May 14, 2017

ஆண்களே! அஞ்சிக் கொள்ளுங்கள் - 2

ஆண்களே! அஞ்சிக் கொள்ளுங்கள் - 2

சென்ற இதழின் தொடர்ச்சி....

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

பெண்கள் விஷயத்தில் அஞ்சிக் கொள்ளுங்கள் என்று மார்க்கம் ஆண்களுக்குக் கட்டளையிடுவதோடு பெண்கள் விவகாரங்களில் தடம்புரளாமல் இருப்பதற்கு அவர்களிடம் நடந்து கொள்ளும் முறையையும் போதித்துள்ளது. அதன்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

நாணத்தைக் கடைப்பிடிப்போம்

பொதுவாகவே வீண்பேச்சுக்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்; பேசுவதாக இருந்தால் நல்லதைப் பேச வேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது. அதிலும் குறிப்பாக ஆண்களும் பெண்களும் தங்களுக்கு மஹ்ரமாக இல்லாதவர்களிடம் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையின்றி பேசுவது, ஈர்க்கும் விதத்தில் குழைந்து நெளிந்து பேசுவது, இரட்டை அர்த்தங்களுடன் பேசுவது போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அந்தரங்கமான விஷயங்களைப் பற்றிப் பேசுவதும் ஆபாசமாகப் பேசுவதும் அறவே கூடாது.

ஆனால் நட்பு என்று சொல்லிக் கொண்டு பொதுவாக எந்த விஷயங்களை மற்றவர்களிடம் பேசுவதற்கு வெட்கம் கொள்வோமோ அத்தகைய செய்திகளை எந்தவொரு கூச்சமும் இறையச்சமும் இல்லாமல் பேசும் நபர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் ஆண்கள் நபிகளாரிடமிருந்து நாணம் எனும் பண்பைக் கற்று நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

அன்சாரிப் பெண்கüல் ஒருவர் நபி (ஸல்) அவர்கüடம் (வந்து), "மாதவிடாயி-ருந்து தூய்மையாகிக் கொள்ள நான் எவ்வாறு குüக்க வேண்டும்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் நறுமணம் தோய்க்கப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து "மூன்று முறை சுத்தம் செய்!' என்றோ அல்லது "அதன் மூலம் சுத்தம் செய்!' என்றோ சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் வெட்கப்பட்டுக் கொண்டு தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். உடனே நான் அந்தப் பெண்மணியைப் பிடித்து (என் பக்கம்) இழுத்து நபி (ஸல்) அவர்கள் சொல்ல வருவதை அவருக்கு விளக்கிக் கொடுத்தேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ர-), நூல்: புகாரி 315

பார்வையைப் பாதுகாப்போம்

எந்தவொரு கவர்ச்சியான தோற்றத்தையும் பார்வையின் மூலமாகவே நாம் தெரிந்து கொள்கிறோம். நமக்குப் பார்வை இல்லாவிட்டால் வானங்கள் மற்றும் பூமியில் கொட்டிக் கிடக்கும் இன்பங்களில் பலதை நாம் தெரிந்து கொள்ளவே முடியாது. எந்தவொன்றாக இருந்தாலும் அதன் மீது நாம் கவரப்படுவதற்குப் பார்வை தான் காரணம். பார்வையைப் படர விடாமல் பேணுதலுடன் நாம் நடந்து கொண்டால் கண்கவரும் விதத்தில் இருக்கும் கணக்கில்லா தீமைகளை விட்டும் விலகிவிடலாம்.

குறிப்பாகப் பெண்கள் விஷயத்தில் பார்வையைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் குணம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். அந்நியப் பெண்களைப் பார்ப்பதற்காகத் திசையெங்கும் பார்வை அம்புகளை எய்வதை விட்டும், யதார்த்தமாகக் கண்ணில் படும் பெண்கள் மீது காரணமில்லாமல் பார்வையைத் தொடர்ந்து வீசுவதை விட்டும் விலகிக்கொள்ள வேண்டும். இவ்வாறு பெண்கள் விஷயத்தில் பார்வையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொண்டால் ஒழுக்கநெறி தவறாமல் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம். இதைப் பின்வரும் செய்திகள் மூலம் புரிந்து கொள்ளலாம். 

"நீங்கள் சாலைகüல் அமர்வதைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம் நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள்.  நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "பாதையின் உரிமை என்ன?'' என்று கேட்டார்கள்.  நபி (ஸல்) அவர்கள், "(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராம-ருப்பதும், சலாமுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையி-ருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்'' என்று பதிலüத்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி),

நூல்: புகாரி 2465

ஃபள்ல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்த போது "கஸ்அம்' எனும் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபள்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள்) ஃபள்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி (ஸல்) அவர்களை நோக்கி, "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா?' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்!' என்றார்கள். இது "விடைபெறும்' ஹஜ்ஜின்போது நிகழ்ந்தது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி),

நூல்: புகாரி 1513

பெண்களைக் காண்பதால் எனக்கு எந்தவொரு சலனமும் ஏற்படாது; எள்ளளவும் உணர்வு தூண்டப்படாது என்று ஆண்களில் எவரும் சொல்ல இயலாது. சபலத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று எவருக்கும் விதிவிலக்கு வழங்கமுடியாது. எனவே மனைவியைத் தவிர்த்து மற்றப் பெண்கள் மீது பார்வையைப் பதிப்பது, உற்றுநோக்கி ரசிப்பது, அவர்களின் நடவடிக்கைகளை அசைவுகளைக் கவனிப்பது, அடிக்கடி பார்ப்பது போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

மேலும், விபச்சாரம் எனும் பாவப்பாதையில் பாதம் வைக்கத் தூண்டும் பார்வையை நாம் கட்டுப்படுத்திக் கொள்ள ஒரு பொன்னான போதனையை பெருமானர் (ஸல்) அவர்கள் போதித்துள்ளார்கள். ரமலான் மாதம் மட்டுமின்றி மற்ற மாதங்களிலும் நோன்பை வைக்கும் பழக்கத்தை வழமையாக வைத்துக் கொண்டால் பார்வையைக் கட்டுப்படுத்தி கற்பு நெறியுடன் வாழலாம். இதற்கான ஆதாரங்களைக் காண்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

நூல்: புகாரி 1905

பெண்களுடன் தனிமை ஹராம்

நம்மை மற்ற மக்கள் பார்க்கிறார்கள் என்று எச்சரிக்கையாக இருக்கும் மனிதர்களில் பலர், திரைமறைவில் தவறான காரியங்களில் தைரியமாகக் களமிறங்கி விடுகிறார்கள். ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் போது, மற்றவர்களின் கண்காணிப்பில் இருந்து விலகி இருக்கும் போது ஷைத்தான் அவர்களைத் தவறிழைக்கத் தூண்டுகிறான். வெறும் வார்த்தைகளோடு இருந்த பழக்கம் வரம்பு கடந்து மனோ இச்சைக்கு இசைந்து விடுகிறார்கள். இறுதியில், விபச்சாரம் எனும் கொடிய பாவத்தை, கேடுகெட்ட அவலம் நிறைந்த காரியத்தை அரங்கேற்றி விடுகிறார்கள். எனவே அந்நியப் பெண்களுடன் தனிமையில் இருப்பதை நாம் தவிர்த்துக் கொண்டால் மாபாதகமான பாவத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ளலாம். ஆகையால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு போதித்துச் சென்றுள்ளார்கள்.

"ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரமான) ஒருவர் இருக்கும் போதேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம்'' என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர்  எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப்  பதிவு  செய்து கொண்டுள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)'' என்று கேட்டார். அதற்கு  நபி (ஸல்) அவர்கள், "நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: புகாரி 3006

அந்நியப் பெண்களுடன் செல்போனில் தேவையில்லாமல் உரையாடுவது, இண்டர்நெட் மூலம் அரட்டையடிப்பது என்று காலத்தைக் கழிப்பவர்களில் பலர் இதுபோன்ற தனிமையினால் இறுதியில் விபச்சாரத்தின் வலையில் விழுந்து விடும் சம்பவங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. ஆகவே எந்த விதத்திலும் மஹ்ரமில்லாத பெண்களுடன் தனிமையில் இருப்பதை ஆண்கள் அறவே தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பேணுதலை மேற்கொள்வோம்

பெண்கள் விஷத்தில் எப்போதும் பேணுதலாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, அந்நியப் பெண்களிடம் அவசியத்திற்காக ஏதாவதொன்று பேசுவது, கேட்பது, சொல்வது, வாங்குவது உட்பட அனைத்து சந்தர்ப்பங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். நாம் சரியானவர்களாக தவறிழைக்காதவர்களாக இருந்தாலும் அதற்கு மாற்றமாக மற்றவர்கள் புரிந்து கொள்ளும் சூழ்நிலைகளுக்கு இடமளிக்காமல் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

நாம் நல்லவர்களாக இருக்கும் பட்சத்தில் பெண்களுடன் சம்பந்தப்படுத்தி நமது நற்பெயரைக் களங்கப்படுத்துவதற்கு யாரேனும் முனைந்தால் அல்லது அதற்கு வாய்ப்பு இருந்தால் நமது காரியங்களைத் தெளிவுபடுத்துவதும், நமது குற்றமற்றத் தன்மையைப் புரியவைப்பதும் அவசியம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். காரணம், இவ்வாறு பெண்கள் விஷயத்தில் நபியவர்கள் மிகவும் கவனமாகவும் பேணுதலாகவும் இருந்துள்ளார்கள். இதற்குரிய ஆதாரங்கள் இதோ:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த) பெண்களை (60:10-12) இறை வசனத்தின் கட்டளைப்படி சோதித்து வந்தார்கள். இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை அப்பெண்கüல் எவர் ஏற்றுக் கொள்கிறாரோ அவரிடம், "நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். இப்படி, அப்பெண்ணிடம் பேசத்தான் செய்வார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களுடைய கரம் விசுவாசப்பிரமாணம் வாங்கும் போது எந்தப் பெண்ணின் கையையும் தொட்டதில்லை. பெண்கüடம் அவர்கள் வாய்ச்சொல் வழியாகவே தவிர விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 2713

(பெண்களிடம் உறுதிமொழி வாங்கியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை, எந்தப் பெண்ணையும் ஒருபோதும் தொட்டதில்லை. வாய்மொழியாகவே பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அவ்வாறு உறுதிமொழி வாங்கியதும், "உன்னிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டேன். நீ செல்லலாம்'' என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 3802

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!'' என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, "இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யா ஆவார்!'' எனக் கூறினார்கள். அவ்விருவரும் "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!'' என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்'' என்று தெளிவுபடுத்தினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி),

நூல்: புகாரி 2038

பெண்கள் விவவகாரத்தில் சிக்கி, பெயர் கெட்டுவிட்டால் அவ்வளவுதான். அதற்கு முன்பு நாம் மக்கள் மத்தியில் சேமித்து வைத்திருந்த நன்மதிப்புகள் அனைத்தும் அழிந்து நாசமாகப் போய்விடும். அதற்குப் பிறகு நமது வார்த்தைகள் வலுவிழந்துவிடும். நாம் சொல்லும் சத்தியக் கருத்துக்கள் செல்லாக் காசுகளாக மதிப்பற்றுப் போய்விடும். மக்கள் நமது கருத்துக்களை புறந்தள்ளுவதற்கு அந்தக் காரணம் ஒன்றே போதுமானதாக ஆகிவிடும். மேலும் தாறுமாறாக நம்மை விமர்சனம் செய்யத் துவங்கிவிடுவார்கள். ஆண்கள் எக்காலத்திலும் கவனத்தில் கொள்ளவேண்டிய போதனை இது.

படைத்தவன் தரும் பரிசு

பெண்கள் விஷயத்தில் வழிதவறிவிடக்கூடாது என்று நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தீய குணமும் நடத்தையும் கொண்ட நங்கைகள் மூலம் கற்புநெறி தவறி, குற்றமிழைக்கும் தருணம் நம்மைத் தேடிவந்தாலும் இறைவனை அஞ்சி அவர்களை விட்டும் விலகிக் கொள்ள வேணடும். இவ்வாறு பெண்கள் விஷயத்தில் மார்க்கத்திற்கு மாறுசெய்யும் நிலையைத் தேடிச் செல்லாமலும், தேடி வரும் வாய்ப்பை வெறுத்தும் வாழ்ந்தால் இம்மையிலும் மறுமையில் இறைவனின் உதவி பெற்றவர்களாகத் திகழலாம். இதைப் பின்வரும் செய்திகள் வாயிலாக விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீர் என மழை பிடித்துக் கொண்டது. எனவே, அம்மூவரும் மலைப் பகுதியில் அமைந்திருந்த குகை ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். (எதிர்பாராத விதமாக) பெரும்பாறை ஒன்று மலையி-ருந்து உருண்டு வந்து அந்தக் குகையின் வாயிலை மூடிக்கொண்டது. (இதனைக் கண்ட) அவர்கள் தமக்குள், "நாம் (வேறெவரின் திருப்திக்காகவுமின்றி)  அல்லாஹ்வுக்காக என்று தூய்மையான முறையில் செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை (வசீலாவாக - துணைச் சாதனமாக)க் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இந்தப் பாறையை நம்மை விட்டு அகற்றிவிடக்கூடும்'' என்று பேசிக் கொண்டனர். (முதல் நபர் பிரார்த்தனை செய்ததும் பாறை சிறிது விலகியது. அதன் பிறகு  இரண்டாவதாக) மற்றொருவர் பின்வருமாறு மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தார்:

இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய மகள் (ஒன்றுவிட்ட சகோதரி - முறைப்பெண்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை எப்படி ஆழமாக நேசிப்பார்களோ அப்படி நான் அவளை நேசித்தேன். நான் அவüடம் என்னுடன் உடலுறவு கொள்ள வருமாறு அழைத்தேன். நான் அவளுக்கு நூறு தீனார்கள் (பொற்காசுகள்) கொடுத்தாலே தவிர என்னுடன் உறவு கொள்ள முடியாது என்று அவள் மறுத்தாள். நான் அ(ந்தப் பணத்)தை மிகவும் சிரமப்பட்டுச் சேகரித்தேன்.  நான் (அந்தப் பணத்துடன் சென்று) அவளுடைய இரு கால்களுக்கும் இடையே அமர்ந்த போது அவள், "அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சு. முத்திரையை (கற்பு உறுப்பை) அதற்குரிய (மணபந்த) உரிமையின்றி திறக்காதே'' என்று கூறினாள். உடனே நான் (உடலுறவு கொள்ளாமல்) எழுந்து விட்டேன். (இறைவா! உன் அச்சத்தால் நான் புரிந்த) இந்த நற்செயலை நான் உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதினால் இந்தப் பாறையை எங்களை விட்டு (இன்னும்) சற்று நீக்கி விடுவாயாக! உடனே, பாறை இன்னும் சற்று விலகியது. (இதன்பிறகு மூன்றாவது நபர் பிரார்த்தனை செய்தவுடன்) அல்லாஹ் (அப்பாறையை மூலம் ஏற்பட்ட) மீதியிருந்த அடைப்பையும் நீக்கிவிட்டான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ர-),

நூல்: புகாரி 2333

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாüல் ஏழு பேருக்கு நிழல் (அடைக்கலம்) அளிப்பான்:

1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. பள்üவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 4. அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகி-ருந்து) பிரிந்து சென்ற இருவர். 5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோதும் "நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்'' என்று கூறியவர். 6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-),

நூல்: புகாரி 660

பெண்களை அஞ்சிக் கொள்ளுங்கள்

நமது நடத்தைகள் சீரும் சிறப்பாக இருப்பதற்கு அவசியமான அனைத்து விதமான அறிவுரைகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். அந்த வகையில், ஆண்களாக இருப்பவர்கள் பெண்கள் விஷயத்தில் தமது அறிவுரையை ஏற்று நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நவின்றுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண்கள் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பி-ருந்து படைக்கப் பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியே விட்டு விட்டால் அது கோணலாகவே இருக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-),

நூல்: புகாரி 3331

இவ்வாறு பெண்களைக் அஞ்சிக் கொள்ளுங்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் மூலம் சோதனைகள் இருக்கிறது என்றெல்லாம் இஸ்லாம் சொல்வது ஆண்களை விடவும் அவர்களைத் தரம் தாழ்த்துவதற்கோ, இழிவுபடுத்துவதற்கோ அல்ல.


மாறாக, எந்த விதத்திலும் பெண்களின் உரிமையை ஆண்கள் பறித்துவிடக்கூடாது; தங்களுக்குரிய கடமைகளைப் பொறுப்புகளை மறந்து செயல்பட்டுவிடக் கூடாது; எல்லாவற்றுக்கும் மேலாக ஒழுக்கம் எனும் உயர்ந்த பண்பை இழந்து விடக்கூடாது என்பதற்குத் தான் இத்தனை போதனைகளும் சொல்லப்பட்டுள்ளன. இவற்றை அறிந்து அதன்படி ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து ஈருலகிலும் வெற்றிபெற இறைவன் நமக்கு துணை புரிவானாக.

EGATHUVAM JAN 2014