நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் உங்களிடம் மிகவும் அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைத்தலைத் தான் என்று கூறினார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன? என்று வினவினார்கள். அதற்கு நபியவர்கள் முகஸ்துதி என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (22528)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பிறருக்கு காட்டுவதற்காக தொழுதவர் இணைகற்பித்து விட்டார் பிறருக்குக் காட்டுவதற்காக நோன்பு நோற்றவர் இணைகற்பித்து விட்டார். பிறருக்குக் காட்டுவதற்காக தர்மம் செய்தவர் இணை கற்பித்து விட்டார்.
நூல் : அஹ்மத் (16517)