Mar 6, 2011

5. இறுதி நாளை நம்புதல்- மண்ணறை வேதனை


மண்ணறை வேதனை

மறுமைநாளில் குற்றம்புரிந்தவனுக்கு தண்டனை வழங்கப்படுவதற்கு முன், இறந்த பின் அவனுக்கு சிறிய அளவு தண்டனையை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். இதை பல நபிமொழிகள் தெளிவுபடுத்தியுள்ளன. இதைப்போன்று திருமறைக் குர்ஆனும் தெளிவுபடுத்துகிறது.

பிர்அவ்ன் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள். அந்த நேரம் ஏற்படும் போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்)

(அல்குர்ஆன் 40:46)

ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் தினமும் காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுகிறார்கள் என்பது மறுமையில் வழங்கப்படும் தண்டனைக்கு முன் வேறொரு தண்டனை உள்ளது என்பதை நிரூபிக்கிறது. ஏனென்றால் இவ்வசனத்தில் கடுமையான யுக முடிவு நாளில் இவர்களைக் தண்டனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று கூறப்படுகிறது.

இது தான் கப்ருடைய வேதனை என்று நபி மொழிகள் கூறுகின்றன.