May 8, 2017

முஸ்லிம்களைக் குறிவைக்கும் திரைப்படங்கள்

முஸ்லிம்களைக் குறிவைக்கும்  திரைப்படங்கள்

ஓர் இனத்தை அல்லது ஒரு சமுதாயத்தை அழிக்க வேண்டுமாயின் ஒட்டுமொத்தமாக அந்த இனத்தின் மீது தாக்குதல் தொடுத்து அழித்துவிட முடியாது. ஒரேயொரு இரவில் அல்லது ஒரு பகலில் அந்த இனத்தை ஒழித்துவிட முடியாது. அதற்கென்று ஆழமான, அழுத்தமான சதித் திட்டம் தீட்டப்பட வேண்டும். அப்படிப்பட்ட சதித் திட்டங்களில் ஒன்று முஸ்லிம்கள் மீது பிற சமுதாய மக்களிடம் பகையை ஊட்டுவதாகும்.

கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் நடந்த போர்களை மக்களுக்கு மத்தியில் ஒரு கருவியாகப் பயன்படுத்துதல்.

உண்மையில் இந்தப் போர்கள் மத ரீதியில் நடைபெற்றவை அல்ல! அவை நாடு பிடிக்கும் ஆசையில் நடந்தவை! அவற்றைத் திரித்து, கூட்டிக் குறைத்துச் சொல்லி அதன் மூலம் பகைமை நெருப்பை மூட்டுதல்.

இந்த யுக்தியை சங்பரிவார அமைப்புகள் நீண்ட காலமாகக் கடைப்பிடித்து வருகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக பாபரி மஸ்ஜிதைக் குறிப்பிடலாம்.

இந்தியாவுக்குப் படையெடுத்து வந்த பாபர் அயோத்தியில் உள்ள கோயிலை இடித்துத் தான் பள்ளிவாசலைக் கட்டினார் என்ற ஒரு பொய்யைச் சொல்லி முஸ்லிம்கள் மீது வெறுப்பெனும் நெருப்பேற்றி ஓரளவு வெற்றியும் கண்டு விட்டனர்.

இதுபோன்ற சதித் திட்டங்களிலும் தீய யுக்திகளிலும் உள்ள ஒன்று தான் ஊடகங்களின் மூலம் முஸ்லிம்கள் மீது பகையை வளர்ப்பது!

இதுவரை நீண்ட நாட்களாக அச்சு ஊடகம், மின்னணு ஊடகம் போன்றவை ஏதாவது குண்டு வெடிப்பு, கொலைகள் நடந்து விட்டால் அதைப் பயன்படுத்தி முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதை நாம் பார்த்திருக்கின்றோம்.

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தவ்ஹீத் ஜமாஅத்தினர் கூட்டத்திற்குக் கூட்டம் இந்த விஷமப் பிரச்சாரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்ததன் விளைவாக ஊடகங்களில் அது ஓரளவு குறைந்திருக்கின்றது.

ஆனால் திரைப்படங்களில் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகக் காட்டி படம் எடுப்பது நிற்கவில்லை. இதற்குச் சமீபத்திய எடுத்துக்காட்டு துப்பாக்கி என்ற திரைப்படம்.

இப்படத்தில் நடித்த விஜய் என்பவன் ஒரு கிறித்தவன். அவனது தந்தை சந்திரசேகர் என்பவனும் ஒரு கிறித்தவன். இஸ்லாத்தை அழிப்பதற்கு உலக அளவில் முன்னணியில் நிற்பது கிறித்தவப் பாதிரியார்கள் தான். இதை சமீபத்தில் வெளியான இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் என்ற திரைப்படத்தின் வாயிலாகக் கண்டோம். அதே யுக்தியில், கிறித்தவப் பாதிரிகளின் பின்னணியில், முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும், நாட்டுக்குத் துரோகம் செய்யும் தேச விரோதிகளாவும், இந்திய ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டே இந்தியாவை அழிக்க வேலை செய்யும் பயங்கரவாதிகளாகவும் துப்பாக்கி என்ற படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் வந்தவுடன் முஸ்லிம்கள் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்களை விஜயின் தந்தை சந்திரசேகர், இயக்குனர் முருகதாஸ், படத் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் சந்தித்து வடித்த நீலிக் கண்ணீரில், நடித்த நாடகத்தில் அவர்கள் ஏமாந்து, "இப்படிப்பட்ட உத்தமர்களா?'' என்று வியந்து போய் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சில காட்சிகளை பெயரளவுக்கு நீக்கச் சொல்லி இருக்கிறார்கள். வந்தவர்கள் உண்மைக்குச் சிறிதும் சம்பந்தம் இல்லாத சினிமாக்காரர்கள் என்பதும், நடித்து யாரையும் ஏமாற்றும் எத்தர்கள் என்பதும் இந்த இயக்கத் தலைவர்களுக்கு  எப்படித் தெரியாமல் போனது?

நீக்குவது என்றால் முஸ்லிம் சமுதாயத்தைத் தீவிரவாதிகளாகக் காட்டும் எந்த ஒரு அம்சமும் இருக்கக் கூடாது என்று வற்புறுத்தி இருக்க வேண்டும். அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்பதை, காட்சிகள் நீக்கப்பட்ட தற்போதைய படத்தைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

படம் வெளியாகி வசூல் வேட்டை முடிந்து விட்ட நிலையில் போராட்டம் நடத்தினால் அந்த அயோக்கியர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாது. முஸ்லிம் தலைவர்களை ஏமாற்றி, போதுமான அவகாசத்தை எடுத்துக் கொண்டார்கள்.

அந்தப் படத்திலுள்ள ஆட்சேபமான காட்சிகளை நீக்கி விட்டனர் என்று தவ்ஹீத் ஜமாஅத்திடம் கூறி, போராட்டம் நடத்த வேண்டாம் எனக் கூறியுள்ளனர். ஆனால் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகன் ஆகிய மூன்று அயோக்கியர்களுக்கும் வலிக்கக் கூடாது; நட்டம் ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது போல் அவர்களின் நடவடிக்கை அமைந்துள்ளது.

முஸ்லிம் சமுதாயத்தைப் பாதிக்கும் இந்த விஷயத்தில் கடுமையான உறுதிப்பாட்டை இவர்களால் காட்ட முடியாது என்றால் இது போன்ற பிரச்சனைகளில் தலையைக் கொடுக்காமல் இருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்ளுமாறு விட்டிருக்க வேண்டும்.

1995ஆம் ஆண்டு பம்பாய் திரைப்படம் இதுபோன்ற ஒரு விஷத்தைக் கக்கியது. அப்போது தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர்கள் மேடை தோறும் பம்பாய் பட இயக்குனர் மணிரத்னம் என்ற பார்ப்பனரின் விஷமத்தை விலாவாரியாக மக்களிடம் விவரித்து தோலுரித்துக் காட்டினர்.

அதன் ஒரு அம்சமாக அப்போது பி.ஜே. அவர்கள் ஆசிரியராக இருந்த அல்ஜன்னத் மாத இதழில் பம்பாய் படத்திற்கு எதிரான கட்டுரை வெளியாகியிருந்தது. புதிய ஜனநாயகம் என்ற பத்திரிகையில் வெளியான பம்பாய் பட விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அந்தக் கட்டுரை பார்ப்பனிய நரித்தனத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டியது.

அந்தக் கட்டுரையின் சில பகுதிகளை வாசகர்களின் பார்வைக்குத் தருகிறோம்.

பார்ப்பன சூழ்ச்சியும் பம்பாய் திரைப்படமும்

மேற்குக் கரையின் கடலும் மலையும் சங்கமிக்கும் தனது திருநெல்வேலி கிராமத்திற்கு பம்பாயிலிருந்து வருகின்றான் சைவப்பிள்ளை கதாநாயகன். எதிர்பாராமல் வீசிய காற்றில், எதிர்பாராமல் விலகிய பர்தாவினுள் தென்பட்ட கதாநாயகியை எதிர்பார்த்தபடி காதலிக்கின்றான்.

இரு தரப்புப் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி நாயகியை பம்பாய்க்கே வரவழைத்துத் திருமணம் செய்து கொண்டு இரட்டைக் குழந்தைகளும் பெற்றுக் கொள்கிறான். மூன்றாவது குழந்தைக்கு டூயட் பாடிக் கொண்டிருக்கும் போது பாபரி மஸ்ஜித் பிரச்சனை குறுக்கிடுகின்றது.

பெற்றோர்களின் இடையூறையும் சமூகத்தின் இடையூறையும் கடந்து பம்பாய் வந்து சேரும் காதலர்களை நிம்மதியாக வாழவிடாமல் தோன்றுகின்றது இன்னொரு இடையூறு, கலவரம்.

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்ட பம்பாய் கலவரத்திற்கு மணிரத்னம் வழங்கியிருக்கும் அந்தஸ்து இது தான்.

"ஒரு முஸ்லிம் பெண்ணை இந்துப் பையன் காதலிப்பதா? என்று சில முஸ்லிம் தலைவர்கள் ஆட்சேபிக்கிறார்கள். இது சிறுபிள்ளைத்தனமானது'' என்று ரொம்பவே பெருந்தன்மையாகப் பேசியிருக்கிறார் பால்தாக்கரே. கதாநாயகன் முஸ்லிமாகவும் நாயகி இந்துவாகவும் இருந்திருந்தால் அப்போதல்லவா தாக்கரேயின் பெருந்தன்மையைப் பார்க்க வேண்டும்.

ஆட்சியதிகாரத்திலிருந்த முகலாய மன்னர்கள் இராஜபுத்திரப் பெண்களை மணந்து கொண்டதை இந்துப் பெருமிதத்திற்கு நேர்ந்த இழுக்காக ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கருதும் போது, தற்போது அரசியல் சமூக அரங்குகளில் இந்து மத வெறியர்களால் நசுக்கப்படும் முஸ்லிம்கள் இவ்வாறு கருதுவதில் வியப்பில்லை.

மதம் மீறிய காதலை மறுக்கும் மதப் பண்பாட்டிலிருந்து மதவெறி தோன்றுவதில்லை. மதம் மீறிய திருமணங்கள் மட்டுமே அதை ஒழிக்கப் போவதுமில்லை. மதவெறியின் பின்னணியில் இருப்பது அரசியல்.

அந்த வகையில் பம்பாய் கலவரத்தைத் தூண்டிய அரசியல் சக்திகள் யார்? அந்த அரசியலைப் பற்றிய தனது கருத்து என்ன என்பதை இயக்குனர் சொல்ல வேண்டும். அதைச் சொல்லக் கூடாது என்பதில் வெகு கவனமாக இருக்கிறார் இயக்குனர்.

"அயோத்தியில் கோயில் கட்டக் காசு கொடு'' என்று வீட்டுக்கு வந்து கேட்கிறார்கள் இந்து மதவெறியர்கள். அதிர்ந்து பின்வாங்குகிறாள் கதாநாயகி. கதாநாயகன் உடனே அவர்களைத் தள்ளிக் கொண்டு போய் மனைவி கண்ணில் படாமல் காசு கொடுத்தாரா? மசூதியை இடிப்பது அநீதி என்று வாதாடினாரா? தெரியாது. உடனே வேறு காட்சிக்கு மாறுகிறார் மணிரத்னம்.

நடுவீதியில் நின்று ஊருக்கு உபதேசம் செய்யும் கதாநாயகனை அந்தக் காட்சியில் மணிரத்னம் ஊமையாக்கியது ஏன்? மசூதியை இடிப்பது குற்றம் என்ற ஒரு வார்த்தையைக் கூட வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் வேறு எதைப் பிடுங்குவதற்கு இந்தப் படம்?

தன் பெற்றோரை இழிவுபடுத்தும் மாமனாரின் கடிதத்தைக் கண்டு சீறும் கதாநாயகி, தன் மதத்தினர் புழு பூச்சிகளைப் போல் கொல்லப்படுவது ஏன்? என்று ஒரு கேள்வியை மட்டும் கணவனிடம் கேட்கவில்லை.

வீடு எரிகிறது; பெற்றோர் எரிகிறார்கள்; பிள்ளைகள் காணாமல் போகிறார்கள்; ஊரே எரிகிறது. ஆனால் அந்த உத்தம பத்தினியோ (கதாநாயகி) "ஏன் இந்தக் கலவரம்?'' என்று ஒரு கேள்வியை மட்டும் தன் காதல் கணவனிடம் கேட்கவேயில்லை.

ஏன் என்று குழந்தையின் வாயால் கேட்க வைத்து, ஒரு அலியின் வாயால், தெரியவில்லை என்று பதில் சொல்கிறார்.

குற்றவாளி யார்? என்ற கேள்விக்கு வசனத்தில் பதில் சொல்ல வேண்டிய இடங்களிலெல்லாம் வாயை மூடிக் கொண்ட மணிரத்னம் கலவரக் காட்சிகளின் சித்தரிப்பில் தன் கைவரிசையைக் காட்டுகிறார்.

அமைதியான ரதயாத்திரை கலவரம் செய்யும் முஸ்லிம்கள்

நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் உயிர்களைக் காவு கொண்ட ரத யாத்திரை திரையில் அமைதியாகப் போகின்றது. அப்போது தெருவில் நிற்கும் கதாநாயகியின் முகத்தில் அனாவசியக் கலவரம் படர்ந்தாலும் ஊர்வலத்தில் போகின்ற எழுச்சி பெற்ற இந்துக்கள் அவளைச் சீண்டிக்கூடப் பார்க்காமல் ஆர்.எஸ்.எஸ்.க்கே உரிய கட்டுப்பாட்டுடன் செல்கின்றனர். எனில் அத்வானியின் டொயோட்டோ ரதச் சக்கரங்களில் நசுங்கியவை முஸ்லிம் தலைகளா? எலுமிச்சங்காய்களா?

பாபரி மசூதி இடிப்பு என்ற மிருகத்தனமான கொலை வெறியாட்டமோ உணர்ச்சியற்ற தலைப்புச் செய்திகளாக ஓடுகின்றது.

"யா அல்லாஹ்'' என்ற பெருங்கூச்சலுடன் திரை உயிர் பெறுகின்றது. வெறி கொண்ட முஸ்லிம்கள் கடைகளைத் தாக்குகின்றனர். போலீசைத் தாக்குகின்றனர். கலவரக்காட்சி முதன்முதலாகத் திரையில் இப்படித் தான் துவங்குகின்றது.

பம்பாய் உள்ளிட்ட, நாடு முழுவதும் நடந்த முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்களின் மூல காரணமான பாபர் மசூதி விவகாரத்தை, குழந்தையாயிருக்கும் கதாநாயகன் வாலிபனாகி விட்டான் என்று சக்கரத்தைச் சுழல விட்டுக் காட்டுவது போல் ஓட விடுகிறார் மணிரத்னம். இதன் மூலம் டிசம்பர் 6க்கு முன்னால் இந்து மதவெறியர்கள் திட்டமிட்டு நடத்திய காலித்தனங்களையெல்லாம் தனது கத்தரிக்கோலால் எடிட் செய்து விடுகிறார்.

காட்சிகளைத் தொகுத்துத் தருகின்ற முறையில், கலவரத்தைத் துவங்கிய குற்றம் முஸ்லிம்களின் மீது சுமத்தப்படுகின்றது. கலவரத்தைச் சித்தரிப்பதில் கூட, திரும்பத் திரும்ப வருகின்ற கும்பல்கள் மோதும் காட்சிகளில் தான் இந்து மதவெறியர்களின் தாக்குதல் காட்டப்படுகின்றது.

ஆனால் மனதில் பதியத்தக்க குறிப்பான வன்முறை நடவடிக்கைகளிலும், நெருக்கமான குளோசப் காட்சிகளிலும் முஸ்லிம்கள் நடத்தும் தாக்குதல் காட்டப்படுகிறது. மனதில் பதியக்கூடிய கலவரம் பற்றிய காட்சிப் படிமங்களை ஒப்பீடு செய்து பார்த்தால் அவற்றில் 80 சதவிகிதம் முஸ்லிம்களையே குற்றவாளிகளாக்குகின்றன.

ஜனவரி 5ஆம் தேதி, இரண்டு சுமை தூக்கும் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்ட செய்தி படத்துடன் காணப்படுகின்றது. தொழிற்சங்கத் தகராறில் நடந்த கொலைக்கு மதச் சாயம் பூசி, பத்திரிகையில் தலையங்கம் எழுதி படுகொலையைத் துவக்கியது சிவசேனா தான் என்ற உண்மை காட்டப்படவில்லை.

மசூதி இடிப்பிற்குப் பின் முஸ்லிம்கள் தான் கலவரம் செய்தார்கள் என்று காட்டிய மணிரத்னம், ஜனவரி 6ஆம் தேதி சாம்னா பத்திரிகையில் தலையங்கம் எழுதி அதிகாரப்பூர்வமாகக் கலவரத்தைத் துவக்கிய தாக்கரேயைக் குற்றம் சாட்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

முஸ்லிம்களிடம் அடிவாங்கும் போலீஸ்

"பம்பாய் போலீஸ் சிவசேனாவின் அடியாள் படையாகச் செயல்பட்டது'' எனக் குற்றம் சாட்டினார் வழக்கறிஞர் பல்கிவாலா. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள்.

ஆனால் மணிரத்னம் காட்டும் கலவரக் காட்சிகளில் முஸ்லிம்கள் போலீசைத் தாக்குகின்றார்கள். ஒரு வண்டிக்குத் தீ வைத்து போலீசின் மேல் தள்ளி விடுகின்றார்கள். உண்மையில் இவ்வாறு நடைபெற்றிருக்கக் கூடிய ஒன்றிரண்டு சம்பவங்கள் கூட நரவேட்டையாடிய போலீசிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முஸ்லிம்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தான். ஆனால் தற்காப்பு நிலையில் போலீஸ் இருந்ததாகக் கீழ்க்கண்ட காட்சி மூலம் கூறுகிறார் இயக்குனர்.

"செத்தவர்களில் 35 பேர் அப்பாவிகளாயிற்றே! ஏன் முழங்காலுக்கு மேல் சுட்டீர்கள்?'' என்று கதாநாயகன் போலீஸ் அதிகாரியைக் கேட்கிறான். "எங்களையே கொல்ல வரும் கூட்டத்திலிருந்து (அதாவது முஸ்லிம்களிடமிருந்து) நாங்கள் தற்காத்துக் கொள்வது எப்படி? இந்தத் தொழிலின் மீது உங்களுக்கு மரியாதையே இல்லையா?'' என்று மடக்குகிறார் போலீஸ் அதிகாரி. உடனே, "என் குழந்தையைக் காப்பாற்றிய தெய்வமே'' என்று போலீசின் காலில் விழுகிறார் நிருபரான கதாநாயகன்.

அப்பாவி இந்துவின் அவலம்

தூரத்தில் முஸ்லிம் மதவெறியர்கள் வருவதைக் கண்ட பேரன் தாத்தாவின் நெற்றிப் பொட்டை அழிக்கிறான். இந்து நாட்டில் பொட்டு வைக்கக் கூட முடியாத நிலையில் ஒரு வயதான அப்பாவி இந்துவின் அவலம் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

பிறிதொரு காட்சியில் தீப்பிடித்து எரியும் வீட்டிலிருந்து கதாநாயகியின் பெற்றோரைக் காப்பாற்றி விட்டுத் தன் உயிருக்கும் அஞ்சாமல் அவருடைய குர்ஆன் நூலை கதாநாயகனின் தந்தை (இந்து) பத்திரமாக எடுத்துச் செல்லும் போது இந்துவின் பெருந்தன்மை நிலைநாட்டப்படுகின்றது.

தனது மதச் சின்னத்தைக் கூட நெற்றியில் வைத்துக் கொள்ள அனுமதிக்காத முஸ்லிம்களின் வெறி! அவர்களது மத நூலையும் காப்பாற்றும் இந்துவின் பெருந்தன்மை!

மசூதிக்குள் புகுந்து மவ்லவியையும், தஞ்சமடைந்திருந்த அப்பாவி முஸ்லிம்களையும் வேட்டையாடிய சிவசேனா இந்துக்களின் கொலைவெறி? அந்த உண்மைச் செய்தியை பழைய பேப்பர் கடையில் தான் தேடிப் பார்க்க வேண்டும்.

முஸ்லிம் கொள்ளி வைக்கிறான்! எரிகிறது இந்து வீடு!

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ரொம்பாடா என்ற குடிசைப் பகுதியைச் சுற்றியுள்ள அடுக்குமாடிக் கட்டிடங்களின் மேலிருந்து தீப்பந்தங்களையும் பெட்ரோல் குண்டுகளையும் எறிந்து அந்தச் சேரியையே சாம்பலாக்கினர் சிவசேனா குண்டர்கள்.

மசூதிக்குள் நுழைந்து மவ்லவியைக் கொன்றனர். முஸ்லிம் ராணுவச் சிப்பாய் ஒருவரின் வீட்டுக் கூரையைப் பிரித்து கொள்ளையடித்து தீ வைத்தனர். உயிருடன் எரிக்கப்பட்ட 17 முஸ்லிம்களின் படத்தைத் தனது பத்திரிகையில் வெளியிட்டு மகிழ்ந்தார் பால்தாக்கரே.

ஆனால் மணிரத்னமோ, ஜோகேஸ்வரி என்ற பகுதியில் ஒரு இந்துவின் வீடு கொளுத்தப்பட்ட விதிவிலக்கான சம்பவத்தைத் தேடிப் பிடிக்கிறார். இந்து வீடென்று தெரியாமல் போய் விடுமோ என்பதற்காகக் கதவில் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டிருக்கின்றது. கேமரா அதை நெருக்கமாகக் காண்பிக்கின்றது. பிறகு முஸ்லிம்கள் அதை வெளிப்புறமாகத் தாளிடுவதையும் வீட்டுக்குத் தீ வைப்பதையும் நிதானமாகப் படம்பிடிக்கிறது. இச்செயலின் குரூரத்தை உணர்த்த இதுவும் போதாதென்று கருதும் மணிரத்னம், தீப்பிடித்த வீட்டிற்குள் அகப்பட்டுக் கொண்ட ஒரு ஊனமுற்ற சிறுமியின் தவிப்பையும் காட்டி, இந்து ரசிகர்களின் கோபத்தை விசிறி விடுகின்றார்.

கதாநாயகனின் குழந்தைகளை மண்ணெண்ணை ஊற்றிக் கொளுத்த முயலும் கும்பல், "சொல் நீ இந்துவா? முஸ்லிமா?'' என்று திரும்பத் திரும்பக் கேட்கிறது.

ஆனால் உண்மையில், "நான் இந்து' என்று சொன்னவுடன் யாரையும் விட்டுவிடவில்லை சிவசேனா குண்டர்கள். உள்ளாடையைக் களைந்து சுன்னத் செய்திருக்கிறானா என்று பார்த்துக் கொன்றார்கள். அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஆனால் மணிரத்னமோ அந்தக் கொலையாளிகளின் மத அடையாளம் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்.

யா அல்லாஹ்... கோயபல்ஸ் தோற்றான்

கோயபல்ஸ் வேலையின் சிகரமாக வருகின்றது கடைசிக் காட்சி. இந்து வெறியர்களை இந்துக்களும் முஸ்லிம் வெறியர்களை முஸ்லிம்களுமே எதிர்த்து விரட்டுகிறார்கள். இந்து மதத் தலைவரின் (பால்தாக்கரே) கார் வருகின்றது. பிணக்காடாகக் காட்சியளிக்கும் தெருவைப் பார்த்து மேல் துண்டால் மூக்கைப் பொத்துகிறார். லேசான துயரம் அவர் முகத்தில் தோன்றி மறைகிறது.

அடுத்து அழுகுரல் ஒலிக்கும் ஒரு தெருவிற்குள் முஸ்லிம் மதவெறித் தலைவர் இறங்கி நடக்கிறார். காயம் பட்டுக் கிடக்கும் ஒரு பிஞ்சுக் குழந்தையைப் பார்த்தவுடன், "யா அல்லாஹ்'' என்று கதறுகிறார். உடனே, "போதும், போதும் (பஸ், பஸ்) என்று தன் கையை உயர்த்துகிறார்.

முதல் காட்சியில், "யா அல்லாஹ்' என்று கோபக் குரலுடன் முஸ்லிம்கள் கலவரத்தைத் துவக்குகின்றார்கள். இறுதிக் காட்சியில் "யா அல்லாஹ்' என்று வருத்தம் தோய்ந்த குரலுடன் கலவரத்தை நிறுத்திக் கொள்ளுமாறு தன் ஆட்களுக்கு ஆணையிடுகிறார் முஸ்லிம் மதவெறித் தலைவர்.

கலவரத்துக்குக் காரணமானவர்களே தவறை உணர்ந்து கலவரத்தை முடித்துக் கொள்கிறார்களாம். இது தான் மணிரத்னம் காட்டும் பம்பாய்.

"அடுத்து வருகின்ற சில நாட்கள் நம்முடையவை'' என்று தனது பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் எழுதி கலவரத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்ததும், "போதும். வெறியர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) உரிய இடத்தை நீங்கள் காட்டி விட்டீர்கள்'' என்று எழுதி அதிகாரப்பூர்வமாகக் கலவரத்தை முடித்து வைத்ததும் தாக்கரே தான். ஆனால் இரண்டே காட்சிகள் மூலம் தாக்கரேயின் குற்றத்தை முஸ்லிம்களின் தோள்களுக்கு மாற்றி விட்டார் மணிரத்னம். அதற்காகத் தானே தாக்கரேயின் பாராட்டு.

முஸ்லிம் எதிர்ப்புக் கலவரம் என்று உலகமே கூறிய பம்பாய் கலவரத்தை தனது படத்தின் மூலம் இந்து முஸ்லிம் கலவரமாக மாற்றி விட்டார் மணிரத்னம்.

பம்பாய் முழுநீள கற்பனைப் படமல்ல. நடந்த சம்பவங்களை மட்டும் சித்தரிக்கும் செய்திப் படமுமல்ல. அரை உண்மைகளையும் அற்ப உணர்வுகளையும் கலந்து தயாரிக்கப்பட்ட மசாலா. முழுப் பொய்யை விட அபாயகரமானது அரை உண்மை தான். அரை உண்மைகளை வைத்துக் கொண்டு அரசியல் அரங்கில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்கிறதோ அதையே மதச் சார்பின்மை வேடத்தில் மணிரத்னம் செய்திருக்கின்றார்.

அல்ஜன்னத் மே 1995 இதழில் வெளியான, பார்ப்பன சூழ்ச்சியும் பம்பாய் திரைப்படமும் என்ற கட்டுரையின் சுருக்கமே இது!

பம்பாய் படம் வந்தபோது இதுபோன்ற இயக்கங்களின் கூட்டமைப்புக்கள் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை மழுங்கச் செய்ய யாரும் இருக்கவில்லை. அப்போது மக்களாகக் கொடுத்த பதிலடிக்குப் பின் மணிரத்னம் இது போன்ற படங்களைப் பற்றிச் சிந்திப்பது கூட இல்லை.

முஸ்லிம்களை இப்படிப் பயங்கரவாதியாகவும் தீவிரவாதியாகவும் சித்தரித்து இயக்குனர்கள் படம் எடுப்பது திரையுலகில் வாடிக்கையாகி விட்டது. அதுபோன்ற திரைப்படங்களில் நடிப்பதும் நடிகர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இப்ராஹீம் ராவுத்தர் என்ற முஸ்லிம் பெயர்தாங்கி மூலம் திரையுலகிற்கு வந்த விஜயகாந்த், அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இதுபோன்ற பாத்திரங்களில் நடித்து முஸ்லிம்களை தேச விரோதிகளாகக் காட்டியுள்ளார்.

அடுத்து, "உன்னைப் போல் ஒருவன்' படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டிய கமல்ஹாசன் என்ற பார்ப்பனரின் விஸ்வரூபம் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. அந்தப் படத்தின் பெயரை அரபி வடிவத்தில் அமைத்திருப்பதும், அதில் கதாபாத்திரங்கள் முஸ்லிம் தோற்றத்தில் துப்பாக்கிகளுடன் காட்டப்படுவதுமே இது ஒரு முஸ்லிம் விரோதப் படம் என்பதைக் காட்டுகின்றது. எனினும் படம் வெளியான பின் அதில் சொல்லப்பட்ட விஷயங்களைப் பொறுத்து, அதில் முஸ்லிம் விரோதக் காட்சிகள் இருக்குமென்றால் முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்பலைகளைப் பதிவு செய்தாக வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு தான் இருக்கும்.

இன்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் போன்ற சில முஸ்லிம்களைத் தவிர மற்ற முஸ்லிம் சமுதாயத்தினரும், பிற சமுதாயத்தினரும் திரைப்படங்களில் தான் மூழ்கிக் கிடக்கின்றனர். அந்த அளவுக்கு இந்தத் திரைப்பட ஊடகம் இல்லங்களிலும் மக்களின் உள்ளங்களிலும் ஊடுறுவி இருக்கின்றது.

படிப்படியாக பிற சமுதாயத்தினர் இஸ்லாமிய சமுதாயத்தின் மீது பகை மற்றும் பழி உணர்வுடன் பார்க்கவும், முஸ்லிம்களை அந்நியப்படுத்தவும் இந்தத் திரைப்படங்கள் ஒரு காரணமாக அமையும். இது பார்ப்பனர்களின், இந்துத்துவா சக்திகளின் சதியும் சூழ்ச்சியும் ஆகும். இதன் மூலம் இந்த நாட்டில் முஸ்லிம்கள் வாழ்வுரிமை கேள்விக்குறியாக்கப்படும். எனவே இஸ்லாமிய சமுதாயம் விழிப்புணர்வுடன் இருப்பதுடன் இந்தத் திரைப்படங்களுக்கு எதிராக வெகுண்டு எழ வேண்டும்.

முஸ்லிம்களைக் கருவறுக்கும் திட்டத்தை உள்ளடக்கிய திரைப்படங்களை முஸ்லிம்களே பார்த்து ஆனந்தப் பரவசமடைகின்றனர்.

பொதுவாகவே இன்று நடக்கின்ற கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைவது இந்தத் திரைப்படங்கள் தான். திரைப்படங்கள் தடை செய்யப்பட்டு விட்டால் இந்தத் தீமைகள் பெருமளவுக்குக் குறைந்து விடும்.

இப்படி தீமைகளின் மொத்த உருவமாக அமைந்துள்ள திரைப்படங்களை முஸ்லிம்கள் பார்த்து ரசிக்கின்றனர். அதன் சிடிக்களை வாங்கி, குறிப்பாக வெளிநாட்டு வாழ் முஸ்லிம்கள் இவற்றை ஊக்குவித்து நம்மை வேரறுக்கும் இந்த வெறியர்களை வாழ வைத்துக் கொண்டிருப்பது வேதனையிலும் வேதனை.


இத்துடன் நில்லாமல், நம்மை அழிக்கத் துடிக்கின்ற இந்தக் கோடரிக் காம்புகளுக்கு, கூத்தாடிகளுக்கு முஸ்லிம் பெயர் தாங்கிகள் ரசிகர் மன்றம் அமைப்பது சகிக்கவே முடியாத கொடுமையாகும்.


இதன் பின்னராவது சமுதாயம் திருந்துமா?

EGATHUVAM DEC 2012