அல்லாஹ்வின் தோற்றம்
இறைவன் உருவமற்றவன் என்பது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும்.
அல்லாஹ்விற்கு உருவம் இருக்கிறது. அவனுடைய தோற்றத்தை மறுமையில் நல்லடியார்கள் காண்பார்கள்.
அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
(அல்குர்ஆன் 75:22,23)
மறுமையில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் அவனைப் பற்றி எண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லாது வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் தடவையாக வந்து நானே உங்கள் இறைவன் என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)நூல் : புகாரீ (7439)
இறைவனுக்கு நாமாக உருவத்தைக் கற்பிக்கக் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான் :
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
(அல்குர்ஆன் 42:11)