எண்ணிக்கை
மலக்குமார்களின் எண்ணிக்கைளை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வரையறுத்துக் கூற முடியாது.
நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின் போது ஏழாவது வானத்திற்கு வந்தார்கள். அங்கு நடந்ததைப் பற்றிக் கூறும்போது, எனக்கு பைதுல் மஃமூர் காட்டப்பட்டது. நான் அதைப் பற்றி ஜிப்ரயீடம் கேட்டேன். அவர் இது பைதுல் மஃமூர் ஆகும். இதில் நாள்தோறும் எழுபதினாயிரம் மலக்குமார்கள் தொழுகின்றனர். அவர்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் அவர்களில் யாரும் அதில் நுழைவதில்லை என்று கூறினார்கள்.
நூல் : புகாரீ (3207)