Mar 11, 2011

தவ்ஹீத் கொள்கை-சூனியம் செய்தல்


சூனியம் செய்தல்

சூனியம் என்ற வித்தை மூலம் பாரதூரமான காரியங்களைச் செய்ய முடியும் என்றும் பலரும் எண்ணுகின்றனர். 


அல்லாஹ்வின் விருப்பம் இன்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்யமுடியாது.
(அல்குர்ஆன் 2:102)

இருப்பதை இல்லாமல் ஆக்கவோ, இல்லாததை உருவாக்கவோ ஒன்றை வேறொன்றாக மாற்றவோ; எந்த வித்தையும் கிடையாது.

தந்திரம் செய்து இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியும். அவ்வளவு தான்! இருக்கும் பொருளையே யாருக்கும் தெரியாத வகையில் மறைத்து பின்னர் எடுத்துக் காட்ட முடியும்.

7:116



'நீங்களே போடுங்கள்!' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.
(அல்குர்ஆன் 7:116)

இவ்வசனத்தில் சூனியக்காரர்கள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

20:66



'இல்லை! நீங்களே போடுங்கள்!' என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும் கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது
(அல்குர்ஆன் 20:66)

இவ்வசனத்தில் பாம்பைப் போல் கற்பனையான தோற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். கயிறுகளைப் பாம்புகளாக அவர்கள் மாற்றினார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை.

மேஜிக் எனப்படும் கலை தான் ஸிஹ்ர் எனும் சூனியமே தவிர வேறில்லை. கையை முடக்குவேன், காலை முடக்குவேன் என்றும் இல்லாததை உண்டாக்குவேன் என்றும் புளுகக் கூடியவர்கள் தங்கள் மந்திர சக்தியினால் பெரும் வசதி படைத்தவர்களாக ஆக முடியவில்லை. மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வேண்டுமானால் பணக்காரர்களாக சிலர் ஆகியிருக்க முடியும்.

இதி­ருந்தே சூனியம் என்பது வெறும் பித்தலாட்டம் என அறிய முடியும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று நபர்கள் சொர்க்கம் புகமாட்டார்கள். 1. மது அருந்துபவன் 2. உறவுகளைத் துண்டிப்பவன் 3. சூனியத்தை உண்மை என்று கருதுபவன்.
 
நூல் : அஹ்மத் (18748)

அழித்துவிடும் ஏழு பாவங்களில் நபி(ஸல்) அவர்கள் சூனியத்தையும் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல் : புகாரீ (2767)