அல்லாஹ் நம்முடன் இருக்கிறானா?

(அல்குர்ஆன் 20:46)
இறைவன் நம்முடன் இருக்கிறான் என்பதன் கருத்து அவன் நம்மைக் கண்காணித்து நாம் செய்யும் செயல்களைப் பாதுகாத்து வைத்துக் கொள்வான் என்பதாகும்.
அர்ஷ்
அர்ஷ் என்பது அவனுடைய பிரம்மாண்டமான ஆசனமாகும்.

”ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?” எனக் கேட்பீராக!
(அல்குர்ஆன் 23:86)
وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ
அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும்.
(அல்குர்ஆன் 2:255)

அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள்.
(அல்குர்ஆன் 69:17)