் 17:103
நம்முடைய இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் மக்கத்துக்
காஃபிர்கள் ஊரை விட்டு வெளியேற்ற, விரட்டியடிக்கத்
திட்டம் தீட்டினர்.
(முஹம்மதே!) உம்மை இப்பூமியிலிருந்து கிளப்பி வெளியேற்றிட அவர்கள்
முயன்றனர். அப்போது உமக்குப் பின்னர் அவர்கள் குறைவாகவே தங்கியிருப்பார்கள்.
அல்குர்ஆன் 17:76
இறைத் தூதர்களுக்கு எதிரான இந்தச் சதிகளுக்கு இறைவன் சுடச் சுட
பதிலளிக்கின்றான்.
இறைத் தூதர்களை நோக்கி இறை மறுப்பாளர்கள்,
"இது எங்களுடைய பூமி, எங்கள் ஊர்'' என்று திமிரான வார்த்தைகளைக் கூறுகின்றனர்.
அதற்கு அல்லாஹ் அளிக்கும் பதில்:
"உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள்
மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர்.
"அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப்
பின்னர்,
உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்'' என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இது, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது.
அல்குர்ஆன் 14:13, 14
அல்லாஹ் கூறியதைப் போன்று லூத், ஷுஐப் ஆகிய நபிமார்களையும் அவர்களை ஏற்றுக் கொண்டவர்களையும்
காப்பாற்றி, ஏகத்துவத்தின் எதிரிகளை
அழித்து விடுகின்றான். எந்தப் பூமியிலிருந்து அவர்கள் விரட்டப்பட்டார்களோ அதே பூமியில்
மீண்டும் குடியமர்த்தியதை நபி மூஸா (அலை) அவர்களின் வாழ்க்கையில் நாம் காண்கிறோம்.
தன்னுடைய வாக்குறுதியை அல்லாஹ் நிறைவேற்றியதைத் திருக்குர்ஆனில் பார்க்கிறோம்.
நாம் பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு
பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை உரிமையாளர்களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள்
பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக
நிறைவேறியது. ஃபிர்அவ்னும், அவனது சமுதாயத்தினரும்
தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக
எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம்.
அல்குர்ஆன் 7:137
மக்காவை விட்டு வெளியேற்றப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களுக்கும்
மக்காவை திரும்பக் கொடுத்து விடுகின்றான். இந்த முன்னறிவிப்பை மேற்கண்ட 17:76 வசனத்திலும் பின்வரும் வசனத்திலும் தெரிவிக்கிறான்.
(முஹம்மதே!) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே
மீண்டும் சேர்ப்பவன். "நேர் வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழி கேட்டில் உள்ளவன் யார்? என்பதை என் இறைவன் நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 28:85
இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம், ஏகத்துவத்தை, தூதுச் செய்தியை ஏற்றவர்களுக்கு இது போன்ற மிரட்டல்கள் வந்தே
தீரும்.
பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் இன்று முஸ்லிம்களுக்கு இந்த எச்சரிக்கை
தான் செய்யப்படுகின்றது. பாபரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற லக்னோ கிளையின்
நீதிபதியும் முஸ்லிம்களின் அவமானச் சின்னமுமான எஸ்.யூ. கான் இந்த எச்சரிக்கையைத் தான்
தனது தீர்ப்பில் எதிரொலிக்கின்றார்.
Only
those species survived which collaborated and improvised
பிற இனத்துடன் இரண்டறக் கலந்து முன் யோசனைக்கு இடம் கொடாமல்
முனைந்து வேகமாகச் செயல்படுகின்ற இனமே உயிர் வாழ முடியும்.
என்ன சொல்கிறார் தெரியுமா?
பெரும்பான்மைக்கு முன் சிறுபான்மை சரணடைய வேண்டும்.
இஸ்லாம் என்ற அடையாளத்தை இழந்து விட வேண்டும்.
ஏகத்துவத்தை மறந்து விட வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால் நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த இந்து
மதத்திற்கு நம்மை அழைக்கிறார்.
இறைத் தூதர்களை நோக்கிச் சொல்லப்பட்ட வார்த்தைகளை, இந்துத்துவா சக்திகள் கூறுகின்ற அதே கருத்தை, இவர் தனது தீர்ப்பின் மூலம் வாந்தியெடுக்கின்றார்.
பாபரி மஸ்ஜித் எனும் ஒரு பள்ளிவாசல் இடிக்கப்பட்டது என்ற பார்வையில்
நாம் இதைப் பார்க்கக் கூடாது. நம்முடைய ஈமானைப் பறிப்பதற்காக வைக்கப்பட்ட ஒரு பரீட்சை
என்ற அடிப்படையில் இதை நாம் பார்க்க வேண்டும். இந்தத் தீர்ப்பிற்கு எதிராக, குகைவாசிகளைப் போன்று நாம் சீறி, சிலிர்த்து எழ வேண்டும்.
அவர்கள் எழுந்து "நமது இறைவன் வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாவான். அவனன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க
மாட்டோம். (அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்'' என்று அவர்கள் கூறிய போது அவர்களது உள்ளங்களை உறுதிப்படுத்தினோம்.
அல்குர்ஆன் 18:14
பாபரி மஸ்ஜித் விஷயத்தில் எல்லா இயக்கங்களும் படுத்து விட்டன.
தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் இந்தத் தீமையை எதிர்த்து எழுந்து நிற்கின்றது. காரணம் அதனுடைய
பெயருடன் மட்டுமல்ல, இதயத்திலும்
ஏகத்துவம் ஒட்டியிருப்பதால்!
எனவே இதயத் தூய்மையுடன் ஏகத்துவத்தைக் காப்பதற்காக, இந்த நாட்டில் முஸ்லிம்களின் வாழ்வுரிமையைக் கேள்விக் குறியாக்கிய
அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்
கொள்ள வலியுறுத்தியும் சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களின் முன்பு ஜனவரி 27 அன்று நடைபெறவுள்ள பேரணி ஆர்ப்பாட்டத்தில் கொள்கைச் சகோதர, சகோதரிகளே! அலை அலையாய் குவிந்திடுவீர். இறையருளைப் பெற்றிடுவீர், இன்ஷா அல்லாஹ்!
EGATHUVAM JAN 2011