Apr 8, 2020

வினாடி வினா - அல் குர்ஆன்

வினாடி வினா - அல் குர்ஆன்


1) குர்ஆன் என்பதற்கு பொருள் என்ன்?
     ஓதுதல்
2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது?
   அல்லாஹ்வால் அருளப்பட்டது
        அல்-குர்ஆன் 41:2)

3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
     லைலத்துல் கத்ர் இரவில்
   அல்-குர்ஆன் 97:1-5)

4) குர்ஆன் யார் மூலமாக அருளப்பட்டது
      வானவர் ஜிப்ரயீல் (அலை)
   அல்-குர்ஆன் 26:193)

5) குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது?
      முஹம்மது (ஸல்)
   அல்-குர்ஆன் 12:3)

6) முதன் முதலாக குர்ஆன் எந்த இடத்தில் வைத்து அருளப்பட்டது?
     மக்காவிலுள்ள ஹிரா குகையில் அருளப்பட்டது
   (புஹாரி: 3)

7) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் எழுத்து வடிவில் முழுமையாக    தொகுக்கப்பட்டது?
     அபூபக்கர் (ரலி) அவர்களின்ஆட்சிக்காலத்தில்

8) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் முதன் முதலாக பிரதியெடுக்கப்பட்டது?
     உஸ்மான்; (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்.

9) கலிபா உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன்   தற்போது எங்கிருக்கிறது?
     ஒன்று தாஸ்கண்டிலும், மற்றொன்று துர்கியின் இஸ்தான்புல்         அருங்காட்சியகத்தில் உள்ளது.

10) குர்ஆனில் மிகப்பெரிய அத்தியாயம் எது?
      சூரத்துல் பகரா (2  வது அத்தியாயம்)


13) குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயம் எது?
      சூரத்துல் கவ்ஸர்  (108 வது அத்தியாயம்)

14) குர்ஆனை பாதுகாப்பது யார் பொறுப்பில் உள்ளது?
      அதை இறக்கிய அல்லாஹ்வேஅதன் பாதுகாவலன் ஆவான்.
   அல்-குர்ஆன் 15:9)

15) நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் முதன் முதலாக குர்ஆன் அருளப்பட்டது?
     40 ஆவது வயதில்

16) குர்ஆனுக்கு இருக்கும் மற்ற பெயர்களில் சிலவற்றைக் கூறுக:
      அல்-ஃபுர்கான், (அல்-குர்ஆன் 2: 185)

      அல்-கிதாப், (அல்-குர்ஆன் 2: 2)
      அத்-திக்ர்,(அல்-குர்ஆன் 15: 9)
      அல்-நூர், (அல்-குர்ஆன் 7: 157)
      அல்-ஹூதா (அல்-குர்ஆன் 2: 185)

17) குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி என சிறப்பித்துக் கூறப்பட்ட சூரா எது?
      சூரத்துல் இக்லாஸ்
   (அல்-குர்ஆன் 112 வது அத்தியாயம்)

18) குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் இருக்கிறது?
      114 அத்தியாயங்கள்

22) அல்-குர்ஆனை மனனம் செய்த முதல் மனிதர் யார்?
       முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

23) ‘பிஸ்மில்லாஹ்’ கூறி ஆரம்பம் செய்யப்படாத சூரா எது?
       சூரத்துத் தவ்பா (அல்-குர்ஆன் 9வது அத்தியாயம்)

24) ‘பிஸ்மில்லாஹ்’ இரண்டு முறை வரும் சூரா எது?
       சூரத்துந் நம்ல் -எறும்புகள் (அல்-குர்ஆன் 27:30)

25) தொழுகையில் அவசியம் ஓதப்பட வேண்டிய சூரா எது?
      அல்-பாத்திஹா

26) துஆ (பிரார்த்தனை) என குறிப்பிடப்படும் சூரா எது?
      அல்-பாத்திஹா

27) திருமறையின் தோற்றுவாய் என குறிப்பிடப்படும் சூரா எது?
      அல்-பாத்திஹா

28) குர்ஆன் முழுவதுவதுமாக இறக்கியருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது?
      23 வருடங்கள்

37) நபிமார்களின் பெயரால் எத்தனை சூராக்கள் இருக்கின்றன?
           6 சூராக்கள்

           யூனுஸ், (அல்-குர்ஆன் 10வது அத்தியாயம்)
           ஹூத் (அல்-குர்ஆன் 11வது அத்தியாயம்)
           யூசுப், (அல்-குர்ஆன் 12வது அத்தியாயம்)
          இப்ராஹீம், (அல்-குர்ஆன் 14வது அத்தியாயம் )
           நூஹ், (அல்-குர்ஆன் 71வது அத்தியாயம்)
          முஹம்மது (ஸல்) (அல்-குர்ஆன் 47வது அத்தியாயம்)

38) திருக்குர்ஆனில் உள்ள மிகப்பெரிய ஆயத்து எது?
      அல்பகராவில் 282 வசனம் (அல்-குர்ஆன் 2:282)

39) அஸ்ஸப்ஃவுல் மஸானி என அழைக்கப்படும் சூரா எது?

       நபி (ஸல்) அவர்கள் சூரத்துல் பாத்திஹாவிற்கு அஸ்ஸப்ஃவுல் மஸானி
      (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்) எனப் பெயரிட்டுள்ளார்கள்
   (ஆதாரம் :புகாரி :4114)

40) குர்ஆனின் இதயம் என சிறப்பிக்கப்பட்ட சூரா எது?
      சூரத்துல் யாசின் (அல்-குர்ஆன் 36 வது அத்தியாயம்)