Mar 1, 2011

பிரார்த்தனை


பிரார்த்தனை
2:186

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ""நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்’’ (என்பதைக் கூறுவீராக!)

(அல் குர்ஆன் 2:186)



3:38

அப்போது தான் ஸக்கரிய்யா ""இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்’’ என்று தம் இறைவனிடம் வேண்டினார்.

(அல் குர்ஆன் 3:38)


6:63

6:64


 ""இதிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றினால் நன்றி செலுத்துவோராக இருப்போம்’’ என்று பணிவாகவும், இரகசியமாகவும் அவனிடம் பிரார்த்தனை செய்யும் போது ""தரை மற்றும் கடன் இருள்களி-ருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?’’ என்று கேட்பீராக!

""இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்தி-ருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்’’ என்றும் கூறுவீராக!

(அல் குர்ஆன் 6:63-64)
                                                                                                                         

7:29

"எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்’’ எனக் கூறுவீராக! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீர்கள்!

(அல் குர்ஆன் 7:29)\


35:13

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும்,சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன.  அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.

(அல் குர்ஆன் 35:13)