அஸ்ஹாபுஸ் ஸுஃப்ஃபா-திண்ணைத் தோழர்கள்
மஸ்ஜிதுந்நபவீயின்
வடக்குப்பகுதியில் ஒரு திணணை இருந்தது. அதன் மீது ஈச்சந்தட்டியால் ஒரு பந்தல்
போடப்பட்டிருந்தது.அதில் ஏழை அகதிகள் தங்கி வாழ்ந்து வந்தார்கள். அவர்களின்
எண்ணிக்கை 10,30,70,92,93,400 என்று பலவிதமாகக் கூறப்படுகிறது.
அஸ்ஹாபுஸ்ஸுஃப்ஃபாவில் 70 பேர்களை ப் பார்த்ததாக ஆபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
இவர்களல்லாத 70 பேர்கள் பீர் மவூனாவுக்குப் பிரச்சாரத்திற்காக
அனுப்பப்பட்டார்கள். இவர்கள் பின்னர் அங்கே படு கொலை சய்யப்பட்டார்கள்.
அஹலுஸ்ஸுஃப்ஃபா
உடைய எண்ணிக்கை மொத்தம் 600 அல்லது 700 பேர்கள் இருப்பார்கள் என்று அபூ அப்துர்ரஹ்மான் ஸல்மீ கூறியதாக ஷைகுல் இஸலாம்
இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் யாவரும் ஒரே நேரத்தில் அங்கு
தங்கியிருக்க வில்லை. இங்கு தங்கியவர்கள் சிலர் பிரச்சாரத்திற்காக வெளியூர்
களுக்குப் பிரயாணமாயினர். வேறு சிலர் போருக்காக வெளியூர் களுக்கும்
வெளிநாடுகளுக்கும் ப் புறப்பட்டுச் சென்றனர்.
இவர்கள் திண்ணைத்
தோழர்கள் என்ற பொருளில் “அஸ்ஹாபுஸ் ஸுஃப்ஃபாஹ்” என அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் பள்ளிவாசலின்
ஒரு பகுதியில் வாழ்ந்து வந்ததனால் ” இஸலாத்தின்
விருந்தினர்கள்” என்றும் கருதப்பட்டு வந்தார்கள். இவர்கள்
பல்வேறு கோத்திரங் களையும், நாட்டினரையும் சேர்ந்தவர்கள்.
இவர்களில்
குறிப்பிடத்தக்கவர்கள்:-
1. அபூஹுரைரா (ரலி)
2. அபூதர் அல்கிபாரி (ரலி)
3. கஃப் இப்னு மாலிக் அல்அனஸாரி (ரலி)
4. ஸல்மானுல் பார்ஸி
5. ஹன்ளலா இப்னு அபீ ஆமிர் ( கஸீலுல் மலாயிக்கா
(ரலி)
6. ஹாரிதா இப்னு அந்நுஃமான் (ரலி)
7. ஹுதைபத்துல் யமான் (ரலி)
8. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி)
9. ஸுஹைப் இப்னு ஸினான் இல்ரூமி (ரலி)
10. ஸாலிம் மவ்லா பெீ ஹுதைபா (ரலி)
11. பிலால் இப்னு ரபாஹா (ரலி)
12. ஸஃது இப்னு மாலிக் அபூ ஸயீது அல்குத்ரீ (ரலி)
(பார்க்க: அஸ்ஹாபுஸ் ஸுஃப்ஃபாஹ்)