வளைக்கும் ஐரோப்பா வளையும் சவூதியா
ஒலிம்பிக் விளையாட்டில் சவூதி, கத்தார் போன்ற நாடுகள் தங்கள் பெண்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும்; இல்லையென்றால் அந்நாடுகளின் ஆண்களும் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்குத்
தடை விதிக்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எச்சரித்திருந்தது. ஒலிம்பிக்
கமிட்டியின் இந்த மிரட்டலை விமர்சித்து ஏகத்துவத்தில், "ஒழுக்கத்தை ஓய்க்கும் ஒலிம்பிக் சங்கம்'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்து.
இந்த மிரட்டல்களுக்குப் பணியாமல் இருந்த ஒரேயொரு முஸ்லிம் நாடு
சவூதி அரேபியா தான். இப்போது அந்நாடும் பணிந்து விட்டது.
ஏற்கனவே புருணை தாருஸ்ஸலாம் தன் பங்கிற்குப் பெண்களை அனுப்ப
முடிவு செய்து விட்டது. கத்தாரும் நான்கு வீராங்கனைகளை அனுப்பி, தன்னுடைய இஸ்லாமிய பிடிமானத்தைப் பிரகடனப் படுத்தியிருக்கின்றது.
இப்போது சவூதியும் இரண்டு பெண்களை இந்த ஒலிம்பிக் விளையாட்டிற்கு
அனுப்புவதற்குப் பணிந்திருக்கின்றது என்று சொல்வதை விட மேற்கத்திய நாடுகள் விரித்த
வலைக்குப் பலியாகியிருக்கின்றது.
இவ்விரு பெண்களில் ஒருவர் பெயர் ஷத்தான் ஷஹர்கானி! ஜூடோ விளையாட்டில்
பங்கேற்கிறார். மற்றொரு பெண்ணின் பெயர் சாரா அத்தார்! இவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கிறார்.
ஆரம்பத்தில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் பெண்கள் எங்களிடம்
இல்லை என்றே சாதித்து வந்தது. இறுதியில் சரிந்து, சாய்ந்து
விட்டது.
இவர்களுடைய நிலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைப்
போன்று இருக்கின்றது.
"உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கüன் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள்
ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று)
யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேறெவரை?'' என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 3456
சவூதி அரேபியா இதற்கான சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
1. ஷரீஅத் அடிப்படையிலான ஆடைகளை அணிய வேண்டும்.
2. விளையாட்டு வீராங்கனையின் உறவினர் உடன் இருக்க வேண்டும்.
3. விளையாட்டில் ஆண்களுடன் கலக்கக்கூடாது.
இத்தனை நிபந்தனைகளையும் விதித்து பங்கேற்க அனுமதித்திருக்கின்றது.
இந்த நிபந்தனைகளை இப்போது இவர்கள் பின்பற்றலாம். இனிவரும் காலங்களில் இனிவரும் வீராங்கனைகள்
இதில் நிற்பார்களா என்பது வினாக்குறியே!
சவூதி இவ்வாறு தளர்ந்த மாத்திரத்தில் உலக நாடுகளின் ஊடகங்கள், ஏடுகள் இதைப் பெரிது பெரிதாக எழுதுகின்றன. இதை மிகப் பெரும்
முன்னேற்றமாக,
புரட்சியாக வர்ணிக்கின்றன.
குட்டைப் பாவாடை சானியா மிர்ஸாவைப் போன்ற பெண்களை அரைகுறை ஆடைகளில்
ஆடவிட்டு அவர்களின் அங்க அவயங்களை அங்குலம், அங்குலமாகக்
கண் பார்வையினால் கற்பழித்துச் சுவைக்க நினைக்கும் இந்தக் காமுகச் சிந்தனையாளர்கள்
இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று காத்திருப்பதைத் தான் இது காட்டுகின்றது. இதற்கு
இஸ்லாமிய நாடுகள் பலியாகாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு இருக்க வேண்டுமானால் உறுதியான ஈமான் இருக்க வேண்டும்.
அதுவே நமது அவாவும் ஆதங்கமும் ஆகும்.
EGATHUVAM AUG 2012