அவன் ஒருவனே

(அல் குர்ஆன் 2:163)

தன்னைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை’ என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான். வானவர்களும், நீதியை நிலை நாட்டும் அறிவுடையோரும் (உறுதி கூறுகின்றனர்). அவனைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) மிகைத்தவன், ஞானமிக்கவன்.
(அல் குர்ஆன் 3:18)

‘அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். எனவே அவனையே வணங்குங்கள்! அவன் அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளன்’
(அல் குர்ஆன் 6:102)

(அல் குர்ஆன் 17:42)